@james786383@Pokkiri_Victor பாஸ் நீங்க சொல்ற மாதிரி எல்லாம் அவங்க பண்ணனுங்கனா நாடு முன்னேறிடும் அது முன்னேறினா அவங்களுக்கு சோத்துக்கு என்ன பண்ணுவா��்க.
இன்ஸ்டாக்ராம் மூலம் மக்களின் மனநிலையை மாற்றி வோட்டுகளைப் பெற முடியும் என்பதை வெளிநாடுகளில் கேள்விப்பட்டு இருக்கிறோம். தற்போது அது தமிழகத்திலும் நடைபெற்றுள்ளது - அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து
இதெல்லாம் தவறான கருத்து. எதன் மூலம் மனநிலையை மாற்றினால் என்ன? மனநிலையை அப்படியெல்லாம் மாற்றி��் கொள்ளும் நிலையில்தான் இருக்க வைத்திருந்தீர்களா? மக்கள் மனமுவந்துதானே வோட்டுப் போடுகிறார்கள்? ஏன்.. அதே இன்ஸ்டாக்ராம் உங்களிடம் இல்லையா? நீங்கள் மாற்றப் பார்க்க வேண்டியதுதானே?
தோற்றதற்குப் பின்னர் மக்களை சோற்றாலடித்த பிண்டங்கள் என்று முன்பொரு காலத்தில் கருணாநிதி சொன்னதற்கும் இதற்கும் என்ன பெரிய வித்தியாசம்?
மக்களாட்சித் தத்துவத்தில் மக்களின் முடிவை ஏற்றுக் கொள்வதுத���ன் சரி. ஜெயித்தால் உங்கள் கடின உழைப்பால் ஜெயித்ததைப் போலவும், தோற்றால் மக்கள் மீதோ, வோட்டு இயந்திரத்தின் மீதோ பழி போடுவதோ நியாயமே இல்லை.
உங்களை மக்கள் நிராகரித்து விட்டார்களா? நிராகரிப்புக்கான காரணம் என்ன என்பதை அலசி ஆராய்ந்து, அதில் உங்கள் தரப்புப் பிரச்னையைச் சரி செய்யப் பாருங்கள். அதுவும் கூட அவசரமில்லை. நிறைய நேரம் இருக்கிறது. Take your own time. அதை விட்டு விட்டு எப்போதும் போல மக்களைக் குறை கூறுவது தவறு.
@VCKofficial_TN@thirumaofficial //அப்படியே கழிப்பறையில்
பக்கெட் விளக்குமாறு
எல்லாத்தையும் கணக்கெடுத்துட்டு போங்க!//
அப்படியே அந்த பால்டாயில் கணக்கையும் சேர்த்து சொல்லுங்க
நீர் மேலாண்மையில் உலகமெங்கும் புரட்சி செய்யும் தமிழகத்தை சேர்ந்த தம்பி நிமல் ராகவனுக்கு @being_nimal
தமிழ்நாடு அரசு பணி அளித்து அவரி���் புதிய செயல்திட்டங்களை ஊக்குவித்தால்
தமிழக நீர் மேலாண்மையை மட்டுமல்ல உலக நீர் மேலாண்மையை பாதுகாப்பார் என்பதில் எந்த ஐயமுமில்லை....
@CMOTamilnadu 🙏🙏🙏
@polimernews சட்டவிரோத மது விற்பனை இந்த இடத்தில் நடந்து கொண்டுள்ளது அவிநாசி தாலுகா போலீஸ் ஸ்டேஷன் லிமிடில் உள்ளது. தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அருகில் பிரபலமான கோயில் ஒன்று உள்ளது. அங்கு மது பிரியர்கள் செய்ய அட்டூழியம் அதிகம். https://t.co/g5hGlmrfRm
@sigma__male__ என்னமோ இத்தனை வருஷம் ஆட்சி பண்ணவன் பூரா ஏதோ லயோலா காலேஜ்ல படிச்சிட்டு லண்டன் யுனிவர்சிட்டில அரசியல் படிச்சிட்டு வந்து ஆட்சி பண்ண���னா மாதிரி பேசிட்டு இருக்காங்க. இளைஞர்களையும் வரவிட மாட்டாங்க. வந்தா இப்படி நக்கலா கேள்வி கேட்கிறது
This is Mr. Avinash, who has an Instagram page called TheAvinashWay. He received a legal notice from “Dabur”.
