திமுக தலைவரின் எண்ணத்தை புரிந்து செயல்படும் வேலூர் மாவட்ட செயலாளர் செயல்வீரர் ,இளம் புயல்
ஏ.பி.நந்தகுமார் அவர்கள்.
நந்தகுமார் அவர்களே உங்களுக்கு
ராயல் சல்யூட்.
இது போன்ற கிளை /வார்டு/ஒன்றிய/ நகர்/பகுதி/ மாநகர /மாவட்ட செயலாளர்கள் தங்கள் பகுதிகளில் மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும்.
தலைவர் சொன்னபடி குறைந்த பட்சம் காது கொடுத்து கேட்க வேண்டும்.
@mkstalin@Udhaystalin
ஆன்லைனில் மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி ?
பொதுவாக ஒரு வீட்டை வேறு ஒருவரிடம் இருந்து வாங்கியதும் அவர் பெயரில் இருக்கும் அனைத்தையும் நம் பெயருக்கு மாற்றுவோம்.
அந்த வகையில் அவருடைய பெயரில் இருக்கும்
✅ மின் இணைப்பு வீடு வாங்கியவரின் பெயரில் மாற்றம் செய்ய:-
1. Visit 👉 https://t.co/vEUwzIQHoQ என்ற இணையதளத்திற்கு செல்லவும.
2. பிறகு = menu- ல் online service (ஆன்லைன் சர்வீசஸ்) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
3. அந்த பக்கத்தின் கீழே Existing service Connection (எக்ஸிஸ்டிங் சர்வீஸ் கனெக்ஷன்) என்பதில் LT - Name Transfer என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
4. பிறகு உங்களின் Mobile Number மற்றும் Email-ID Enter செய்த பிறகு OTP generate கிளிக் செய்தால் உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP வந்த பிறகு உங்கள் பெயர் மாற்றத்திற்கு தேவையான தகவல்களையும் பதிவிட்டும் ஆவணங்களை அப்லோடு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
நேரடியாக பெயர் மாற்றம் லிங்கிற்கு 👉 https://t.co/1ZliLXZ0AY
தேவையான ஆவணங்கள்:
✔️ ஆதார் அட்டை
✔️ சொத்து வரி ரசீது நகல்,
✔️ விற்பனை பத்திரத்தில் ஜெராக்ஸ் நகல்
✔️ செட்டில்மென்ட் பத்திரம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று, அல்லது நீதிமன்ற உத்தரவு இருந்தால் அதையும் பயன்படுத்தலாம்.
✅ இறந்தவர்களின் பெயரில் இருக்கும் மின் இணைப்பின் பெயர் மாற்றம் செய்ய:
யாராவது இறந்துவிட்டால் அவர் பெயரில் இருக்கும் மின் இணைப்பை மாற்றுவதற்கு செட்டில்மென்ட் பத்திரம், வாரிசு சான்றிதழ் ஆகியவை தேவைப்படும்.
நலவாழ்வு சங்கத்தின் பெயரில் பதிவு சான்றிதழ் (அல்லது) வளாகம்/அப்பார்ட்மெண்ட் பெயருக்கு மாற்ற, விண்ணப்பத்தில் கையொப்பமிட குடியிருப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதம் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.
மேலும் தகவலுக்கு மின்சார வாரிய தொடர்பான தகவல்களை அறிய 👉 https://t.co/8MwA3b8jfb
#TANGEDCO #TNPDCL #TNEB #Tamilnadu #NameChange
"முஹம்மது நபி (ஸல்) அவர்களை மதிக்க நீங்கள் எந்த ஜாதியில் பிறந்தீர்கள் என்பது முக்கியமில்லை."
உண்மையான இறைபயம், மனிதாபிமானமுள்ள, உண்மையான பக்தியுள்ள இந்துக்கள் யாரையும் துன்புறுத்தமாட்டார்கள், இழிவாக பேசமாட்டார்கள்.
-ஸ்வரா பாஸ்கர்.
வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்வது எப்படி?
How To Change Voter ID Address?
இந்திய தேர்தல் ஆணையம் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி ஆன்லைனில் முகவரியை எளிதாக மாற்றலாம்.
 ✔️ உங்கள் மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் தேர்தல் தொடர்பான இணையதள பகுதிக்குச் சென்று, Online Voter Registration என்ற பகுதியை கிளிக் செய்து கொள்ளவும்.
