சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்யவேண்டும்!!
மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்!
நேற்றைய சட்டமன்றக் கூட்டத்தின்போது இரங்கல் தீர்மானங்கள் வாசிப்பு, மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசின் தனி தீர்மானத்தின் மீதான விவாதங்கள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன.
ஆனால் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கவர்னர் உரையின் மீதான விவாதங்களுக்கு நேரலை தரப்படவில்லை. சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளும் உரிமை பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் இருக்கிறது. ஆகவே, இனிவரும் நாட்களில் சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. மேலும், நேரடி ஒளிபரப்பு குறித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி வருவதை நினைவு கூர்கிறோம்.
வெளிப்படைத் தன்மையோடு செயல்படவிரும்பும் தவெக அரசு இதனை உடனடியாகச் செயல்படுத்தும் என்று நம்புகிறோம்.
A.G.மெளரியா, I.P.S., (ஓய்வு)., @MouryaMNM
துணைத் தலைவர்,
மக்கள் நீதி மய்யம்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
உலகநாயகன் பத்மஸ்ரீ டாக்டர் கமலஹாசன் அவர்களின் திரையுலக பயணமும் அரசியல் பயணமும் சமூக அக்கறையான பயணமும் அனைவரும் அவரை ரசிக்கும்படியான ஒரு சூழலில் உள்ளது.
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தன்னிச்சையாக முனையும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அவர்கள் தனித்தீர்மானத்தைக் கொண்டு வந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது.
தமிழ்நாட்டின் நீர் உரிமையையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மேகதாது விவகாரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு அனைவரும் ஓரணியாக நின்று ஒருமித்த குரலாக ஒலித்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன்.
@maiamofficial@MaiamOfficialIT@MouryaMNM
#KamalHaasan #MakkalNeedhiMaiam
#CauveryWater #MekedatuDam #MaiamNews
யாரிடமும் ஒப்பிட முடியாத இடத்தில் இருக்கிறார் #Kamalhaasan
அவரோட சிம்மாசனத்தில் யாரும் உக்கார முடியாது
அவரால ஒரு சிப்பிக்குள் முத்து நடிக்க முடியும் சலங்கை ஒலி நடிக்க முடியும் படு கமர்ஷியல் ஆக ஒரு Sakkalakalavallavan நடிக்க முடியும்
@Anthanan_Offl ❤️
Happy Birthday, Rahul ji.
You’ve walked the length of India, carrying a message of love, secularism, and progress, reminding us that politics must connect, not divide.
Keep walking, keep listening.
@rahulgandhi
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தன்னிச்சையாக முனையும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் தனித்தீர்மானத்தைக் கொண்டு வந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது.
தமிழ்நாட்டின் நீர் உரிமையையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மேகதாது விவகாரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு அனைவரும் ஓரணியாக நின்று ஒருமித்த குரலாக ஒலித்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன்.
@CMOTamilnadu
ஆளுநர் உரை: எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்!
தங்கள் அரசின் அடிப்படைப் பணிகள் என்னவாகயிருக்கும் என்பதன் தொகுப்பாகத்தான் ஆளுநர் உரை அமைந்துள்ளது. உரையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்த அரசானது கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருதல், உச்சநீதிமன்றத்தின் அமர்வை சென்னையில் அமைத்தல், உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்குதல் போன்ற நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற முழுமூச்சுடன் பாடுபட வேண்டும். பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ‘‘தமிழ்நாடு முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம்’’ என்ற முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது.
ஒன்றிய அரசானது தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதிப்பகிர்வை சட்ட ரீதியாகப் போராடிப் பெறுவதற்கு சட்ட வல்லுனர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்படும் என்பது அவசியமானதொரு நடவடிக்கையாகும். அதேசமயத்தில் நிதிப்பகிர்வு உள்ளிட்ட ‘‘கூட்டாட்சி மற்றும் மத்திய மாநில உறவுகள்” குறித்து மறுஆய்வு செய்து தீர்வுகளைத் தருவதற்காக 2025ல் தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி. திரு.குரியன் ஜோசப் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் வழங்கிய பரிந்துரைகளை தவெக அரசு பரிசீலித்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
நகரமயமாதல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் குடிநீர், உள்கட்டமைப்பு உள்ளிட்ட சில திட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் கிராம பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக கூடுதல் நிதி மற்றும் கிராம சபைகளுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படுவது, உள்ளாட்சித் தேர்தல் குறித்து எந்தக்குறிப்பும் இல்லாதது வருத்தமளிக்கிறது.
