“எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்” என்ற கதையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பொய்க்கால் குதிரை அரசு, விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்க வக்கில்லாமல் விழி பிதுங்கி நின்று, அரசு செய்ய வேண்டிய வேலைகளைப் பார்க்காமல் அற்பத்தனமாக குதிரை பேரம் எனும் மிகக் கேவலமான அரசியலை அரங்கேற்றிக் கொண்டிருப்பதை தமிழக மக்கள் முகம் சுளித்து அருவருப்பாக பார்த்துக் கொண்டிருப்பதை திசைதிருப்ப, இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சரி, அதையாவது ஒழுங்காக செய்தார்களா என்றால், இல்லை!
எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு 2021-ம் ஆண்டு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ. 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து, 16.43 லட்சம் விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்தது. அது தான் ஒரு அரசாங்கம் விவசாயிகள் உணர்வுகள் அறிந்து மேற்கொள்ளும் செயல்.
ஆனால் இன்றைய அரசு செய்துள்ளது என்ன?
தேர்தல் அறிக்கையில் “5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்” என்று அறிவித்து விட்டு, இப்போது நிலத்தை அளவுகோலாக எடுக்காமல், பணத்தை அளவுகோலாக வைத்து மிகப்பெரிய ஏமாற்று வேலையில் ஈடுபட்டு உள்ளனர்.
2021-ல் நாம் 12,110 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததையும், இவர்கள் இப்போது 2026-ல் வெறும் 2,044 கோடி ரூபாய் கடனை மட்டுமே தள்ளுபடி செய்வதாக கூறுவதையும் பார்த்தாலே விவசாயிகளுக்கு புரிந்துவிடும், இது எவ்வளவு பெரிய தில்லுமுல்லு என்று!
மண்ணில் கால் வைத்து, ஏர் பிடித்து உழுத விவசாயி என்ற முறையில் சொல்கிறேன்- விவசாயிகளை ஏமாற்றும் எந்த ஒரு அரசும் நிலைத்ததாக சரித்திரமே இல்லை!
சோறு போடும் விவசாயி கடவுளுக்கு நிகரானவன்! அந்த பச்சைத் துண்டு அணிந்த உழவர்களை ஏமாற்றாதீர்கள்; செய்வன திருந்தச் செய்யுங்கள் @CMOTamilNadu!
@AIADMKOfficial
கடந்த ஐந்து வருடம் ஓபிஸ் குழுவை பற்றி பேச ஊடகங்கள் நல்ல தீனி இந்த ஐந்து வருடம் இப்ப SPV, CVS பற்றி பேசுவார்கள் - பொது செயலாளர் கட்சி வளர்ச்சியை பார்ப்பாரா? இல்ல இந்த பஞ்சாயத்தை பார்ப்பாரா?
கட்சி எதை நோக்கி செல்கிறது. ....
@AIHighlight@Admkitwing@admktn2026@edapadiyar@NewsJT
இளைய தலைமுறையை கவரும் வகையில் அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பை ஐம்பது வயதுக்கு குறைவாகவும் ஒன்றிய செயலாளர் பொறுப்பை நாற்பது வயதுக்கு குறைவான இளைஞர்களுக்கு கொடுத்தால். ....
அம்மாவின் ஆசைப்படி இந்த இயக்கம் தனக்கு பின்னால் நூறாண்டுகள் பிறகும் மக்களுக்காக இயங்கும். ......
நான்வேட்பாளராக மட்டுமே இருக்கும்போதே சட்டமன்ற உறுப்பினர் போல பணியாற்ற வாய்ப்பளித்து,முக்கிய வீதிகளில் விளக்கு கூட இல்லை என்று நான் சொன்ன அடுத்த நாளே அவசரகால நடவடிக்கை எடுக்கும் இந்த சுறுசுறுப்பை கடந்த 10 வருடங்களாக மக்கள் பார்த்ததே இல்லையாம்.
#Vote4SundarC#Sundarc4MaduraiCentral
#UngalVeetuPillaiSundarC
#Aiadmk
@AIADMKOfficial
மண்ணச்சநல்லூர் அருகே திமுகவினர் தரக்குறைவாகப் பேசியதில் மனமுடைந்த பெண் தற்கொலை - தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெறாமல் 8 ஆயிரம் ரூபாய் கூப்பனின் மாதிரியை வீடுவீடாக விநியோகிக்கும் திமுகவினர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுகவின் வேட்பாளர் திரு கதிரவன் அவர்களின் ஆதரவாளர்களால் வழங்கப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மாதிரியை வழங்குவதில் ஏற்பட்ட வாய்த் தகறாரில் திமுகவினர் தரக்குறைவாகப் பேசியதில் மனமுடைந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகின்றன.
தேர்தல் ஆணையத்தில் முறையான அனுமதி பெறாமல் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மாதிரியையும், சட்டவிரோதமாகப் பரிசுப் பொருட்களையும் வீடுவீடாக சென்று விநியோகம் செய்ததோடு, தன் ஆதரவாளர்கள் மூலம் பெண் ஒருவரைத் தரக்குறைவாகப் பேசி அவரை தற்கொலை செய்யத் தூண்டிய திமுக வேட்பாளர் திரு கதிரவன் அவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் வாக்குறுதியை மடைமாற்றும் வகையிலும், திமுக அறிவித்த 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மக்கள் மத்தியில் எடுபடாத நிலையிலும் தற்போது அதன் மாதிரியைத் தயாரித்து வீடு வீடாகச் சென்று திமுகவினர் விநியோகம் செய்து வருவது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிரானது.
