தங்களுடைய முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையைப் பெற்று பெருவெற்றி பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் @TVKVijayHQ அவர்களுக்கும், அவரது கட்சியினருக்கும் என்னுடைய பாராட்டுகள். மக்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள்.
அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடமை, நேசம், நேர்மை, போர்க்குணம் ஆகியவற்றின் உருவமாக இருந்த அவர் இன்றும் நினைவுகளின் வழியே நம்மோடு இருப்பதாகவே உணர்கிறேன். அவரது புகழ் ஓங்குக.
#Vijayakanth
திரையிட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. நல்ல படத்தை மக்கள் கொண்டாடுவார்கள் எனும் எனது நம்பிக்கை உறுதியாகியுள்ளது. ரசிகர்களுக்கு என் நன்றி.
#Amaran#MajorMukundVaradarajan@RKFI@turmericmediaTM
இன்றும் பொலிவு குன்றாமல் இருக்கும் மிகச்சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாசராவ்.
அவரைக் கொண்டாடவும், கடந்த காலத்தின் இனிய தருணங்களை நினைவுகளில் மீட்டெடுக்கவும் ‘அபூர்வ சிங்கீதம்’ திரைப்பட விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தோம்.
எங்களது @RKFI நிறுவனத்திற்காக சிங்கீதம் சார் இயக்கிய திரைப்படங்களில் இருந்து ராஜ பார்வை, புஷ்பக் (பேசும் படம்), அபூர்வ சகோதரர்கள், மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய 4 படங்களைத் தேர்ந்தெடுத்து திரையிட்டோம்.
திரையிடலுக்குப் பின் இயக்குனருடன் நானும், படத்தில் பங்காற்றிய கலைஞர்களும் பங்கேற்ற கலந்துரையாடல் நடைபெற்றது. இன்றைய தலைமுறை இயக்குனர்களும், கலைஞர்களும் உரையாடலில் ஆர்வத்துடன் பங்கேற்றுக்கொண்டனர்.
இளமை மாறாத உற்சாகத்துடன் திகழ்ந்த சிங்கீதம் சார் தனது நெடிய திரைப்பட அனுபவங்களையும், தரமான சினிமாக்கள் மீதான தனது பார்வையையும் அள்ளக்குறையாத அனுபவச்செறிவுடன் அளித்தார்.
அபூர்வ சிங்கீதம் ஓர் இனிய தொடக்கம். நன்மை மலரட்டும்.
#ApoorvaSingeetham
'இந்தியாவிலேயே அதிகம் படித்தவர் காந்தி ' என்று நம்மவர் சொன்னதாக எவனோ மொள்ளமாரி சொல்ல, முடிச்சவுக்கிகள் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த வன்மம் பிடித்த மனநோயாளிகளுக்கு ஒன்று சொல்வேன். நீங்கள் போடும் பழிகள்
நெருப்பில் விழுந்த குப்பைகள்.
சாம்பல்கூட மிஞ்சாது. @ikamalhaasan@maiamofficial@SocialMediaMNM
நடிகர் திலகம் என்பது
ஒரு பெயரின் மகுடம் என்று கடந்து சென்று விட முடியாது.
இவர்
நம் கலையுலகின் முகவரி...
இந்த மாபெரும் கலைஞனை இந்நாளில் போற்றி வணங்குவதில் பெருமை கொள்வோம்💐🙏
பல நூறு மனிதர்களைத் தனக்குள்ளிருந்து எடுத்து உலகத்துக்குத் தந்த ஒற்றை மனிதக் கலைமகன். நடிப்பாக அல்ல, வாழ்க்கையாகக் கலையை முன்வைத்தவர். உலகின் சிறந்த நடிகர்களுக்கு, தமிழ்நாட்டின் பதில் என்று சொல்லத் தக்கவர், மாபெரும் நடிப்புக் கலைஞர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் இன்று. வாழ்த்துவது நமக்குப் பெருமை.
1000 ரூ மகளிர் உரிமைத்தொகைப் பெற விண்ணப்பம் கொடுக்கும் தமிழகத் தாய்மார்களே ,
இந்த மாபெரும் திட்டத்தை இந்திய அரசியலில் முதன்முதலில் முழங்கிய நம்மவர் கமல்ஹாசன் அவர்களை மறந்துவிடாதீர் !
ஏனென்றால் இதற்கான விதை நம்மவரின் மக்கள் நீதி மய்யத்தால் விதைக்கப்பட்டது !
@ikamalhaasan
‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் @shankarshanmugh
இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி.
அன்பன்
கமல்ஹாசன்
@LycaProductions@RedGiantMovies_ #Indian2
வார்த்தைகளுக்குப் பதவி உயர்வு கொடுப்பது போன்றதொரு அரிய பாணியில் எத்தனையோ பாடல்களை உலகுக்குப் பரிசளித்த பறவையாக வாழ்ந்த வாணி ஜெயராம் அம்மையார் அமைதியடைந்திருக்கிறார். அவர் பாடல்கள் நம்மிடம் இருக்கும். அவருக்கென் அஞ்சலி.
அடுத்த உலகநாயகன் யாரு
அடுத்த உலகநாயகன் அதுக்கு அடுத்த உலகநாயகன்
அதுக்கும் அடுத்த உலகநாயகன் எல்லாமே அவரு ஒருத்தர் தான்
அந்த இடத்த யாராலயும் பிடிக்க முடியாது 💥🔥❤️😍
#KamalHaasan
Thank you @chithralax