தமிழக சட்டமன்றம் இந்திய ஜனநாயக வரலாற்றில் நூற்றாண்டைக் கடந்த பாரம்பரியமும், சமூக மாற்றத்திற்கான பல முன்னோடி சட்டங்களை இயற்றிய பெருமையும் கொண்டது. ஆங்கிலேயேர்கள் ஆட்சிக்காலம் முதலே, தனித்து நின்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகத் திகழ்ந்தது நம் தமிழகம். அரசியல் சலசலப்புகள், ஆட்சிக் கலைப்புகள், குடியரசுத் தலைவர் ஆட்சி என எத்தனையோ சிக்கல்களைக் கடந்து, தமிழக சட்டமன்றம் கடந்து வந்த பாதைகள் கரடு முரடானதாக இருப்பினும், பல அறிய வியத்தகு சிறப்புகளை உள்ளடக்கியது.
தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அதிலும், குறிப்பாக நம் இளைய சமுதாயத்தினர் பார்த்து கொண்டிருக்கின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக விளங்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நம் வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும். தற்போது சட்டமன்றத்தில் நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கும்பொழுது நம் இளம் சமுதாயத்தினர், நாமும் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என தவறுதலாக கருதிவிடக்கூடாது. தமிழக முதல்வர், எதிர்க்கட்சித்தலைவர், அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்கள் மற்றும் ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தொடர்ந்து குறைசொல்லிக்கொண்டு இருப்பதால் தமிழக மக்களுக்கு எந்தவிதத்திலும் அது பயனளிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக முதல்வர் இன்றைக்கு அனைத்து அதிகாரங்களையும் தனது கையில் வைத்து இருக்கிறார். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் மீது வெறுமனே குற்றம் சாற்றுவதோடு இருந்துவிடாமல் அவர்கள் மீது உள்ள குற்றத்தை நிரூபித்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து செயலில் காட்டுவதுதான் சிறந்ததாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுளேன்.
தமிழக சட்டமன்றத்தில் திரு.சி.ராஜகோபாலாச்சாரி, திரு.ஓ.பி.ராமசாமி ரெட்டியார், கர்மவீரர் திரு.காமராஜர், திரு.C.N.அண்ணாதுரை, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் முதல்வர்களாக பணியாற்றி இருக்கின்றனர். தமிழக மக்களுக்கு தேவையான வாழ்வாதார திட்டங்கள் பற்றியும், அவர்களின் உரிமைகள் பற்றியும், மாநிலத்தின் வளர்ச்சி பற்றியும் பல விவாதங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், தற்போது சட்டமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன. தமிழகத்தில் மக்களுக்கு இன்றைக்கு இருக்கின்ற அத்தியாவசிய தேவைகளையும், மக்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும் விவாதிக்க வேண்டிய நேரத்தை, தனி மனித தாக்குதல்களுக்கும், ஒருவரை ஒருவர் குறை சொல்வதற்கும் அந்நேரத்தை செலவிடுவதால் தமிழக மக்களுக்கு எந்தவித பயனும் அளிக்காது. தமிழக மக்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள், தமிழக சட்டமன்றத்தில் நாம் தொன்றுதொட்டு கட்டிக்காத்த மரபுகளை, கடைபிடித்து வந்த விதிகளை, பாரம்பரியமிக்க மாண்பை காப்பாற்றும் விதமாக தங்களது செயல்பாடும் அமையவேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
'ஆக்கிரமிப்பு நடவடிக்கை' - குப்பை லாரியில் வீசப்பட்ட மூதாட்டியின் காய்கறிகள்
மாகாராஷ்டிரா மாநிலம் பீட் நகரத்தில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் போது சாலையோர கடை வைத்திருக்கும் மூதாட்டி ஒருவரின் காய்கறிகளை அதிகாரிகள் குப்பை லாரியில் வீசினர்.
#Maharashtra
உண்மைதான் ஆனால் ஒன்றுக்கும் உதவாத காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளால் அல்ல காக்ரோச் ஜன்தா பார்டி மூலமாக மாற்றம் வேண்டும்.வெறும் தோழர்கள் எல்லாம் கல்லாப்பெட்டி தோழர்களாக மாறியதால் தான் இன்று காக்ரோச் அவசியம் ஏற்பட்டது.வாழ்க காக்ரோச் வளர்க மாநிலங்கள் வளர்க இந்தியா.
காக்ரோச் ஜனதா கட்சியைப் பார்த்து பாஜக அரசு ஏன் பயப்படுகிறது?
