அவனும், அவளும் விருப்பப்பட்டு ஒண்ணாதான் ரூம் எடுத்து சந்தோஷமா இருந்திருக்காங்க அந்த பொண்ணு ஒரு விபத்துல இறந்து போயிடுறா. ஒட்டுமொத்த கும்பலும் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்காங்க..
"அந்த பொண்ணு விருப்பப்பட்டுத்தான் உன் கூட வந்தாளா? ரெண்டு பேரும் நல்லா மேட்டர் பண்ணீங்களா?"
அந்தப்பொண்ணோட அப்பா முன்னாடியும், அம்மா முன்னாடியும் போலீஸ் கேக்குறாங்க. அந்த அப்பா கூனி குறுகிப் போய் நிக்கிறாரு.. அந்த அம்மாவுக்கு தெரியும். 'தன் பொண்ணு இவன் கூட விருப்பப்பட்டுதான் ஓடி வந்து இருக்கா அப்படிங்கிறது' ஆனா அவங்க அப்பா நம்பலை..
ஆனா போலீஸோ, 'இந்த மாதிரி நிறைய கேஸ் பார்த்து இருக்கோம். இந்தப் பொண்ணுதான் படுக்கறதுக்காக இவன் கூட வந்து இருப்பான்னு பச்சையா பேசுறாரு... அந்த அம்மா மனசு உடைஞ்சு போய் என்ன பேசறதுன்னு தெரியாம நிக்கிறாங்க..
அந்த அப்பா அவ்ளோ பேரோட கண்ணுல தெரியுற வக்கிரத்தை சுமக்க முடியாம, "இல்ல என் பொண்ணு அப்படி பட்டவ இல்ல'ன்னு கதறிக்கிட்டு இருக்காரு.
ஹீரோ வாய் திறந்து, "இல்ல சார்.. அந்த பொண்ணு என்னைத் தேடி வரல. நான்தான் அவளை வலுக்கட்டாயப்படுத்தி, காதலிக்க சொல்லி வற்புறுத்தினேன்.அவ அவங்க அப்பாவை மீறி எதுவுமே செய்ய மாட்டேன்னு சொன்னா, நான் தான் ஃபோர்ஸ் பண்ணி அவளை துரத்துனேன். அப்போ என்கிட்ட தப்பிக்கிறதுக்காக அவ ஓடும்போது ரோட்ல அடிபட்டு செத்துட்டா" அப்படின்னு ஒரு பொய்யை சொல்றான்..
அது வரைக்கும் என்ன பேசுறதுன்னு தெரியாம இருந்த அந்த அம்மாவுக்கு, தன் பெண்ணோட மரணத்தை விட அவன் சொன்ன அந்த பொய் அவங்களை அதிகமா பாதிக்குது...
இதுவரைக்கும் அவனை கீழ்த்தரமா நினைச்சுட்டு இருந்த அந்த அம்மாவோட பார்வையில, அவன் மிகப்பெரிய உச்சத்துக்கு போறான்..
"பாத்தீங்களா சார்.. என் பொண்ணு உத்தமி சார்.. அவ தேவதை சார்.. அவ மேல எந்த தப்பும் இருக்காது.. இந்த பொறுக்கிதான் சார் என் பொண்ணை துரத்தி இருக்கான்" அப்படின்னு கதறாரு.
அந்த ஒரு நொடி, அந்தப் பெண்ணை அசிங்கமா பார்த்த அத்தனை பேரோட கண்கள்'லையும் அந்த பெண் பரிசுத்தமா மாறுறா.. மிக முக்கியமா, அந்த குடும்பத்துக்கு அசிங்கமான முன் உதாரணமா இருக்க வேண்டிய அந்த பொண்ணு இன்னைக்கு அந்த குடும்பத்துக்கு தெய்வமாக மாறுறா.. இது எல்லாத்துக்கும் காரணம் அவன் சொன்ன ஒரு பொய்...
அவன் நினைச்சிருந்தா... உண்மையை சொல்லி இருந்தா... அவளோட மரணம் மிகத் தப்பான ஒண்ணா போயிருக்கும். அந்த அப்பாவோட வாழ்நாள் முழுக்க, அந்தப் பெண்ணைப் பத்தின கேவலமான பிம்பம்தான் அவர் மனசுல இருந்திருக்கும்
அது எல்லாத்தையும் இவனோட ஒரு பொய் மூடி மறச்சு, அவளை ஒரு புனித ஆத்மாவா அந்த இடத்துல நிரூபிச்சி இருக்கு..
இதுவரைக்கும் நடந்ததெல்லாம் ஒண்ணுமே இல்ல... இப்ப ஒண்ணு நடக்கும் பாருங்க.. அதான் இந்தப்படத்தோட ஜீவனே.....
அந்த அம்மா, கண்ணீர் நிறைஞ்ச கண்களோட, அந்த பையனோட வலியை முதன்முறையா உணர்ந்து, எம் குடும்பத்தை காப்பாத்திட்ட'ப்பா.. என் புருஷனுக்கு ஒரு மிகப்பெரிய ஆசுவாசத்தை கொடுத்துட்டப்பா' அப்படின்னு. ஒரு வார்த்தைக்கூட சொல்லாம நெகிழ்ந்து போய்,தன்னோட கையால அந்த பையனோட தலையில ஒரு ஆசிர்வாதம் பண்ணிட்டு போவாங்க... ப்பாஆஆஆ...
100 பக்கம் டயலாக் எழுதினா, என்ன ஒரு பாதிப்பைக் கொடுக்க முடியுமோ, அதை அசால்டா ஒரே ஷாட்ல செல்வா காட்டிட்டு போவாரு... தமிழ் சினிமாவுல மறக்க முடியாத ஒரு Iconic காட்சி, இந்த சீன்.. எப்போ பார்த்தாலும் மனசை ஒரு செகண்ட் உலுக்கி போடும்...
- Aarvaa #7GRainbowColony