#JUSTNOW | ஆகாஷின் பெற்றோர் கைது
சிவகங்கை: மானாமதுரையில் போலீஸ் கஸ்டடியில் ஆகாஷ் என்ற இளைஞர் மரணமடைந்த வழக்கு; ஆகாஷுக்கு போலீசாரே இறுதிச்சடங்கு செய்ய ஆயத்தமான நிலையில் பெற்றோர் எதிர்ப்பு
கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆகாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்களை கைது செய்த போலீசார்
Akash Parents Arrested | Justice For Akash | Police Custody Death
#NewsTamil24x7 | #JusticeForAkash | #PoliceCustodyDeath | #AkashParentsArrested
இந்த தம்பி பெயர் ஆகாஷ் வயது 18.. இவர் இறந்துவிட்டார்.. காரணம் கேளுங்கள்
இரவு தன் பாட்டி இறந்த இடமான சுரண்டை செல்கிறார். அங்கே தன் தாய் மாமன் வீட்டில் தங்கும் போது இரவு பாம்பு கடிக்கிறது. 12 மணி அளவில். இவருடன் இன்னொரு நபர் சின்னதுரை என்பவரையும் கடித்துள்ளது.
அந்த ஊரில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள் யாரும் பதில் இல்லை.
அங்கே இருந்து 5 கிமி தொலைவில் VK புதூர் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே எதுவும் இல்லை.
அங்கே இருந்து 20 கிமு பயணமாகி ஆலங்குளம் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே ஆம்புலன்ஸ் இருந்தும் எதுவும் உதவி கூட கிடைக்கவில்லை.
அங்கே இருந்து அருகே தனியார் மருத்துவமனை சென்று ஆபத்தான நிலையில் முன்னெச்சரிக்கை சிறிய அளவில் மருத்துவ உதவி கிடைக்க - உயிரை காப்பாற்ற மீண்டும் இருவரையும் தூக்கி கொண்டு சுரண்டை செல்கிறார்கள்.. அங்கே பாம்பு கடி மருந்துவம் இல்லை.
மீண்டும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு விரைகிறார்கள் அங்கேயும் மருந்து இல்லை.
பின் 60 கிமி தூரத்தில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர - ஆகாஷ் இறந்துவிட்டார்.
இதுக்கு பெயர் நிர்வாகம் ?
வந்து இத்தனை நாட்கள் ஆய்வு என்று சுற்றி திரிந்த இந்த விஜய் கட்சி கும்பல் செய்வது விளம்பரம் மட்டுமே, எந்த உருப்படியான ஆய்வும் இல்லை. மருத்துவமனையில் மருந்து இல்லை என்பது கூட கவனிக்காத ஒரு நிர்வாகம்.
மொத்தமும் ரிலீஸ் போட்டால் போதும் என்ற அளவில் தான் சுற்றுகிறது இந்த கும்பல்.
இப்படி 8 மணி நேரமாக இரு 18 வயது சிறுவர்களை தூக்கி கொண்டு 6 மருத்துவமனைக்கு 5 நகரங்களுக்கு இரவில் ஓடும் அந்த உயிர் வலி என்றால் என்ன என்பதை தெரியுமா ?
இவர்களுக்கு 41 உயிர் போனதே அரசியல் செய்ய தெரிந்து போது இதைல்லாம் விஷயமே இல்லை விஜய்க்கு..
இன்று மாலை விஜய் நடிகை யாரை சந்தித்து புகைப்படம் வெளியிடுவார் என்பது தான் தற்போது முக்கியம். அதனாலே தினமும் நடக்குது. அந்த ஆளுக்கு என்ன நடக்குதுன்னு தெரியாத தனி உலகத்தில் வாழ்கிறார்.
சென்னையில் நடைபெற்ற, முன்னாள் தமிழக அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி அவர்களின் மகனும், எங்களது குடும்ப நண்பருமான கலாநிதி வீராசாமி MP - ஜெயந்தி கலாநிதி தம்பதியரின் மகன் V.K.சித்தார்த் மற்றும் ராஜா சுப்ரமண்யன் சுந்தர் - வித்யா ஸ்ரீ சுந்தர் தம்பதியரின் மகள் S.ஆஷ்ரயா காயத்ரி இணையரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களுடன் பங்கேற்று வாழ்த்திய போது.!
