#விடியல்எங்கே?
திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்
(பகுதி 5)
81.கொளத்தூர் தோணிமடுவுத் திட்டம் & நான்கு மலைகளிலிருந்து வரக்கூடிய நீரை��் தடுப்பணை கட்டித் தேக்கி வைத்து விவசாயத்திற்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் & 107)
82.சேலம் சாணார்பட்டி & மூலக்காடு சாம்பல் நீரேற்றுத் திட்டம் நிறைவேற்றப்படும். (வாக்குறுதி எண் & 108)
83.கிருஷ்ணகிரி மாவட்டம் படேதால் ஏரியில் இருந்து வெண்ணம்பள்ளி, அச்சமங்களம் உள்ளிட்ட 5 கால்வாய்களையும் நக்கல்பட்டி, புதூர் ஆகிய 10 ஏரிகளையும் இணைக்கும் வகையில் புதிய கால்வாய்கள் வெட்டப்படும். (வாக்குறுதி எண் & 110)
84.கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்கவும், கடல்நீர் உட்புகுவதைத் தடுக்கவும் அரிவாள் மூக்கு வடிகால் திட்டம் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்படும். (வாக்குறுதி எண் & 111)
85.சேதுசமுத்திரத் திட்டத்தை, அதற்கெதிரான அனைத்துத் தடைகளையும் உடைத்து, முழுமையாக நிறைவேற்றவும் தென் தமிழகம் பொருளாதார வளர்ச்சி பெறவும் திமுக அரசு பாடுபடும். (வாக்குறுதி எண் & 112)
86.மீனவர்கள் நலனைக் காக்க கச்சத்த��வை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். (வாக்குறுதி எண் & 113)
87.மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அதற்கான சலுகைகளைப் பெற்றுத்தர திமுக அரசு நடவடிக்கை எடுக்கும். (வாக்குறுதி எண் & 114)
88.மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும், தமிழ்நாடு & இலங்கை கடல் எல்லையில் சிக்கல் தீர்க்கும் மையங்களை உருவாக்கவும் மத்திய அரசை திமுக அரசு வலியுறுத்தும். (வாக்குறுதி எண் & 115)
89.மீனவர்களுக்கு 2 இலட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்; ஏற்கெனவே கட்டப்பட்டு சேதமடைந்த நிலையில் உள்ள வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தரப்படும். (116)
90.மீனவர்களின் நலன் காக்க தேசிய மீனவர் நல ஆணையம் அமைக்கும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும். (வாக்குறுதி எண் & 117)
91.ஆழ்கடல் மீன்பிடிப்பு கொள்கையை உருவாக்குவதற்கான மீனாக்குமாரி குழுவின் அறிக்கை மீனவர்கள் நலனுக்���ு எதிராக இருப்பதால், அந்த அறிக்கையை திரும்பப் பெறவேண்டும் என மத்திய அரசை திமுக அரசு வலியுறுத்தும். (வாக்குறுதி எண் & 118)
92.நடுக்கடலில் உயிரிழக்கும் மீனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் பெற 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ள நிலையில், மீனவர் சங்கங்களின் பரிந்துரை அடிப்படையில் உடனடியாக இறப்புச் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் & 119)
93.மீனவர்களின் குறைகளைத் தீர்க்க 3 மாதங்களுக்கு ஒருமுறை மீன்வளத்துறை அமைச்சர் & மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்புடன் குறைதீர்ப்புக் கூட்டம் நடத்தப்படும். (வாக்குறுதி எண் & 120)
94.மீன்வளத் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க மீன்வளக் கல்லூரிகள், கடல்சார் கல்லூரிகள��� புதிதாக உருவாக்கப்படும். (வாக்குறுதி எண் & 121)
95.மீனவர் பகுதிகளில் புதிய பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும். (வாக்குறுதி எண் & 122)
96.மீன்வளத்துறை சார்பில் தேவைப்படும் இடங்களில் படகுகளை மீட்டெடுக்கத் தேவையான டிராக்டர்களைக் குறைந்த வாடகையில் மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் & 126)
97.கட்டுமரம் போன்ற படகுகளில் மீன்பிடிப்பவர்களுக்கு மானிய விலையில் முன்பு வழங��கப்பட்ட ஐஸ் பெட்டிகள் மீண்டும் வழங்கப்படும். அதேபோல், மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கும் ஐஸ் பெட்டிகள் வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 127)
99.படகுகளில் இஞ்சின்களைப் பயன்படுத்தும் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் 20 சதவிகித மானியம் உயர்த்தி வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 128)
99.கன்னியாகுமரி & திருநெல்வேலி & தூத்துக்குடி மாவட்டங்களின் கடல் அமைப்பின் காரணமா�� மீனவர்கள் பயன்படுத்திவரும் வெளிநாட்டு வெளிப்பொருத்தும் இயந்திரங்கள் ஆண்டுக்கு 750 வீதம் இறக்குமதி செய்யப்பட்டு தேவையான பகுதிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் & 129)
100.அனைத்து மீனவ கிராமங்களுக்கும் மீன் உலர்த்தும் தளம் அமைத்துத் தரப்படும். (வாக்குறுதி எண் & 130)
போராட்டங்களுக்கு அனுமதி: பாமகவுக்கு ஒரு நீதி,
திமுகவுக்கு ஒரு நீதியா? - காவல்துறை
திமுகவின் ஏவல்துறையாக மாறிவிடக் கூடாது!