ஆளுநர் உரையில் காவிரிப்பிரச்னை, போதை கலாச்சாரம் ஒழிப்பு, பாலியல் வன்முறை போன்றவற்றைக் கையாள்வதில் மென்மையான போக்கே காணப்படுகிறது. இவற்றில் கடுமையான நிலைப்பாட்டை - செயல்பாட்டை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் ஆளுநர் உரை என்பதால் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஆளுநர் உரை நிறைவேற்றவில்லை.
ஆ. அருணாச்சலம் MA., BL., @Arunachalam_Adv
பொதுச்செயலாளர்,
மக்கள் நீதி மய்யம்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது கூட நிரம்பாத பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும்,
கொடூரமான காயங்களால் இறந்தே போனதும் -
தமிழ்நாடு தலைகுனிய வேண்டிய அவலம்.
நாம் வாழும் மாநிலத்தில் இப்படிப்பட்ட இழிவுகள் தொடர்வது வேதனை.
#WomenSafety#TNCrimes#Childabuse
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
இந்த நட்பை குறித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்🫂 இக்கட்டுரை பிடித்திருந்தால் Repost, Share & Support!
போட்டியைத் தாண்டிய பந்தம்…
51 ஆண்டுகளாக காலத்தையே வென்ற கமல்ஹாசன் ரஜினிகாந்த் நட்பு!
திரையுலகில் இரண்டு உச்ச நட்சத்திரங்கள் ஒரே காலகட்டத்தில் பிரகாசிப்பது அரிது. அதைவிட அரிதானது, அந்த இருவரும் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் மதித்து, நேசித்து, ஊக்குவித்து வாழ்வது.
அந்த அரிய வரலாற்றை எழுதியவர்கள் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும்.
1975 ஆம் ஆண்டில் தொடங்கிய அவர்களின் திரைப்பயணம், இன்று 51 ஆண்டுகளைத் தாண்டியும் மரியாதை, நம்பிக்கை, அன்பு மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் அடையாளமாக நிற்கிறது.
ஒருவர் கலைக்காக வாழ்ந்த கலைஞன். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் புதிய எல்லைகளைத் தேடிய சோதனையாளர். மற்றொருவர் எளிமை, பணிவு, தனித்துவமான திரைமொழி மற்றும் மக்களுடன் கொண்ட அசாதாரண இணைப்பால் ஒரு தலைமுறையின் இதயத்துடிப்பாக மாறியவர்.
இருவரின் பாதைகளும் வேறு. அவர்களின் சினிமா மொழியும் வேறு. ஆனால் அவர்கள் பகிர்ந்து கொண்ட நட்பு மட்டும் ஒரே மொழி பேசுகிறது அது பரஸ்பர மரியாதையின் மொழி.
போட்டி இருந்தது. ஒப்பீடுகள் நடந்தன. ரசிகர்களுக்குள் விவாதங்களும் உருவாயின. ஆனால் அந்த எல்லாவற்றையும் தாண்டி, கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் ஒருவரின் திறமையை மற்றொருவர் மனதார பாராட்டியுள்ளனர்.
ஒருவர் வெற்றி பெற்றால் மற்றொருவர் மகிழ்ந்தார். ஒருவர் விருது பெற்றால் மற்றொருவர் வாழ்த்தினார். ஒருவர் சவால்களை எதிர்கொண்டால் மற்றொருவர் தோளாக நின்றார். இதுவே உண்மையான நட்பின் உயரம்.
புகழ் மனிதர்களை மாற்றிவிடும் என்று சொல்வார்கள். அதிகாரம் உறவுகளைப் பிரித்துவிடும் என்றும் சொல்வார்கள். ஆனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இரு சூப்பர் ஸ்டார்களும், தங்கள் நட்பை ஒருபோதும் புகழின் பலிபீடத்தில் வைக்கவில்லை.
