தன் வாழ்நாளில் களம் கண்ட 16 பெரும் போர்களிலும் பெருவெற்றி பெற்று, தமிழ் மண்ணுக்கும் மக்களுக்குமான ஆட்சியை வழங்கிய, பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351 வது சதய விழா, காவிரி புனிதநீர் கொண்டு, அரச முறைப்படி, இறை நீராட்டலுடன், இனிதே தொடங்கியது!
எம் குல இறை, சத்ரு கேசரியே!!
போற்றி!. போற்றி!!..
#முத்தரையர்_சதயவிழா
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
இன்றைய தினம் 17.02.2026, செவ்வாய்க்கிழமை - தமிழர் தேசம் கட்சியின், மாநில செயற்குழு கூட்டம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள, சங்கீதாஸ் அரங்கத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது.
இக்கூட்டத்தில் கட்சியின், மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கு தலைமையேற்று, கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினேன்!
வீரமே விழுதுகளாய்... வெற்றியே வேர்களாய்!
வரலாற்றுச் சிறப்புமிக்க "முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாடு" மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது!
தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் இருந்து, நம் இனத்தின் உரிமைக் குரலை மீட்டெடுக்கத் திரண்டு வந்த உறவுகளே! உங்கள் வருகை தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது.
முத்தரையர்கள் வெறும் வாக்கு வங்கி அல்ல; இந்த மண்ணை ஆண்ட மன்னர் பரம்பரை! இழந்த அதிகாரத்தை மீட்டெடுக்கவும், நம் சமூகத்தின் உரிமைகளை உரக்கச் சொல்லவும் திரண்ட அந்த மக்கள் கடல், எதிரிகளுக்கு நாம் யார் என்பதை உணர்த்தியிருக்கிறது.
கனமழையிலும் , நீண்ட பயணத்தையும் பொருட்படுத்தாமல், நம் இனத்தின் எதிர்காலத்திற்காகத் திரண்டு வந்த என் பாசத்திற்குரிய முத்தரையர் பெருங்குடி மக்களே!;உயிரினும் மேலான இளைஞர் பட்டாளமே!
உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இந்த மாநாட்டை மாபெரும் வெற்றி விழாவாக மாற்றியுள்ளது. தமிழர் தேசம் கட்சி மற்றும் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
"அதிகாரம் என்பது பிச்சையல்ல, அது போராடிப் பெற வேண்டிய உரிமை!"
இனி வரும் காலம் நமக்கானது! மாநாட்டில் திரண்ட இந்த ஒற்றுமை, விரைவில் அரசியல் அதிகாரமாக மாறும் வரை ஓயப்போவதில்லை.
வெற்றி நிச்சயம்! வீர முத்தரையர் புகழ் ஓங்குக!
#முத்தரையர்மாநாடு
இன்றைய தினம் 14.12.2025, ஞாயிற்றுக்கிழமை - தமிழர் வரலாற்றுக்கும், பண்பாட்டிற்கும் பெரும் பங்களிப்பை வழங்கிய பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் புகழை போற்றும் விதமாக இந்திய தலைநகர் டெல்லியில் சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழா துணை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தேன்!
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் வளமான ஆட்சியை தந்ததோடு, தமிழர் பண்பாடு, கலை மற்றும் நிர்வாகத் திறனுக்கு ஆகச்சிறந்த பங்களிப்பை அளித்தவர். அவரது பெருமைகளையும் தியாகங்களையும் போற்றும் விதமாகவும்,முத்தரையர் சமுதாயத்தின் வீரத்தையும் இந்திய தேசத்தில் அவர்களின் தொன்மையும் கௌரவிக்கும் விதமாகவும், இந்த அஞ்சல் தலை மத்திய அரசு சார்பில், மாண்புமிகு துணை குடியரசு தலைவர் @CPR_VP அவர்களது கரங்களால் வெளியிடப்பட்டுள்ளது.
முத்தரைய சமூகத்தின் வரலாற்றை இந்திய தேசம் முழுவதும் கொண்டு சேர்த்த மத்திய அரசுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்!
முத்தரையர் சமூகத்திற்கும் தமிழினத்திற்கும், மகுடம் சூட்டிய இந்த வரலாற்று நிகழ்வை போற்றுவோம்!
தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழின் சிறப்புகள் காலத்திற்கும் நிலைபெறச் செய்ததிலும் பெரும்பங்கு வகித்து, தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் (சுவரன் மாறன்) அவர்களின் வீரத்தையும், புகழையும் போற்றும் வகையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசு வெளியிட்டுள்ள அஞ்சல் தலையை, மாண்புமிகு குடியரசுத் துணைத்தலைவர் திரு @CPR_VP அவர்கள், வெளியிட்டுப் பெருமைப்படுத்தியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
போர்கள் பல வென்று, பொற்கால ஆட்சி தந்த நிகரில்லா மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் அஞ்சல் தலை வெளியிடும் சிறப்பான நிகழ்வில், மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி @nsitharaman அவர்கள், மாண்புமிகு மத்திய இணையமைச்சர் அண்ணன் திரு @DrLMurugan அவர்கள், ராஜ்ய சபா துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், @BJP4Tamilnadu மாநிலத் தலைவர் அண்ணன் திரு @NainarBJP அவர்கள், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் தலைவர் அண்ணன் திரு @KKSelvakumaroff மற்றும் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் R.விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
@IndiaPostOffice
Glad that the Vice President, Thiru CP Radhakrishnan Ji, released a stamp in honour of Emperor Perumbidugu Mutharaiyar II (Suvaran Maran). He was a formidable administrator blessed with remarkable vision, foresight and strategic brilliance. He was known for his commitment to justice. He was a great patron of Tamil culture as well. I call upon more youngsters to read about his extraordinary life.
@VPIndia@CPR_VP
பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரை (சுவரன் மாறன்) கௌரவிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையைக் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆற்றல்மிக்க நிர்வாகியான அவருக்குப் போற்றத்தக்க தொலைநோக்குப் பார்வையும், முன்னுணரும் திறனும், போர்த்தந்திர ஞானமும் இருந்தன. நீதியை நிலைநாட்டுவதில் அவர் உறுதியுடன் செயல்பட்டவர். அதேபோல் தமிழ் கலாச்சாரத்திற்கும் அவர் ஒரு மகத்தான பாதுகாவலராக இருந்தார். அவரது அசாதாரண வாழ்க்கையைப் பற்றி அதிகமான இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
@VPIndia@CPR_VP
பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய சனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி!
பீகார் சட்டமன்றத் தேர்தலில், மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்கள் தலைமையிலான, தேசிய சனநாயகக் கூட்டணி (NDA) மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளதற்கு, உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது, பீகார் மக்கள் நிலையான ஆட்சியின் மீதும், வளர்ச்சித் திட்டங்களின் மீதும் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
வெற்றிக்காக உழைத்திட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியில்,அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் சரியான அரசை தேர்வு செய்து வாக்களித்த வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!
தேவர் மகனும்,பசும்பொன்னும் மதயானை கூட்டமும்,முத்துராமலிங்கமும் தேசிய தலைவரும் ஏற்படுத்திடாத விவாதத்தையும்,சிக்கலையும் பரியேறும் பெருமாளும்,கர்ணனும்,மாமன்னனும் பைசன் காளமாடனும் ஏற்படுத்தும் என்று பேசுவதுதான் சாதிய மேலாதிக்கம்.(1/2)
அஞ்சா நெஞ்சன் ஐயா அ.வெங்கடாசலம் சேர்வையாரின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
மாவீரருக்கு வீரவணக்கம்!!
பெரும்பான்மை முத்தரையர் சமுதாயத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை முதன்முதலில் வலியுறுத்திய அரசியல் பேராசான் அஞ்சா நெஞ்சன் ஐயா.அ.வெங்கடாசலம் சேர்வையார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வை முன்னிறுத்தி வீரமுத்தரையர் முன் னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சி சார்பில் நினைவேந்தல் அமைதி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தின் வாயிலாக ஆண்டு தோறும் ஐயாவுக்கு வீரவணக்கம் செலுத்தி வருகிறோம்.
அதன் தொடச்சியாக நாளைய தினம் 07.10.2025, செவ்வாய்க்கிழமை ஐயாவின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் அமைதி பேரணி புதுக்கோட்டை,கருவேப்பிலை ரயில்வே கேட் தொடங்கி வடகாடு ஐயா சேர்வையாரின் நினைவிடம் வரை நடைபெறவுள்ளது. மேலும் வடகாடு பெரியகடை வீதியில் மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வுகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து தமிழர் தேசம் கட்சி மற்றும் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள், தாய்மார்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு ஐயா அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த பேரன்போடு அழைக்கின்றேன்.
