இன்றைய தினம் கோவையில் நமது APJ Centre for Ethics and Politics மையத்த���ல், மாணவர்களின் கனவுகள், அவர்களின் குடும்பப் பொருளாதாரச் சூழலால் ஒருபோதும் தடைபடக்கூடாது என்ற உயரிய நோக்கத்துடன், TNPSC aspirants முன்னிலையில் நமது @WTLFoundation சார்பில், ஏற்றம் அகாடமி (Etram Academy) https://t.co/i4qZlhMoN4 என்ற புதிய கல்வித் தளத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இதன் தொடக்கமாக, தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான TNPSC Group 4 தேர்வு மற்றும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய அளவிலான TN NMMS உதவித்தொகைத் தேர்வு என இரண்டு முக்கியத் தேர்வுகளுக்கும், தரமான பயிற்சியை முற்றிலும் இலவசமாக இந்தத் தளம் மூலம் வழங்கவிருக்கிறோம். தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பாடங்கள், சிறு காணொளிப் பாடங்கள், பயிற்சி வினாக்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், மாதிரித் தேர்வுகள் என மாணவர்கள் முழுமையாக தயாராவதற்கு, இந்தத் தளம் உதவும்.
தரமான கல்வி என்பது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே உரிய வாய்ப்பாக இருக்கக்கூடாது; ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் திறமைக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கிய எங்களின் மற்றுமொரு முன்னெடுப்புதான் நமது ஏற்றம் அகாடமி. மாணவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் கனவுகளை நனவாக்க நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
https://t.co/i4qZlhMoN4 (1/2)
மனு அளிக்க வந்த ஒரு சாமானியர் தாக்கப்பட்ட சம்பவமும், மருத்துவமனையில் அன���மதிக்கப்பட்டிருந்த அவர் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து, தன் மீது தாக்குதல் நடைபெறவில்லை என்று அவரையே வாக்குமூலம் அளிக்க நிர்பந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
த���ணை சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரவி சங்கர் அவர்களும், சட்டத்தைக் காக்க வேண்டிய காவல்துறை ஆய்வாளரும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் வன்மையான கண்டனத்திற்குரியவை.
தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, தாக்குதலே நடக்கவில்லை என்று அவரையே சொல்ல வைப்பது எந்த வகையான சட்டம் ஒழுங்கு?
அதிகாரம் என்பது மக்களின் குரலை ஒடுக்குவதற்கான கருவி அல்ல. காவல்துறை என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் அமைப்பும் அல்ல.
பாதிக்கப்பட்ட திரு. கார்த்திக் குமார் அவர்களுக்கு நீதி கிடைப்பதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக���கை எடுக்க வேண்டும்.
Heartiest birthday wishes to Thiru LK Advani avl as he enters his 100th year.
His lifelong dedication to the Nation First ideology continues to inspire millions of citizens across our country. Praying for his good health and long life.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், இந்தியத் திரையுலகின் தலைசிறந்த கலைஞர்களில் ஒருவருமான திரு @ikamalhaasan அவர்களுக்கு, எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. கமல்ஹாசன் அவர்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தனது கலைப் பணிகளும், மக்கள் பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ள, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம் நூலகத்தில், புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.
