சமூகநலத் துறை சார்பில் ஏற்கனவே வழங்கபட்டுள்ள மகளிர் பாதுகாப்புக்கான 181 எண்ணையும், தேசிய அளவில் பல காலமாக உள்ள 1098 குழந்தைகள் உதவி எண்ணையும் பயன்படுத்துவதற்கு, மக்கள் வரிப்பணத்தில் எதற்கு தனியாக ஒரு 'சிறப்பு படை' உருவாக்க வேண்டும்? எந்த ஒரு சிறப்பு அதிகாரமும் இல்லாத 'சிறப்பு படை இருந்து என்ன பயன்?
- கழக துணைப் பொதுச்செயலாளர், திருமிகு @KanimozhiDMK எம்.பி. அவர்கள்
#TVKFails
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் நினைவாக, #நம்ம_இராயபுரம் சட்டமன்ற தொகுதியின் 53- வது வட்டக் கழக செயலாளர் பாலா இலட்சுமணன் அவர்களின் தலைமையில்..
கோடையின் தாக்கத்திலிருந்து விடுபட மக்களுக்கு பலனளிக்கும் வகையில் போஜராஜ நகர் பகுதியில் நீர் - மோர் பந்தல் திறந்து வைத்ததோடு; பொதுமக்களுக்கு சுவையான உணவும் வழங்கி மகிழ்ந்தோம் .💐❤️
இந்நிகழ்வில், பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பலர் பங்கேற்று சிறப்பித்தனர். 🙏🌅
#KalaingarForEver
#Kalaingar103
நிர்வாக திறன் அற்ற , சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிய @actorvijay உடனடியாக பதவி விலக வேண்டும் !!!
குழந்தைகள் மீது வன்கொடுமை ஒழியட்டும்!
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படட்டும்!
குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்!
பொதுமக்களின் பாதுகாப்பில் அலட்சியம் செய்யாதே!
!
தமிழ்நாடு முழுவதும் கண்டனக் குரல் ஒலிக்கட்டும்
த.வெ.க கொடி போட்ட இவர் திமுக காரர் அப்டினு நம்ம கதை கட்டிக்கலாம். அது அப்புறம்,
இப்ப இவர், நாய்களுக்காக நியாயம் கேட்கும் நியாயவான், மது அருந்தாமல், தெளிவாக இருக்கிறார்.
காவல்துறையிடம் கண்ணியமாக அவர் வைக்கும் கோரிக்கைகளை கொஞ்சம் பரிசீலனை செய்யலாமா CM Sir.
#TvkFails
தன்னை சுற்றி நடக்கும் அத்தனை அநீதிகளையும் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு, வாய் திறக்காமல் இருக்கலாம் என நினைக்காதீங்க CM சார்..
தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு பதில் சொல்ல வேண்டியது உங்கள் கடமை.. அதற்காக முதலில் வாயை திறந்து பேசுங்க.
#TVKFails
Several of you have been tagging the @dmkitwing and posting clips of the TVK IDs which have as usual been putting out completely false and baseless allegations against the DMK and its leadership in a desperate attempt to cover up the present governments massive failures. All such posts have been forwarded to the DMK Legal Wing and Arivalayam. We are confident that the Legal Wing @arivalayam will take necessary steps now to curb this fake news menace in the society. Please note that we have always taken all such malicious fake news to the knowledge of HQ and the Legal Wing Advocates. Please forward all such clips to @DMKLegalWing 🙏🏾
கழகத் தலைவரிடம் தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன?
இனி நாம என்ன பண்ணணும்? என்பதை தெரிவிக்க 👇🏽
உடன்பிறப்பின் குரல்
🔗: https://t.co/ktNi9Q8WKL
@mkstalin#DMK
ஏழை - எளிய - நடுத்தர வர்க்க மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் Petrol, Diesel, CNG விலையை ஒன்றிய அரசு உயர்த்தி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த விலை ஏற்றத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டு, ‘பொறுத்துக்கொள்ளுங்கள், அதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யாதீர்கள்’ என்று ஒன்றிய அரசு அறிவுரை கூறுவது, தனது தோல்வியை மறைக்கும் முயற்சியே ஆகும்.
மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள இந்த சுமையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கழகத் தலைவர் திரு @mkstalin அவர்களின் நன்றியறிவிப்பு அறிக்கை
எந்த நிலையிலும் மக்கள் நலனுக்காகவும், மாநிலத்தின் உரிமைக்காகவும், தன் பயணத்தைத் தொய்வின்றித் தொடரும் அரசியல் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் 2019-ஆம் ஆண்டிலிருந்து 2 நாடாளுமன்றத் தேர்தல்கள், 2 சட்டமன்றத் தேர்தல்கள், ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல்கள் எனத் தொடர்ந்து பங்கெடுத்து வரும் தோழமைக் கட்சியின் மதிப்புக்குரிய தலைவர்கள் – நிர்வாகிகள் - தொண்டர்கள் அனைவருக்கும் தி.மு.கவின் தலைவர் என்ற முறையில் என் நன்றியினை உரித்தாக்குகிறேன்.
