கடந்த இரண்டு மாதங்களாக திருப்பதி ரூ. 300 கட்டணம் தரிசனம் டிக்கெட் கிடைக்கவில்லை , தொடர்ந்து பல முறை முயற்சி செய்தும் அடுத்த பகுதிக்கு போகிறது , என்னவென்று தெரியவில்லை வருடம் ஒருமுறை ஏழுமலையானை தரிசனம் செய்ய பாக்கியம் கிடைக்கும் ஆனால் இந்த வருடம் போக முடியாது போல?
@ncbn
அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கழகத்தின் பயணம் தொடர்வதற்கான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது செயற்குழு!
Bore அடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்களல்ல நாம்; போராட வந்தவர்கள்!
Comeback கொடுப்பதில் Specialist-ஆன நாம், திரும்ப வருவோம்; வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம்!
Ford is back,
@TRBRajaa அண்ணே நீ ஜெயிச்சுட்டணே👍👍👍
FORDஅ திரும்பக் கொண்டுவர இந்த மனுசன் பட்ட பாடெல்லாம் தமிழ்நாட்டுக்குத் தெரியாதுனு நெனச்சு இந்த ரீல்ஸ் மேடம் ஸ்டிக்கர் ஒட்டிட்டு இருக்கு🤣
நிதி நிலை வெள்ளை அறிக்கை
தகவல்கள் ஓகே தான். எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. கடந்த பட்ஜெட்டில் சொன்னவை தான் கிட்டத்தட்ட அப்படியே வந்து இருக்கு
ஆனால் இந்த அரசுக்கு நிதி துறை குறித்த புரிதலின்மை வெளிப்படையாக தெரிகிறது
GSDP vs Debt ratio என்றால் என்ன என்றே தெரியாமல் எதை எதையோ எழுதி வைத்து இருக்கிறார்கள்
நல்ல வேலையாக நிதி துறை செயலாளர் - மத்திய அரசு அனுமதித்த அளவிற்குள்ளேயே தமிழ்நாட்டின் கடன் அளவு உள்ளது என சொல்லி அரசின் அறிக்கையை சரியாக புரிந்துகொள்ள உதவி இருக்கிறார். 👏👏👏
மாநில வருவாய் உயரவில்லை என சொல்லவேண்டும் என்பதற்காக GSDP இல் மாநில வருவாய் என்கிற கணக்கை போட்டு இருக்காங்க
GSDP அதிகரித்தால் மாநில வருவாய் % குறையும் என்பதெல்லாம் எட்டாம் வகுப்பு மாணவர் கூ��� கணக்கு போட்டு சொல்ல கூடிய எளிமையான விஷயம் தான்.
ஆனால் அதை கூட புரிந்து கொள்ளாமல் எதை எதையோ சொல்லி ��ருக்கிறார்கள்
உதாரணமா
மாநில வருவாய் ₹20 என வைத்து கொள்வோம்
GSDP முன்பு ₹100 என வைத்து கொள்வோம்
இதன் படி மாநில வருவாய் என்பது GSDP இல் 20%
இப்போ GSDP ₹150 ஆக உயர்ந்து மாநில வரி வருவாய் ₹25 ஆக உயர்ந்தால் அது GSDP இல் 16%
இதை சொல்லி மாநில வரி வருவாய் குறைந்து விட்டது என நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் என்னை என்ன நினைப்பீர்களோ அதையே இந்த அரசு பற்றியும் நீங்கள் நினைத்து கொள்ளலாம்
மாநில வரி வருவாய் ���யர்ந்திருக்கிறது என ஒரு இடத்தில் தெளிவா சொல்லிவிட்டு அது GSDP உடன் ஒப்பிட்டு குறைவு என இன்னொரு இடத்தில் சொல்லி இருக்காங்க
அடிப்படை நிதி துறை புரிதலே இல்லாமல் ஒரு வெள்ளை அறிக்கை. 🤦🤦🤦
அறிக்கை தான் இப்படி என்றால்.. அதை சமர்ப்பித்த விதம் இருக்கே.. தமிழில் சொன்னதும் புரியல.. ஆங்கிலத்தில் சொன்னதும் புரியல..
ஒரு விஷயத்தை document பார்த்து கூட சரியாக படிக்கவோ விளக்கவோ முடியாத ஒரு நிதி அமை��்சர் நமக்கு அமைந்தது எல்லாம்.. 😌😌😌
நாவலர், PTR, தங்கம் தென்னரசு போன்றோர் இருந்து நிதி நிலை தாக்கல் செய்த பெருமை கொண்டது நமது சட்டமன்றம்.