நூலகம் என்பது வெறும் கட்டிடம் அல்ல. வீட்டில் புத்தகங்கள் வாங்கிப் படிக்கப் பொருளாதார வசதியில்லாத மாணவர்களுக்கும், TNPSC உள்ளிட்ட போட��டித் தேர்வுகளுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும் அறிவையும், வாய்ப்புகளையும் சமமாகப் பகிர்ந்தளிக்கும் ஓர் உன்னதமான பொதுச் சொத்து. அத்தகைய ஒரு நூலகத்திற்காக ஒதுக்கப்படும் மக்கள் வரிப்பணத்தில் முறைகேடு நடந்திருக்குமானால், அது ஒரு நிதி முறைகேடு மட்டுமல்ல அடுத்த தலைமுறையின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்குச் செய்யப்படும் துரோகம்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தி��் இந்த நூலகத்திற்குப் புத்தகங்களைப் பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்த புத்தகங்களின் முழுமையான பட்டியல் என்ன? அந்தப் பட்டியலில் இடம்பெற்ற அனைத்து புத்தகங்களும் உண்மையில் கொள்முதல் செய்யப்பட்டனவா? கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை, ISBN எண்கள், கொள்முதல் செய்யப்பட்ட தேதி, நூலகத்தை வந்தடைந்த தேதி ஆகியவற்றைச் சரிபார்த்தவர்கள் யார்? புத்தகங்களின் தரம், உள்ளடக்கம் மற்றும் விலை ஆகியவற்றை ஆய்வு செய்த நடைமுறை என்ன? இந்தக் கேள்விகளுக்கு ஆவணப்பூர்வமான பதில்கள் அளிக்கப்பட வேண்டும்.
புத்தகக் கொள்முதல் தொடர்பான பரிந்துரைக் குழுவின் அறிக்க���, பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல், கொள்முதல் ஆணைகள், விலைப்பட்டியல், விநியோக ஆவணங்கள், சரிபார்ப்புக் குழுவின் அறிக்கை என அனைத்தும் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும். ஒவ்வொரு புத்தகமும் உரிய விலைக்கு வாங்கப்பட்டதா, வாங்கப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் நூலகத்தைச் சென்றடைந்தனவா என்பது குறித்து சுதந்திரமான, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அறிவைப் பகிர வேண்டி��� நூலகத்தையே, ஊழலுக்கான கூடாரமாக மாற்றியிருந்தால், அது வெறும் மக்கள் வரிப்பணக் கொள்ளை அல்ல அறிவுக் கொள்ளை. இதற்குப் பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும்.
அரசுப் பணி என்பது தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு. அந்தக் கனவை நனவாக்கும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்க வேண்டிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மீதே இன்று இளைஞர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. குரூப்-4 தேர்வுக்கு 2022 ஆம் ஆண்டு, 22.06 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 2024-ல் 20.37 லட்சமாகவும், 2025-ல் 13.89 லட்சமாகவும், இந்த ஆண்டு, இன்று வரையிலும், வெறும் 9.80 லட்சமாகவும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. நான்கு ஆண்டுகளில் சுமார் 56% சரிவு என்பது சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடிய விஷயமல்ல.
பல ஆண்டுகள் தங்கள் இளமைக் காலத்தையும், உழைப்பையும், பணத்தையும் செலவிட்டு அரசுப் பணிக்காகத் தயாராகும் இளைஞர்களுக்கு உரிய காலத்தில் முடிவுகளும், நியாயமான வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம், த���ர்வுக்குப் பிறகு பணிநியமனம் வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள், தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகங்கள், முறைகேடுகள் தொடர்பான புகார்கள் எனத் தேர்வு எழுதும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். கடந்த காலங்களில், அமைச்சர்கள் வரையில் பணம் வாங்கிக் கொண்டு அரசுப் பணி வழங்கியதான குற்றச்சாட்டுக்களே இதற்கு நேரடி சாட்சி.
இளைஞர்களின் அரசுப் பணி கனவுகளை நன��ாக்க வேண்டிய தேர்வாணையத்தின் மீதே நம்பிக்கை குறையத் தொடங்கினால், அது மிகவும் கவலைக்குரிய அறிகுறி. விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை ஏன் ஆண்டுதோறும் இவ்வளவு வேகமாகக் குறைந்து வருகிறது என்பதை தமிழக அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேர்வு முறையின் மீதும், அரசுப் பணி நியமனத்தின் மீதும் இளைஞர்கள் மீண்டும் நம்பிக்கை கொள்ள, உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
காலிப்பணியிடங்களை உரிய காலத்தில் நிரப்புவதும், வெளிப்படையான தேர்வு முறையை உறுதிப்படுத்துவதுமே, தமிழக இளைஞர்களுக்கு, மீண்டும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கையை உருவாக்கும்.