தவெக அரசுக்கு எதிராக விவசாயிகள் சாட்டையால் தங்களைத் தாங்களே அடித்துக்கொண்டு போராட்டம் நடத்தினர். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கூட்டுறவு பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாததைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
@TVKHQITWingOffl#TVKVijay#TVK
"முதியோர் சமூகமாக மாறுகிறது தமிழ்நாடு! 19 ஆண்டுகளுக்கு முன்பே பாமக எச்சரித்த பேராபத்து! கடைவிரித்தோம் கொள்வார் இல்லை!"
-----------
தமிழ்நாடு அரசு வெளியிட்ட தமிழக நிதி நிலை பற்றிய வெள்ளை அறிக்கையில் ஒரு மிகப்பெரிய பேராபத்தை சுட்டிக்காட்டியுள்ளார்கள். ஆனால், இதனை பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது.
"இந்தியாவில் முக்கிய மாநிலங்கள் அனைத்தையும் விட வேகமாக முதியோர் சமூகமாக மாறிக்கொண்டு இருப்பது தமிழ்நாடுதான். இரண்டு கத்திரிகோல்கள் ஒன்று நோக்கி ஒன்று மூடப்படும் நிலை. அதாவது இதை "சிசர்ஸ் எபெக்ட்" என்று சொல்வார்கள். ஒருபக்கம் வருவாய் ஈட்டுபவர்கள் குறைகிறார்கள். மற்றொரு பக்கம் செலவுகள் அதிகரிக்கின்றன. இதுவே கடன் வலையின் டெப்ட் டிரப்ட் ஆகும். இன்று தமிழ்நாடு மக்கள் தொகை அமைப்பின் வளத்தை டெமாகிராபிக் ஸ்ட்ரெந்த் இருக்கும் போதே நிதிநிலையை சீர் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
ஆனால் அந்த வாய்ப்பின் சாரம் ஆண்டு தோறும் சுருங்கி கொண்டே வருகிறது. தாமதம் ஆகும் ஒவ்வொரு ஆண்டும் பின்னர் செலுத்த வேண்டிய விலையை மேலும் அதிகரிக்கிறது. எளிய வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால் செல்வந்த மாநிலமாக மாறுவதற்கு முன்னால் முதியோர் மாநிலமாக மாறிவிடுகிறது" என்கிறது தமிழக நிதி நிலை பற்றிய வெள்ளை அறிக்கை.
-----------
"பாமகவின் தொடர் வலியுறுத்தல்"
இந்தியாவில் அதிக இளைஞர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது. ஆனால், மக்கள்தொகையில் லாபப்பங்காக (Demographic dividend) திகழ வேண்டிய இளைஞர் சமுதாயம் மதுவுக்கும், கஞ்சாவுக்கும் அடிமையாகி சீரழிந்து வரமே சாபமாக மாறுகிறது. இதனை உடனடியாக தடுத்து, தமிழ்நாடு முதியோர் சமூகமாக மாறுவதற்கு முன்பே இளைஞர் சக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்துகிறது.
2007 Rejuvenating Tamil Nadu's Youth - An Approach & 2008 தமிழ்நாடு அரசிற்கான மாற்று மது ஒழிப்புக் கொள்கை ஆகிய பாமக வெளியிட்ட அறிக்கைகளில் இந்த பிரச்சினைக்கான தீர்வுகள் முன்வைக்கப்பட்டன. . அதன் பின் தொடர்ச்சியாக பாமகவின் அறிக்கைகள் இதனை கோரின. ஆனால், எவருமே செவிகொடுத்து கேட்கவில்லை.
'கடைவிரித்தோம் கொள்வார் இல்லை' என்கிற நிலைக்கு பாமகவின் அறிக்கைகள் சென்றன. அதனால், இன்று தமிழ்நாடு "முதியோர் சமூகமாக மாறும்" மிகப்பெரிய நெருக்கடியை நோக்கி பயணிக்கிறது.
இந்த நிலையில் இருந்து இப்போதும் தமிழ்நாட்டை மீட்க முடியும். அதற்கான வழிமுறைகளை பாமக முன்வைத்து போராடும்.