குறிப்பாக வீரவணக்க நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தரும் சொந்தங்கள் அஞ்சா நெஞ்சன் ஐயா வெங்கடாசலம் சேர்வையாரின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில், ஒழுக்கத்தோடும், கட்டுப்பாட்டோடும், தரம் தாழ்ந்த எந்த செயலிலும் ஈடுபடாமல், அரசாண்ட இனத்தின் பெருமையை ஐயா அஞ்சா நெஞ்சன் அ. வெங்கடாசலம் சேர்வையார் பிறந்து ஆண்ட புதுக்கோட்டை மண்ணில் நிரூபிப்போம் என கேட்டுக்கொள்கிறேன்.
மாவீரரே! வீரவணக்கம்! வீரவணக்கம்!!
நேற்றைய தினம் 27.09.2025, சனிக்கிழமை - தவெக தலைவர் விஜய் அவர்களின் கரூர் மக்கள் சந்திப்பின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், இன்றைய தினம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
மேலும், மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தேன்!
தமிழகம் முழுவதும் ஒருகோடியே 25 லட்சம் பேர், 40 சட்டமன்ற தொகுதிகளில் தனிப் பெரும்பான்மை, 70 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி, வாக்காளர்களாக மட்டும் 75 லட்சம் பேர் என பெரும்பான்மை மக்கள் சக்தி இருந்தும் முக்கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக அரசியலில் புறந்தள்ளப்பட்டு அதிகாரம் இழந்து சொந்த மண்ணிலே அகதிகளைப் போல வாழ்ந்து வரும் ஊமைச் சமூகத்தின் உரிமை மீட்க, வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் முன்னெடுப்பில், முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாடு என்கின்ற பெயரில் எதிர்வரும் பிப்ரவரி 1,2026 ஞாயிற்றுக்கிழமை, அன்று பிரமாண்டமாக திருச்சியில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டிற்கான இலட்சினையை மகிழ்வோடு வெளியிடுகிறேன்!
கோபி - மருத்துவர் சமூகம்.
சுதாகர் - முத்தரையர் சமூகம்
டிராவிட் - கோனார் சமூகம்
சுதாகரின் சகோதரர் திருமணமே முத்தரையர் சங்கத்தலைவர் தலைமையில் தான் நடந்தது. சுதாகர் ரெட்டியார் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அது காதல் திருமணம். அந்தத்திருமணத்திற்கும் தலைமைதாங்கியது முத்தரையர் சங்க தலைவர் தான். டிராவிட் ஒரு பெண்ணை காதலித்து , வீட்டில் எதிர்ப்பு கிளம்பி ஒரே மாதத்தில் அவருடைய கோனார் சமூகத்தை சேர்ந்த பெண்ணையே திருமணம் செய்துகொண்டார் , கோபி திருமணத்திற்கு தடபுடலாக உதவாநிதி பேனர்கள் வைக்கப்பட்டு களைகட்டியது - பெண் வீட்டார் ஆளும்கட்சி குடும்பம் போல .
இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா , அதுக்கு தான் சொல்றேன்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், எரம்பட்டி கிராமத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு, பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை அமைக்கப்பட்டபோது, 32 நபர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், 01.07.2025, செவ்வாய்கிழமை இன்று வழக்கில் உள்ள அனைவரும் நிரபராதிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உழைத்திட்ட வழக்கறிஞர்கள், R.கார்த்திக் BA.,BL.,
M.கௌதம் BA.,BL.,
V.முருகன் BA.,BL.,
P. சக்திவேல் BA.,BL.,
P. கோகுல்கண்ணன்BA.,BL.,
D.திவாகர் BA.,BL., ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!
தர்மம் வெல்லும்!
உயர் அதிகாரிகள் உத்தரவு இல்லாமல், ஒரு போலீஸ் டீம், இவ்வளவு தீவிரமாக, வழக்கே பதிவு செய்யாமல் ஒருவரை பகல், இரவு முழுவதும் பல இடங்களில் வைத்து அடிக்க சாத்தியமே இல்லை.
யாரைக் காப்பாற்றுகிறார் முதல்வர் ? @tnpoliceoffl @CMOTamilnadu