நாடு ஆளும் அரசை வழி நடத்தும் கட்சிதான், 56 இன்ச் மார்பளவு பற்றி எப்போதும் பெருமை பேசிக் கொள்பவர்கள்தான்... ஆனால் உண்மையில் இவர்களை விட அதிக பயம் கொண்டவர்கள் இந்த உலகில் இருக்க மாட்டார்கள்…
'கரப்பான் ஜனதா கட்சி' (Cockroach Janta Party) என்ற ஒரு நையாண்டியான, அடையாளப்பூர்வமான இயக்கத்தின் சமூக ஊடகப் பக்கங்களை முடக்குவதற்கான இவர்களின் முயற்சியைப் பார்க்கும்போதுதான் இப்படிச் சொல்ல வேண்டியிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு அபிஷேக் டிப்கே (Abhishek Dipke) என்ற இளைஞரால் இது தொடங்கப்பட்டது. தகுதியற்ற சில நிபுணர்களையும் வேலையில்லாத இளைஞர்களையும் "கரப்பான் பூச்சிகளோடு" ஒப்பிட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறிய கருத்துகளுக்கு எதிராக, ஒரு நகைச்சுவையான போராட்டமாகவே இது ஆரம்பமானது. ஆனால், சில நாட்களிலேயே இளைஞர்களின் பிரச்சினைகள், வேலையில்லாத் திண்டாட்டம், மதச்சார்பின்மை, அரசுக்கு எதிரான உணர்வுகள் ஆகியவற்றைத் தெளிவாகச் சுட்டிக்காட்டி, இளைஞர்களிடையே - குறிப்பாக Gen-Z (புதிய தலைமுறை) மத்தியிலே - இது ஒரு விவாதமாக மிக வேகமாக வளர்ந்தது.
நிறுவனங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தேர்தல்களில் வெற்றி பெறலாம்... ஊடகங்களை அடிமை வேலை செய்ய வைத்து எல்லாம் சுமுகமாக இருக்கிறது என்ற பிம்பத்தை உருவாக்கலாம்... ஆனால் நாட்டின் தலைவர்களுக்கு மிட்டாய் கொடுப்பது போன்ற வித்தைகள் இந்தியாவின் இளைஞர்களுக்குத் தேவையில்லை என்பதை அவர்கள் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் இந்த அரசு என்ன செய்தது? சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் இருந்த கரப்பான் ஜனதா கட்சியின் கணக்கை அரசு முடக்கியுள்ளது. இன்ஸ்டாகிராமிலும் ஃபேஸ்புக்கிலும் அவர்கள் இன்னமும் இருக்கிறார்கள், நீங்கள் இந்தப் பதிவை வாசிப்பதற்குள் அது இருக்குமா என்று தெரியவில்லை. தனது கணக்கை ஹேக் செய்வதற்கான முயற்சிகள் நடப்பதாக அபிஷேக்கே வெளிப்படுத்தியுள்ளார்.
பன்னிரண்டு ஆண்டுகால பாஜக ஆட்சியின் கீழ் நம் நாடு வந்து சேர்ந்திருக்கும் அவல நிலையின் நேரடிப் பிரதிபலிப்பையே நாம் காண்கிறோம். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியைப் பார்த்து பாஜக அரசு ஏன் பயப்படுகிறது? தடையைக் கொண்டும், சட்டங்களை வளைத்து சமூக ஊடகக் கணக்குகளை முடக்கியும் இந்த இயக்கத்தை அழித்துவிட முடியும் என்றா பாஜகவும் மத்திய அரசும் நினைக்கின்றன?
உலகிலேயே இப்போது அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியாதான். ஆனால் இளைஞர்கள் தற்போதைய அரசு அமைப்பின் மீது எவ்வளவு தூரம் விரக்தியடைந்துள்ளனர், அவர்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதைத்தானே இந்த 'கரப்பான் பூச்சி' பரவலிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்…
தோழர் @JohnBrittas எம்.பி., மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #cockroachjantaparty #cjp #BJPFailed #ModiFailed
கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல், இப்படி ஒரு அறிக்கை விட்டிருப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
எடப்பாடியார் அவர்களின் பிரசார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்துப் பேசவில்லை.
ஆனால், கூட்டணி குறித்தும், தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் யாரையும் கேட்டறியாமல் மிகுந்த தன்னிச்சையாக செயல்பட்டீர்கள். தங்களின் வார்த்தைகளை, தம்பிகளாக நாங்களும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டோம்.
ஆனால் தோல்வி வந்த பிறகு, ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து எல்லோரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும். அதை விடுத்து எப்போதும் போல “நான் மட்டுமே எல்லாம்” என்ற நிலையில் மட்டுமே நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை உணர்வுள்ள எந்த கழகத் தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
இதை மட்டுமே கழகப் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்களாகிய நாங்கள் எல்லாம் எங்கள் கருத்தாக சொல்லி வருகிறோம்.
மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மதித்து நாங்கள் செயல்படுகிறோம். மக்கள் ஆதரவு பெற்ற த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற அரசியல் அறத்தோடு கழகத்தின் ஆதரவை பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ளோமே தவிர, யாரையும் அவமரியாதை செய்யும் எண்ணமோ, கழகத்தை பிரிக்கும் எண்ணமோ எங்கள் யாருக்கும் இல்லை.
இப்போதும் நீங்கள் அழைத்தால், பேச நாங்கள் தயார்.
தோல்விக்கான காரணங்களை எல்லோரும் சேர்ந்து ஆராய்வோம். கழகத்தின் எதிர்காலப் பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம்.