தமிழ்நாட்டில் ஆளுனரைக் கண்டித்து திமுக சார்பில் இன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. பொது நலனைப் பற்றிக் கவலை��்படாமல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்படுள்ளன. இவை அனைத்துக்கும் தமிழக காவல்துறை மவுன சாட்சியாக இருந்து வேடிக்கைப் பார்த்திருக்கிறது.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு வேகமாக சீர்குலைந்து வருகிறது, பெண்களால் அச்சமின்றி நடமாட முடியவில்லை, அண்ணா பல்கலைக்கழகத்திற்க���ள் அத்துமீறி நுழைந்த திமுகவின் ஆதரவு பெற்ற மனித மிருகம் ஒன்று அங்கு பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது. அந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி பெற்றுத் தர வேண்டிய காவல்துறை, குற்ற்வாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் தான் ஈடுபட்டது. அதைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த 2-ஆம் தேதி சென்னை வள்ளுவர�� கோட்டத்தில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான அனுமதி கோரி 4 நாட்களுக்கு முன்பாக ��ிண்ணப்பமும் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், சென்னை பெருநகர காவல்துறை சட்ட விதி 41-இன் படி ஐந்து நாட்களுக்கு முன்பாக விண்ணப்பித்தால் மட்டும் தான் அனுமதி வழங்க முடியும் என்று கூறி காவல்துறை அனுமதி மறுத்து விட்டது. அதுமட்டுமின்றி, வள்ளுவர் கோட்டத்தில் 500-க்கும் கூடுதலான காவலர்களைக் குவித்து போராட்டக்களத்திற்கு எவரும் வராமல் தடுத்தது. போராட்டத்திற்கு தலைமையேற்க வந்த பசுமைத் தாயக��் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி அவர்களை மகிழுந்தை விட்டுக் கூட இறங்க விடாமல் கைது செய்து அழைத்துச் சென்றது. பா.ம.க. போராட்டத்தின் போது கோர முகத்தைக் காட்டிய காவல்துறை, இப்போது அடிமை முகத்தைக் காட்டியிருக்கிறது.
ஆளுனரைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக நேற்று பிற்பகல் 2.48 மணிக்கு தான் திமுக அறிவித்தது. அதன் பின்னர் நேற்று முன்னிரவில் தான் போராட்டத்திற்கு அனுமதி கோரி திமுக சார்பில் விண்ணப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதையேற்றுக் கொண்டு அடுத்த சில நிமிடங்களில் அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது. திமுகவினரின் போராட்டங்களின் போது பல இடங்களில் விதிமீறல்கள் நடந்தாலும் கூட அதற்காக எவரும் கைது செய்யப்படவில்லை. தமிழக காவல்துறையின் இந்த அப்பட்டமான இரட்டை வ���டம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
திமுகவினரின் போராட்டத்திற்கு சட்டவிரோதமாக அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் விஷயத்தில் எவரேனும் நீதிமன்றத்திற்கு செல்வார்களோ, நீதிமன்றம் தடை விதித்து விடுமோ? என்ற அச்சத்தில், அறிவிக்கப்பட்ட நேரமாக காலை 10.00 மணிக்கு பதிலாக காலை 9.00 மணிக்கே சென்னை சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதனால் கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்���ளுக்கும் செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்திற்கு அனுமதி கோரி 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்கு என்னென்ன நியாயங்கள் உள்ளனவோ, அந்த நியாயங்கள் அனைத்தும் திமுகவின் போராட்டங்களுக்கும் உண்டு. ஆனால், பாமக போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை, திமுக போராட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கியது ஏன்? ஆட்சியாளர்கள் என்றால் ���ானத்திலிருந்து குதித்தவர்களா? அவர்களுக்கு மட்டும் அஞ்சி நடுங்கி அனுமதி தர வேண்டுமா? என்றெல்லாம் மக்கள் வினா எழுப்புகிறார்கள். அவற்றுக்கு காவல்துறையும், தமிழக அரசும் பதிலளிக்க வேண்டும்.