Watch this video to know the reason.
Do you think he is right?
நேத்திலிருந்து சில துணை நடிகர்கள் செல்பி வீடியோ வெளியிட்டு நியாயம் கேட்கிறார்கள்..
திமுக ஏன் தவெகவை ஆட்சியமைக்க அனுமதிக்கக்கூடாது என கண்ணீர் விடுகிறார்கள்..
ஒரு சான்ஸ் குடுத்து தான் பாருங்களேன் யா என ஆவேசமடைகிறார்கள்..
நான் யோசித்துப் பார்க்கிறேன். இவர்களில் ஒருவராவது ஏதாவதொரு மக்கள் பிரச்சினைக்கு கருத்து சொல்லி இருக்கிறார்களா?
நீட் தேர்வு பற்றி
ச���லிண்டர் விலை ஏற்றம் பற்றி
பெட்ரோல் விலை பற்றி
மும்மொழி கொள்கை பற்றி தெரியுமா
எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்ததா என பார்த்தார்களா
இவ்வளவு ஏன்..
அவர்கள் தெருவில் ஏன் குடிநீர் விநியோகம் இல்லையென்றோ சாலை வசதி பற்றியாவது பேசி இருப்பார்களா என்பது சந்தேகம் தான்...
பின் இப்போது மட்டும் ஏன் உணர்ச்சி பொங்க ஆக்ரோசமாக அழுது வீடியோ போடுகிறார்கள்..
செல்போன் கேமரா என்றாலும் அதுவும் கேமரா த��னே என அறம்பாடி நடிக்க என்ன காரணம்?
தங்களது அடுத்த அடுத்த பட வாய்ப்புகளுக்காகவோ
அல்லது
தங்களுக்காக ரூட்ஸ் செய்யும் லாபிகளுக்காகவோ இருக்கலாம்
மக்களுக்காக ஒரு நாளும் வாய் திறக்காதவர்கள், சினிமாவில் புரட்சி ஏற்பட மக்கள் பொங்கி எழுவது போன்ற காட்சி அமைப்பாக கற்பனை செய்து கொண்டு தங்களது அசாத்திய நடிப்பை இங்கும் அரங்கேற்றுகிறார்கள்.
இது நிதர்சன உலகம், மக்களின் வாழ்வு கொஞ்சம் மேக்கப் கலைத்து நிகழ்காலத்திற்கு இறங்கி வாருங்கள்..
��ருந்த இடத்தில் ஓய்வெடுத்துக் கொண்டே சி.எம் ஆக வேண்டுமென நீங்கள் உணர்ச்சி வசப்படும் போது, ஊர் ஊராக பிரச்சாரம் சென்று உழைத்த கட்சிக்காரர்கள் தங்கள் கட்சி தான் ஆட்சி அமைக்க வேண்டும் என விரும்ப மாட்டார்களா?
விட்டுக் கொடுக்க இது என்ன துணை நடிகருக்கான பட வாய்ப்பா?
யாராவது புது நடிகருக்காக உங்களுக்கு வரும் வாய்ப்பை விட்டுக் கொடுத்து.. ஒரு தடவ வாய்ப்பு கொடுப்போம் எப்டி நடிக்கான்னு தான் பாப்போமே என விடுவீர்களா?
கடுப்பை கிளப்பாமல், சினிமாவில் மட்டும் நடியுங்கள்.
ராஜலக்ஷ்மி நாராயணசாமி
எழுத்தாளர்.