ஹ்ம்ம்
In short.
The data in the WhitePaper is almost correct. But the interpretation about the numbers are wrong. This TVK Govt need some basic understanding about State Financial status. Hope the Secretaries will educate them to understand in a better way
🙏🙏🙏🙏
உன்ன மாதிரி வன்மவாதிகளை தேர்தலில் ஜெயிக்க வைத்த திமுக தொண்டர்கள் என்றைக்கும் உன்ன மன்னிக்க மாட்டார்கள்
அவ்வளவு கஷ்டம் இருந்தால் உன் எம்.பி, உன் கட்சி துரதிர்ஷ்டவசமாக ஜெயித்த எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யுங்க பார்போம்.
#பச்சோந்தி_மதிமுக
கடந்த திமுக அரசு
16 லட்சத்திற்கும் அதிகமான விவ���ாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் ₹12,110 கோடி கடன் தள்ளுபடியைச் செயல்படுத்தியது.
தற்போதைய விஜய் அறிவிப்பு சுமார் ₹2,044 கோடி மட்டுமே.
பெரும்பாலான விவசாயிகளுக்கு பயனளிக்காத ஏமாற்று அறிவிப்பு இது. #TVKFails
பத்திரிக்கையாளர் #துக்ளக்_இதயா அவர்கள் அளித்த சமீபத்திய பேட்டியில், திருச்சி திருவரங்கம் தொகுதியின் 91வது வாக்குச்சாவடியில் திமுக வெறும் 5 வாக்குகள் மட்டுமே பெற்றதாக கூறிய கருத்தை எடுத்துக்கொண்டு, திமுக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளவர்க���ே கழகத்தின் முதன்மைச் செயலாளர் @KN_NEHRU அவர்களையும், நிர்வாகிகளையும் கடுமையாக விமர்சித்து வருவது ஏற்புடையதல்ல.
அந்த 91வது வாக்குச்சாவடி வடக்கு சித்திரை வீதியை உட்படுத்திய பகுதியாகும். மொத்தம் சுமார் 300 வாக்குகள் மட்டுமே கொண்ட அந்த பகுதி, இப்போது மட்டும் அல்ல கடந்த காலங்களிலும் திமுகவிற்கு சாதகமான பகுதியாக இருந்ததில்லை.
2021 சட்டமன்றத் தேர்தலில் அங்கு திமுக பெற்ற வாக்குகள் — 15.
2024 ���ாடாளுமன்றத் தேர்தலில் அங்கு திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் — 13.
எனவே, தற்போது அந்த பகுதியில் திமுகவினர் அதிருப்தியால் திமுக வாக்குசாவடி நிலைய நிர்வாகிகளே வாக்களிக்கவில்லை அல்லது ம���தன்மை செயலாளர் அல்லது வேட்பாளர் மீதான எதிர்ப்பின் வெளிப்பாடு என பரப்பப்படும் தகவல்களில் உண்மை இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
கழகச் சார்பும், அரசியல் பொறுப்புணர்வும் கொண்டவர்கள், முழு பின்னணியை அறியாமல் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தி விவாதிப்பதை தவிர்க்க வேண்டுகிறேன்.
@mkstalin | @Udhaystalin | @dmk_youthwing | @DMKITwing | @Civilerbala1979 | @IlovemyNOAH2019
கழகத்தின் அமைப்பு முறையில் அவசியமான மாற்றங்களை முன்னெடுப்பது பற்றி இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசினேன்.
தோல்விக்கு யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டாம். கட்சித் தலைவர் என்கிற முறையில நானே இதுக்கு பொறுப்பேத்துக்குறேன்.
பின்னடைவை வென்று முன்னேறுவோம்! மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்!
#DMKDistrictSecretariesMeet
ப���ரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்க���் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனு��்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
“தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்��ிருக்கிறார்கள்.
அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக��கு.
அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்!
ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது?
Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க.
பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க.
“உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழக��்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க.
எங்களைப் பொறுத்தவரை,
திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்���்கட்சியா செயல்படும்!
#பிகிலும்#திகிலும்
வேலுமணி விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஊழலில் ஊறிய உத்தமர்களை எல்லாம் ஏற்கெனவே தத்தெடுத்து வைத்திருக்கும் பாஜக..
