வெற்றி பெற்ற கையோடு வாழ்த்து பெற வந்த அவரது அன்புத் தம்பியை கட்டியணைத்து வரவேற்று ஆரத்தழுவி “வையத்தலைமை கொள்” புத்தகத்தை பரிசாக கொடுத்தார். “யாருனா அவரு?”என்று முதல்வரிடம் கேட்டு அமைச்சர் தெரிந்து கொள்ளலாம்!
சீமான் அவர்களை மக்கள் கடந்து கூட போகலாம்..ஆனால், அவரது அரசியலை கடக்க முடியாது..
அது சரி! அமைச்சராகும் முன்பு பாலாஜியாகிய தாங்கள் யாராக இருந்தீர்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன் !
ஸ்ரீபெரும்புதூர் அருகே பாம்பு கடித்து மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நபருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியதால் உயிரிழந்த சோகம்.. மருத்துவர்களுடன் உறவினர்கள் வாக்குவாதம்
Kanchipuram News | Doctors | Teatment
#Newstamil24x7#GovernmentHospital
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் இங்கே ஒரு உயிர் போயிருக்கிறது
சம்பந்தபட்ட மருத்துவமனை சுகாதாரத்துறை அமைச்சர் ரோகிணி திரையரங்கில் ஜனநாயகன் முதற் காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார் .
வாழ்க ஜனநாயகம் .
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை விசாரிப்பது மட்டுமல்ல; இம்முறைகேடான நீட் தேர்வு முறையையே முற்றாக நீக்க வேண்டும்.
நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் எதிராக டெல்லியில் நடைபெற்ற இளைஞர் கூட்டத்தினுடைய மாபெரும் போராட்டத்தின் நீட்சியாக, வடமாநிலங்களில் போராட்டம் பற்றிப் படர்கையில், தமிழ்நாட்டிலும் மாணவர்களும், இளைஞர்களும் வீதியில் இறங்கிப் போராட முனையும்போது, அதனைக் காவல்துறையினர் மூலம் ஒடுக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறிவிட்டு, அத்தேர்வுக்கு எதிராக இளைய தலைமுறையினரின் தன்னெழுச்சியான போராட்டத்தை அடக்கி ஒடுக்க முயலும் மாநில அரசின் போக்கு சனநாயகத்துரோகமாகும்.
திரையில், ‘ஜனநாயகன்’ எனப் பெயர் சூட்டிக் கொள்ளும் முதல்வர் விஜய், தரையில் மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறையின் மூலம் அரச வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, சனநாயகத்தைப் பச்சைப்படுகொலை செய்யலாமா? திரைப்படத்தில் மட்டும்தான் ஜனநாயகனா? வடநாட்டு இளைஞர்கள் டெல்லி வீதிகளில் கல்வியுரிமைக்காகக் களத்தில் நிற்கையில், தமிழ்நாட்டு இளைஞர்களைத் திரையரங்க வாசலில் நிறுத்தி இருப்பதெல்லாம் ஏற்கவே முடியாத பெருங்கொடுமை. ஒருபக்கம், டெல்லியில் நடைபெறும் இளைஞர்களின் போராட்டம் மீதான பாஜக அரசின் அடக்குமுறையைக் கண்டிப்பதாகக் கூறிக் கொண்டு, தமிழ்நாட்டில் நடைபெறும் நீட் தேர்வுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டங்களை தவெக அரசு ஒடுக்க நினைப்பது இரட்டை வேடமில்லையா? பாஜகவைக் கொள்கை எதிரியெனக் கூறிவிட்டு, பாஜகவுக்காக தவெக அரசு செய்யும் மறைமுகச் சேவகமில்லையா இது? கேலிக்கூத்து!
வடமாநிலங்களில் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்துப் போராடுகையில், தமிழ்நாட்டில் மட்டும்தான் நீட் தேர்வு முறையே ஒரு முறைகேடு என்பதை வலியுறுத்திப் போராட்டங்கள் நடக்கின்றன. ஏற்கனவே, இருந்த முறையைவிட நீட் தேர்வின் மூலம்தான் தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும் எனக் கூறிக் கொண்டு வரப்பட்ட முறையிலேயே இவ்வளவு முறைகேடுகள், குழப்பங்கள், குளறுபடிகள் என்றால், இந்தத் தேர்வு முறை எதற்கு? இதே நீட் தேர்வு முறையில் கடந்த காலங்களில் முறைகேடு ஏற்பட்டிருக்காது என்பதற்கு என்ன உறுதிப்பாடு இருக்கிறது? ஆகவே, நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை விசாரிப்பது மட்டுமல்ல; இம்முறைகேடான நீட் தேர்வு முறையையே முற்றாக நீக்குவது என்பதே இந்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பைத் தற்காப்பதற்கான பெருவாய்ப்பாகும். ஒரே மாதிரியான கற்றல் வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாத நாட்டில் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு என்பதே அசமத்துவமானது. ஆகவே, சமத்துவத்துக்கு எதிரான நீட் தேர்வு முறையை நாம் தமிழர் கட்சி வலிமையாக எதிர்க்கிறது.