கடந்த ஆறு மாதங்களாக, தமிழகத்தின் ஜிஎஸ்டி (GST) வருவாய் நிலை, மாநிலத்தின் பொருளாதார நிலை, தவெக அரசின் நிதி முன்னுரிமைகள், நிலையான வருவாயை உருவாக்குவதில் அரசின் அணுகுமுறை ஆகியவை குறித்து பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. பல மாதங்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த ஜிஎஸ்டி வருவாய், அக்டோபர் மாதத்தில் ஓரளவு வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பது மட்டுமே சிறிய ஆறுதல். அதுவும் ஒற்றை இலக்க வளர்ச்சியாகவே உள்ளது.
பண்டிகைக் காலம், பள்ளிகளுக்கு நீண்ட விடுமுறை, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு என, பொருளாதார நடவடிக்கைகள் இயல்பாகவே அதிகரிக்க வேண்டிய சூழலிலும், வரி வசூலில் எதிர்பார்த்த வ���ர்ச்சி ஏற்படாதது கவலையளிக்கிறது.
கடந்த ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டின் ஜிஎஸ்டி வருவாயை ஒப்பிடும்போது, ஐஜிஎஸ்டி (IGST) பகிர்வை இதற்கான காரணமாக முன்வைப்பது பொருத்தமானதல்ல. ஏனெனில், ஐஜிஎஸ்டி (IGST) புதிதாகக் கொண்டுவரப்பட்டதல்ல. தமிழ்நாட்டிற்கு இணையான பொருளாதார நடவடிக்கைகளைக் கொண்ட கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா போன்ற மாநிலங்கள் தொடர்ந்து வலுவான ஜிஎஸ்டி வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன. இந்த வேறுபாட்டைத் தவெக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழகத்தின் வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும். குறிப்பாக, அனைத்துத் துறைகளிலும் அரசின் மூலதனச் செலவினங்கள் (Capital Expenditure) எந்த அளவிற்கு மேற்கொள்ளப்படுகின்றன என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். கடந்த ஆறு மாதங்களாகப் பல்வேறு அரசுத் துறைகளில் மூலதனச் செலவினங்கள் மந்தமடைந்துள்ளதாகப் பொதுவான கருத்து நிலவுகிறது. அரசின் மூலதனச் செலவினங்கள் குறையும்போது, அதன் மூலம் வேலைவாய்ப்புகள், ஒப்பந்தப் பணிகள், தொழில் நடவடிக்கைகள், வணிகம் என, பல வகையான பொருளாதாரப் பங்களிப்பும் பாதிக்கப்படுகிறது. இது மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியையே பலவீனப்படுத்தும்.
இந்தியாவின் மொத்த தொழிற்சாலைகளில் 15.43 சதவீதத்தைக் கொண்டுள்ள தமிழகம், தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. ஆனால், தொழில்துறையின் மொத்த மதிப்புக் கூட்டலில் (Gross Value Added – GVA) தமிழகத்தின் பங்களிப்பு வெறும் 10.26 சதவீதமாக மட்டுமே உள்ளது. இதன் மூலம் தேசிய அளவில் மூன்றாவது இடத்திற்குத் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பும், இந்தியாவின் உற்பத்தித் துறை GVA-வில், தமிழகத்தின் பங்களிப்பு 10.3 சதவீதமாகத்தான் இருந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தப் பங்களிப்பு ஏறக்குறைய அதே நிலையில் நீடிப்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஒரு காலத்தில் தமிழகத்திற்குப் பின்னால் இருந்த மாநிலங்கள் இன்று வேகமாக முன்னேறி, வளர்ச்சி இடைவெளியைக் குறைத்து வருகின்றன.