காவல்துறை என்பது மக்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. அது பாமகவுக்கு காவல்துறை என்றால், திமுகவுக்கும் காவல்துறையாகத் தான் இருக்க வேண்டும். தமிழக காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக மா���ிவிடக் கூடாது. பாமகவுக்கு ஒரு நீதியையும், த��முகவுக்கு ஒரு நீதியையும் காவல்துறை கடைபிடிக்கக்கூடாது. திமுக அரசின் அதிகாரக் கரங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் காவல்துறை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கப்படுகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் சரியான நேரத்தில், சரியான முறையில் பாடம் புகட்டுவார்கள்.
@CMOTamilnadu @tnpoliceoffl
ஆஹா.... நல்லா இருக்கே இந்த நாடகம்; திமுகவினரை போராடஅனுமதித்து விட்டு வழக்கு மட்டும் பதிவதும், பாமகவினரை போராட விடாமல் சிறை வைப்பதும் தான் காவல்துறை நீதியா?
தமிழ்நாட்டில் அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும், அவ்வாறு போராடிய திமுகவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சட்ட��்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். காவல்துறையின் பாரபட்சமும், திமுகவினரின் அத்துமீறல்களும் பூசணிக்காய் அளவுக்கு இல்லாமல், இமயமலை அளவுக்கு பரந்து விரிந்து கிடக்கும் நிலையில், அதை நடுநிலை விளக்கம் என்ற ஒரு பிடி சோற்றைக் கொண்டு மறைக்க முயன்றிருக்கிறார் முதலமைச்சர். அரசியல் அடிப்படைத் தெரிந்த எவரும் இந்த விளக்கத்தை ஏற்க மாட்டார்கள். இப்படி ஒரு விளக்கத��தைக் கொடுத்த முதலமைச்சரை நினைத்தால் பரிதாபமாகத் தான் இருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி திமுகவின் ஆதரவு பெற்றவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீதான விவாதத்தில் பேசிய பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜி.கே.மணி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு பாமக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த போராட்டத்திற்கு எதிராக காவல்துறை சார்பில் கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளை சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலளிக்கும் வகையில் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விளக்கத்தை அளித்திருக்கிறார்.
போராட்டம் நடத்தியதற்காக பாமகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைப் போலவே திமுகவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதற்காகவே திமுக அரசுக்கும், சென்னை மாநகர காவல்துறைக்கும் நடுநிலை நாயகர்கள் விருதை வழங்கி விட முடியாது; வேண்டுமானால் நடுநிலை நாடகர்கள் என்ற விருதை வேண்டுமானால் வழங்கலாம். அந்த அளவுக்கு இந்த விவகாரத்தில் அரசும், காவல்துறையின் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்துவதற்காக 4 நாட்களுக்கு முன் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், போராட��ட நாளுக்கு முதல் நாளில் தான் திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி போராட்டம் நடைபெறவிருந்த வள்ளுவர் கோட்டத்தைச் சுற்றிலும் 500-க்கும் மேற்பட்ட காவலர்களை நிறுத்தி எவரும் அங்கு கூடாத வகையில் நெருக்கடி கொடுத்தது. அதையும் மீறி அங்கு கூடியவர்களை தீவிரவாதிகளை கைது செய்வதைப் போல கைது செய்தது. போராட்டத்திற்கு தலைமையேற்க வந்த பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்பும��ியை ஒரு குற்றவாளியைப் போல கைது செய்து அவரது முதுகில் கை வைத்து காவல் ஆய்வாளர் ஒருவர் இழுத்துச் சென்றார். பாமகவினர் அனைவரும் சுமார் 10 மணி நேரம் அடிப்படை வசதிகள் கூட இல்லாத இடங்களில் சிறை வைக்கப்பட்டனர்.