எனவே, பெண் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெறாமல் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மாதிரியை விநியோகம் செய்தது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறேன்.
@TNelectionsCEO@ECISVEEP
பெயர் தெரியாத போதைப்பொருள் எல்லாம் Alphabet ஆர்டரில் இளைஞர்கள் கூறும் அளவிற்கு உள்ள போதைப்பொருள் புழக்கத்தை தடுக்காமல்,
வழக்கமான நாடகங்களை மட்டுமே பேசி வரும் தில்லு முல்லு கம்பெனியிடம் இருந்து தமிழகத்தை மீட்போம்!
எதிர்கால சந்ததிகளை காப்போம்!
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK 🌱
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
கஞ்சா போதை,
பாலியல் வன்கொடுமை,
கொலை முயற்சி,
இது தான் திமுக ஆட்சிக்காலம்!
படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பது தான் ஸ்டாலின் மாடல்.
இந்த மாடல் தான் மீண்டும் வரவேண்டும் என்று @mkstalin துடித்துக்கொண்டு இருக்கிறார்.
நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன்-
இத்தனை நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதை பற்றி ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை பேசினாரா?
தன் ஆட்சிக்கான Accountability இல்லாத, என்ன நடக்கிறது என்று Idea-வே இல்லாத ஒரு Dummy முதல்வர் தமிழ்நாட்டை ஆண்டது போதும்.
ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கேள்வி ஒன்று ஒன்று தான்-
தமிழகம் வாழ வேண்டுமா?
ஆம் என்றால், திமுக வீழ்ந்தே ஆகவேண்டும்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
#தேனி மற்றும் #மதுரை மாவட்டங்களில், சித்திரைத் திருவிழா இன்றே தொடங்கிவிட்டாற்போல் @AIADMKOfficial நல்லாட்சியை வரவேற்க உற்சாகத்தோடு கூடிநின்ற பொதுமக்களிடம் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தேன்.
என்னுடன் ஆண்டிப்பட்டி பிரச்சாரத்தில் @ammkofficial பொதுச்செயலாளர் அன்புச் சகோதரர் திரு. @TTVDhinakaran அவர்கள் இணைந்து பங்கேற்றார்கள்.
மதுரை பிரச்சாரத்தில் புதிய நீதிக்கட்சித் தலைவர் திரு. @DrACSOfficial அவர்கள் உடன் இருந்தார்கள்.
ஸ்டாலின் இன்றைய தினம் ஒரு வீடியோ வெளியிட்டதை செய்திகளில் பார்த்தேன். அதைப் பார்த்ததும், "ஏரியாவுக்கு வாய்யா, தெருவுக்கு வாய்யா, வீட்டுக்கு வாய்யா" என்று சவால் விட்டவர், கடைசியில் "மன்னிச்சுப்பா... ஒன்லி பில்டப் பா" என்று கதறும் நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வந்தது.
பழைய திமுக என்கிறார். எது பழைய திமுக? உங்கள் தந்தை ஆட்சியில் மதுரைக்கே வரமுடியாத நிலையில் நீங்கள் இருந்தீர்களே... அதுவா?
பயத்தில் கண்டதை உளறும் @mkstalin அவர்களே...
#அண்ணாதிமுக_WINNING! ✌️
#நல்லாட்சி_COMING! 🌱
#Vote4AIADMK
@AIADMKOfficial@TTVDhinakaran
#திருச்சி மற்றும் #திண்டுக்கல் மாவட்டங்களில் அஇஅதிமுக ஆட்சி அமையப்போகும் வெற்றி அலையாக கூடிநின்ற மக்களிடையே கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
“உங்க கனவைச் சொல்லுங்க” என்று அரசின் திட்டமாக மக்களின் ஆதார் எண், தொலைபேசி எண் உள்ளிட்ட முக்கியமான தனிநபர் விவரங்களை சேகரித்து, அதை திமுக நடத்தும் PEN என்ற நிறுவனத்திடம் கொடுத்து, அந்த நிறுவனம் மூலம் திமுக ஆதரவு செய்திகளை மக்களுக்கு அனுப்புகிறது திமுக.
அரசை நம்பி மக்கள் கொடுத்த Private Data-வைத் திருடி, அதை சொந்த நிறுவனத்திற்கு அனுப்பியது எவ்வளவு பெரிய மோசடி?
இப்படி மோசடி செய்து மக்களை Brainwash செய்தால், உங்கள் ஆட்சியின் அவலங்களை எல்லாம் மக்கள் மறந்துவிடுவார்களா என்ன?
திரு. @mkstalin அவர்களே…
நீங்கள் எத்தனை தில்லுமுல்லு செய்தாலும் சரி,
#அண்ணாதிமுக_WINNING ! ✌️
#நல்லாட்சி_COMING ! 🌱
#Vote4AIADMK