தமிழக அரசின் மாநிலத் திட்டக்குழு வெளியிடும் மாவட்ட அளவிலான பிராந்திய ஏற்றத்தாழ்வு அறிக்கைகள் (Regional Imbalance Reports) மட்டுமே மாநிலத்தின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடாது என்பதை இதற்கு முன் நாம் பலமுறை சுட்டிக்காட்டி���ுள்ளோம். அந்த அறிக்கைகள் மாநிலத்தின் தற்போதைய நிலையைச் சுட்டிக்காட்டும் ஒரு கருவி மட்டுமே. வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களைக் கண்டறிந்து, அவற்றுக்கெனத் தனி��்துவமான பொருளாதாரத் திட்டங்கள், சிறப்புத் திட்டங்கள், அரசின் நேரடி கண்காணிப்பு ஆகியவற்றைச் செயல்படுத்துவதுதான் உண்மையான தீர்வாக அமையும். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, முதலீடு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் சமமாகப் பரவுவதற்கான திட்டமிடல் அவசியம்.
வகுப்பில் முதலிடம் பெறும் மாணவனுக்குப் பாராட்டும் ஊக்கமும் தேவைதான். ஆனால், கடைசி இடத்த���ல் இருக்கும் மாணவனுக்குத்தான் கூடுதல் கவனமும் சிறப்புப் பயிற்சியும் அதிகம் தேவை. அதுபோலவே, ஏற்கெனவே வளர்ச்சியடைந்த மாவட்டங்களின் வளர்ச்சியைத் தொடர்வதுடன், பின்தங்கிய மாவட்டங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இந்த உண்மையைத் தவெக அரசு எவ்வளவு விரைவாக உணர்ந்து செயல்படுகிறதோ, அவ்வளவு நல்லது.
For the second consecutive year, I returned to Goa to take on the Ironman 70.3 challenge. I am glad to have crossed the finish line once again.
There were moments when excruciating pain and relentless cramps made every step an uphill battle. Crossing the finish line made every bit of the struggle worthwhile.
The journey continues to make me a better version of myself!
Heartiest congratulations to all participants who took up the challenge this year, and a special shout-out to the volunteers of this world-class organisation, Ironman 70.3 Goa, for making the event memorable.
தொன்மையும், தனித்துவமும், வரலாற்றுப் பெருமையும் கொண்ட நமது தாய்த்தமிழ் மொழியை அடையாளமாகக் கொண்டு, நமது மாநிலம் உருவான இந்த நன்னாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான நமது தமிழ் மொழி, இலக்க���யம், கலை, கட்டிடக்கலை, வீரம், விருந்தோம்பல் என ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்திருப்பது நமது தமிழ்நாடு. இந்த மண்ணின் பெருமையையும், பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
கல்வி, தொழில், விவசாயம், வேலைவாய்ப்பு, மகளிர் முன்னேற்றம் என அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தமிழகம் உயர வேண்டும். நமது பாரம்பரியத்தை��் பாதுகாத்து, வளர்ச்சியிலும் முன்னேறி, வளமான தமிழகத்தை உருவாக்க, இந்த தமிழ்நாடு நாளில் உறுதியேற்போம்.
Respectful tributes to the Iron Man of India, Bharat Ratna Sardar Vallabhbhai Patel avl on his birth anniversary.
His relentless resolve united a diverse nation into one strong India. On this day, let us reaffirm our commitment to preserving our nation's unity, integrity, and security.
Heartiest congratulations to @isro on the successful launch of the NVS-03 navigation satellite aboard the GSLV-F18.
By placing our third indigenous Rubidium atomic clock in space, NVS-03 significantly strengthens our NavIC constellation and secures India's time sovereignty.
The mission will strengthen our critical infrastructure, from digital payments & telecommunications to power grids & defence, by securely synchronising it to a highly accurate, independent Indian Standard Time.
ஆன்மீகமும், தேசிய உணர்வும் சமூகப் பற்றும் ஒருங்கே கொண்ட தெய்��த் திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை தினம் இன்று.
சுதந்திரப் போராட்ட வீரராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த மக்கள் தலைவராகவும் விளங்கியவர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
தன்னலமற்ற பொதுவாழ்வு, அஞ்சாத நெஞ்சம், உறுதியான கொள்க���ப்பற்று, தெய்வ பக்தி ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த தேவர் பெருமகனாரின் வாழ்க்கை வருங்காலத் தலைமுறையினருக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும்.