என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், யாருக்கும் வழங்கிடாத பேரன்பையும், பெருவாரியான வாக்குகளையும் நமக்கு வாரி வழங்கி, வாகை சூடும் வரலாற்றைத் திரும்ப வைத்து, உங்களின் முதல் சேவகனாக என்னை அமர்த்திய உங்களுக்கு என் நன்றிக் கடனைத் திருப்பி அளிக்கும் நேரமிது. உண்மையான மனசாட்சியுள்ள மக்களாட்சியை அமர்த்திய தமிழக மக்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, தமிழக மக்களாகிய உங்கள் தலைமையிலான ஆட்சி! இந்த ஆட்சி தொடர்ந்திட, மென்மேலும் வலுப்பெற உங்கள் ஆதரவு எப்போதும் தேவை.
கடந்த 25ஆம் தேதி (25.09.2026) மதுராந்தகம் தொகுதியிலும், 30ஆம் தேதி (30.09.2026) தாராபுரம் தொகுதியிலும் இடைத்தேர்தலுக்காக நாம் பரப்புரை மேற்கொண்டோம்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி (02.10.2026) மதுராந்தகம் தொகுதியிலும், இன்று (04.10.2026) தாராபுரம் தொகுதியில் வாகனப் பிரசாரம் மேற்கொண்டோம்.
இந்த இடைத்தேர்தல் பரப்புரைக்காக நாம் வந்த போது, செங்கல்பட்டு மாவட்ட மக்களும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களும் நமக்களித்த வரவேற்பும், நம்மிடம் காட்டிய அன்பும் பாசமும் எதற்கும் நிகரில்லாதது. எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நிலைத்திருக்கக் கூடியது. இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. இதற்காக உங்களுக்கு வாழ்நாள் கடமைப்பட்டுள்ளோம்.
நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், இவ்வளவு காலமாக நம்மை ஏமாற்றி வந்த, தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுவீர்கள்; மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரிப்பீர்கள்; மதுராந்தகம் தொகுதி திருமதி மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி திருமதி சத்தியபாமா ஆகியோருக்கு வெற்றிச் சின்னமாம் நமது விசில் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிப்பீர்கள் என்பதை இந்த நாடறியும். அதற்காக நான் முன்கூட்டியே உங்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.
மேலும், இந்தத் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், முழு ஒத்துழைப்பு நல்கிய தன்னார்வலர்கள் குழு, காவல் துறையினர், மருத்துவக் குழுவினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், மக்கள் நலன்களைக் காப்பதற்காக, எதிலும், எப்போதும் சமரசம் செய்துகொள்ளவே மாட்டோம். லஞ்சம், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்துடன் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இப்போது போலவே எப்போதும் தொடர்வோம்!
மீண்டும் நினைவூட்டுகிறோம்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்களே, நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டிய ஒரே சின்னம் உங்கள் வெற்றிச் சின்னமான விசில் சின்னம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ச. ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்துள்ள, தாய்மார்களும் குழந்தைகளும் அன்புடன் பயன்பெறும்“தாய்மாமன் தங்கமோதிரம்” திட்டத்தின் கீழ், 03.10.2026 நிலவரப்படி தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2,052 குழந்தைகளுக்கு தங்கமோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது பெருமைக்குரிய சாதனையாகும்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மட்டும் 322 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கப்பட்டு, மாவட்ட அளவில் அதிகளவில் மோதிரங்கள் வழங்கப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியலில் நான்காவது இடத்தை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பெற்றுள்ளது.
இது வெறும் தங்கமோதிரம் அல்ல…
ஒரு குழந்தையின் பிறப்பை அரசே தாய்மாமனாக இருந்து கொண்டாடும் அன்பின் அடையாளம்!
ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியில் அரசு பாசத்துடன் பங்கேற்கும் உறவின் அடையாளம்!
தமிழகத்தின் தாய்மார்களும், பச்சிளம் குழந்தைகளின் குடும்பங்களும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தங்களின் தாய்மாமனாக உணர்வோடும் நன்றியோடும் வாழ்த்தி வருகின்றனர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ
தேர்தல் பிரச்சாரமா?பெண்களை கேலி செய்யும் கேவலப் பிரச்சாரமா?
பெண்களை கேலி பேசும் டிஎன்ஏ
அது திமுகவின் கேடுகெட்ட டிஎன்ஏ!
நிலை மாறினால்
குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும்கூறுவான் !
பெண்களை இழிவாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்ட
திமுக தலைவரே
மன்னிப்பு கேள்!
மன்னிப்பு கேள்!!