“எந்தத் தியாகமும் செய்யத் தயாராக உள்ளேன்” என்று அறிக்கையில் கூறியுள்ளீர்கள். தங்களிடம் நாங்கள் கேட்பது ஒன்று தான்-
“போங்க போங்க” என்று எப்போதும் போல விரட்டி அடிக்காமல், “வாங்க வாங்க” என்று ஒருமுறை அழைத்து பாருங்கள்…!!
எல்லாமே மாறும்! கட்சி நல்லா இருக்கும்!
@EPSTamilNadu
அவரவர் ஆசையை தேர்தல் கருத்து கணிப்பாக தெரிவித்து வருகின்றார்கள்.ஆனால்" மக்கள் தீர்ப்பே மகேஷன் தீர்ப்பு" என்ற பேரறிஞர் அண்ணா கொள்கை படி மே-4 தேதி தீர்ப்பு வழங்கப்படும்.ஆனால் துரோக சக்தி அரசாலும் உரிமையை இழந்தது என்ற வரலாற்று உண்மையை யாரும் மறைக்க முடியாது.
உழைக்கும் கரங்களின் ஒற்றுமையையும், உறுதியையும் பறைசாற்றும் நாளாக கொண்டாடப்படுகின்ற இந்த ‘மே தின’ நன்னாளில் உலகெங்கிலும் வாழும் உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த "மே தின" நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு உலகளாவிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்நாள் நாடுகளின் எல்லைகளைக் கடந்து உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் உரித்தான நாளாகக் கொண்டாடப்படுகிறது. மனித நாகரீகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய தொழிலாளர்கள், எட்டு மணி நேரம் மட்டுமே வேலை நேரம் என்பதனை தங்களுடைய உரிமையாக போராடிப் பெற்ற நாளே, ‘தொழிலாளர் தினமாக’ உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
புரட்சித்தலைவர் அவர்கள் "உழைப்பவரே உயர்ந்தவர்” என்றுதான் எழுதி கையெழுத்து போடுவார். அதற்கு மிக முக்கிய காரணம் அவர் உழைப்பின் வலிமையை அறிந்தவர். திரைப்படத்துறையில் நடித்த போதே உழைக்கும் வர்க்கத்தின் பெருமைகளை எடுத்து சொல்லும் விதமாக புரட்சித்தலைவர் அவர்கள் தான் நடித்த படங்களில் உள்ள பாடல்கள், கதாபாத்திரங்கள் மூலம் உழைப்பவர்களின் பெருமைகளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்தவர்.
அதேபோன்று, உழைப்பாளர்களின் வலிகளையும், வேதனைகளையும் விளக்கும் வகையில் ‘தொழிலாளி’ என்ற திரைப்படத்தில்.
“ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி” என்ற பாடலில் ஒரு தொழிலாளியாகவே வாழ்ந்து காட்டியிருப்பார்.
புரட்சித்தலைவர் அவர்கள் திரைப்படங்களில் பாடியதோடு இருந்துவிடாமல் முதல்வர் பதவியில் அமர்ந்ததும், உழைப்பாளர்கள் மேன்மை அடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி அவர்கள் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றினார்.
அதிலும் குறிப்பாக, 1984ஆம் ஆண்டு போக்குவரத்து தொழிலாளர்களது வாரிசுகளின் நலனைக் கருத்தில் கொண்டு ஈரோட்டில் சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி புரட்சித்தலைவர் அவர்களால் நிறுவப்பட்டதையும், அதேபோன்று புரட்சித்தலைவி அம்மா அவர்களால் 1992-ஆம் ஆண்டு ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக்கல்லூரி உருவாக்கப்பட்டதையும் இந்நன்னாளில் பெருமிதத்துடன் எண்ணிப்பார்க்கிறேன்.
மேலும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திடும் வகையில் எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தியதையும், உழைக்கும் வர்க்கத்தினர் என்றென்றும் நினைவில் கொண்டுள்ளனர்.
உழைப்பே உயர்வு தரும்; மனநிறைவு தரும்; ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா உழைப்பின் மூலம் நமது நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த "மே தின"நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
SIR பிறகு நடந்த பீகார் மாநில சட்டப்பேரவைக்கு வந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு அனுத்தும் பொய்த்து போனது குறிப்பாக JVC கருத்து கணிப்பு எப்படி இருக்கும் என்று பாருங்கள்.
அன்பு நிறைந்த அண்ணன் எல்லோரையும் அரவணைத்து செல்லும் குணம் கொண்டவர்.எதிரிகளிடத்தில் போர்க்குணம் கொண்டு விரட்டி அடிக்கும் தீரன் சின்னமலையின் வாரிசு எங்கள் அண்ணன் வெற்றி சேனையின் வெற்றி தளபதி @SPVelumanicbe .
Kalvakuntla Kavitha should act like Jayalalithaa to benefit the Telugu people by giving priority to their mother tongue, Sundara Telugu, to the Tamil brothers and sisters of Telangana. I welcome you wholeheartedly. @OfficeOfKavitha@RaoKavitha#Stateautonomy
The TRS party was started by Kalvakuntla Kavitha. Like the revolutionary leader #Jayalalithaa, who lived her life and showed that women can run a party on par with men in this country and help the poor and needy people of their area,