இன்றும் பொதுவெளியில் ஒருவர் குறித்து பேசும்போது மற்றொருவர் பயன்படுத்தும் வார்த்தைகளில் மரியாதை மட்டுமே தெரிகிறது. அந்த மரியாதை செயற்கையானதல்ல, பல ஆண்டுகள் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள், போராட்டங்கள் மற்றும் வாழ்க்கைப் பயணத்தின் ஆழத்திலிருந்து வந்தது.
தமிழ் சினிமாவின் பொற்காலத்தை உருவாக்கிய இரண்டு தூண்கள் அவர்கள். ஒருவர் சினிமாவை புதிய பரிமாணங்களுக்கு எடுத்துச் சென்றார் மற்றொருவர் சினிமாவை மக்களின் கொண்டாட்டமாக மாற்றினார். ஆனால் இருவரும் சேர்ந்து கற்றுக் கொடுத்த மிகப்பெரிய பாடம்
"உயர்வதற்கு மற்றொருவரை தாழ்த்த வேண்டிய அவசியமில்லை."
இன்றைய சமூகத்தில் கருத்து வேறுபாடு வந்தாலே உறவுகள் உடைந்து போகும் காலத்தில், வெவ்வேறு சிந்தனைகள், வெவ்வேறு வாழ்க்கைப் பாதைகள் இருந்தாலும் நட்பை காப்பாற்ற முடியும் என்பதை அவர்கள் வாழ்ந்து காட்டியுள்ளனர்.
51 ஆண்டுகள் என்பது வெறும் கால அளவல்ல. அது எண்ணற்ற நினைவுகள், பரஸ்பர நம்பிக்கை, பகிர்ந்த வெற்றிகள், அமைதியான ஆதரவு மற்றும் அழியாத பாசத்தின் வரலாறு.
கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் வெறும் இரண்டு நடிகர்கள் அல்ல. அவர்கள் ஒரு தலைமுறையின் கனவுகள். அவர்கள் ஒரு கலாச்சாரத்தின் அடையாளங்கள். அதைவிட முக்கியமாக, போட்டியை விட மரியாதை பெரியது, வெற்றியை விட மனிதநேயம் உயர்ந்தது, புகழை விட நட்பு நிலையானது என்பதை நிரூபித்த இரண்டு மகத்தான மனிதர்கள்.
காலம் மாறலாம். சாதனைகள் முறியடிக்கப்படலாம். புதிய நட்சத்திரங்கள் உருவாகலாம். ஆனால் கலை, பணிவு, மரியாதை மற்றும் உண்மையான நட்பின் சின்னமாக கமல்ஹாசன் ரஜினிகாந்த் நட்பு என்றென்றும் தமிழ் மக்களின் இதயத்தில் நிலைத்திருக்கும்.
இது இரண்டு சூப்பர் ஸ்டார்களின் கதை அல்ல. இது 51 ஆண்டுகளாக காலத்தையே வென்ற ஒரு அழியாத நட்பின் காவியம்.
நன்றி!
#KamalHaasan #Rajnikanth #Friendship #Bonding #MaiamNews
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலுடன்,
பெரம்பூர் மநீம மாவட்டத்தில் கோடைக்கால தாகம் தீர்க்கும் பொருட்டு பொதுமக்களுக்கு நீர்மோர், பழச்சாறு மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.
மாவட்டச் செயலாளர் திரு. V. உதயகுமார் @udayakumarmnm அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவிற்கு,
கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம் @sentharu அவர்களும், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் @imayilvagan அவர்களும் தலைமை வகித்தனர்.
மேலும் இவ்விழாவில் மாவட்டச் செயலாளர்கள் (இராயபுரம்) திரு.மாறன், (R.K. நகர்) திரு. பூ.கோவிந்தராஜ்,
மாவட்ட அமைப்பாளர்கள் திரு. இராஜபுத்திரன் (சமூக ஊடக அணி), திரு. ரகு (தொழிலாளர் அணி),
திருமதி. அம்ருதா மோகனா (விவசாய அணி), திரு. T.R.சதிஷ் (நற்பணி அணி),
மாவட்டத் துணைச் செயலாளர் திரு. K.T.வெங்கடேசன் (திரு.வி.நகர்), மாவட்ட பொருளாளர் திரு. ஆனந்த், கொளத்தூர் நகரச் செயலாளர் திரு.ராஜேந்திரன், நம்மவர் தொழிற்சங்க பேரவை மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு.யுவராஜ் ஆகியோருடன் பெரம்பூர் - திரு.வி.க நகர் மநீம மாவட்டங்களின் செயலாளர்கள், அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
'மய்யம்' என்றால் என்ன?