#AnbumaniRamadoss #PMK
முன்னாள் தமிழக அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி அவர்களின் மகனும், எனது கல்லூரி நண்பருமான கலாநிதி வீராசாமி MP - ஜெயந்தி கலாநிதி தம்பதியரின் மகன் V.K.சித்தார்த் மற்றும் ராஜா சுப்ரமண்யன் சுந்தர் - வித்யா ஸ்ரீ சுந்தர் தம்பதியரின் மகள் S.ஆஷ்ரயா காயத்ரி இணையரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னையில் முனைவர் சௌமியா அன்புமணி MLA அவர்களுடன் பங்கேற்று வாழ்த்திய போது.!
ஏற்கனவே 63,000 தொழில் நிறுவனங்கள் மூடல்:
மக்களுக்கு மட்டுமின்றி, தொழில், வணிகப் பிரிவுக்கும் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது!
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 6%க்கு மிகாமல் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஆணை மக்களை பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படும் என்றும், இது தொடர்பாக முதலமைச்சர் விரைவில் முடிவெடுத்து அறிவிப்பார் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். வீடுகளுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்தாமல் தொழில் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை மட்டும் உயர்த்த அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எந்த வகையான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் அது மக்களைக் கடுமையாக பாதிக்கும்.
முந்தைய திமுக ஆட்சியின் போது, 09.09.2022-ஆம் நாள் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி, அந்த ஆண்டில் 52% வரை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அடுத்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அதிகபட்சமாக 6% , அதற்கு முந்தைய நிதியாண்டின் பணவீக்க விகிதம் ஆகிய இரண்டில் எது குறைவோ, அந்த அளவுக்கு மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்படி திமுக ஆட்சியில் 2022, 2024 ஆகிய ஆண்டுகளில் வீடுகளுக்கான மின்கட்டணம், வணிகப்பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ஆகிய இரண்டும், 2023, 2025 ஆகிய ஆண்டுகளில் வணிகப் பயன்பாட்டுக்கான மின்கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டன.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவின்படி, வரும் ஜூலை மாதம் முதல் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இது தொடர்பாக கடந்த மே 21-ஆம் தேதி மின்சாரத்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது,’’ மின்சாரத் துறை இரண்டரை லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. ஆனாலும், தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். ஆனால், இப்போது அந்த நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணாக மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது குறித்து முடிவெடுப்போம் என்று மின்சாரத்துறை அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது.
தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் மக்களுக்கு பாதிப்பில்லை என்பதே தவறான வாதம் ஆகும். மின்கட்டண உயர்வால் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவு மக்களின் தலையில் தான் சுமத்தப்படும். அதனால் எந்த வகையான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் அது மக்களை பாதிக்கவே செய்யும்.
திமுக ஆட்சியில் தொழிற்சாலைகளுக்கான மின்சாரக் கட்டணம் 40% வரை உயர்த்தப்பட்டது. கிலோவாட்டுக்கு 35 ரூபாயாக இருந்த நிலைக்கட்டணம் தடாலடியாக, 471 விழுக்காடு உயர்த்தப்பட்டது. மின்கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள முடியாமல் திமுக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் 63 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இப்போது மீண்டும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டால் குறைந்தது ஒரு விழுக்காடு சிறு, குறு தொழில் நிறுவனங்களை மூட வேண்டியிருக்கும். இதனால் ஏற்படும் வேலை இழப்பும், பிற பாதிப்புகளும் மிகவும் மோசமானவையாக இருக்கும்.
2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தவெக தேர்தல் அறிக்கையில் மாதம் ஒரு முறை மின்சாரம் கணக்கிடும் முறை அறிமுகம் செய்யப்படும் ( வாக்குறுதி எண்: 9 ஏ 3) , அடுக்குமாடி குடியிருப்பு, சிறு, குறு தொழில்களுக்கான மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் ( வாக்குறுதி எண்: 9 ஏ 4) என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை மறந்து விட்டு, திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட ஆணையை காரணம் காட்டி மின் கட்டணத்தை உயர்த்த துடிப்பது சரியல்ல.
எனவே, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவைக் காரணம் காட்டி, வீடுகள் மற்றும் தொழில், வணிகப் பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை என்றால் கட்டண உயர்வை அரசே ஏற்றுக் கொண்டு, கட்டண உயர்வு சுமையிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
ரூ.75,000 ஆக உயர்த்தியிருப்பது போதாது:
சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்!
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களில் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இப்போது கடன் தள்ளுபடி தொகையை ரூ.75,000 உயர்த்தி முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆணையிட்டிருக்கிறார். இந்த அறிவிப்பும் உழவர்களின் கடன் சுமையை போக்குவதற்கு போதுமானது அல்ல.
தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரூ.75000 வரை கடன் வாங்கிய சிறு , குறு மற்றும் பெரு விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், அதற்கும் கூடுதலாக வாங்கிய விவசாயிகளின் கடனில் ரூ.35,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் கூடுதலாக 21 ஆயிரம் பேர் மட்டுமே பயனடைவார்கள். கூட்டுறவு வங்கிகளில் சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய கடனின் அளவு திரும்ப செலுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், அவற்றை முழுமையாக தள்ளுபடி செய்தால் மட்டும் தான் அவர்களுக்கு பயன் கிடைக்கும். அதை விடுத்து 6.22 லட்சம் பேருக்கு மட்டுமே முழுமையாக கடனை தள்ளுபடி செய்து விட்டு, மீதமுள்ள 8.21 லட்சம் விவசாயிகளுக்கு வெறும் ரூ.35000 மட்டும் கடன் தள்ளுபடி செய்வது நியாயமல்ல.
2026&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் பயிர்க்கடன் தள்ளுபடி பற்றி வாக்குறுதி அளித்திருந்த த.வெ.க., 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் உழவர்கள் வாங்கியக் கடன் முழுமையாகவும், அதற்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் வாங்கிய கடனில் 50 விழுக்காடும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியிருந்தது. அதை நிறைவேற்றுவது தான் அறமாக இருக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கி, நபார்ட் வங்கி ஆகியவற்றின் விதிகளை காரணம் காட்டி உழவர்களின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய மறுப்பது நியாயமல்ல. கடந்த மே 25-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் ரு.2044 கோடி அளவுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இப்போது அதன் அளவு ரூ.5932 கோடியாக அதிகரித்துள்ளது. கடன் தள்ளுபடியை இந்த அளவுக்கு உயர்த்த அனுமதிக்கும் விதிகளும், நிதிநிலையும், குறைந்தபட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடனையாவது முழுமையாக தள்ளுபடி செய்ய அனுமதிக்காதா? மனமிருந்தால் மார்க்கம் உண்டு.
மராட்டிய மாநிலத்தில் 55.72 லட்சம் உழவர்கள் வாங்கியிருந்த ரூ.36,585 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். அதேபோல், தமிழ்நாட்டிலும் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய அரசுக்கு எந்தத் தடையும் இல்லை.
எனவே, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை முழுமையாகவும், நடுத்தர மற்றும் பெரு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனில் 50 விழுக்காட்டையும் தள்ளுபடி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.
@CMOTamilnadu
2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை
உடனடியாக அறிவிக்க வேண்டும்: மேலும் 1292 பேரை
தேர்வு செய்ய புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும்!
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர்களாக நியமிப்பதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, 6 மாதங்களாகும் நிலையில், அவற்றின் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 15-ஆம் தேதியான இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், உதவிப் பேராசிரியர் நியமனங்கள் தாமதப்படுத்தப்படாமல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை &அறிவியல் கல்லூரிகளில் 61 துறைகளுக்கு 2708 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் 16&ஆம் தேதி வெளியிடப்பட்டு, உரிய கல்வித்தகுதி கொண்டவர்களுக்கு கடந்த திசம்பர் 27&ஆம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்தப் பணியிடங்களுக்கு 42,064 விண்ணப்பித்து அவர்களில் பெரும்பான்மையினர் தேர்வு எழுதிய நிலையில் பிப்ரவரி மாதத்தின் முதல் பாதி வரை முடிவுகள் வெளியிடப்படவில்லை.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலட்சியத்தைக் கண்டித்து கடந்த பிப்ரவரி 17&ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதன்பின் அவசர, அவசரமாக செயல்பட்ட ஆசிரியர் தேர்வு வாரியம் மொத்தம் 61 துறைகளில் வரலாறு கல்வியியல், மனித உரிமைகள், இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாவியல், கடல் உயிரியல், வனவிலங்கு உயிரியல் ஆகிய 5 துறைகளில் 13 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான முடிவுகளை மட்டும் வெளியிட்டது. அவர்களின் கல்வித்தகுதி குறித்து பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதால் அவர்களில் வெறும் 5 பேருக்கு மட்டும் பணி நியமன ஆணைகளை கடந்த மார்ச் 13&ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முடிவுகள் அறிவிக்கப்பட்ட 5 துறைகள் தவிர மீதமுள்ள 56 துறைகளுக்கான விடைத்தாள்களும் திருத்தப்பட்டு விட்டதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்த நிலையில், அவற்றின் முடிவுகளை மார்ச் மாதத்திற்குள்ளாகவே வெளியிட்டிருக்க முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. ஆனாலும் தேர்தல் நடைமுறைகளைக் காரணம் காட்டி ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுகளை வெளியிடவில்லை.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டும், தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தும் 40 நாள்கள் ஆகும் நிலையில், இன்னும் கூட முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்காதது நியாயமில்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கும் நிலையில், புதிய உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படாததால் மாணவர்களுக்கு பாடம் நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 8000-க்கும் மேற்பட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்பாமலும், தேர்வு நடத்தப்பட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களை நியமிக்காமலும் ஆசிரியர் தேர்வு வாரியம் காலம் கடத்துவது சரியல்ல. 2708 பணியிடங்களில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 5 பேர் தவிர மீதமுள்ள 2705 பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை இம்மாத இறுதிக்குள் அரசும், தேர்வு வாரியமும் வெளியிட வேண்டும்.
