எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
‘மெட்ராஸ் மாகாணம்’ என்றிருந்த நம் மாநிலத்தின் பெயரை 'தமிழ்நாடு' என மாற்றிட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட வரலாற்றுச் சிறப்புக்குரிய நாள் இன்று.
‘தமிழர்கள் வாழும் பகுதிக்கு தமிழ்நாடு என்று கூட பெயர் சூட்ட முடியவில்லையே’ என்ற தந்தை பெரியாரின் ஏக்கத்தையும், சங்கரலிங்கனாரின் தியாகத்தையும், தமிழ்ப்பெரியோர்கள் பலரின் விருப்பத்தையும் ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் நிறைவேற்றிக் காட்டியது நம் திராவிட முன்னேற்றக் கழகம்.
அன்றைக்கு தீர்மானத்தை நிறைவேற்றி, ‘தமிழ்நாடு' என்று அண்ணா அவர்கள் மும்முறை முழங்க, 'வாழ்க... வாழ்க...' என்ற உறுப்பினர்களின் முழக்கத்தால் சட்டமன்றமே உணர்ச்சிப் பெருக்கால் தத்தளித்தது.
அந்த இனிய தினத்தை தமிழ்நாடு நாளாக திராவிட மாடல் ஆட்சியில் நமது கழகத் தலைவர் @mkstalin அவர்கள் அறிவித்தார்கள்.
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க தமிழ்நாடு நாளில் உறுதி ஏற்போம்!
தமிழ் வெல்க!
தமிழ்நாடு வாழ்க!!
#தமிழ்நாடு_நாள்
இன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டத் துடிக்கும் கர்நாடக அரசின் சதி முயற்சியைக் கண்டித்தும், தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனைக் காக்கவும் கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவசாயிகளின் குரலாகப் பச்சைத் துண்டு அணிந்து நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர்.
மக்களவையிலும், அவை ஒத்திவைக்கப்பட்டபோது நாடாளுமன்ற வளாகத்திலும் தமிழ்நாட்டிற்கான காவிரி நீர் உரிமையை நிலைநாட்டவும், மேகதாது அணை திட்டத்திற்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
விவசாயிகளின் துயரத்தைத் துடைக்கவும், தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்க நினைப்போருக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் தி.மு.க. என்றும் தளராமல் போராடும்!
கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான #MISA_Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் @dmk_youthwing , இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!
#DMKYW #47_Years_of_DMKYW
பிள்ளையாக நான் ஊட்டி வளர்த்த @DMK_YouthWing 47-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!
அன்பகத்தில் தனி அலுவலகம், தமிழ்நாடு முழுவதும் கிளை வரை நிர்வாகிகள், முரசொலியில் பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம் எனக் கழகத்தின் முன்வரிசைப் படையணியாகப் பணியாற்றி வரும் இளைஞரணியின் தம்பிமார்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
இனி வரும் காலம் முன்பைவிட இளைஞரணி இருமடங்கு உழைக்க வேண்டிய காலம். உழைப்பைக் கொடுப்போம், கழகம் காப்போம், தமிழ்நாடு காப்போம்!
@Udhaystalin
பழநி ஆண்டவருக்கே மொட்டை போடும் தவெக ரியல் எஸ்டேட் அரசு!
பழநி ஆண்டவன் பூங்கா சாலையில், கடந்த கால சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு திமுக ஆட்சியில் 2025-ம் ஆண்டு மீட்கப்பட்டு, பக்தர்களின் வாகன நிறுத்தமாக மாற்றப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் கோயில் நிலத்தை, வெறும் ரூ.2 கோடிக்குத் தாரை வார்த்திருக்கிறது தவெக அரசு!
கடந்த ஜூலை 6-ம் தேதி, பழநி இணை சார்பதிவாளர் பணி மாறுதலான அந்த ஒருநாள் இடைவெளியைத் தந்திரமாகப் பயன்படுத்தி, நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி இந்த இமாலய முறைகேடு அரங்கேற்றப்பட்டுள்ளது; இது தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டை அப்பட்டமாகக் காட்டுகிறது.
நிலப் பதிவு முடிந்த அடுத்த நொடியே, அந்த அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கி வெகுமதி அளிக்கப்பட்டிருப்பது, இது அரசின் நேரடித் துணையோடு திட்டமிட்டு நடத்தப்பட்ட 'கொள்ளை' என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களே! கேமரா முன்னால் கோயில் ஆய்வுகளை ரீல்ஸாகப் படம்பிடித்து நாடகமாடும் நீங்கள், திரைக்குப் பின்னால் நிலத் தரகராகச் செயல்பட உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
முந்தைய ஆட்சியில் சுமார் ரூ.1,316 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்ட நிலையில், இன்று நீங்கள் ஒரு ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் போலக் கோயில் நிலங்களைத் தனிநபர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பது எந்த வகையில் நியாயம்?
பொறுப்பேற்ற இரண்டே மாதத்தில் பழநி ஆண்டவருக்கே மொட்டை போடும் உங்கள் இந்த அட்ராசிட்டியை ஆன்மீக பக்தர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
பாலியல் வெறிக் கழகம்!
பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை, தமிழ்நாடு முழுவதும் தவெக நிர்வாகிகளின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, பெண்களுக்கு எதிரான அநாகரிகச் செயல்களில் ஈடுபடும் கிரிமினல்கள், தவெக கட்சியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பது உங்கள் கட்சியின் யோக்கியதையை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது.