2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மேலும் புதிய கட்சிகள் இணைந்து, மாநில நலனுக்கான குரலை ஓங்கி ஒலித்ததையும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பங்கெடுத்துத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள், போட்டியிட முடியாமல் போன - போட்டியிட விருப்பமில்லாத -தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட கட்சிகள் - இயக்கங்கள் ஆகியவற்றின் தலைவர்கள் அனைவரும் என் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், தேர்தல் களத்தில் வழங்கிய ஒத்துழைப்பையும் என்றும் மறக்க மாட்டேன்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை அவர்கள், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அண்ணன் திரு. வைகோ அவர்கள், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ. அவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் சகோதரர் திரு. தொல். திருமாவளவன் எம்.பி. அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் திரு. மு. வீரபாண்டியன் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் திரு. பெ. சண்முகம் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் திரு. கே.எம். காதர் மொகிதீன் அவர்கள், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் திரு. எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அவர்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் திரு. ஈ.ஆர். ஈஸ்வரன் அவர்கள், மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் திரு. தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ அவர்கள், முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் திரு. கருணாஸ் அவர்கள், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர் திரு. வி.எம்.எஸ். முகமது முபாரக் அவர்கள், தமிழ்த்தேசம் கட்சி நிறுவனத் தலைவர் திரு. கே.கே. செல்வகுமார் அவர்கள், கிறித்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் திரு. இனிகோ இருதயராஜ் அவர்கள் ஆகிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் தேர்தல் களத்தில் போட்டியிட்ட கட்சிகளின் தலைவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குவதுடன், தேர்தல் களம் காணாத நிலையிலும் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய தலைவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன்.
93 வயதிலும் தமிழ்நாடு முழுவதும் பயணித்துப் பரப்புரை மேற்கொண்ட, நம் தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அய்யா திரு. கி. வீரமணி அவர்கள், போட்டியிடத் தொகுதிகள் தேவையில்லை; தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வெற்றியே குறிக்கோள் என நேரில் தெரிவித்துப் பணியாற்றிய மக்கள் நீதி மய்யம் தலைவர் நண்பர் திரு. கமல்ஹாசன் எம்.பி. அவர்கள், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் திரு. பொன். குமார் அவர்கள், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் திரு. எர்ணாவூர் நாராயணன் அவர்கள், மக்கள் விடுதலைக் கட்சித் தலைவர் திரு. முருகவேல் ராஜன் அவர்கள், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் திரு. அதியமான் அவர்கள், புதிய திராவிட கழகம் நிறுவனத் தலைவர் திரு. கே.எஸ். ராஜ்குமார் அவர்கள், திராவிடத் தமிழர் கட்சி தலைவர் திரு. வெண்மணி அவர்கள், ஆதித்தமிழர் கட்சி தலைவர் திரு. கு. ஜக்கையன் அவர்கள், தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. நாகை திருவள்ளுவன் அவர்கள். தமிழ் மாநில தேசிய லீக் பொதுச்செயலாளர் திரு. திருப்பூர் அல்தாப் அவர்கள், அகில இந்திய வல்லரசு பார்வர்டு ப்ளாக் நிறுவனத் தலைவர் திரு. பி.என். அம்மாசி அவர்கள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செலயாளர் திரு. சுப. வீரபாண்டியன் அவர்கள், கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் திரு. உ. தனியரசு அவர்கள் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள், தொகுதி ஒதுக்கீடுகள், ஒப்பந்தங்கள், பரப்புரைப் பணிகள் அனைத்திற்கும் பொறுப்பினை ஏற்று, செயல்பட்டவன் என்ற முறையில், தேர்தல் அரசியல் களத்திற்கேயுரிய தன்மையினால் எந்தவொரு கட்சித் தலைவருக்கோ, அதன் நிர்வாகிகளுக்கோ சிறிதளவு மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தாலும் அதற்கும் பொறுப்பானவனாக என் வருத்தத்தையும் பதிவு செய்து, தங்கள் அனைவரின் உழைப்புக்கும் ஒத்துழைப்புக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டை முன்னேற்றப்பாதையில் தொடர்ந்து கொண்டு செல்லவும், மாநில உரிமைகள் பறிபோகாமல் தடுக்கவும் ஒருங்கிணைந்து செயல்பட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முழுமையான வெற்றியைப் பெற முடியாமல் போனாலும், வலிமை குன்றாத வகையில் 1 கோடியே 54 இலட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகளைப் பெற்று, 72 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது, தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையையே வெளிப்படுத்துகிறது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பெரும்பாலான தோழமைக் கட்சிகள் கொள்கைத் தோழமையுணர்வு மாறாமல், தி.மு.க.வுடன் தொடர்ந்து பயணிப்பதை வெளிப்படையாகத் தெரிவித்திருப்பது கழகத்தின் மீது தோழமைக் கட்சித் தலைவர்கள் வைத்துள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. அதற்கேற்ப, நாம் கொள்கை உறுதிமிக்க அரசியல் கட்சிகளாக ஒன்றுபட்டு நின்று, மக்கள் நலனுக்காகவும், மாநில உரிமைக்காகவும் நம் பயணத்தை எப்போதும் போல தொடர்ந்து மேற்கொள்வோம். தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்.
***
#DMK