நீட் தேர்வை எதிர்த்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் போராட்டங்களை முன்னெடுக்கிறபோது அவைகள் அடையாளப் போராட்டங்கள் என்றளவில்தான் கருதப்படும். அதேசமயம், மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் வீதிக்கு வந்து போராடுகிறபோது, அது சனநாயகப்புரட்சியாக வெடித்து, ஆளும் வர்க்கத்தை அடிபணியச்செய்து, கோரிக்கை முழக்கத்தை நிறைவேறச் செய்யும். அதனை நோக்கிய இளையோர் கூட்டத்தின் அறப்போராட்டத்தை முழுமையாக ஆதரித்து, வரவேற்கிறேன்.
தமிழ்நாட்டில் நடைபெறும்
இளையோர் கூட்டத்தின் அறப்போராட்டம் வெல்லட்டும்!
நீட் எனும் நுழைவுத்தேர்வு முறை முழுமையாக நீக்கப்படட்டும்!
அநீதிக்கு எதிராகப் போர்க்குணத்தோடு களத்தில் நின்றுப் போராடும் என்னுடைய தம்பி, தங்கைகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகரமான வாழ்த்துகளும், அன்பும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
சீமான் எம்பி யும் அல்ல எம்எல்ஏ வும் அல்ல
சீமான் ஓர் அரசியல் கட்சி தலைவர்
தமிழ் நாட்டில் சீமான் படத்தை காண்பித்தலே இவர் தான் சீமான் என்று 90% பேர் சொல்வார்கள்
ஆனால் நீ அமைச்சர் என்பதே நீ சொல்லி தான் எங்களுக்கு தெரியுது
அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
நான் கல்லூரி முடித்த காலம் முதல் அறிவேன் “சீமான் ஏதாவது எங்கேயாவது போராட்டம் மேடைகள் என பேசி வருவது”. பின்னாளில் ஈழத்து போர் காலத்தில் தமிழகத்தில் பல கல்லூரிகளை இணைத்து போராட்டங்களை கட்டமைத்து கொண்டிருந்தார் என நியாபகம். ஒரு முறை நான் அண்ணா காசரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தை 20 நாட்கள் மேலாக மதுரையில் முன்னின்று நடத்தி கொண்டி இருந்த போது - ஒரு சிறுவன் பள்ளி சிறுவன் வந்து “அண்ணே 7 பேர் விடுதலைக்கு சீமான் அண்ணே செய்கிறார் - நீங்களும் மதுரையில் உங்கள் குழுவோடு இணைந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும்” என்று. இப்படி அப்போதே பள்ளி மாணவர்களுக்கு கூட தெரியும் சீமான் யார் என. நீ என்ன பண்ணிடு இருந்த ? “தொட்ட பெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்” என வாயை போலந்து சினிமா கவர்ச்சி பாடல் பாடிட்டு திறந்திருப்ப. உனக்கு எப்படி அவரை தெரியும்.
சித்தாந்தம் சண்டைகள் உண்டு கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் அவர் களத்தில் யார் என கேட்கும் தகுதி எவனுக்கும் இல்லை. முதலில் பிளாக் டிக்கெட் விற்றுக் கொண்டு திரிந்து - திடீரென்று அதிஷ்டத்தில் அதிகாரத்தில் கோட்டைக்கு போனவனுகளுக்கு இல்லையே இல்லை.
நாடு மக்கள் பொருளாதாரம் சித்ததம் என எந்த அறிவும் இல்லாமல் சினிமா தியாட்டர் பக்கம் திரிந்தவனை எல்லாம் மினிஸ்டர் ஆக்கினால் “யார் அவர்” என கேட்க தானே செய்வீர்.. எல்லாம் இந்த மக்களை சொல்லனும்..
தூய சக்தியை வெளுத்துவிட்ட சகாயம் IAS.