 கிளிக் 👉 https://t.co/2TtRxBFsTA
 ✔️ அடுத்து திறக்கும் பக்கத்தில் காட்டப்படும் option-களில் Form 8-ஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
✔️ புதியதாக Open பக்கத்தில் Signup செய்து பதிவு செய்து கொண்டு தொலைபேசி எண் மற்றும் பாஸ்வேர்ட், கேப்சா கொடுத்தால் OTP நீங்கள் பதிவு செய்த தொலைப்பேசி எண்ணுக்கு வரும்.
OTP எண்ணை கொடுத்து உள்ளே செல்ல வேண்டும்.
 ✔️ உங்களுடைய வாக்காளர் அட்டை எண்ணை கொடுக்க வேண்டும்.
✔️ Open ஆகும் Form-8 படிவத்தில் உங்களுடைய பெயர் மற்றும் முகவரி, மாநிலம், தொகுதி மற்றும் உங்கள் புதிய முகவரி போன்ற விவரங்களை கேட்கப்பட்டுள்ள இடங்களில் நிரப்பவும்.
 ✔️ ஆதார் அட்டை எண் கேட்கும் அதையும் நீங்கள் பதிவிட வேண்டும்.
✔️ தொடர்ந்து உங்களின் தற்போதைய முகவரியைக் குறிப்பிடும் ஏதேனும் ஓர் ஆவணத்தைப் பதிவேற்றவும்.
(பயன்பாட்டில் உள்ள EB பில், வங்கி பாஸ் புத்தகம், ஆதார் அட்டை அல்லது ஏதேனும் அதிகாரப்பூர்வ ஆவணம் போன்றவை).
✔️ ஆவணங்களை பூர்த்தி செய்து பதிவேற்றியவுடன், ஆன்லைனில் காண்பிக்கும் விவரங்களை சரி பார்த்து படிவத்தை சமர்ப்பிக்கவும்.
 ✔️ தொடர்ந்து, ஒரு குறிப்பு எண்ணைப் (Reference number) பெறுவீர்கள். அதை நீங்கள் ஆன்லைனில் உங்கள் விண்ணப்பத்தைக் கண்காணிக்க (Status ) பார்க்க பயன்படுத்தலாம்.
✔️ உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்ததும், அது தேர்தல் அதிகாரிகளால் சரிபார்க்கப்படும்.
 ✔️ சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்தால், குறிப்பிடப்பட்டுள்ள உங்களின் தற்போதைய முகவரியுடன் வாக்காளர் அடையாள அட்டை தபாலில் வரும்.
#VoterId #Address #Correction #Elections #GeneralElection
ஒரு புதிய மொழியை விரைவாகக் கற்றுக்கொள்வது எப்படி? (புதிய நண்பர்களுக்காக):
- மொழி கற்றலின் ஐந்து அடிப்படை விதிகள் என்ன?
- குழந்தைகள் மொழி கற்பதற்கும் பெரியவர்கள் கற்பதற்கும் உள்ள வேறுபாடுகளை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது?
- ஏன் பாரம்பரிய மொழி கற்கும் உத்திகள் பெரிய பலன்கள் அளிப்பதில்லை?
- இன்றைய சூழலில் மொழி கற்க உள்ள புதுக் கருவிகள் எவை? (பல இலவசமாகக் கிடைக்கின்றன)
- மொழி கற்பதை விளையாட்டாக அணுகுவது எப்படி?
***
உலகில் முதன்முறையாக நெடிய மொழி வரலாற்றில் சீன மொழியிலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு செய்தவன் நான். ஆனால், மொழி கற்றலுக்கு எனக்குமான உறவு ஆரம்பத்தில் அத்தனை சுலபமாக இருக்கவில்லை. அது ஆங்கிலம் கற்பதிலிருந்து துவங்கியது.
சின்ன வயதிலேயே புத்தகம் படிக்கும் ஆர்வத்தால் தமிழ் வசமானது. ஆனாலும் பள்ளியில் தமிழில் சராசரி மதிப்பெண் தான். வாழ்க்கை சடாரென்று திசை மாறி +1இல் இங்கிலிஷ் மீடியம் சேர்ந்ததும் கை கால் உதறியது. கல்லூரிப்படிப்பும் போராட்டமாகத் தொடர்ந்தது. தமிழ் மேடைகள் மனஉறுதி தந்தன. ஆனால், மொழிப் பாடங்களிலும் சேர்த்து, ஒரு சராசரி மதிப்பெண்கள் எடுக்கும் மாணவனாகவே தொடர்ந்தேன்.