ஆனால், திமுகவினர் அறிவிப்பு வெளியிட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக போராட்டம் நடத்தினர். அவர்களின் போராட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று காவல்துறை கூறுகிறது. ஆனால், பா��கவின் போராட்டத்தை தடுத்து நிறுத்தியதைப் போல திமுகவின் போராட்டத்தைத் தடுக்க எ��்த முயற்சியையும் காவல்துறை மேற்கொள்ளவில்லை. மாறாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் திமுக நடத்திய போராட்டத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் காவல்துறையினர் காவல் காத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் அனைவரையும் பாதுகாப்பாக அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினரின் செயல்களை கண்டிக்கும் வகையில் நேற்று நான் அறிக்கை வெளியிட்ட ���ிறகு தான் திமுகவினர் மீது வழக்குத் தொடரப்பட்டதாக ஒரு நாடகத்தை காவல்துறை அரங்கேற்றியது. காவல்துறை நடுநிலையாக செயல்படுகிறது என்றால், அனுமதியில்லாமல் நடத்தப்பட்ட திமுக போராட்டத்தை அனுமதித்தது ஏன்? போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யாதது ஏன்? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு காவல்துறையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும���. இந்த விவகாரத்தில் திமுக அரசும், காவல்துறையும் நடத்தும் நாடகங்களை மக்கள் நம்ப மாட்டார்கள். திமுக அரசுக்கு அவர்க்ள் பாடம் கற்பிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.
@cmotamilnadu
மாணவர்களையும் விட்டு வைக்காத திமுக அரசு:
பாடநூல்களின் விலையை 40% உயர்த்துவதா? உடனடியாக திரும்பப்பெற வேண்டும்!
தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரைய���லான பாடநூல்களின் விலைகளும், போட்டித் தேர்வுக்கான நூல்களின் விலைகளும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்து வகுப்புகளுக்கான பாட நூல்களில் விலைகளும் சராசரியாக 40% முதல் 45% வரை உயர்த்தப்பட்டுள்ளன. ஏழாம் வகுப்புக்கான பாடநூல்களின் விலைகள் இதுவரை இல்லாத வகையில் ரூ.1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் விலை உயர்த்தப்படாத பொருட்கள���ம் இல்லை; கட்டணம் உயர்த்தப்படாத சேவையும் இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்து விலைகளையும், கட்டணங்களையும் உயர்த்தி விட்ட தமிழக அரசு, இப்போது மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை. ஏழை, எளிய மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் பாடநூல் கட்டணங்களை உயர்த்தியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நூல்கள் வழங்கப்படுகின்றன; தனியார் பள்ளி மாணவர்கள் மட��டும் தான் பாடநூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று கூறி தமிழக அரசு தப்பித்துக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகிய இரு வகைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு இணையாக தனியார் பள்ளிகளில் மாணவர்கள் பயில்கின்றனர். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பணக்காரர்கள் அல்ல.
அரசு பள்ளிகளில் கல்வி��்தரம் இல்லாததாலும், ஆங்கிலவழிக் கல்வி மோகம் காரணமாகவும் தனியார் பள்ளிகளில் ஏராளமான ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்துக் குழந்தைகள் படிக்கின்றனர். கல்விக் கட்டணத்தையே கடன் வாங்கிச் செலுத்தும் அவர்களால் புத்தகத்துக்காக இவ்வளவு பணத்தை செலவழிக்க முடியாது. அவர்களின் நிலையையும் தமிழக அரசு கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ஒரு லட்சத்துக்கும் கூடுதலான வகுப்புகள��க்கு ஆசிரியர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்கி, மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு துரத்தும் தமிழக அரசு, புத்தகத்தின் விலைகளையும் உயர்த்தி அந்த மாணவர்களின் கல்வி வாய்ப்பைக் கெடுக்கக் கூடாது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு விலைகளை குறைக்க வேண்டும்; வாய்ப்பிருந்தால் தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கும் இலவசமாக பாடநூல்களை வழங்க வேண்டும்.
@CMOTamilnadu
தமிழ்நாட்டில், 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு பேராபத்து வருவதை தடுக்கவும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தியும், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர், ஓய்வு பெற்ற நீதியர���ர் வீ.பாரதிதாசன் அவர்களை சந்தித்த போது.!