தூய சக்தின்னு சொல்லிகிட்டு ஊழல்வாதிகளை கட்சியில் சேர்கிறார் விஜய் 😂
ஆரம்பத்துல இவர திருச்சி கிழக்குல நிறுத்துறதா வேற சொன்னானுக 😂
#TVKVijayFails
நாடறியப்பட்ட ஊடகவியலாளர் விஜயனை வழக்கு விசாரணை எனும் பெயரில் அச்சுறுத்துவதா? அலைபேசியைப் பிடுங்கிக் கொண்டு, அலைக்கழிப்பு செய்து, மிக மோசமாக நடத்துவதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அரசியல் விவாதங்களையும், நேர்காணல்களையும் திறம்பட நடத்தி, நெறியாளுகை செய்து வரும் ஊடகவியலாளர் அன்பிற்கினிய தம்பி விஜயன் அவர்களை விசாரணை எனும் பெயரில் தவெக அரசின் காவல்துறை அழைக்கழிப்பு செய்வதும், அச்சுறுத்துவதுமான போக்கு அதிர்ச்சியளிக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்டவரை நேர்காணல் செய்தாரென்பதற்காகவே தம்பி விஜயனைக் காவல்நிலையத்துக்கு அழைத்து மிக மோசமாக நடத்துவதும், அவரது அலைபேசியைக் பிடுங்கி வைத்துக் கொள்வதும், கண்ணியக்குறைவாக நடத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.
நாடறியப்பட்ட ஊடகவியலாளரான தம்பி விஜயன் மீது விசாரணை எனும் பெயரில் தொடுக்கப்பட்டிருக்கும் ஒடுக்குமுறை மற்ற ஊடகவியலாளர்களுக்கும், அரசியல் விமர்சகர்களுக்கும் விடுக்கப்பட்டிருக்கும் வெளிப்படையான மிரட்டல். 60 நாட்களிலேயே தவெக அரசின் நிர்வாகச்சீர்கேடு வெட்ட வெளிச்சமாகி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் வேளையில், அதனைப் பேசுபொருளாக மாற்றும் ஊடகவியலாளர்கள் யாவரும் குறிவைக்கப்படுவதும், அரசின் கம்பிவடத் தொலைக்காட்சியிலிருந்து காட்சி ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதுமானப் போக்குகள் கருத்துரிமையின் மீது தொடுக்கப்படும் கோரத்தாக்குதலாகும்.
திமுக, அதிமுக ஆட்சிகளுக்கு தனது ஆட்சி மாற்றென நாளும் அடையாளப்படுத்திக் கொள்ளும் முதல்வர் விஜய் அவர்கள், இதுவரை இல்லாத அளவுக்கு தொலைக்காட்சியின் நெறியாளரையே குறிவைத்து ஒடுக்குவதெல்லாம் தமிழ்நாடு இதுவரை பார்த்திராத பேரவலம்! பெருந்தலைவர் காமராசர், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா போன்ற ஆளுமைமிக்கப் பெருந்தலைவர்களின் பெயர்களையெல்லாம் கூறிக்கொண்டு, ஆட்சி நிர்வாகத்தின் மீதான விமர்சனத்தை ஏற்கும் மனப்பக்குவமும், சகிப்புத்தன்மையும் இன்றி, காட்டாட்சியை ஏவிவிடுவது பாசிச வெறியாட்டமாகும். தவெக அரசின் இந்தக் கொடுங்கோல் போக்கை உடனடியாக மாற்றிக் கொள்ளாவிடில், சனநாயக ஆற்றல்கள் மூலம் மிகப்பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.
ஆகவே, தம்பி விஜயன் அவர்களுக்கு காவல்துறையின் மூலம் விசாரணை எனும் பெயரில் எவ்வித நெருக்கடியும் தராது, உடனடியாக அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
சேலம், ஒதியத்தூரில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் திறப்பதற்கு எழுந்திருக்கும் சிக்கலைக்கூட தீர்க்க இயலாது, திராணியற்றுப் போய்விட்டதா தவெக அரசு? இதுதான் கொள்கைத் தலைவர் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றா?
@CMOTamilnadu@TVKVijayHQ
சேலம் மாவட்டம், கெங்கவல்லிக்கு அருகேயிருக்கும் ஒதியத்தூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலையைத் திறப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே எழுந்திருக்கும் பதற்றச்சூழலும், மோதல்போக்கும் வேதனை அளிக்கிறது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கால் மேல் கால் போட்டு இருப்பதாய் வடிவமைக்கப்பட்டு இருப்பதாலேயே அச்சிலையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவிப்பது அறிவிலித்தனத்தின் உச்சமாகும். தமிழ்ப்பேரினம் எண்ணற்ற சிக்கல்களையும், உரிமை இழப்புகளையும், வளச்சுரண்டலையும், அடையாள அழிப்பையும், வரலாற்றுத் திரிபையும் நாள்தோறும் எதிர்கொண்டு வரும் தற்காலச்சூழலிலும், ஒன்றுபட்டு ஓரினமாய் நிற்காது, சாதியின் பெயரால் பிளவுப்பட்டு நிற்பதும், தன்னினப்பகை கொண்டு வீழ்வதும் சமகாலத்தில் நிகழும் பேரவலமாகும்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒரு சாதிக்கானவர் இல்லை; ஒட்டுமொத்தச் சமூகத்துக்குமானவர்; அறிவாசான் அம்பேத்கர் அவர்கள் உலகம் பார்த்து வியந்த மாபெரும் கல்வியாளர்; சமூக விடுதலைக்காகப் பாடுபட்ட ஒப்பற்றப் புரட்சியாளர். அவரை ஒடுக்குமுறைக்கு எதிரானப் பொதுக்குறியீடாகவும், அறிவுலக மாமேதைகளில் உச்சம் தொட்டப் பேராசானாகவுமே பார்க்க வேண்டும். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பட்டியல் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு மட்டுமாகப் போராடவில்லை. ஒட்டுமொத்த மக்களுக்குமாகத்தான் பாடுபட்டார். இடைநிலைச்சமூகங்களுக்கென வகுப்புவாரிப்பிரதிநிதித்துவப் பங்கீட்டில் இருக்கும், ‘இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினர்’ எனும் வகைப்பாட்டை உருவாக்கித் தந்தது அம்பேத்கர்தான். சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தபோது, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்கென ஆணையம் அமைக்க வில்லை என்பதைப் பதவி விலகலுக்கானக் காரணங்களில் ஒன்றாகக் குறிப்பட்டவரும் அம்பேத்கர்தான். வெள்ளைய ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட சமூகங்களைக் குற்றப்பரம்பரையினர் என அடையாளப்படுத்தி, அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் அம்பேத்கரும் முதன்மையானவர். இதுமட்டுமல்லாது, தொழிலாளர்களுக்கு எட்டுமணி நேரம்தான் வேலை எனச் சட்டம் கொண்டு வந்தவரும், மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை எனச் சட்டமியற்றியவரும் அம்பேத்கர்தான். அவர் ஆதிக்குடிகளுக்காக மட்டும் போராடவில்லை; பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், பழங்குடிகள், விளிம்புநிலை மக்கள், பெண்கள் என சமூகத்தின் அத்தனைத் தரப்பினரின் நலன்களுக்காகவும் தனது வாழ்நாள் முழுமைக்கும் பாடுபட்டப் பெருந்தகை அண்ணல் அம்பேத்கர் ஆவார். எந்த மக்களுக்காக அவர் பாடுபட்டாரோ, அந்த மக்களில் ஒரு பகுதியினரே அவரைத் தவறாகப் புரிந்துகொண்டு, அவருக்கு எதிராக வரிந்துகட்டிக் கொண்டு இன்றைக்கு நிற்பதெல்லாம் வரலாற்றுத்துயரமாகும்.
2021ஆம் ஆண்டு ஓதியத்தூர் பகுதியில் அமைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை 5 ஆண்டுகளாகத் திறக்கப்படாது கிடப்பில் போடப்பட்டது வெட்கக்கேடானது. சமூக நீதியென்று வாய்கிழியப் பேசும் திமுகவின் ஆட்சியில் அம்பேத்கரின் சிலையைத் திறக்கக்கூட வழிசெய்யாது வாக்கரசியலுக்காக சமரசம் செய்துகொண்டது மோசடித்தனமாகும். அண்ணல் அம்பேத்கர் அவர்களைக் கொள்கைத் தலைவரெனக் கூறிக் கொள்ளும் முதல்வர் விஜய் அவர்கள் தலைமையிலான தவெகவின் ஆட்சியிலும், அச்சிலையை முறையாகத் திறக்கவும், சமூகப் பதற்றத்தைத் தணிக்கவும் நடவடிக்கைகளை எடுக்காது, சிக்கலை மேலும் பெரிதாக்குவது கடும் கண்டனத்திற்குரியது. சாதியவாதத்தாலும், புரிதலின்மையாலும் எழுந்திருக்கும் இச்சிக்கலைக்கூட தீர்க்க இயலாது திராணியற்றுப் போய்விட்டதா தவெக அரசு? இதுதான் கொள்கைத் தலைவர் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றா? கேலிக்கூத்து!
