This 2-year-old's family couldn't afford his $20,000 electric wheelchair, and their insurance didn't cover it.
So, a high school robotics team built him one for free.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் என் மாமியாரின் தங்கை 16 வயது முதல் 6 வயது வரை உள்ள தன் 5 ஆண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அக்கா வீட்டுக்கு அழுது கொண்டே வந்தார் வந்தார்
நாங்கள் எல்லாம் என்ன என்று விசாரித்த போது
என் கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் அவளுக்கும் சூதாட்டத்திலும் லாட்டரி சீட்டிலும் அழிக்கிறார்
நாங்கள் வயிறு நிறைய சாப்பிட்டு மாதக்கணக்கில் ஆகிவிட்டது ஸ்கூல் உணவில் தான் என் பிள்ளைகள் உயிர் வாழ்கிறார்கள் இனி அவனோடு என்னால் வாழ முடியாது என்று கண் கலங்கினார்
என் மாமியார் என்னிடம்
குறைந்த முதலீட்டில் என் தங்கைக்கு தினமும் 300 ரூபாய் வருமானம் வருவது போல் ஏதாவது ஒரு தொழில் ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டார்
நான் என்னுடைய கடையின் ஒரு பகுதியில் அவருக்கு லாட்டரி சீட்டு கடை வைத்து கொடுத்தேன்
கடை வைத்த ஒரே வாரத்தில் பஞ்சாப் சுபலட்சுமி லாட்டரி சீட்டில் முதல் பரிசு ஒரு லட்ச ரூபாய் விற்காத சீட்டுக்கு விழுந்தது
அதன் பிறகு அவர்களின் வாழ்க்கை தரமே மாறிவிட்டது
இதை அறிந்ததும் என் சின்ன மாமனார் மனைவி மகன்களை தேடி வந்தார்
என் சின்ன மாமியாரும் கணவனை மன்னித்து ஏற்றுக் கொண்டார்
2003 ஆம் ஆண்டு ஜெயலலிதா லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதித்தார்
அதன் பிறகு அவர்கள் தேங்காய் மொத்த வியாபாரம் செய்ய ஆரம்பித்து நல்ல நிலைக்கு போய் விட்டார்கள்
இன்று அந்த என் 5 மச்சான்களில் ஒருவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் இளநிலை பொறியாளராக இருக்கிறார்
ஒரு மச்சான் சவுதி அரேபியாவில் சாப்ட்வேர் இன்ஜினியர்
இன்னொரு மச்சான் துபாயில் ஃப்ரூட் கடை வைத்திருக்கிறார்
ஒரு மச்சான் பைக் சீட் கவர் மொத்த வியாபாரம்
இன்னொரு மச்சான் சொந்தமாக இரண்டு ஆட்டோ வைத்திருக்கிறார்.
Jambo stood guard over the boy, positioned himself between him and the other gorillas, and gently stroked his back until keepers and paramedics could safely rescue the child.
என்ன ஒரு எனர்ஜி 😯🔥
சிறு வயதில் நண்பர்களுடன் ரசித்ததை.. இந்த சீனியர்கள் எவ்வளவு பிரச்சனைகளை கடந்து இருந்த போதும்.. பயணத்தில் இவ்வளவு ரசிகரமான செயல்களை செய்து ஆறுதலை தேடுகின்றனர் தங்களும் மகிழ்ந்து கூட இருப்பவர்களை மகிழ்விக்கின்றனர்🤩🤩
ரசனை வாழ்க 🤩💥🎶🎶🎵
#travel
நாக சைதன்யா சமந்தா நடித்த மஜிலி என்கிற தெலுங்கு திரைப்படம். அதில் நாக சைதன்யா ஒரு கிரிக்கெட் வீரர். வாழ்க்கையில் பல சம்பவங்களுக்குப் பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு அவருடைய கோச்சை மீட் செய்வார்.
அப்போது அந்த கோச் சொல்வார், முதல் மேட்ச் எங்க டீமுக்கு நீ ஆடுனப்ப எக்ஸ்ட்ரா கவரில் ஒரு சிக்ஸ் அடிச்சியே. அதை இன்னும் என்னால மறக்க முடியல என்பார்.
யோசித்துப் பார்த்தால் எல்லோருக்குமே வாழ்க்கையில் ஒவ்வொரு peak சம்பவம் இருக்கும். அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு அவரை அறிந்தவர்களுக்கு அந்த சம்பவத்தின் மூலம்தான் அவர் மீண்டும் மீண்டும் அறியப்படுவார்.
பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மார்க் வாங்கியவனை, அந்த செட்டில் எல்லோருமே ஞாபகம் வைத்திருப்பார்கள். அவர் பின்னாளில் ஐஏஎஸ் ஆனாலும் சரி, சாதாரண நிறுவனத்தில் வேலை பார்த்தாலும் சரி அந்த செட்டில் உள்ள எல்லோருக்குமே அவன் ஸ்கூல் ஃபர்ஸ்ட். அவ்வளவுதான். எத்தனை ஆண்டு காலமானாலும் சரி. அந்த செட்டில் உள்ளவர்கள் பேரன்பேத்தி எடுத்துவிட்டாலும் சரி, அவன் ஸ்கூல் ஃபர்ஸ்ட் என்கிற அடையாளத்துடனே நினைக்கப்படுவான்.
அதுபோல சசிகுமாரின் peak சம்பவம் சுப்ரமணியபுரம். 1980 என்கிற கார்டு வந்தவுடன், கஞ்சா கருப்பு எண்பதின் மதுரை வீதிகளில் நடக்கத் துவங்குவார். அவர் நடக்கவில்லை நம்மை கைப்பிடித்து அந்த களத்திற்குள் இழுத்துச் சென்று விடுவார். அதன் பிறகு நடந்ததெல்லாம் ஒரு மாயாஜாலம். எத்தனை உயிர்ப்பான கேரக்டர்கள். சசிகுமாரின் நண்பர்கள் சித்தன் சவுண்ட் சர்வீஸ் மொக்கச்சாமி சமுத்திரக்கனியின் அண்ணன்கள், தோட்டம் கொண்ட ராசாவே, சிறு பொன்மணி அசையும் பாடல்களை பிளேஸ் செய்த விதம்.
இந்த மண்ணு மணக்குற கண்கள் இரண்டால் பாடல்கள் என.
படத்தின் முதல் பாதி முடிந்து வெளியே வந்ததும் தியேட்டர் கேண்டினில் கண்கள் கோன் ஐஸ் மெஷினையும், டீ கேன் முறுக்கு கடலை மிட்டாய் உள்ள ஸ்டாலையும் தேடின. ஆனால் அது 2008. நாம் 1980ல் இல்லை 1980 காலகட்ட படத்தை பார்த்திருக்கிறோம் என்று உணர ஒரு கணம் ஆனது.
இரண்டாம் பகுதியில் அப்படி ஒரு டென்ஷன்.
சுப்பிரமணியபுரத்தை துரோகத்தின் காவியம் என்று சொல்லலாம்.
படம் முழுவதும் எத்தனை எத்தனை துரோகங்கள்.
முழுக்க முழுக்க நம்பியவர்களும் காதலித்தவர்களுமே துரோகம் செய்கிறார்கள்.
படத்தின் திருப்புமுனையாக ஒரு சீன் வரும். அதுதான் படத்தின் அத்தனை துரோகங்களையும் தாங்கி நிற்பது. தன்னுடைய பதவி போய்விட்டது என்றவுடன் அவர் சத்தம் போடும் பொழுது அவர் மனைவி வெளி கோபத்தை ஏன் வீட்டில் காட்டுகிறீர்கள். அதுதான் பதவி போயிருச்சு ஏன் கத்துகிறீர்கள் என்பார்.
அந்த ஒரு சொல் அடுத்து நடக்கும் அத்தனை சம்பவங்களுக்கும் துரோகங்களுக்கும் கொலைகளுக்கும் காரணமாக இருக்கும்.
ஒரே ஒரு சொல் ஒருவரின் கோபம் எத்தனை சாம்ராஜ்யங்களையோ வீத்தி இருக்கிறது. அதுபோல ஒரு தெருவில் இருக்கும் பலரின் வாழ்க்கையையே புரட்டிப் போடுவது அந்த ஒரு கோபம்.
காதலி கடைக்கண் காட்டிவிட்டால் மண்ணின் மைந்தருக்கு மாமலையும் ஓர் கடுகாம் என்பது போல
இல்லத்தரசியின் ஒரு கோபம், ஒருவனுடைய சுயமரியாதையை சீண்டி விட்டு அவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமாகிறது. ஆனால் அதை இலகுவாக கடந்திருந்தால்....
சசிகுமாரின் மாஸ்டர் பீஸ். தமிழ் சினிமாவின் பாதையை மாற்றிய ஒரு திரைப்படம்.
எத்தனை சினிமாக்களை சசிகுமார் கொடுத்தாலும், அவர் சுப்பிரமணியபுரம் சசிகுமார் தான்.
வணக்கம் தோழர்களே 🙏. Msc. Nutrition and MBA business analytic படித்த fresher க்கு சென்னை அல்லது பெங்களூரு ஹைதராபாத் ல் வேலை கிடைக்குமா? விவரம் தந்து உதவ முடியுமா pls? நன்றி 🙏