'சாட்டை' துரைமுருகன் முதல்நாள் சட்டசபை நிகழ்வுகள் குறித்து என்ன விமர்சிக்கிறாரோ, பதறிப்போய் அதையெல்லாம் மறுநாள் மாற்றிக்கொள்கிறார்கள் ஆளுங்கட்சியினர்.
'30 வினாடிகூட இப்படி சும்மா உக்கார முடியலையே, எப்படித்தான் விஜய் வெறிச்சு வெறிச்சு பார்த்துட்டு உக்காந்திருக்காரோ' என்று சாட்டை துரைமுருகன் விமர்சித்த மறுநாள்தான் விஜய் சிரிக்கவாவது செய்தார்
அமைச்சர் ராஜ்மோகன் சட்டை மேல் பட்டன் போடாததை சாட்டை விமர்சித்தபிறகு மறுநாள் அமைச்சர் பட்டன் போட்டிருந்தார்.
உண்மையில் அவையை வழிநடத்தும் அவை முன்னவர் செங்கோட்டையன் அல்ல, 'சாட்டை' துரைமுருகன்தான்.
"நான் நெனச்சேன் தவெக அரசு பண்ற முதல் கைது சீமான் இல்லேனா சாட்டையாதான் இருக்கும்னு" என சொல்கிறாள் தோழி ஒருவர்.
"அப்படியெல்லாம் கை வைத்துவிட மாட்டார்கள்" என பதிலளித்தேன்.
கைது செய்தால் அது அரசியலைப் பொருத்த வரை புத்தூக்கம். அதாவது அரசியல் தலைவர் ஒருவரை ஆளுங்கட்சி கைது செய்தால், "இங்க பாருங்க எனக்கு சரியான எதிரி இவர்தான்" என பிரகடனப்படுத்துவது போலாகிவிடும். தன்னை நிமிர்ந்து எதிர்ப்பவர் இவர்தான் என ஊருக்கு காட்டுவது போலாகும்.
உதயநிதியை அலுங்காமல் குலுங்காமல் கைது செய்து பின் விடுவித்ததெல்லாம் இதன் சாரம்தான்.
"எனக்கு சரியான எதிரி இவர்தாங்க. என்னைய உங்களுக்கு பிடிக்கலேனா இவரை ஆதரிச்சுக்கோங்க" என்பதைதான் இப்படி சுற்றி வளைத்துச் சொல்வார்கள்.
திமுகவை தனக்கு நேரெதிர் திசையில் நிறுத்துவதில் தவெக'வுக்கு அதீத ஆதாயம் உண்டு. ஏனென்றால் ஏற்கனவே அதன் அட்டூழியத்தினால் நிகழ்ந்த அபத்தமான விபத்துதான் இந்த அரசு. அந்த அட்டூழியத்தை உயிர்ப்புடன் வைப்பதன் மூலம்தான் தனது அரசாட்சி நீடிக்கும் என்பதை தெளிவாக உணர்ந்து நகர்த்துவார்கள்.
சரி தன்னை தீர்க்கமாக எதிர்க்கும், தனது தவறுகளை தோலுரிக்கும் இந்த நாம் தமிழர் கட்சியை இப்படியே விட்டுவிடுவது நல்லதா? என்கிற கேள்வி எழும். அதற்குதான் கடந்த திமுக ஆட்சி நாம் தமிழர் கட்சியை கையாண்ட அதே உத்தியை அதைவிட காத்திரமாக செய்கிறார்கள், செய்வார்கள். அண்ணனோடிருந்தவர்களை வெளியேறச் செய்வது,
சீமான் அண்ணன் பேசும் அதே தமிழ்தேசிய கொள்கையைப் பேசுகிறவர்களை அண்ணனுக்கு எதிராக பேச வைப்பது. தவெக தொண்டர்களை ஏவிவிட்டு கூசும்படியான அவதூறுகளை பேச வைப்பது. ஒருமையில் சாடுவது, இழிவாக ஏசுவது என சீமான் என்கிற பிம்பத்தை சுக்குநூறாக்கி சிதைப்பது. துணை நடிகர்களை வைத்து அறிவுரை சொல்வது போல விமர்சனம் செய்வது, நாதகவினருக்கு அவநம்பிக்கையை விதைப்பது, அரசியல் புரோக்கர்களை வைத்து அபாண்டப் பழி சுமத்துவது என அவர் மீதான தாக்குதலின் நீளம் மிக மிக அதிகம்.
ஒரே ஒரு நம்பிக்கைதான். அநீதி நீண்ட நாட்கள் வாழாது. நீதி எப்படியும் வென்றே தீரும் அது வரை ஆடுங்கள்!
இவருடைய பேச்சை நான் முழுமையாக பார்த்தேன். அதில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தனித்தமிழீழ அரசே ஒரே தீர்வு என்பதை முன்வைத்து பொதுவாக்கெடுப்பை எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றியும், இந்திய ஒன்றியத்துக்குள் இருக்கும் மொழி வழித் தேசிய இனங்களின் ஆதரவுகளை எப்படி பெறுவது என்பது பற்றியும் பேசி இருந்தார்.
அதுமட்டுமின்றி நடந்தது இனப்படுகொலை தான் என்பதை சர்வதேச அரங்கில் நிறுவி, அதன் மூலமாக ஒடுக்கப்பட்ட இனம் ஒடுக்கிய இனத்தோடு வாழ முடியாது என்ற கூற்றை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து அதன் ஊடாக தமிழீழம் மட்டுமே ஒரே தீர்வாக இருக்க முடியும் என்பதை நாங்கள் நிறுவி காட்டுவோம் என்று அரசியல் ரீதியாக தங்கள் நிலைப்பாட்டை தெளிவாக விளக்கியிருந்தார்.
ஆனால், போகிற போக்கில் ஓரிரண்டு இடங்களில் தமிழக முதல்வர் குறித்து பேசியது மட்டும் செய்தியாகிறது. தங்களைப் போன்ற பிரபலங்களும் அது மட்டும் தான் பேசப்பட்டது என்று குறிப்பிடுவது அதிர்ச்சி அளிக்கிறது. அவருடைய முழு பேச்சையும் கேட்டுப் பாருங்கள்!
இது தான்யா நாம் தமிழர் கட்சி...
ஓட்டு போடுறீயா இல்லையோ வந்து மக்களுக்காக நிப்பார்கள்.... தவெக, திமுக, அதிமுக எவனாவது வந்தானா.... ஒரு நிறை மாத கற்பணி பெண் வந்து நின்று உங்களுக்காக போராடுகிறார்.எப்படா எங்களை புரிந்து கொள்ள போகிறீர்கள் தமிழ்நாட்டு மக்களே 😞