கல்விக் கண்திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் புகழ் வணக்கம்!
எளிமை, நேர்மை, தன்னலமற்ற சேவை, கல்வியின் முக்கியத்துவம் ஆகிய உயரிய பண்புகளால் தமிழ்நாட்டின் வரலாற்றில் அழியாத தடம் பதித்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது பணிவான புகழ் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் காட்டிய மக்கள் சேவையின் பாதையையும், கல்வி வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பையும் என்றும் போற்றுவோம்....
அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!
நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.
இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!
உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!
#CMJosephVijay | #Census2027 |
As #BharatTex2026 concluded last evening, here's a short excerpt from my address.
The textile industry is more than just fabric. It is about livelihoods, entrepreneurship, exports, and millions of aspirations. As global supply chains evolve, Tamil Nadu is committed to leading through innovation, sustainability, value addition, and leadership in man-made and technical textiles.
Our goal is clear: to make Tamil Nadu the preferred global destination for textile manufacturing and investment.
சிவகாசியின் எதிர்காலம் என்பது தொழில் வளர்ச்சியுடன் மட்டுமல்ல, பாதுகாப்பான மற்றும் உலகத் தரத்திலான சுகாதார கட்டமைப்புடனும் இணைந்திருக்க வேண்டும்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், Comprehensive Firecracker Accident Management System தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளோம்.
இந்தத் திட்டத்தின் மூலம், சிவகாசி – விருதுநகர் – மதுரை ஆகிய நகரங்களை ஒருங்கிணைக்கும் பிராந்திய தீக்காய சிகிச்சை மற்றும் அவசர மருத்துவ வலையமைப்பை உருவாக்குவது எங்கள் நோக்கம். விபத்து நடைபெறும் தருணத்திலிருந்து அவசர சிகிச்சை, மேம்பட்ட தீக்காய சிகிச்சை, மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை (Reconstructive Surgery), புனர்வாழ்வு மற்றும் தொடர் மருத்துவ கண்காணிப்பு வரை ஒருங்கிணைந்த சிகிச்சை முறையை உருவாக்கும் ஒரு முன்னோடி முயற்சியாக இது அமையும்.
இதன் மூலம் பட்டாசுத் தொழிலில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் விரைவான, தரமான மற்றும் நவீன மருத்துவ சேவையை உறுதி செய்வதோடு, சிவகாசியை தொழில் பாதுகாப்பு மற்றும் அவசர சுகாதார மேலாண்மையில் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக மாற்றுவதே எங்கள் இலக்கு.
ஒரு நகரத்தை நிர்வகிப்பது என்பது சாலைகள் மற்றும் கட்டிடங்களை உருவாக்குவது மட்டுமல்ல; மக்களின் உயிரையும், நம்பிக்கையையும், எதிர்காலத்தையும் பாதுகாக்கும் அமைப்புகளை உருவாக்குவதும் ஆகும். அதற்கான பயணத்தில், நாங்கள் அனைவரும் இணைந்து ஒரு பாதுகாப்பான, நவீனமான சிவகாசியை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
அறுப்பது ஒரு நொடியில் முடியும்,
அவிழ்ப்பதற்கு பொறுமை வேண்டும்.
உறவுகளும் அப்படித்தான்...
கோபம் கத்தரியாக மாறினால் உறவுகள் அறுந்துவிடும்.
அன்பு நூலாக மாறினால் எந்த முடிச்சும் அவிழ்ந்துவிடும்.
முடிச்சை அவிழ்க்க அவசரப்பட்டுவிடாதே,
மனதை சாந்தப்படுத்த கற்றுக்கொள்வோம்.
#வாழ்க்கை
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel