நடிகர் அஜித், அஜர்பைஜானில் நடைபெற்ற விடாமுயற்சி படப்பிடிப்பு நாட்களின்போது ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தார். அவருடன் சக நடிகர்கள் ஆரவ், நிக்கில் வந்திருந்தார்கள். சில அஜர்பைஜான் தமிழ் நண்பர்களும் வந்தார்கள்.
இனிய மாலை.
ஒரு கைவிரல்களில் அடங்கிவிடக்கூடிய எண்ணிக்கையில்தான் அஜித்தின் படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ‘அஜித் என்பவர் ஒரு நடிகர்’ என்கிற ஒற்றை விவரிப்பில் அவரை அடக்கிவிடமுடியாது என்பது எங்கள் உரையாடல்களின் சுவாரஸ்யத்தைக் கூட்டியது. குடும்பக் கதைகளும் சேர்ந்துகொள்ள, உணவும் சிரிப்பும் மகிழ்ச்சியுமாய் எல்லோரும் நள்ளிரவு தாண்டியும் பேசிக்கொண்டிருந்தோம்.
எங்களுடைய ஏதோ ஒரு குடும்ப நிகழ்ச்சி விவரிப்பின்போது அஜித் உட்பட எல்லோரும் குலுங்கிக்குலுங்கிச் சிரித்தபோது, வைதேகியும் நானும் எங்கள் உரையாடல்களுக்கு டிக்கட் போடலாம் என்று அடிக்கடி எழும் எண்ணம் மீண்டும் வந்தது. 🙂
ஆர்வத்துக்காக ஒரு புது விஷயத்தைச் செய்துபார்ப்பதன் மகிழ்ச்சி, வாழ்வின் பல்வேறு கட்டங்களில் நம் மனநிலை மாறுவது, பைக், கார், சைக்கிள் பயணங்கள் என்று உடலும் மனமும் இணைந்து செயல்படும் தருணங்களின் அனுபவம் என்று இயல்பான போக்கில் போனது பேச்சு.
அஜித் விடைபெற்றுச் சென்றபிறகு பல சிந்தனைகள்.
மனிதர்கள் ஏன் பல விஷயங்களைச் செய்கிறார்கள்? அவர்களது ஊக்கம் எதைப் பற்றியது? இவற்றிலிருந்து அவர்களுக்கு என்ன கிடைக்கிறது?
என் பதில்: ஆர்வத்தால் செய்யும் காரியங்களுக்குத் திடமான பலன்கள் எதுவும் தேவையில்லை.
ஒரு விஷயத்தை முயன்றுபார்த்து அனுபவித்திருக்கிறோம் என்பது போதாதா? கடைசியில் அதையும் மீறி எந்த விஷயத்தில் என்ன கிடைத்துவிடுகிறது? அவ்வளவு தான் வாழ்க்கை: அனுபவம்.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#வாழ் #உருவாக்கு #பகிர் #கதைசொல்
@TANGEDCO_Offcl continues three days frequent power cut from 9.30 pm to 12.0 am at Balaji nagar, puzhuthivakkam. Kids are crying due to heat waves and as you are aware schools are reopened. so, we are struggling here. pls help to resolve the issues.
அப்பப்பா .... தோற்றம் பார்த்து , யார் ... எவரிடம் ,... அறிவும் , அறிவுசார் ஆற்றலையும் , இறைவன் படைத்திருக்கிறான்... என கண்டுபிடிக்க முடியவில்லை ...... விந்தையப்பா .... விந்தை .👍👏👏👏
1980-90-களில் நம் உணவு முறைகளில் கலப்படம் என்பது இல்லை. வீட்டில் வாரம் தோறும் நாட்டுக் கோழி குழம்பு, கருப்பு ஆட்டுக்கறி, பதப்படுத்தப்படாத மீன்கள் போன்றவற்றை அசைவ உணவுகளாக உண்டு வந்தோம். பரோட்டா என்பது என்றாவது ஒருநாள் மட்டுமே.! பிரியாணி கூட என்றாவது ஒருநாள் hotel இல் மட்டுமே. 1/7