கள்ளச்சாராயம், கஞ்சா, போதைப் பொருள் விக்கிறவன் சுதந்திரமா இருக்கான்.
மக்களின் அத்தியாவசிய பிரச்சினையான மின் கட்டணம் உயர்வு எதிர்த்து போராடினா வழக்கு போடுறீங்க. விவசாயிகள் மீதே குண்டாஸ் போட்ட அரசு தானே.. உங்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும். @mkstalin#PMK#ANBUMANI#RAMADOSS
தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் ஸ்டேடியத்தில், மின்சார கட்டண உயர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி, பாமக சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற போது.!
Congratulations to #TeamIndia for putting up an incredible fight to win the T20 Cricket World Cup. Our champion team truly deserves this ICC trophy.
#T20WorldCup2024
மத்திய அரசு அறிவித்துள்ள நெல் கொள்முதல் விலை
குவிண்டாலுக்கு ரூ.2320 போதுமானதல்ல: குவிண்டாலுக்கு
தமிழக அரசு ரூ.800 ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும்!
2024-25ஆம் ஆண்டில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.117 உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் மூலம் சாதாரண ரக நெல்லுக்கான கொள்முதல் விலை 2,183 ரூபாயிலிருந்து 2300 ரூபாயாகவும், சன்ன ரக நெல்லுக்கான கொள்முதல் விலை 2,203 ரூபாயிலிருந்து ரூ.2320 ஆகவும் உயர்ந்திருக்கிறது. இது கணிசமான உயர்வு தான் என்றாலும் கூட வேளாண் உற்பத்திச் செலவுடன் ஒப்பிடும் போது இது போதுமானது அல்ல.
ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்திச் செலவு ரூ. 2017 ஆக மதிப்பிடப்பட்டிருக்கிறது. எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி 50% லாபமாக ரூ.1009 சேர்த்து ஒரு குவிண்டாலுக்கான கொள்முதல் விலையாக ரூ.3026 நிர்ண��ிக்கப்பட்டிருந்தால் உழவர்கள் ஓரளவாவது மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். ஆனால், வேளாண் விளைபொருட்களுக்கான உற்பத்தி செலவுகளை கணக்கிடுவதற்காக மத்திய அரசு கடைபிடிக்கும் வழிமுறையில் உள்ள குளறுபடிகள் காரணமாக நெல்லுக்கான உற்பத்திச் செலவு குறைவாகவே மதிப்பிடப்படுகிறது. அதனால் கொள்முதல் விலையும் குறைகிறது. இது தான் உழவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் நெல் கொள்முதல் விலை போதுமான அளவில் இல்லை எனும் போது, அதை ஈடு செய்யும் வகையில் தமிழக அரசு தான் கூடுதல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஆனால், தமிழக அரசோ எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத வகையில் சாதாரண நெல்லுக்கு, 82 ரூபாய், சன்ன ரக நெல்லுக்கு, 107 ரூபாயை கடந்த ஆண்டுக்கான ஊக்கத்தொகையாக தமிழக அரசு அறிவித்தது. நடப்பாண்டிலும் இதே அளவில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டால் நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.2500-க்கூட தாண்டாது. இது உழவர்களுக்கு போதுமானதாக இருக்காது.
ஒதிஷாவில் புதிதாக பதவியேற்றுள்ள பாரதிய ஜனதா அரசு, அதன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலையை ரூ.3100 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு எந்த நேரமும் வரக்கூடும். இதற்கான மத்திய அரசின் கொள்முதல் விலையான 2300 ரூபாயுடன் ரூ.800 ஊக்கத்தொகை சேர்த்து வழங்கவுள்ளது. இதற்கு முன்பாகவே தெலுங்கானா மாநில அரசுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 500 ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்திருக்கிறது. உழவர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கு��் இந்த மாநில அரசுகளின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.
ஒதிஷா மாநில அரசிடமிருந்து தமிழக அரசும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒதிஷா மாநில அரசு வழங்கவிருப்பதைப் போல குவிண்டாலுக்கு ரூ.800 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அத்துடன் சேர்த்து ஒரு குவிண்டால் சாதாரண ரக நெல்லுக்கு ரூ.3100, சன்னரக நெல்லுக்கு ரூ.3120 கொள்முதல் விலையாக வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
@CMOTamilnadu