மற்ற பாடங்களோ மொழியோ, விஷயம் சப்ஜெக்ட்டில் இல்லை, கற்கும் முறையில் இருக்கிறது என்று புரிந்தபோது, “ச்சீ! இதுக்கா பயந்தோம்!?” என்று விட்டுப்போனது.
அதன் பிறகு, மொழியிலும் ஏறு முகம் தான்.
இந்திய அயலுறவுப் பணியில் சேரும் அலுவலர்கள் ஒரு கட்டாய அயல் மொழியைக் கற்க வேண்டும். எனக்கு வாய்ப்பிருந்த நான்கைந்து மொழிகளில் சீன மொழியைத் தேர்ந்தெடுக்கக் காரணங்கள் இரண்டு: 1. எனக்குச் சீனமொழி துளியும் தெரியாது. 2. அது உலகின் மிகக் கடினமான மொழிகளில் ஒன்று என்று சொன்னார்கள்.
பிறகு நடந்தவை, வரலாறு. எனது ஐந்து நூல்களில் இரண்டு சீனமொழியை அறிமுகப்படுத்துவன. மீதி இரண்டும் சீனமொழியிலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்புகள். அதில் முதலில் வந்த ‘கவித்தொகை: சீனாவின் சங்க இலக்கியம்’ என்கிற நூல் தான் சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பில் வந்த முதல் நூல் என்று தெரியவந்தபோது, எனது பள்ளிக்கால மொழிப்பாட மதிப்பெண்களையும் நினைத்துக்கொண்டேன்.
மொழி கற்றல் என்பதும் ஒரு திறமை தான். சரியான வழிகாட்டல் இருந்தால், யாரும் புது மொழிகளைக் கற்று பல மனங்களையும் புத்தம்புது உலகங்களையும் திறக்கலாம். இந்தக் காலத்தில் இது இன்னும் எளிதாகியிருக்கிறது.
ஆனால், இப்போதைய எல்லா விஷயங்களையும் போல, இதிலும் உங்கள் வழிகாட்டிகளை கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்தப் பின்னணியில், மொழி கற்றல் பற்றிய அடிப்படைகளைத் தொடும் நூல்கள் எனக்குப் பிரியமானவை. நடைமுறையில் பயன்படும் விஷயங்களை எளிதாகச் சொல்லும் நூல்கள் அரிது. அவற்றில் நிச்சயமாக இடம்பெற வேண்டிய நூல் இது: Fluent Forever: How to Learn Any Language Fast and Never Forget It by Gabriel Wyner (“எப்போதும் சரளமாக: எந்த மொழியையும் விரைவாகக் கற்றுக்கொள்வதும் அதை மறக்காமல் இருப்பதும் எப்படி?” - கேப்ரியல் வைனர்)
Fluent Forever என்கிற மொழி கற்கும் இணைய தளத்தை நிறுவி, அதன் மூலம் தனது மொழி கற்கும் வழிமுறைகளைச் சொல்லித்தரும் கேப்ரியல் வைனர், அமெரிக்காவில் மேற்கத்திய செவ்விசைப் பாடகர். ஐரோப்பா சென்று இசை கற்றுக்கொண்டபோது மொழி தடையாக இருக்கவே, மொழி கற்றல் பற்றிய அடிப்படைகளை உள்வாங்கிக்கொண்டு வெற்றி கண்டவர். இப்போது பன்மொழி வல்லுனர் (polyglot).
அவருடைய நூலை அறிமுகம் செய்து, அதிலுள்ள முக்கிய விஷயங்களைப் பேசியிருக்கிறேன்.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு #அறிவியல்சிந்தனை
நான் முதல்வன் வழங்கும் 25000 ரூபாய் உதவி தொகையுடன் கூடிய மூன்று மாத கால உணவு உறைவிட குடிமை பணி பயிற்சிகள் - ஐ.ஏ.எஸ் / ஐ.பி.எஸ் போன்ற போட்டி தேர்வுகளை வெற்றிகரமாக முடிக்க .
இன்று மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும்..
https://t.co/DaWYtPBFA8
அதிகம் பேரை சென்று அடைய RT செய்யவும்.