UNDECLARED EMERGENCY: THOSE DEFENDING DEMOCRACY ARE DETAINED, WHILE THOSE BETRAYING IT ARE PROTECTED!
The Union BJP Government has detained Former Chief Ministers Com. @PinarayiVijayan, Thiru. @ArvindKejriwal, @MamataOfficial and Com. Manik Sarkar, @CPIMSpeak General Secretary @MABabyCPIM and leaders of various student organisations who are fighting to protect the people's right to vote, while CEC Gyanesh Kumar, who should be facing trial for his act of treason, is roaming freely with Z+ security!
What a disgrace!
The conspiracy behind SIR has been completely exposed. There is no hiding it anymore! Barricading #Delhi, shutting down the internet and detaining political leaders cannot crush the uprising of India's youth. How long can the Union Government keep an entire nation under siege?
Meanwhile, the Kakistocratic TVK Government in Tamil Nadu is desperately trying to please its Delhi masters by detaining activists protesting against #SIR and demanding #GyaneshKumar's resignation.
All those detained must be released immediately. Gyanesh Kumar must be sacked, SIR must be halted, and everyone responsible for betraying the people of India must be held accountable!
@CockroachIsBack@SFI_CEC@abhijeet_dipke@AISA_Official_@Aishe_Ghosh@SauravDassss@Neha_AISA@AshutoshRanka@Dhruv_Rathee
திராவிட இயக்கத்தின் கொள்கை முரசு முரசொலி செல்வம் அவர்களின் நினைவுநாளில், அவரது திருவுருவப்படத்துக்கு கழக இளைஞர் அணி செயலாளர் @Udhaystalin அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
#MurasoliSelvam#முரசொலிசெல்வம்
15 கோடி வருமானத்தை மறைத்ததாக கூறி முதல்வர் மீது வருமான வரித்துறை வழக்கு, அமைச்சர் மீது ED போன்ற ஊழல் வழக்கையெல்லாம் வைத்துக்கொ���்டு எங்களைக் குறை சொல்வதற்கு என்ன தகுதி இருக்கிறது?
@Udhaystalin #TNAssembly #TVKScam #TVKVijayFails
“பழிப்பதற்கும், திமுகவை ���ுற்றம் சுமத்துவதற்கும் நேரத்தை வீணாக்காமல் மாண்புமிகு முதல்வர் என்னும் உயரிய பொறுப்புணர்ந்து பணியாற்றுங்கள்.��� - கழக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் @iparanthamen அவர்கள்!
#TNAssembly #Dignity #Decorum
அடுத்து என்ன?
மஞ்சள் காமாலைக்கு சூடு போடும் திட்டமா?
அறிவியலை அடிப்படையாகக் கொண்ட பொது சுகாதாரக் கொள்கைகளை முன்னெடுக்க வேண்டிய அரசு, பொது சுகாதாரத்திற்கே அச்சுறுத்தலாக அமையும் நடைமுறைகளை மக்கள் வரிப்பணத்தில் ஊக்குவிப்பதைப் பார்த்தால், எங்கே போய் சுவரில் முட்டிக்கொள்வதெ��்றே தெரியவில்லை!
அம்மை போன்ற தொற்று நோய்களை எதிர்கொள்ள நவீன மருத்துவக் கண்காணிப்பு, உரிய தனிமைப்படுத்தல், தொற்று தடுப்பு மற்றும் தடுப்பூசி போன்ற அறிவியல் அடிப்படையிலான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, நோய் பாதித்தவர்களை ஒரே இடத்தில் தங்க வைக்கும் நடைமுறைக்கு அரசே ஆதரவளிப்பது தொற்று கட்டுப்பாட்டின் அடிப்படை நோக்கத்திற்கே முரணானது.
உரிய மருத்துவ மற்றும் தொற்று தடுப்பு ஏற்பாடுகள் இல்லையெனில், இது சமூகப் பரவல் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும்.
மக்களின் நம்பிக்கைகள் அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால், ஒரு அரசின் கொள்கைகளும் திட்டங்களும் பொது சுகாதாரத்தைப் பல தசாப்தங்கள் பின்னோக்கி இழுத்துச் செல்லக் கூடாது
பொது சுகாதாரத்தை அறிவியல்பூர்வமாக அணுகத் தவறிய அரசின் இந்த ஆபத்தான முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
விடுதலைப் போரில் பங்கேற்று வீரப்போர் புரிந்த ஒண்டிவீரன் அவர்களின் நினைவு நாள் இன்று!
அந்நியர் ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போராடி, தமிழ் மண்ணின் வீர வரலாற்றில் அழியாத தடம் பதித்த மாவீரர் ஒண்டிவீரனின் புகழைப் போற்றுவோம்.
பூலித்தேவரின் படைத்தளபதியாக தென் தமிழ்நாட்டில் விடுதலைக்கான எழுச்சியை உருவாக்கிய ஒண்டிவீரன் அவர்களின் வீரமும் - தியாகமும் என்றும் நிலைத்திருக்கும்.
#ஒண்டிவீரன்
குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட பிறகும், விவசாயிகளை அது சென்று சேராமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்காத காரணத்தால், குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது - விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரவையில் பேசி இருந்தேன்.
வறட்சி நிவாரணம் பற்றிக் கேட்டதற்கு, குறுவை சிறப்புத்தொகுப்புக்காக நிதி ஒதுக்கியதைப் பற்றி முதலமைச்சர் விளக்கினார்.
ஆனால், அவர் ஒதுக்கியதாக சொன்ன அந்த நிதியும் இன்று வரை விவசாயிகளைச் சென���றடையவில்லை.
இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த Inefficient அரசு கவனித்ததா? அல்லது வழக்கம்போல விவசாயிகள் பிரச்சினையில் அலட்சியம் காட்டுகிறதா?
எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும்.
விவசாயிகள் நலனில் அக்கறையின்றி தொடர்ந்து மெத்தனப் போக்கோடு நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல.
குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்ற��� சேர இந்த விவசாயிகள் விரோத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சை தெற்கு மாவட்டக்கழக வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் அண்ணன் வெங்கடேசன் - ஸ்ரீதேவி ஆகியோரின் அன்பு மகன் V.ராம்பிரசாத் – V.நந்தினி (எ) கற்பகவள்ளி இணையரின் திருமணத்தை பட்டுக்கோட்டை கொண்டிக்குளம் பகுதியில் இன்று நடத்தி வைத்தோம்.
இல்வாழ்வில் இணைந்துள்ள இணையர், தந்தை பெரியாரும் - பகுத்தறிவும் போல, பேரறிஞர் அண்ணாவும் - தமிழ்நாடும் போல, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் - கழகமும் போல, கழகத்தலைவர் அவர்களும் – உழைப்பும் போல பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்!
@durai944@Anbil_Mahesh@TRBRajaa@Murasoli_tnj@KannaduraiDMK@peraiashok #PalanivelDMK @ilaiyadmk
தஞ்சை தெற்கு மாவட்டக்கழக தொண்டரணி துணை அமைப்பாளர் சகோதரர் பொன்.ரமேஷ் - முன்னாள் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் உஷாராணி இணையர், பட்டுக்கோட்டை நயினாங்குளம் பகுதியில் கட்டியுள்ள புதிய இல்லத்தை இன்று திறந்து வைத்தோம்.
புதிய இல்லத்தில் அவர்களின் வாழ்வு மென்மேலும் செழித்தோங்க வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@Anbil_Mahesh@KannaduraiDMK
#PalanivelDMK
அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கழகத்தின் பயணம் தொடர்வதற்கான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளத�� செயற்குழு!
Bore அடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்களல்ல நாம்; போராட வந்தவர்கள்!
Comeback கொடுப்பதில் Specialist-ஆன நாம், திரும்ப வருவோம்; வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம்!
வழியும் வாழ்வும் தேடி வந்தாரை அன்னை போல் அரவணைத்து, அன்பை மட்டுமே பொழியும் நம் சென்னைக்கு வயது 387!
பேதமில்லா இந்தப் பெருநகரத்திற்கு நவீனக் கட்டமைப்புகளையும், புதுப்பொலிவையும், ���ிங்காரத்தையும் அள்ளித் தந்த பெருமை திமுக கழகத்தையே சாரும்.
இந்த நகரத்தை நேசிக்கும் அனைவருக்கும் சென்னை நாள் வாழ்த்துகள்!
#ChennaiDay
தி.மு.க.தலைமைச் செயற்குழுக் கூட்டம் 22-08-2026 தீர்மானங்கள்
தலைமைச் செயற்குழுக்
கூட்டத் தீர்மானம் :1
கிளைக் கழகங்கள்தான் நமது கழகத்தின் வலுவான கட்டமைப்புக்கு ஆணிவேர். கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள். கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, இளம் தலைமுறையினருக்கு வாய்ப்புகளை வழங்கிட, கிளைக் கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக் கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என்றும்
தீர்மானிக்கப்படுகிறது.
தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம்
22-08-2026
தீர்மானங்கள்
தலைமைச் செயற்குழுக்
கூட்டத் தீர்மானம் 2:
தற்போது மாநகரங்களில் அடிப்படைக் கட்டமைப்பாகத் திகழ்வது வட்டக் கழகங்கள். அதனை மேலும் வலிமைப்படுத்திட புதிய அமைப்பு ஒன்றின் தேவை எழுந்துள்ளது. அதனடிப்படையில், புதிய நிர்வாக அமைப்பாக மாநகர பகுதிகளில் கிளைக் கழகம் எனும் பிரிவு தொடங்கப்ப��்டு, கிளைச் செயலாளர் எனும் பொறுப்பு உருவாக்கப்படுகிறது. 45 வயதுக்கு மிகாதவர், அப்பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரங்களில் இந்த கிளை அமைப்பானது ஏற்படுத்தப்படும். பிற மாநகராட்சிகளில் நிர்���ாகச் சூழலுக்கேற்ப இதேபோன்ற கிளை அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளவும் வழிவகை செய்யப்படும்.
தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம்
22-08-2026
தீர்மானங்கள்
தலைமைச் செயற்குழுக்
கூட்டத் தீர்மானம் 3:
நகர்ப்புறங்களில் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பானது மாநகரம் - நகரம் - பேரூர்க் கழகம் என்று இயங்கி வருகின்றன. மாநகர - நகர மற்றும் பேரூர்க் கழகக் கட்டமைப்புகளின் வலிமை மிக்க தூணாக விளங்குபவை வட்டக் கழகங்கள். சென்னை மாநகராட்சியில் இனி உருவாக்கப்படும் வட்டக் கழகங்கள் சராசரி��ாக பத்தாயிரம் வாக்குகள் கொண்டதாக இருக்க வேண்டும். மற்ற மாநகரங்களில் சராசரியாக ஐந்தாயிரம் வாக்குகள் கொண்டதாக அமைய வேண்டும். அதுமட்டுமின்றி, மாநகர - நகர - பேரூர் உள்பட்ட கழகங்களுக்கு வட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது
50 என நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், ஒருவர் அப்பொறுப்பை அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது.