கரூர் மக்களின் கண்ணீர்தான் கொளத்தூர் தேர்தல் முடிவுக்கு காரணம் என்கிறார் ஆதவ் அர்ஜுனா.
அப்படி என்றால், கரூரில் த.வெ.க.தானே ஜெயிச்சிருக்கணும்?
ஆனா, ஒரு sofa set தானே ஜெயித்தது.
உடம்பெல்லாம் திமிர் இருக்கலாம். தலையில் கொஞ்சம் மூளையும் இருக்கணும்.
ஷோபா மாடல் அரசின் முகத்திரையை கிழித்துள்ளனர் DMKZenG meet நண்பர்கள் வாழ்த்துக்கள்...
இந்த மாதிரி வித்தியாசமாக செய்ய வேண்டும்.
அதைவிட முக்கியம் இதை அதிகம் பகிர வேண்டும்
😂😂😂😂
நல்ல வேலை..
திமுக தோற்றது
இல்லாவிடில் துரோகிகளை எல்லாம் நண்பர்கள் என தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருப்போம்
மக்களுக்காக @mkstalin and @Udhaystalin ஓய்வின்றி உடலை வருத்திக் கொண்டு இருப்பார்கள்
நடிகர் வெறும் டுபாக்கூர் என்று மக்களுக்கு தெரியாமலே போயிருக்கும்
நன்றி மக்களே
🙏
திமுக ஆட்சியில் கூட்டத்திற்கு 5000 பேர் வரைதான் காவல்துறை அனுமதி கொடுத்து விஜய்யை ஒடுக்குகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்கள்.
இப்போது ஆட்சி, காவல்துறை இரண்டுமே கையில் இருந்தும் 5000 பேருக்கு மட்டுமே அனுமதி.
இப்போது பழியை யார் மீது போடப் போகிறார்கள்? 🤔
#TVKVijayFails
கோவையின் Pride-ஆக நிமிர்ந்து நிற்கும் பெரியார் நூலகம்!😎
திராவிட மாடல் அரசால் கட்டி முடிக்கப்பட்ட இந்த Mega Project-ஐ இன்று TVK அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவே வியந்து பார்க்கிறார்
Criticize பண்ணலாம்... Ignore பண்ண முடியாது! 🔥📚
அதுதான் Dravidian Model Achievement @mkstalin 💪🔥
உயிரோட விடமாட்டோம் என மிரட்டி தவெகவினர் தாக்கினர்" !
சாதியப் பாகுபாடு நடப்பதாக அருள் பிரகாசம் எம்.எல்.ஏ. மீது புகார் அளித்த வழக்கறிஞர் விக்னேஷ் மீது ஒரு கும்பல் தாக்குதல் !
A Criminal Complaint has been submitted to the DGP @tnpoliceoffl and the Commissioner of Police Greater Chennai against these two offenders involved in various criminal and unlawful activities, including forgery and creating fabricated photos and content. The complaint requests urgent criminal action, identification of conspiracy networks, custodial interrogation, preservation of digital evidence, and the immediate removal of all unlawful content. Additionally, separate civil actions for damages in their personal capacity against each individual are also contemplated.
@mkstalin@Udhaystalin@DMKITwing@arivalayam
@Civilerbala1979@raghur1906 காலங்காலமாக திமுகவிற்கு மட்டுமே ஓட்டளிக்கும் எங்கள் குடும்பம்,
இப்பொழுது எங்களுக்கு ஓர் சந்தேகம் வந்து விட்டது - நாங்கள் திமுகவிற்கு வாக்களிக்கிறோம்,
உண்மையிலேயே அதை EVM பிரதிபலிக்கிறதா?
இச்சந்தேகத்தை தீர்த்து வைப்பது திமுக தலைமையின் பொறுப்பல்லவா! @Office_of_Udhay@mkstalin
தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில்
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் 14.05.2026 அன்று நடைபெற்ற தி.மு.கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை:
என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதித்தே தீரும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது இயற்கை நியதி மட்டுமில்ல, தமிழ்நாட்டு அரசியல் நியதியும் இதுதான்.
நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இப்ப அமைதிருக்கும் அரசும், கூட்டணிக் கட்சிகளோட தயவாலதான் ஆட்சியை அமைச்சிருக்கு. அதுவும் நம்ம கூட சேர்ந்து வெற்றி பெற்றவர்களின் ஆதரவோடதான் ஆட்சி அமைஞ்சிருக்கு.
நமக்கு பெரும்பான்மை கிடைக்கலயே தவிர, கணிசமான எண்ணிக்கையில வாக்குகள் கிடைச்சிருக்கு.
கொஞ்சம் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் 1989-ல நாம ஆட்சி அமைச்சோம். அடுத்து நடைபெற்ற 1991 தேர்தலில் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே ஜெயிச்சோம்....96 ல மீண்டும் நம்ம ஆட்சி ஆனா அடுத்து வந்த 2001 தேர்தலில் நாம வென்ற இடங்கள் 37 தான்...அதே போல 2006 ல திமுக ஆட்சி அமைச்சு 2011 ல வெறும் 31 இடங்கள்...
இப்படி ஆட்சியில் இருந்து தோற்ற போதெல்லாம் நாம் மிகக் குறைந்த இடங்களிலேயே வென்றிருக்கிறோம்....இப்பொழுது 59 இடங்களில் வென்றிருக்கிறோம்......கூட்டணி எண்ணிக்கையை எல்லாம் சேர்த்துப் பார்த்தால் 73 இடங்கள். கடந்த முறைகளை ஒப்பிடும்போது இது கூடுதல் எண்ணிக்கை.... நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடுதான்.
இப்ப நம்மளை பார்க்குற எல்லாருமே, ஏன் சோஷியல் மீடியாலயுமே, “எப்படியும் திமுகதான் ஜெயிக்கும்னு நினைச்சோம். அதனால, என்னோட ஒரு ஓட்டுல என்னாகிடும்னு தெரியாம போட்டுட்டோம்”-னு புலம்புறாங்க.
அதுமட்டுமில்ல,
“இப்படி ஒரு கட்சிக்கு வோட்டு போட்டு - ஆட்சியில உட்கார வெச்சிட்டோமே-னு பலரும் வருந்தி பதிவு போடுறதையும் பார்க்குறேன்.
இதுதான் நம்ம ஐந்தாண்டு கால நல்லாட்சிக்கு கிடைச்ச அங்கீகாரம்.
நம்ம உழைப்புக்கு கிடைச்ச சான்று!
ஆனா, அது வெற்றியா மாறாம போயிடுச்சு.
பொதுவாழ்க்கைக்கு வந்தா வெற்றி தோல்வி சகஜம்.
ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.
மேடு பள்ளங்கள் இருக்கும்.
அதுதான் அரசியல்.
இந்தப் பக்குவம் வேற யாரையும் விட நமக்குத்தான் அதிகம்.
இதுதான், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களும் நமக்கு கத்து தந்திருக்க பக்குவம்.
அதனாலதான், மத்த கட்சிகள் மாதிரி நம்ம MLA-க்களை ரெசார்ட்ல, நட்சத்திர விடுதில ஒளிச்சு வைக்க வேண்டிய பயமில்லாம தோல்விலயும் நாம தைரியமாவே இருந்தோம்.
என்னைப் பொறுத்தவரையில, கடந்த ஐந்தாண்டு காலமும் கடுமையா உழைச்சேன். உங்களையும் உழைக்க வெச்சேன்.
என் சக்திக்கு மீறியும் உழைச்சேன். உங்களையும் ரெஸ்ட்டே இல்லாம உழைக்க வெச்சேன்.
இதுவரை எந்த அரசும் செஞ்சு தராத சாதனைகளை நாம செஞ்சு கொடுத்தோம்.
கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடிப் பயன் தரும் ஆட்சியா நம்ம ஆட்சி இருந்தது.
இது மக்களுக்குத் தெரியும்.
இருந்தாலும் நாம ஆட்சி அமைக்க முடியல.
இதுக்காக, நான் யாரையும் சுட்டிக்காட்டி குறை சொல்ல விரும்பல. தோல்விக்கான காரணங்களை கழக நிர்வாகிகள் தொடங்கி, பொதுமக்கள் வரை எல்லா விதமாவும் பேசுறாங்க.
ஒருத்தர் இன்னொருத்தரை குற்றம் சொல்லுறாங்க. அவர் இன்னொருத்தரை கை காட்டுறாரு. இப்படி மாத்தி மாத்தி, குற்றம் சொல்லிகிட்டே இருந்தா, இதுக்கு ஒரு முடிவே இருக்காது.
அப்ப, இதுக்கு யாருதான் பொறுப்பு? யாரும் யாரையும் குறை சொல்லாதீங்க.
கழகத்தின் தலைவர் என்ற முறையில, நானே இந்தத் தோல்விக்கு பொறுப்பேத்துக்குறேன். இதுதான் நிதர்சனம்.
வெற்றி கிடைச்சா அதோட பெருமையை அடையும் நான்,
தோல்விக்கான பொறுப்பையும் ஏத்துக்குறதுல எந்த தப்பும் இல்ல. அதுதான் நியாயம்.
நீங்களும் இந்த தோல்விக்காக, அடுத்தவர் மேல பழி போடாதீங்க.
எல்லாரும் என்ன சொல்றாங்க?
அப்படி செஞ்சிருக்கலாம்,
இப்படி செஞ்சிருக்கலாம்,
அது நடக்கல, இது நடக்கல,
அவரு கண்டுக்கல, இவரு கண்டுக்கல-னு பழி போடுறாங்க.
தயவு செஞ்சு இனிமே அதை பண்ணாதீங்க.
தோல்வியின் போது ஆதங்கத்தை கொட்டுவது இயல்பானதுதான்...ஆனால் அது பழியாக இருக்கக் கூடாது...ஆய்வு செய்வது அவசியம்தான் ஆனால் அடுத்தவர் மீதான அவதூறாக இருக்கக் கூடாது...
இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி.
சுனாமினா சாகசமோ, சாதனையோ கிடையாது. பெரும் பாதிப்பு என்ற மீனிங்ல சொல்றேன். தமிழ்நாட்டின் நலன்களை பாதிச்சிருக்க சுனாமி பேரழிவு இது.
தமிழ்நாட்டு மக்களை இதுல இருந்து, எப்படி மீட்டெடுக்க போறோம். அதை பத்தி யோசிங்க.
எங்க கோளாறு நடந்துச்சு?
எங்க மெத்தனம் ஏற்பட்டுச்சு? என்பதுதான் முக்கியம்.
இதை ஆய்வு செஞ்சாகணும்.
ஒவ்வொரு தொகுதிக்கும் தனிப்பட்ட பல பிரச்சினைகள் இருக்கு.
எல்லாரும் இதை பரிசீலிச்சு பார்க்கணும். ஆய்வு செய்யணும்.
இது ஒரு தேர்தல் சுழல்தானே தவிர, நாமெல்லாம் எந்திரிக்கவே முடியாத தோல்வி இல்லை..
இனி, கொஞ்சம் கூடுதல் கவனத்தோட, நம்ம செயல்பாடுகளை மாத்திகிட்டு வேலை செய்யணும்...
முக்கியமா, ஒத்துமையா இருந்து வேலை செய்யணும்....
அதுக்கு முன்னாடி நாம ஒவ்வொருத்தரும் நம்மை நாமே சுய பரிசோதனை செஞ்சிக்கணும்.
முதல்ல, தோல்விக்கான காரணங்கள் குறித்து, தொகுதிவாரியா, நம்ம அனைத்து மட்ட நிர்வாகிகள் கிட்டயும் கருத்து கேக்கணும்.
அவங்களோட குரலுக்கு முதல்ல நாம காது கொடுக்கணும்.
அதுக்காக தலைமைக் கழகத்தின் சார்புல கள ஆய்வு நடத்தி அறிக்கை தர ஒரு குழுவை அமைக்கப் போறேன்.
அவங்க தமிழ்நாடு முழுக்க, தொகுதி வாரியா, எல்லா தரப்பு நிர்வாகிகளையும் சந்திச்சு பேசி அடுத்த 20 நாட்களுக்குள்ள எனக்கு அறிக்கை கொடுப்பாங்க.
கழக உடன்பிறப்புகள் கிட்டயும் கருத்து கேக்க போறேன்.
உடன்பிறப்புகள் வெளிப்படையா தகவல் சொல்றதுக்காக தனி ’வெப்சைட்’ நாளைக்கே அறிவிக்கப்படும்.
கழகம், இந்த தேர்தல்ல செஞ்ச தவறு-னு நீங்க எதை நினைக்கிறீங்க?
நம்ம கிட்ட என்ன மாற்றத்தை எதிர்பார்க்குறீங்க என அதுல எல்லாரும் சொல்லலாம்.
இது எல்லாம் கிடைச்ச பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பேன்.
தலைமைக் கழகத்தால அமைக்கப்படும் விசாரணைக் குழு,வெப்சைட் மூலமா கழகத்தின் உடன்பிறப்புகள் மற்றும் நம்ம மேல அக்கறை கொண்ட பொதுமக்கள் சொல்லுற ஆலோசனைகளை வெச்சு,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு முறையில மிகப்பெரிய மாற்றத்த கொண்டு வரலாம்னு இருக்கேன்.
அந்த மாற்றம்தான், நம்ம கழகத்தை இன்னும் ஒரு நூறாண்டுகளுக்கு உயிர்ப்போட வெச்சிருக்க போகுது.
கழக அமைப்புல செய்யப்போற இந்த மாற்றங்களுக்கு முன்ன, நாம முதல்ல மாறியாகணும். நாம எல்லாருமே மாறியாகணும். யாரும் விதிவிலக்கு இல்ல.
இந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, மாநாடுகள் - பொதுக்கூட்டங்கள் - ஆர்ப்பாட்டங்கள் இதையெல்லாம் தாண்டுன களமா சமூக வலைத்தளங்கள் உருவெடுத்திருக்கு.
இதை நான் கடந்த ஐந்தாண்டுகள்ல பல முறை வலியுறுத்துனேன். குறிப்பா, காணொலிக் கூட்டங்கள் நடத்தும்போது, சோஷியல் மீடியாவோட ரீச் பத்தி உங்க கிட்ட சொல்லியிருக்கேன்.
ஆன்லைன் என்பது நமக்கு புதுசு இல்ல. குறிப்பா சொல்லணும்னா, கொரோனா காலகட்டத்துல 3 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழுவை காணொலியிலேயே நடத்திக் காட்டுன பெருமைக்குரிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். டெக்னாலஜிய பயன்படுத்துறதுல, இனி நாம கூடுதல் கவனம் செலுத்தணும். கழகத்தினர் ஒவ்வொருத்தரும் சமூக வலைத்தளங்கள்ல நேரடியா பங்கெடுத்து செயல்படணும்.
தி.மு.க.வைப் போல, நம்ம தலைவர்களைப்போல காலத்திற்கேற்ப ஊடகங்களைப் பயன்படுத்துனவங்க வேற யாருமில்ல.
பொதுக்கூட்டம், திண்ணைப் பிரசாரம், பத்திரிகை, நாடகம், சினிமா, டி.வி.-னு கால மாற்றத்திற்கேற்ப, அனைத்து தளங்களையும் கொள்கையை விளக்கும் பிரச்சாரக் களமா வெற்றிகரமா பயன்படுத்துன இயக்கம் நம்ம இயக்கம்.
அதை மனசுல வெச்சிட்டு, இனி வரும் காலத்துல நம்ம பிரச்சார ஸ்டைல், நடத்தைகள், செயல்பாடுகள் எல்லாத்தையும் மாத்திக்கணும்.முன்னாடி டீக்கடையில உக்காந்து பேசிட்டிருந்த நம்ம அரசியலை, இப்ப சோஷியல் மீடியால பேசியாகணும்.
நேத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து முடிச்ச ஆளும்கட்சிக்கு, மெஜாரிட்டி இல்லனாலும், நம்ம கூட்டணிக் கட்சிகளை வெச்சும் – அ.தி.மு.க.வை உடைச்சும் பெரும்பான்மையை நிரூபிச்சிட்டாங்க.
அதிமுக ஆட்கள் எப்படி நடந்துக்குவாங்கனு சொல்லவே தேவையில்ல. இந்த நிலைமையில, அடுத்து என்ன நடக்கும்னு உறுதியா சொல்லவே முடியாது.
நம்மை பொறுத்தவரை, சட்டமன்றத்துல முறையான - திறமையான - கட்சியா நாம செயல்படணும்.
நம்ம அரசியல் எப்படி இருக்கணும்னா, கடந்த ஐந்தாண்டுகள்ல நாம உருவாக்குன திட்டங்கள் எல்லாம் தொடர்ந்து செயல்பட வைக்கணும்.
நாம தொடங்கிய உட்கட்டமைப்பு பணிகளை, குறித்த காலத்துல கட்டி முடிக்கிற வரைக்கும் நாம அழுத்தம் கொடுத்துட்டே இருக்கணும்.
சட்டமன்ற உறுப்பினர்களா இருக்க கூடியவங்களை ஆதாரங்கள், புள்ளிவிவரங்களோட ஷார்ப்பா பேச சொல்லியிருக்கேன்.
வெற்றியோ, தோல்வியோ - எல்லாரும் வாக்காளர்களைச் சந்திச்சு நன்றி சொல்ல சொல்லியிருந்தேன். இன்னும் அதை முழுசா செஞ்சு முடிக்காதவங்களையும் முடிக்க சொல்லுங்க.நாம மக்கள் கூடவே இருக்கணும்.
விரைவுல கட்சியை சீரமைச்சு, புது எனர்ஜி கொடுப்போம். இனிமே, ரொம்ப கவனமா, எல்லா விஷயங்களையும் செய்யணும்.
எல்லா நிர்வாகிகள் கூட்டத்துலயும் நான் வலியுறுத்தி பேசுறது, நிர்வாகிகள் ஒற்றுமைதான். இப்பவாச்சும், கோஷ்டி அரசியலை விட்டுட்டு, எல்லாரையும் அரவணைச்சு போங்க.
நமக்குள்ளயே ஒற்றுமை இல்லனா - வெற்றி என்பது சாத்தியம் இல்ல.
நம்ம கட்சி வீக்கா இருக்கும் பகுதிய பாருங்க, அங்க நிர்வாகிகளுக்குள் மோதல் இருக்கும்.நம்ம கட்சி தோற்ற தொகுதிலயும் நிர்வாகிகளின் ஒற்றுமை இல்லாம இருக்கும். அதையெல்லாம் நீங்களே நேர்ல போயி, கவனிச்சு சரிசெய்யுங்க.
என்னைப் பொறுத்தவரையில அடிமட்டத் தொண்டர்கள் - அடிமட்ட நிர்வாகிகள் - முழுப்பங்களிப்பைத் தரும் வகையில நாம அவங்களை தயார் செய்யணும்.
மாவட்டச் செயலாளர்கள்தான் மாவட்டத்துக்கு முக்கியம். அதை நான் மறுக்கல.அதுக்காக, மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே முக்கியம்னு ஆகிட கூடாது.எல்லாருமே முக்கியம்தான். ஒரு கட்டடத்துக்கு எல்லாத் தூணும் முக்கியம்.
ஒருவேளை யாராவது, “என்னால செயல்பட முடியாது”-னு நினைச்சா, மனப்பூர்வமாக முன் வந்து விலகிக்கலாம்.
நான் அதை தவறா சொல்ல மாட்டேன். உழைக்கத் தகுதியானவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. அடுத்து வர்ற தேர்தல்ல கழகம் கண்டிப்பா வெற்றி பெற்றாகணும்.
குறி வெச்சு களப்பணியாற்றுனா, நிச்சயம் வெற்றி பெறுவோம்.அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம, நீங்க உழைச்ச உழைப்பாலதான்,இத்தனை தொகுதிகள்ல நாமும் நம்ம தோழமைக் கட்சிகளும் வெற்றி பெற முடிஞ்சுது.
ஒரு தேர்தல்ல தோற்ற நாம் - மறு தேர்தல்ல வென்று காட்டி இருக்கோம். உங்க உழைப்பால வெற்றி பெற வெச்சிருக்கீங்க. அதுதான் தி.மு.க.! அந்த நம்பிக்கையோட பணியாற்றுங்க.
இந்த தோல்வியை நினைச்சு யாரும் வருத்தப்பட வேணாம். நாம பல வெற்றிகளுக்குச் சொந்தக்காரங்க. நம்மோட இந்த தோல்வி தற்காலிகம்தான்.
வெற்றியை நோக்கி பயணிப்போம்.
திட்டமிடுவோம்.
தீவிரமாக உழைப்போம்.
மீண்டு வருவோம்!
மீண்டும் வெற்றி பெறுவோம்.
நன்றி வணக்கம்!
#DMK
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
உதயநிதியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சட்டசபையை காலவரையின்றி ஒத்தி வைத்த தவெக முதல்வர் விஜய்...
நாளைக்கும் வந்து ராகிங் பண்ணுவார் என்ற பயத்தில் சட்டசபையையே ஒத்தி வச்சுட்டாப்ல..😂😂😂
கொடுக்க மனசு வேணும்!
“எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.”
- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
#MKStalin #DMK #TVKVijay #TVK #TamilNadu #KalaignarSeithigal
மூளையில் எதுவும் இல்லாத சினிமா நடிகர் விஜய் எனும் முட்டாளால் தமிழர்கள் விரைவில் ஏமாற்றடையப்போகிறார்கள்'' என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கடுமையாக அட்டாக் செய்துள்ளார்.
பதவியேற்ற முதல் உரையிலேயே, whatsappல் வருவதை மனப்பாடம் செய்து, "கஜானா காலி" என்று சொன்னதன் மூலம் @TVKVijayHQ எந்த socio-economicsம் தனக்கு தெரியாது என்பதை பறைசாற்றி உள்ளார். அதற்கு @mkstalin அவர்கள் உடனே பதில் கொடுத்தது நிறைவாக இருந்தது.
இதுபோல், தேர்தலுக்கு முன், விஜய் திமுகவிற்கு எதிராக பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் கொடுத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஏன், தேர்தல் முடிவுகளே மாறிபோயிருக்கலாம்.
"Tvkக்கு எதிராக பேசவேண்டாம் என்று @mkstalinஐ தடுத்தது யார் என்று தெரியவேண்டும்?". நிச்சயம் நான் முன்பே சொல்லியபடி, @dmk_youthwingம், @DMKWomensWingம் பெரும்பான்மையான பழியை ஏற்கவேண்டும். அவர்கள்தான் இளைஞர்கள், மகளிர்கள் மனதை நெருங்கி படித்திருப்பார்கள். அவர்கள் ஏன் தலைவரிடம் சொல்லவில்லை? இதையும் மீறி தலைவரிடம் "Eps தான் உங்களுக்கு அடுத்து வருகிறார், Vijayக்கு 3வது இடம்தான்" என்று misguide செய்தார்களா? உண்மையை சொல்லியிருந்தால், தன் தாக்குதலை Epsஐ விட்டு Vijay மேல் @mkstalin மாற்றி இருப்பாரே?
@DMKITwing ஏன் தன் தரத்தை improve செய்து Tvk it wing போல செயல்படாமல் கோட்டை விட்டது? "Route Mafia" மூலம் Tvk வென்றது என்று இப்பொழுது பேசிக்கொள்கிறார்களே, அதை atleast கண்டுபிடித்து தலைவரை உங்களால் alert செய்ய முடிந்ததா? ஒரு ஆளும் கட்சி ITwingஆக இருந்துவிட்டு இப்படி தோற்று போய்விட்டீர்களே.