பெண்ணை உருட்டுக் கட்டையால் தாக்கியவருக்கு நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கியது முதல், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிரான புகார்கள் வரை, பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு குறித்து நீங்கள் காட்டிவரும் அலட்சியம் உங்கள் போலித்தனத்தின் உச்சம்.
கரூரில் திருமணமான பெண்ணிடம் அத்துமீற முயன்ற தவெக ஒன்றிய செயலாளர் ரமேஷுக்குக் கிடைத்த ‘தர்ம அடி’, பாதிக்கப்பட்ட மக்களின் ஆத்திரத்தின் ஒரு சிறு வெளிப்பாடுதான்; இது வெறும் தொடக்கம் மட்டுமே.
சட்டம் ஒழுங்கைத் தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சராக, உங்கள் சொந்தக் கட்சிப் பொறுப்பாளர்கள் பெண்களைச் சீண்டும்போது மவுனம் காப்பது, இந்தத் தவறுகளை நீங்களே மறைமுகமாக ஊக்குவிப்பதைக் காட்டுகிறது.
மிஸ்டர் விஜய், இனிமேல் இந்த அராஜகங்களை எவரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்! பெண்களைப் பாதுகாப்பதில் திராணியற்று, குற்றவாளிகளை அரவணைக்கும் உங்கள் இந்த ‘பாலியல் வெற்றிக் கழக’த்தின் அட்டகாசம் தொடர்ந்தால்,
இன்று கரூரில் ரமேஷுக்குக் கிடைத்த அடி, நாளை தமிழகம் முழுவதும் உள்ள உங்கள் தவெக-வினருக்குத் தேடி வரும்.
மக்கள் வீதிக்கு இறங்கிப் பாடம் புகட்டத் தொடங்கிவிட்டார்கள்; உங்கள் கட்சிப் பொறுப்பாளர்களின் கிரிமினல் செயல்களை நிறுத்தத் திராணியில்லை என்றால், மக்களின் கோபத்திற்கு நீங்களே பலியாவீர்கள்!
#பாலியல்_வெறிக்_கழகம்!
மக்களுக்கு வழங்கும் பையில் கூட ஊழல் செய்யும் தவெக அரசின் முகமூடியை துவைத்து கிழித்து காய வைத்த பெண்!
பொறுப்பேற்ற 60 நாட்களுக்குள் தான் சுற்றுலாத்துறை அமைச்சரா இல்ல சுற்றுச்சூழல் துறை அமைச்சரா என்பதை கண்டுபிடிக்கும் முன்பே, மாமனாரை வைத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் டிரான்ஸ்பர் ஊழல் மற்றும் சுற்றுச்சூழலை காக்க வழங்கப்படும் துணிப்பையில் ஊழல் என ஊழல் செய்யக் கற்றுக் கொண்டுள்ளார் அமைச்சர் ராஜீவ்!
தொட விடமாட்டேன் தொட்டால் விடமாட்டேன் என ஏதேதோ வசனம் பேசிய முதல்வர் விஜய் அவர்களே, உங்கள் அமைச்சரே அவர் தொட்டாலும் செல்லாது ஏனென்றால் இந்த ஆட்சியில் அவர் ஒரு ஒப்புக்கு சப்பாணி அதாவது டம்மி என்று செயல்படுகிறார்!
Birthday greetings to Captain Cool Thiru. @msdhoni.
Whether on the field or away from it, your composure, leadership and enduring charisma continue to inspire millions. The anticipation of watching you in action again remains as strong as ever.
Wishing you good health, happiness and many more years of success.
அரசுப்பள்ளி மாணவியின் தன்னம்பிக்கையைத் தனது விளம்பர Reelsகாக Camera முன்னால் கேலி செய்து சங்கடப்படுத்திய அமைச்சர் கீர்த்தனாவின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சொந்த அனுபவங்களை மறந்த அமைச்சரின் இந்த அதிகாரம் மிக்க மேட்டிமைத்தனம், தவெக-வின் விளம்பர வெறிக்காக எவரையும் பலி குடுக்க தயங்க மாட்டோம் என்ற சிந்தனையை அப்பட்டமாகக் காட்டுகிறது.
தேர்தலுக்கு முன்பும் சரி, தற்போதும் சரி, தங்கள் விளம்பர வெறிக்காகப் பிஞ்சு குழந்தைகளைப் பயன்படுத்தும் இத்தகைய பொறுப்பற்ற செயலைத் தவெகவும் அதன் தலைவரும் கைவிட வேண்டும்.
பதவி உயர்ந்தால் மட்டும் போதாது; உங்களுக்கும் உங்களோடு இருப்பவர்களுக்கும் மனமும் உயர்ந்திருக்க வேண்டும் . Uncle!
ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடிய திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று.
தீண்டாமைக் கொடுமைகளை உலகிற்கு உணர்த்த முதலாம் வட்ட மேசை மாநாட்டில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கே கைக்கொடுக்க மறுத்தத் துணிச்சலுக்குச் சொந்தக்காரர்.
தன் வாழ்நாள் எல்லாம் ஒடுக்கப்பட்ட – விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்துக்காகவும் – சம வாழ்வுக்காகவும் உழைத்த இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பணிகளைப் போற்றும் வகையில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஓட்டேரி பகுதியில், ‘இரட்டைமலை சீனிவாசன் சாலை’ என்று நம்முடைய தலைவர் @mkstalin அவர்கள் பெயர் சூட்டினார்கள்.
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் புகழ் ஓங்கட்டும். அவர் லட்சியங்களை வென்றெடுக்க அயராது உழைப்போம்.
#RettamalaiSeenivasan