உலக அரசியலை கரைத்து குடித்தவன் என்று தன்னைத்தானே நினைத்துக்கொண்டிருக்கும், சில அதிமேதாவிகள்,
மய்யம் என்பது Centrism என்கிற வெளிநாட்டு கொள்கை, நம்ம மண்ணுக்கு அது ஒத்துவராது என்று சொல்வார்கள்.
'மய்யம்' என்பதற்கு சரியான அர்த்தத்தை நன்கு புரிந்த சில அரசியல்வாதிகள், மக்கள் இந்த கொள்கையை ஏற்றுக்கொண்டால் மாற்றத்தை நோக்கி முன்னேறி விடுவார்கள் என்கிற ஒரு வித பயத்தில்,
"எப்படி ஒரு மனுஷனால மய்யத்தில் இருக்க முடியும் ?
எதேனும் ஒரு பக்கம் நிற்க வேண்டுமே, அல்லது ஒரு நிலைப்பாடு எடுத்தே ஆக வேண்டுமே, அதனால இம் மாதிரி கொள்கை நமக்கு ஒத்துவராது" என்று சொல்லி, சொல்லி, சொல்லி, மக்களை ஒரு வித குழப்பத்தில் வைத்திருக்கிறார்கள்.
இந்த குழப்பத்தை தெளிவுபடுத்த வேண்டியது என்னுடைய கடமை.
'மய்யம்' , என்னுடைய பார்வையில் எப்படி இருக்கு ?
மய்யம் என்பது, வெளிநாட்டு கொள்கை கிடையாது. அனைத்திற்குமே முன்னோடிகள் நம் தமிழர்கள்தான்,
தமிழ் மண் தான், இதற்கும் முன்னோடி.
நம் தமிழ் மண்ணில், வள்ளுவர் 2050 ஆண்டுகளுக்கு முன்னரே, செங்கோன்மை அதாவது ஆட்சி தர்மம் என்ற அதிகாரத்தில், "ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை" என்கிற குறளில், ஒரு அரசன் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுத்திருக்கார்.
அதாவது தன்னுடைய ராஜ்ஜியத்தில் ஒரு குற்றம் நடந்தால், அந்த குற்றத்தை அரசன் விசாரிக்க வேண்டும்.
எப்படி விசாரிக்க வேண்டும்?
எந்த பக்கமும் சாயாமல் விசாரிக்க வேண்டும். விசாரித்து, குற்றத்திற்க்கு தக்க தீர்ப்பு வழங்க வேண்டும்.
இதுதான் நீதி.
அதாவது, நடுவுநிலை என்ற மய்யம், அதுதான் நீதி.
இதுதான் வள்ளுவர் சொல்லியிருக்கார்,
அது தான் *மக்கள் நீதி மய்யம்*.
வருத்தப்பட வேண்டிய விஷயம் , திருவள்ளுவரை உரிமை கொண்டாடுவதில் நாம் முந்திக் கொள்கிறோம்.
எப்படி ?
வள்ளுவருக்கு காவி உடையா ?
கருப்பு உடையா ?
இப்படி தான்.
ஆனால் அவர் கற்றுக்கொடுத்த நெறிகளையெல்லாம் மறந்துவிட்டோம்.
இப்போ சொல்லுங்க,
நடுவுநிலை என்பது நம்ம மண்ணுக்கு புதுசா ? இல்லையே, நம்ம தமிழ் மன்னர்கள் அப்படித்தானே ஆட்சி செய்தார்கள் ?
நீதி கேட்க வந்தது பசுவாகவே இருந்தாலும், குற்றம் செய்தது தன்னுடைய மகனாவே இருந்தாலும், விசாரணையும், தீர்ப்பும் மய்யத்தில் இருந்தது. அதுதான் நீதி.
மய்யம் என்ற நடுவுநிலைமை தான் நீதி, அதுதான் மக்கள் நீதி மய்யம்.
மக்களுக்கு எது நீதியோ, அதை மட்டுமே மய்யம் செய்யும்.
நன்றி.
#KamalHaasan
#Maiam
#MakkalNeedhiMaiam
@ikamalhaasan@CentristTamizha@maiamofficial@MaiamOfficialIT