ஆகவே, சேலம் மாவட்டம், ஒதியத்தூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலையைத் திறக்க வேண்டுமெனவும், தேவையற்ற சமூகப்பதற்றமும், மோதலும் ஏற்படுவதை முற்றாகத் தடுத்து, ஓர்மையும், நல்லிணக்கமும் நிலவுவதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் தவெக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாlஏர் வீரா ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் பெறும் வீடியோ …
ப்ளாக்ல டிக்கெட் வித்தவன் சும்மா இருப்பானா கைவரிசைய காட்ட ஆரம்பிச்சுட்டானுக
தவெக தற்குறிகள்
இவன் தான் ஊழலை ஒழிக்கவந்த தூயசக்தி.
பொலிவியா, அர்ஜென்டினாவில் நீர்வளத்தைச் சூறையாடி, அம்மக்களின் போராட்டத்தால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தைத் தாரைவார்ப்பதா?
சேலம் மாநகராட்சியின் குடிநீர் வியோகத்தை 25 ஆண்டுகளுக்கு சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்த்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அர்ஜென்டினா மற்றும் பொலிவியா நாடுகளுக்குள் குடிநீர் விநியோகம் செய்வதாய் உள்நுழைந்து, தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, அம்மண்ணின் நீர்வளத்தைச் சூறையாடி, அந்நாட்டு மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு, சேலம் மாநகரத்தின் நீர் விநியோகத்தை வழங்கியிருக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; அது புல், பூண்டு, பூச்சி, ஆடு, மாடு, கரடி, மான், புலி, சிங்கம் என உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்குமான உயிருடைமை. அதனை மனிதர்களுக்கு மட்டுமானதாக்கி, விற்பனைப்பண்டமாக மாற்றி, சந்தைப்படுத்திப் பொருளீட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நீரை விற்பனை செய்யும் மானுடகுலத்தின் செயல் உலக உயிர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். புட்டிகளிலும், போத்தல்களிலும் அடைக்கப்பட்டுள்ள நீரை மனிதர்கள் விலைகொடுத்து வாங்கிப் பருகிவிட முடியும். காக்கையும், குருவியும், மைனாவும், சிட்டும் தனது தாகத்திற்கு என்ன செய்யும்? எனும் கேள்வியை உளச்சான்றோடு ஒவ்வொரு குடிமகனும் எழுப்ப வேண்டும். தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதும், குடிநீரை சந்தைப்பொருள் ஆக்குவதும் ஏற்கவே முடியாத சனநாயகத் துரோகம். வரிசெலுத்தி, வாக்குச் செலுத்தி ஓர் அரசை நிர்மாணிக்கும் குடிமக்களுக்கு தூய குடிநீரைத் தங்குதடையின்றித் தர வேண்டியது ஒரு அரசின் தலையாயப் பொறுப்பும், முதன்மைக் கடமையுமாகும்.
கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டு, அதற்கெதிராகப் பரப்புரையும், போராட்டமும் செய்து வரும் நிலையில், தற்போது சேலம் மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அதே சூயஸ் நிறுவனத்திடம் தவெக அரசு கையளித்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் அவர்கள் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்குத் தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்? பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தால் குடிநீர் விநியோகத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும்; இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசு இயந்திரத்தால் செய்ய முடியாதா? பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் இலாபத் தேவைக்குத்தான் வேலைசெய்வார்களே ஒழிய, மக்கள் சேவைக்கு ஒருநாளும் வேலை செய்ய மாட்டார்கள் எனும் அடிப்படைப் புரியாதா? நீர்வளத்தையும், நீராதாரங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கையளித்தால், நீர் இறையாண்மை முழுக்க முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். அவர்கள் சொல்கிற விலைக்குக் குடிநீரை மக்கள் வாங்க வேண்டியப் பேராபத்துமிக்க சூழல் நாளை உருவாகும். இது வருங்காலத் தலைமுறையின் நலவாழ்வினைப் பன்னாட்டு நிறுவனத்திடம் அடமானம் வைக்கும் பேரபாயம். அர்ஜென்டினாவிலும், பொலிவியாவிலும் சூயஸ் நிறுவனம் செய்த மானுடகுலக் கொடுமைகள் வரலாறாக விரிகையில், கண்முன்னே சாட்சியாக இருக்கையில், அந்நிறுவனத்திடமே சேலம் மாநகரத்தின் நீர்விநியோகத்தை வழங்குவது மக்கள் விரோதப்போக்கின் உச்சமாகும்.
ஆகவே, சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, மாநில அரசே தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#Suez #Salem #Seeman #water #EngalDesamOfficial #TVK