திமுக தோல்விக்கான முக்கிய காரணங்கள்
1. பேனா நிறுவனத்தை பெரிய ஐபேக் நிறுவனம்னு நம்பியது
(ஏன் பெரிய ஜான் ஆரோக்கியசாமி என்று )
2. மோடி மாதிரி விளம்பர அரசியல் பண்ணால் த��ிழ்நாட்டு மக்கள் ஓட்டு போட்ருவாங்கன்னு நம்பியது
(தென்னாட்டு சூரியனேன்னு பில்ட் அப் சாங் வைக்காமல் 1967ல் இருந்து திமுக செய்த நன்மைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கலாம்)
3. யாராவது விமர்சனம் பண்ணால், சங்கின்னு முத்திரை குத்தி தப்பிச்சரலாம்னு நம்பியது
4. பத்து தோல்வி பழனிசாமியை எதிரியா காமிச்சா போதும்னு நம்பியது
5. கரூர் சம்பவத்தில் விஜய் மீது பழிபோட்டு அவரை குற்றவாளி ஆக்க��� கெட்ட பெயரை உண்டாக்கலாம்னு நினைத்தது
(ஆனால் அது பேக் பயர் ஆயிடுச்சு)
6. கண்ணுக்கு எட்டும் தூரம் எதிரியே இல்லைன்னு திமிரா இருந்தது
(செந்தில் பாலாஜி, சேகர் பாபு ஆட்டம்லாம் )
7. கடைசி நேரத்தில் பணம் கொடுத்தால் அதை வாங்கிட்டு ஓட்டு போட்ருவாங்குன்னு நம்பியது
8. கூட்டணி கட்சிகளை நடத்திய விதத்தில், கூட்டணி கட்சிகள் களத்தில் சரியாக களமாடவில்லை
9. அரசின் மீது இருந்த தவறுகளை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர்களையும், பேனா நிறுவனம் வாடகை வாயர்களை வச்சு வசைபாடியது
10. தவெகவை ஆதரித்த நபர்களை தற்குறின்னு முத்திரை குத்தியது
(இன்னும் இவனுங்களை இறங்கி அடிக்கனும்னு எங்களுக்கு தோன்ற வைத்தது)
11. பிஜேபி பூச்சாண்டி காட்டி, சிறுபான்மை மக்கள் ஓட்டுகளை மொத்தமா அள்ளிரலாம்னு தப்பு கணக்கு போட்டது
12. சட்டம் ஒழுங்கு, போதை மற்றும் பெண்கள் பாதுகாப்பை கோட்டை விட்டது
13. எதிர்ப்பு இருக்குன்னு திமுக தலைமைக்கு கொண்டு போகாமல் பார்த்துக் கொண்டது
(உளவுத்துறை, காவல்துறையை ஸ்டாலின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தவறியது)
14. பிடிஆர் பதவியை பறித்தது
(அதுக்குப் பிறகும் அடக்கி வாசித்ததால் இப்ப அவர் தோல்வி)
15. இளைஞர்கள் & நகர்ப்புற வாக்காளர்களிடம் இருந்த Disconnect
வயதான தலைமை, பழைய ஸ்டைல் கேம்பெயின். Vijay-யின் சினிமா ஃபேன் பேஸ் + சோஷியல் மீடியா/ரீல் கல்ச்சர் மூலம் இளைஞர்கள் மொத்தமா தவெகவுக்கு போனார்கள்.
16. அமைச்சர்கள் & உறவினர்கள் மீதான ஊழ��் & நெபோடிஸம்
( கிளை முதல் தலை வரை 50 சதவீதம் இடஒதுக்கீடு எடுத்து கொண்டது)
Udhayanidhi Stalin-ஐ Deputy CM-ஆ உயர்த்தியது, family politics, செந்தில் பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகள் பெரிய எதிரொலியை ஏற்படுத்தின.
17. விலைவாசி உயர்வு & அன்றாட பிரச்சனைகள்
EB bill, tax, petrol, பால் விலை உள்ளிட்ட பொதுமக்களை நேரடியாக பாதித்த விஷயங்கள் பெரிய எதிர்ப்பை உருவாக்கின.
18. தவெகவை Under-estimate செய்தது + Overconfidence
"பேனா" நிறுவனத்தை சின்ன கட்சின்னு நினைத்து முழுமையாக எதிர்கொள்ள தவறியது. கரூர் சம்பவம் backfire ஆனது.
19. கூட்டணி & கட்சி உள்ளாட்சி பலவீனம்
கூட்டணி கட்சிகளை (Congress உட்பட) சரியாக நடத்தாதது + DMK உள்ளே factionalism. Stalin கூட Kolathur-ல் தோற்றார்.
20. Anti-incumbency wave + "Change" narrative
5 வருஷ ஆட்சிக்கு பிறகு வந்த இயல்பான எதிர்ப்பு அலை + Vijay-யின் charisma மற்றும் fresh face மக்களை கவர்ந்தது
இவ்வளவு தவறை உங்க மேல வச்சுகிட்டு எங்களை கடிச்சுட்டு இருக்கீங்க