அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 3274 ஓட்டுனர், நடத்துனர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்!
தமிழ்நாட்டில் உள்ள 8 அரசுப் போக்குவரத்துக்கழகங்களுக்கு 3274 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு 7 மாதங்களாகும் நிலையில், இன்று வரை அதற்கான முடிவுகள் வெளியிடப்படவில்லை. ஏழை இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் வகையில் ஆள்தேர்வு முடிவுகளை வெளியிடாமல் அரசு தாமதப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது.
சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம், விரைவுப் போக்குவரத்துக்கழகம் மற்றும் அரசுப் போக்குவரத்துக்கழகங்களின் 6 கோட்டங்களில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களாக நியமிப்பதற்காக 3274 பேரை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு கடந்த ��ப்ரல் 21-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வி்ண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
எழுத்துத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது. ஆனால், எழ��த்துத் தேர்வுகள் நடத்தப்பட்ட பிறகு இன்று வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் பொருளாதாரத்தின் அடித்தட்டில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு இந்த வேலை கிடைத்தால் அவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும். ஆனால், இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டுவது முறையல்ல. போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆள்தேர்வுக்கான அனைத்து நடைமுறைகளையும் விரைவுபடுத்தி தகுதியானவர்களுக்கு பணி ஆணைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilnadu
பணம் மற்றும் அதிகாரத்திற்காக தந்தையின் மனதை கெடுத்து தனது உடன்பிறந்த தம்பியின் உரிமையை தட்டிபறிக்க நினைத்தவர் என்ற அவப்பெயர் மட்டுமே இவருக்கு இறுதியில் மிஞ்சப்போகிறது...
மற்றபடி அரசியலிலிருந்து விரைவில் காணமல் போய்விடுவார்...
ஆற்றங்கரைகளில்தான் மனித நாகரீகங்கள் தோன்றி வளர்ந்தது.
பேராசை கொண்ட மனிதன் ஆலைக்கழிவுகளை ஆறுகளில் கலப்பதின் மூலம் அந்த ஆறுகளை நஞ்சாக்கி அதன்வழி மண்ணையும், நிலத்தடி நீரையும் நஞ்சாக்கி ஒட்டுமொத்த உயிர்களுக்கும் தீங்கிழைத்துக் கொண்டிருக்கிறான்
#saverivers#savelives#saveearth
சிவகங்கை: கடந்த 21, 22-ம் தேதிகளில் பெறப்பட்ட நூற்றுக்கும் அதிகமான ‘உங்களுடன் ஸ்டாலின்’ மனுக்கள், வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ் கொட்டப்பட்டதால் அதிர்ச்சி; தகவலறிந்து அவற்றை கைப்பற்றி சென்றுள்ளனர் அதிகாரிகள்
#Tiruppuvanam | #Sivaganga | #UngaludanStalinScheme | #UngaludanStalin
பிகார் பயணம் மு.க.ஸ்டாலினுக்கு
சமூகநீதி ஞானத்தை வழங்கட்டும்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிகாருக்கு சென்றுள்ளார்.
புத்தருக்கு ஞானம் கொடுத்த போதிமரம் பிகாரின் புத்த கயாவில் தான் இருந்தது.
அதேபோல், சமூகநீதி ஞானம் வழங்கிய கர்ப்பூரி தாக்கூர், பிந்தேசுவரி பிரசாத் மண்டல், இராம் அவதேஷ் சிங், சரத்யாதவ், லாலு பிரசாத், நிதிஷ்குமார் உள்ளிட்டோரை வழங்கிய மண்ணும் பிகார் தான்.
இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விவரங்களை முதன்முதலில் வெளியிட்டு, நடைமுறைப்படுத்திய மாநிலமும் பிகார் தான்.
அத்தகைய சிறப்பு மிக்க பிகார் மண் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கும் என்று எதிர்பார்ப்போ��்.
சென்னை திரும்பியதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையிடுவார் என்று நம்புவோம்.
@CMOTamilnadu
ஆளுங்கட்சியின் தவறுகளை பேசுவதை விட்டுவிட்டு அனைவரும் விஜய் மற்றும் தவேக வை மட்டுமே விமர்சனம் செய்து கொண்டிருப்பதற்கு பின் மிகப்பெரிய செயல்திட்டம் இருக்குமோ?