உதவிப் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் கடந்த மே 27-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி, மேலும் 1292 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையையும் ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும்.
@CMOTamilnadu
கும்மிடிப்பூண்டியில் மூன்றரை வயது குழந்தை கூட்டுப் பாலியல்
வன்கொடுமை செய்து கொலை: போதைக் கொடுமையால்
நிகழும் கொடூர குற்றங்களை அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்திற்கு அருகில் வசிக்கும் வட மாநிலக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்றரை வயது பெண் குழந்தையை 4 மனித மிருகங்கள், நேற்று மாலை தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பயனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தது. குழந்தையை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது. பால்மனம் மாறாத குழந்தையை சீரழித்த நான்கு மனித மிருகங்களும் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தான் என்று தெரியவந்துள்ளது. நால்வரும் கஞ்சா போதையில் தான் இந்தக் கொடிய குற்றத்தை நிகழ்த்தியுள்ளனர். பால்மனம் மாறாத மூன்றரை வயது குழந்தையை 4 மனித மிருகங்கள் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரத்தை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது.
இதே கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் தான் கடந்த ஆண்டு ஜூலை 12-ஆம் நாள் நான்காம் வகுப்பு பயிலும் சிறுமியை, ஆந்திராவிலிருந்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மனித மிருகம் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்தான். இதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர் போராட்டம் நடத்திய பிறகு தான் குற்றவாளி கைது செய்யப்பட்டான். அந்த வழக்கின் விசாரணை 5 மாதங்களில் முடிக்கப்பட்டு, குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது அதே பகுதியில் இன்னொரு கொடுமை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
ஆரம்பாக்கத்தில் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்தது. அதை மனதில் கொண்டாவது அந்தப் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டத்தை ஒழித்து, பெண்களுக்கும், குழந்தைகளுக்குமான பாதுகாப்பை மேம்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய காவல்துறை தோல்வி அடைந்ததன் விளைவு தான் மூன்றரை வயது குழந்தைக்கு இழைக்கப்பட்ட கொடுமை ஆகும்.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டம், அதனால் நிகழும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை அரசும், காவல்துறையும் இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படுவதை அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்.
@CMOTamilnadu
என்.எல்.சி நிலக்கரி சுரங்கத்திற்காக 30 கிராம
மக்களின் குலதெய்வக் கோயிலை இடிப்பதா?
தமிழக அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்!
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்துள்ள தெற்கு மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் - பாவாடைராயன் கோயிலை, நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக இடிக்க என்.என்.சி நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்களின் இறை நம்பிக்கையாகத் திகழும் அங்காளம்மன் - பாவாடைராயன் கோயிலை இடிக்க என்.எல்.சி நிர்வாகம் துடிப்பது கண்டிக்கத்தக்கது.
தெற்கு மேலூரில் அமைந்திருக்கும் அங்காளம்மன் - பாவாடைராயன் கோயில் அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்களின் குலதெய்வக் கோயிலாக திகழ்ந்து வருகிறது. கடலூர் மாவட்டத்திற்கு அப்பால் அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் குலக்கோயிலாக இந்த கோயில் திகழ்கிறது.