முதுகில் குத்திய துரோகி @rahulgandhi திமுக மேல் மனதில் எவ்வளவு வன்மம் வைத்துள்ளார் என்பது அவர் மேடையில் Vijayயிடம் நடந்துகொண்ட விதத்தை வைத்து கணிக்க முடிகிறது. இப்படி வெளிப்படையாக ஒருவர் நன்றிகெட்ட தனத்தை காட்டுவது No.1 அயோக்கியத்தனம்.
"தான் மோசமாக தாக்கி தேர்தலில் வெற்றிபெற்ற கட்சியிடம் 13 தொகுதிகளை பெற்றதனால்தான் இன்று பதவி ஏற்க முடிகிறது" என்கிற நன்றி இருந்து, ஒரு சிறிய வார்த்தையாவது @arivalayamஐ பற்றி பதவி ஏற்பு விழாவில் பேசுவார் என்பது Vijay போல நாகரிகமற்றவரிடம் எதிர்பார்ப்பது தவறுதான்.
துரோகி கட்சி @incindiaவை தவிர Tvkயிடமுள்ள மற்ற திமுக கூட்டணி கட்சிகளிடம் மீண்டும் அதே கேள்விதான். Vijay முதல் நாளிலேயே திமுகவிற்கு எதிராக பேசி தன் புத்தியை காட்டிவிட்டார். இதுபோன்ற பேச்சைக் கேட்டுக்கொண்டுதான் Tvkஐ தொடர்ந்து ஆதரிக்க போகிறீர்களா?
50/60 வருடங்களுக்கு முன்பு கஷ்டப்பட்ட ஆனால், கலைஞர் திட்டங்களால் இப்பொழுது வளமையுடன் இருப்பவர்களுக்கு @mkstalin திட்டங்கள் சாதாரணமாக இருக்கலாம். ஆனால், ஏழைகள் பயன் பெறட்டுமே என்ற பெருந்தன்மை இல்லை. அவர்கள் வேலை, businessக்கு எல்லாம் எப்போது ஆபத்து வருமோ, அப்போது அவர்களுக்கு @mkstalin உதவி தேவைப்படும். அவர்கள் எந்த வித பிரச்சனைகளும் இல்லாமலிருப்பதற்கு காரணமும் திமுக தான் என்று தெரியவரும்.
திமுக மேல் மெல்லிய Anti incumbancy பரவலாக இருந்ததை கவனிக்காமல் விட்டதாலோ அல்லது சிலர் சொல்வதுபோல் "Evmல் யாரும் கண்டுபிடிக்கமுடியாத அளவில் திமுகவிற்கு எதிராக fix செய்ததாலோ" இதுபோல ஏதாவது ஒன்று திமுகவிற்கு அதிர்ச்சி தோல்வி கொடுத்துள்ளது.
இவ்வளவு நன்மைகள் வேறு மாநிலத்தில் செய்திருந்தால் அங்கு ஆளும் கட்சி நிச்சயம் தோற்றிருக்காது.
இங்கு BC/MBC/SC/ST/சிறுபான்மையினரில் பாதிபேருக்கு மேல் தொன்றுதொட்டு காரணமில்லாமல் இருக்கும், "முன்னேறிய ஜாதிகளால்" தூண்டி விடப்பட்ட "திமுக வெறுப்பும்" திமுக தோற்றதிற்கு ஒரு காரணம்.
பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்ன்னுட்டு 20 ரூபாயா ஆக்கிட்டானுங்க போல.. கேட்டா அப்ப தான் குடிக்கிறது குறையும்ன்னு விஜய்ண்ணா இப்படி பண்றார்ன்னு ஃபயர் விட்டாலும் விடும்ங்க
ஒரு பதிவில் நமது தலைவர்
@mkstalin அவர்களை முன்னாள் முதல்வர் என்று பதிவு செய்திருந்தேன்
அப்பதிவில் ஒரு நண்பர் முன்னாள் முதல்வர் என்று அழைப்பதை விட
#மக்களின்_முதல்வர் என்று அழைப்பது நன்றாக இருக்கும் என்று சொன்னார்
இனிமேல் நமது தலைவரை
#மக்களின்_முதல்வர் என அன்புடன் அழைப்போம்