ஓட்டமும் நடையுமாக போய்க்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில், மனம் இளைப்பாற ஒரு மரத்தடி நிழலில் உங்களின் நினைவுகளுடனே அமர்கிறேன்.
காலை இளஞ்சூரியனைப் போல மாறாத புன்சிரிப்புடன் எச்சூழலிலும் மலர்ந்திருக்கும் உங்கள் முகத்தை நினைத்துவிட்டு, மீண்டும் தொடங்குகிறேன் எனது பயணத்தை!
தலைவராக, ஆசானாக, தோழனாக என்றும் என்னுடன் பயணிக்கும் அப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்துகள்.
இது Misinterpretation மற்றும் Manipulated Dataக்களின் காலம். தங்களுக்கு ஏற்றது போல செய்திகளை திரிப்பதற்கே எல்லோரும் விரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான சூழலில், பேராசிரியர் காதர் மைதீன் பேசியது தவறான வரலாற்றுத் திரிபுகளுக்கு வழி வகுக்கும்.
60 ஆண்டுகால திமுக கூட்டணியை முறிக்கிறோம் என்று பேசி விட்டார். உடனே 2026-60 என்றால் 1966 அதனால் 1967லிருந்து நீடித்த கூட்டணியை முஸ்லிம் லீக் முறிக்கிறது என அவரவர்கள் ஒரு வரலாற்றை எழுதத் தொடங்கி விட்டார்கள்.
1967ல் அல்ல 1962 தேர்தலிலேயே திமுக- முஸ்லிம் லீக் கூட்டணி உருவாகி விட்டது. 1977, 1989, 1996, 2001 தேர்தல்களில் திமுக கூட்டணியில் லீக் இடம்பெறவில்லை. 1996 தேர்தலில் பெரியகுளத்தில் இரட்டை இலைச் சின்னத்திலும், 2001 தேர்தலில் திருச்சி 1 தொகுதியிலும் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டது பேராசிரியர் காதர் மைதீன் தான்.
பின்னர் 60 ஆண்டுகள் கூட்டணி என ஏன் அவர் சொன்னார் என்பதுதான் கேள்வியாக இருக்க வேண்டும். செய்தியை ரிப்போர்ட் செய்யுங்கள், அதை விடுத்து இது தான் வாய்ப்பு என நீங்கள் படிக்காத வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு தவறாக திணிக்காதீர்கள்.
2017ல் நண்பர்களின் வாட்ஸ் குரூப் ஒன்றில் பாஸ்கர் போட்ட மெசேஜிலிருந்துதான் இந்தக் கதை எனக்கு அறிமுகம்.
அம்மாவின் மறுமணம் பற்றி அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என பாஸ்கர் சொன்ன செய்தி அப்போது எனக்கு பெரிய Cultural Shock ஆக இருந்தது.
ஆண்களின் மறுமணம் தொடர்பாக பேசப்பட்ட அளவிற்கு நடுத்தர வயதுப் பெண்களின் மறுமணம் பேசப்படவில்லையோ என நான் கருதியதுண்டு. அப்படி ஒரு சமூகத்தில் ஜாதிய இறுக்கமும் ஆணாதிக்கமும் மிகுந்த பின்னணியில் இருந்து பாஸ்கர் செய்தது கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயம். அது நடந்ததற்கு செல்வி அம்மாவின் உறுதிப்பாடு பெரிய காரணம்.
43 வயதைக் கடந்த அம்மாவிற்கு மறுமணம் செய்து வைத்ததன் சவால்களை Right to Marry என்ற தலைப்பில் புத்தகமாக எழுதினான் பாஸ்கர். அதனை நூறு சாமிகள் என திரைவடிவமாக்கியிருக்கிறார் இயக்குநர் சசி.
பாஸ்கரை யாரிடமாவது அறிமுகப்படுத்தும் போது, அம்மாவின் மறுமணம் தொடர்பாகவும் சொல்லும் வழக்கம் உண்டு. அப்படி ஒரு முறை சொன்ன போது அதற்கு வந்த எதிர்வினை முக்கியமானது.
இரண்டு பசங்க இருந்தும் அவங்களால பாத்துக்க முடியாதுனு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்களா?
அம்மாவை நல்லா பாத்துக்கனும்னுதான் பாஸ்கரும், விவேக்கும் இந்த மறுமணத்தை முன்னெடுத்தார்கள் என்பதை இந்த சமூகம் உணர நாம் இன்னும் நிறைய உரையாட வேண்டியிருக்கிறது.
அதற்கு இயக்குநர் சசியின் திரை மொழி பெரிய அளவில் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
வாய்ப்பிருக்கும் அனைவரும் நூறு சாமி திரைப்படத்தை தவறாமல் திரையரங்கில் காணுங்கள். நான் சந்தித்த என் தலைமுறையின் மகத்தானவன் ஒருவனின் சமூக சாதனையின் சாட்சி அது.
சட்டப்பேரவை நேரடி ஒளிபரப்பு - கொடுத்த வாக்கை முதலமைச்சர் காப்பாற்றியுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் நேற்று பெருமிதம் தெரிவித்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தம்
#SunNews | #TNAssembly | #Live
Birthday greetings to Opposition Leader Thiru. @RahulGandhi. Wishing him good health and dedicated service to the nation.
எதிர்க்கட்சித் தலைவர் திரு. @RahulGandhi அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடனும், நாட்டிற்கு சேவையாற்றவும் வாழ்த்துகிறேன்.
வனத்துறை அமைச்சர் இரஞ்சித்குமார் "வாழ்முனி நாயக்கர்" அறக்கட்டளை நடத்துகிறார். அந்த அறக்கட்டளை நிதி மூலம் இந்த ஏற்பாடு.
அவருக்கு சீட் வழங்கி த.வெ.க.வில் சாதி ஒழிக்கப்பட்டது!
#movieabuser to #virtualabuser
திரைப்பட விமர்சகர் அரசை விமர்சிப்பவர்களை இழிவுபடுத்துகிறார்...
வெறும் வெறுப்பு அரசியல் செய்பவர்களிடம் வேறு என்ன வெளிப்படும்...
இதையேதான் கடந்த ஆட்சியில் சொன்னார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் பணி. அதன்வழியாகவே சாதிவாரி கணக்கெடுப்பு செய்ய முடியும். அதற்கே நீதிமன்றத்தில் சட்ட அங்கீகாரமும் கிடைக்கும் என விளக்கினார்கள்.
டேபிளை உடைத்து, சுவற்றில் கால் வைத்து பறந்த பறந்து சண்டையிட்ட தமிழ்க் குடிகள், இப்போது இந்த அறிவிப்பை எங்கு ஒளிந்து கொண்டு வரவேற்கிறார்கள் என தெரியவில்லை.
தமிழ்நாட்டிற்கென்று ஒரு தனித்தன்மை இருக்கிறது. இந்திய ஒன்றியங்களின் மற்ற மாநிலங்கள் எல்லாம் பிரதேசங்களாக இருக்கும் போது நாடு என்ற பின்னொட்டோடு ஒரு மாநிலம் இயங்கிக் கொண்டிருப்பது அந்தத் தனித்தன்மையினால்தான்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், என்ன மரபு பின்பற்றப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதானே தவிர ஒன்றிய அரசின் ஏஜெண்ட் அல்ல.
இரண்டு முறை தேசிய கீதம் பாடப்படுவதால் என்ன ஆகும் என்றெல்லாம் கேட்கலாம். மாநிலங்களின் தனித்தன்மையை, உரிமைகளைப் பாதுகாக்க தமிழ்நாடு முன்னெடுத்த போராட்டங்கள் அதிகம்.
எளிதாக கிடைக்காத உரிமைகளை எளிதாக விட்டுக் கொடுக்க தயாராகி விட்டார்கள். இதன் பிரச்னையை உணர வேண்டுமென்றால், இது ஒரு சரித்திர நிகழ்வு என ஆளுநர் உச்சிமுகர்ந்த செய்தியை படியுங்கள். புரிய வாய்ப்பிருக்கிறது.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மட்டும் பத்து சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
ஒவ்வொரு நாளும் இது போன்று தொடரும் கொடூர சம்பவங்கள் குறித்த செய்திகளைப் பார்க்கும் அளவிற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது. எப்போது இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது தவெக அரசு?
#WATCH | "TVK-னு மெடல் போட்டு திணிக்குறீங்க.. பள்ளிலயே விதை போடறீங்களா?"
சென்னை ஆயிரம் விளக்கில் அரசு நிகழ்ச்சிக்கான போட்டி என தெரிவித்து பள்ளி மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சான்றிதழ், விஜய் படம் பொறித்த மெடல் கொடுத்ததாக மாணவரின் பெற்றோர் பரபரப்பு புகார்.
பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
#SunNews | #TVK | #ThousandLights