இந்த கோயில் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள நிலங்களை என்.எல்.சி நிறுவனம் ஏற்கனவே ஆக்கிரமித்துள்ளது. இப்போது 1ஏ சுரங்கத்தின் விரிவாக்கத்திற்காக கோயிலை இடிக்கும் முயற்சியில் என்.எல்.சி நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வாழும் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அதையும் மீறி கோயிலை இடிக்க என்.எல்.சி துடிக்கிறது. இதற்காக தமிழக அரசின் ஆதரவையும் கோரியிருக்கிறது.
அங்காளம்மன் - பாவாடைராயன் கோயில் அதே பகுதியில் நீடிப்பதால் என்.எல்.சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. அதே நேரத்தில் அந்தக் கோயில் இடிக்கப்பட்டால் லட்சக்கணக்கான மக்களின் இறை நம்பிக்கை பாதிக்கப்படும். இவற்றைக் கருத்தில் கொண்டு தெற்கு மேலூர் அங்காளம்மன் - பாவாடைராயன் கோயிலை இடிக்கும் முடிவை என்.எல்.சி நிறுவனம் கைவிட வேண்டும்; இந்த விஷயத்தில் என்.எல்.சிக்கு தமிழக அரசும் போதிய அழுத்தம் கொடுத்து இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.
@CMOTamilnadu
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்றத் தொகுதி, போளூர் கிழக்கு ஒன்றியம் பொத்தரை கிராமத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் கிளைக் கூட்டத்தில் பங்கேற்று செய்தியாளர்களை சந்தித்த போது.!
தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு விஜய் அவர்களுடனான சந்திப்பிற்கு பின்பு ANI ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு நேர்காணல் அளித்த போது.!
#CasteCensus#PMK
CBI விசாரணை தேவை... கல்குவாரியில் அமைச்சரையே ஏமாற்றுகிறார்கள்.. 1000 கோடிக்கு மேல் கொள்ளை அடித்து வைத்துள்ளார்கள்.. பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் குற்றச்சாட்டு..!
#Tiruvannamalai#CMVijay#StoneQuarry#TVK#PMK#Anbumani
தருமபுரி சட்டமன்றத் தொகுதி, நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட
இராமர்கூடல், தாசன்கொட்டாய், கருபையனஅள்ளி, நெக்குந்தி, ஈச்சம்பள்ளம், எர்ரபையனஅள்ளி, சின்னகானஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மாம்பழம் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை வழங்கி, வெற்றி பெறச் செய்த பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, நன்றி தெரிவித்த போது.!
#PMK | #DHARMAPURI
தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம்,
அரிச்சந்திரனூர் கிராமத்தில், மாம்பழம் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை வழங்கி, வெற்றி பெறச் செய்த பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, நன்றி தெரிவித்த போது.!
#PMK | #DHARMAPURI
இவனுக்காக வீட்டை விட்டு வெளியேறினாரா அமைச்சர் கீர்த்தனா?! பெயர் மதன்..
ஏம்மா இவனை ஏம்மா இரவு பகலாக கூட்டிட்டு சுற்றிகிறீர்? அமைச்சர் தனி பாதுகாப்பு அதிகாரிகளை விட்டு விட்டு இவனுடன் சென்று அமைச்சர் என்ன செய்கிறார் என்பதை ஆளும் விஜய் தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும்.
ஏன் எனில் ஒரு சின்ன அரசின் கொள்கை முடிவு கூட பல ஆயிரம் கோடி வரத்தகத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு அரசு அமைச்சரவை பாதுகாப்போடு இருப்பது அவசியம். அது கசிந்தால் போது பங்கு சந்தையில் சூதாட்டம் உச்சம் தொடும். அப்படி சென்சிட்டிவான துறையில் இருந்து கொண்டு இப்படி இருப்பது தமிழகத்தின் தலைகுனிவு..
தொடர்ந்து தமிழகத்தின் முதலீடுகள் ஆந்திராவை நோக்கி செல்வது பெரும் சந்தேகத்தையும் - கீர்த்தானா நடவடிக்கைகள் பெரும் கேள்விகளையும் எழுப்புகிறது..
இந்த கீர்த்தனாவிற்கும் விஜய் ரசிகர் மன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இவர் முழுக்க முழுக்க ஆதவ் வட்டத்தில் இருந்த நபர்.