#ஸ்டாலினே_மன்னிப்பு_கேள்
தன்னார்வத்துடன் இரத்ததானம் செய்து உயிர்களைக் காப்பதுடன், மனிதநேயத்தின் உயரிய மாண்பை நிலைநாட்டும் அனைத்து இரத்தக் கொடையாளர்களுக்கும் தேசிய தன்னார்வ இரத்ததான நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
அறுவை சிகிச்சை, விபத்து உள்ளிட்ட பல்வேறு சூழல்களில் உயிர்களைக் காக்க இரத்ததானம் இன்றியமையாதது. நாம் கொடையாக அளிக்கும் ஒவ்வொரு சொட்டு இரத்தமும், ஒரு மனிதனின் உயிரைக் காப்பதோடு மட்டுமல்லாமல், குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையையும் பாதுகாக்கிறது.
இரத்ததானம் அளிக்கும் கொடையாளர்கள், சமூகத்தின் உண்மையான உயிர்காக்கும் தூதர்களாகத் திகழ்கின்றனர். அவர்களின் தன்னலமற்ற சேவையும், உன்னதமான மனிதநேயமும் என்றும் போற்றத்தக்கவை.
தன்னார்வ இரத்ததானத்தின் முக்கியத்துவத்தை மக்களிடையே எடுத்துச்சென்று, இரத்ததானம் செய்யும் விழிப்புணர்வுமிக்க ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!
இரத்ததானம் செய்வோம்! உயிர்களைக் காப்போம்!
#CMJosephVijay
தனது நிகரற்ற நடிப்பாற்றலாலும், கம்பீரக் குரலாலும், ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி, திரையுலகின் இமயமாய் திகழ்ந்து, உலகத் தமிழர்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாளில் அவரது மகத்தான கலைப்பணியை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
வரலாற்று நாயகர்கள், புராண மாந்தர்கள், சமூகத்தின் எளிய மனிதர்கள் என அனைத்து கதாபாத்திரங்களையும் தன் அசாத்திய நடிப்பால் நம் கண்முன்னே நிறுத்தி, தமிழின் செழுமையையும் பெருமையையும் திரைப்படங்களின் வழியே உலகறியச் செய்து நடிப்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்தவர்.
அன்பு, பாசம், வீரம், கோபம், சோகம் போன்ற மானுட உணர்வுகளின் பரிமாணங்களைத் தனது நடிப்பால் வெளிப்படுத்திய நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் கலையுலகச் சாதனைகள் தலைமுறைகளைக் கடந்தும் தமிழ் மண்ணின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும்!
#CMJosephVijay
தமிழ்நாட்டின் மதிப்புமிகு மகளிரான நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் அனைவருக்கும் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டம்
அக்டோபர் 2 முதல்
வெற்றியைத் தர தயாராக இருக்கும் தாராபுரம் மக்களை நாளை சந்திக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின்
வெற்றி வேட்பாளர் திருமதி சத்யபாமா அவர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார் வெற்றித் தலைவர் அவர்கள்.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
தி.மு.க பிரமுகர் ஆக்கிரமித்த முத்தாலம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்ட தமிழக அரசு.. நன்றி தெரிவித்த கிராம மக்கள்
#Dindigul | #TempleLand | #TNGovt | #LandRecovery | #PolimerNews
"என்ன யாருன்னு நினைக்குற நீ..? நான் தி.மு.க காரன்யா..!" இது ஒன்றும் உங்கப்பன் வீடு இல்லை.. நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லணும் நீ.. மரியாதையாகப் பேசுங்கள்; இங்கே உங்களுடைய ரௌடித்தனத்தைக் காண்பிக்க வேண்டாம்..
கடலூர் மாநகராட்சி ஆணையர் அறைக்குள் சென்று அவரை ஒருமையில் பேசி மிரட்டிய தி.மு.க நகரச் செயலாளர் ராஜா... கோபமாக எச்சரித்த ஆணையர் கிஷன் குமார்..
#Cuddalore | #Corporation | #DMK | #ViralVideo | #PolimerNews
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புகாரில் 3 பேர் கைது
மதுபான பார் உரிமையாளரான திமுக நிர்வாகியிடம் காவல்துறை விசாரணை
#Kumbakonam#Lodge#News18Tamilnadu
"விஜய் ஆட்சில நாங்க தைரியமா பேசுவோம் "
சிவகங்கை: இளையான்குடி அருகே கடன் வழங்க ரூ.500 லஞ்சம் கேட்ட கூட்டுறவுச் சங்க ஊழியர்களிடம் ரசீது கேட்டு பெண்கள் அதிரடி வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல்!
Ilayangudi | Bribe Video | Viral News
#CooperativeSociety#NewsTamil24x7