தாங்கள் திட்டமிட்டபடி அதிமுகவை முடித்த கையோடு
இப்போது
அந்த அதிமுகவில் தப்பிப் பிழைத்த முப்பது எம்எல்ஏக்களை தவெக பக்கமாக நகர்த்தவும் ஏற்கெனவே தவெகவோடு
ஒட்டிக் கொண்டுள்ள காங்கிரஸ் விசிக இடதுசாரிகளை அங்கிருந்து துரத்தவும்
பிறகு வேலுமணி விஜயபாஸ்கர்
சி.வி.சண்முகம் உள்ளிட்டோரை தவெகவின் அமைச்சரவையில் பங்கேற்க வைத்து தவெகவை பாதி அதிமுகவாக மாற்றி
அதன் மூலம்
முற்றிலுமாக த��்கள் கட்டுப்பாட்டுக்குள் விஜய்யை கொண்டு வரவும் துரிதமான ஏற்பாடுகளை அது செய்து வரு��ிறது.
குறிப்பாக
காங்கிரஸை தமிழ்நாட்டில் நடுத்தெருவில் நிறுத்துவது என்பதை
மிகக் குறியாக கொண்டு
அது
காய்நகர்த்தி வருகிறது.
ஏற்கெனவே தங்களால் தவெகவுக்குள் புகுத்தப்பட்டுள்ள செங்கோட்டையன் பாஜகவின் முன்னாள்
ஐ.டி. விங் செயலாளர்
நிர்மல்குமார் முன்னாள் IRS அதிகாரி அருண்ராஜ் மற்றும் "லாட்டரி மார்ட்டின்" குடும்பத்தார்..
இவர்களோடு
கோவை
ஆர்.ஸ்.எஸ் மாநாட்டில் சகோதரர் சகிதமாக ���ங்கேற்ற வேலுமணி..
குமரியில் அதே
ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்து எடப்பாடியின் நடவடிக்கைக்கு ஆளான
தளவாய் சுந்தரம் இவர்களோடு
குட்கா வழக்கில் சிபிஐயிடம் சிக்கியுள்ள விஜயபாஸ்கர் என
அதி்முகவிலிருந்து இப்போது நகர்த்தப்படும் இந்த
தத்துப் பிள்ளைகளும் இணைந்து ஆர்எஸ்எஸ்- பாஜகவின் பாதளத் திட்டங்களை கச்சிதமாக நிறைவேற்ற அனைத்து
கால அட்டவணைகளும் தயாராகி விட்டது .
ஆம்
ஆள முடியாத
மண்ணின் ஆள்வோரை அடிமையாக்குவது
பிறகு அந்த அடிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக தங்களது உடமையாக்குவது என்னும்
காவிகளின்
சூழ்ச்சியால் கபளீகரமான
மராட்டிய
தாக்கரேக்கள்
பீகாரின் நிதீஷ்குமாரர்கள்
என்னும்
வரிசையில்
அடுத்து
நம்ம
"பிகிலு" தான் ..
#என்னநாஞ்
#சொல்றது
பழைய செய்தியைப் புதியது போலத் திரிக்கும் தவெக-வினர்!
சொந்தமாகச் சாதித்துக் காட்ட எதுவும் இல்லை என்பதால், திமுக ஆட்சியில் 2026 ஜனவரியில் தொடங்கப்பட்ட சேல���் மாநகரக் காவல் துறையின் பைக் ரோந்து திட்டத்தைத் தங்கள் தலைவர் பெயரில் ஒட்டிக்கொள்கிறார்கள்.
பிறர் உழைப்பில் பெயர் தேடுவதை விடுத்து, சொந்தமாக உழைக்கப் பழகுங்கள் பாஸ்! அரசியல் என்பது பொய் செய்திகளைப் பரப்புவதல்ல, உண்மையாக உழைப்பது.
#TVKFails
பயபுள்ள லம்பா அடிச்சிட்டு வடமாநிலத்துக்கு போய் தலைமறைவாயிட்டான்.. Special team போட்டு புடிச்சிருக்காங்க.. அறந்தாங்கி TVK MLA பர்வேசோட ஜிகிடி தோஸ்து பயபுள்ள..
கட்சில இருந்து இதுவர எந்த நடவடிக்கையும் இல்ல.. சினிமால பேசுற மாதிரி வசனமா பேச மட்டுந்தான் செய்றாப்ல..
#TVKCriminals #TVKCrime
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜா��ாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்ப���க்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூற��� ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர ��ீண்டும் எனது வாழ்த்துகள்!