மாண்புமிகு தமிழ்நாடு முதலைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேற்று (17.06.26) சந்தித்து எமது சமூக நீதித்துறை சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தேன்.
- ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.கே.என். பாஷா தலைமையிலான குழுவின் பரிந்துரையினை பெற்று ஆணவப்படுகொலையைத் தடுக்க சிறப்பு தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும்
- அரசுப் பணிகளில் அனைத்துப் பிரிவினருக்கும் சமூகநீதியை நிலை நாட்ட, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.G.M. அக்பர் அலி அவர்கள் தலைமையிலான குழுவின் பரிந்துரையினை பெற்று அரசுப் பணியின் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீட்டினை பின்பற்றுவது தொடர்பான அரசியலமைப்புச் சட்ட பிரிவு 16(4-A)யினை நடைமுறைப்படுத்த சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்
- பஞ்சமி நிலங்களை கண்டறிந்து ஆவணப்படுத்தி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக பயன்படுத்துவதை உறுதி செய்யும் பொருட்டு பஞ்சமி நிலஉடைமை சட்டம் என்ற புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்
- ஆதிதிராவிட மக்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள காரணிகளை கண்டறிந்து எதிர்கால நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதற்கு தேவையான தரவுகளை வழங்குவதற்கு ஆதிதிராவிடர் மக்களின் சமுக பொருளாதார கணக்கெடுப்பினை (Social Economic Census) நடத்த வேண்டும்
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதி முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்ட சட்டம், 2024 கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தலைவராக கொண்டு மாநில அளவிலான கண்காணிப்பு குழு மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்டக் கண்காணிப்புக் குழு அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க வேண்டும்
- வீடற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தற்போது நடைமுறையிலுள்ள வீடுகட்டி தரும் திட்டங்களின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 5000 கோடி செலவில் 1 இலட்சம் வீடுகள் கட்டித்தரும் வகையில் சிறப்பு திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் விடுதிகளின் உட்கட்டமைப்பு பணிகளை முழுமையாக நடப்பு நிதியாண்டில் நிறைவேற்றம் செய்வதற்கு கூடுதலாக நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும்
- அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து மாணாக்கருக்கும் உதவித்தொகை வழங்கிடும் வகையில் இத்திட்டத்திற்கு நிதி உயர்த்தி வழங்க வேண்டும்
- தகுதியுள்ள நிலமற்ற ஒரு இலட்சம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க உரிய நிதிஒதுக்கீடு வழங்க வேண்டும்
மின் இணைப்பு வழங்கும் திட்டம், தொல்குடி திட்டம், தாட்கோ கடன் தள்ளுபடி, ஆதிதிராவிடர் தொழில்முனைவோர் திட்டம், பழங்குடியின மாணாக்கருக்கான கல்வி உதவித்தொகை வேறுபாட்டினை சரிசெய்தல், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம், நன்னிலம் மகளிர் நிலஉடைமைத் திட்டம் ஆகியவை தொடர்புடைய கோரிக்கைகளை சமர்ப்பித்தேன்.
எமது கோரிக்கைகளை கவனமுடன் கேட்டறிந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் எமது துறை சார்ந்த செயல்பாடுகளை குறிப்பிட்டு வாழ்த்தினார்.
- வன்னி அரசு
அமைச்சர் - சமூக நீதித்துறை
தமிழ்நாடு அரசு
@CMOTamilnadu
மாய-ராமாயணங்கள்
=====================
.
ஒரு இந்தி வீடியோத் துணுக்கு உலா வருகிறது. ஒரு சாமியாரிடம் ஒரு இளைஞர் கேட்கிறார். 'சீதையின் சுயம்வரத்தில் ராவணன் கலந்து கொண்டார் இல்லையா?'
அதற்கு அந்த சாமியார் 'ஆமாம், கலந்து கொண்டார்,' என்று பதில் சொல்கிறார்.
'அதற்கு அழைப்பு எப்படி அனுப்பப்பட்டது?' என்று கேட்கிறார். அந்த சாமியார் 'உனக்கு இன்விடேஷன் காப்பி காட்டணுமா?' என்று சீறுகிறார்.
'இல்லை. அழைப்பு அனுப்பியவர் ஏதோ வகையில் இலங்கையை அடைந்திருக்க வேண்டும்தானே. அப்புறம் சேதுப் பாலம் கட்ட வேண்டிய அவசியம் ராமருக்கு ஏன் வந்தது?' என்று கிடுக்கிப் போடுகிறார்.
அதற்கு அந்த சாமியார் என்ன பதில் சொன்னார் என்பது அந்த வீடியோவில் இல்லை. கண்டிப்பாக மேலும் சீறி இருந்திருப்பார். அல்லது ஏதாவது உருட்டு உருட்டி இருந்திருப்பார்.
உண்மை என்ன? ஒரிஜினல் வால்மீகி ராமாயணத்தில் ராவணன் சீதையின் சுயம்வரமோ அல்லது திருமணமோ எதிலும் கலந்து கொண்டதாகக் காட்சி இல்லை. இவர் சொன்ன காட்சி துளசிதாசர் எழுதிய 'ராமசரித மானஸ்' எனும் எனும் நூலில் வருவது. இது ரொம்ப ரொம்ப சமீபத்திய நூல். 16ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. விட்டால் தூர்தர்ஷன் சீரியல் சீன்களைக் கூட மேற்கோள் காட்டிப் பேசுவார்கள் போல!
ராமாயணம் பற்றிப் பேசுவதில் நம் சமூகத்தில் இருக்கும் பிரச்சினை இதுதான். இந்தியாவின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு ராமாயணம் பிரபலமாக இருக்கிறது. இந்தி பேசும் மக்களிடையே துளசிதாசரின் ராமாயணம் பிரபலம். தூர்தர்ஷன் சீரியலும் அதையொட்டி எடுக்கப்பட்டதுதான். தமிழ்நாட்டில் கம்ப ராமாயணம் பிரபலம்.
இப்படித்தான் வால்மீகிக்குப் பிறகு வந்த பற்பல ராமாயணங்களில் காட்சிகள், கதைகள் மாற்றி மாற்றி சொல்லப்படுகின்றன. சில வடிவங்கள் மொத்தமாகவே கதையை மாற்றி விடுகின்றன. சங்கதாசரின் வசுதேவஹிந்தி எனும் ராமாயணத்தில் ராவணன் சீதையின் தந்தையாக சித்தரிக்கப்படுகிறான். ஆச்சாரிய விமலசூரி என்பவர் எழுதிய பவுமசாரியா வர்ஷனில் லட்சுமணன்தான் ராவணனைக் கொல்கிறான். (அந்தக் கதையில் ராமர் அகிம்சை பேணும் அமைதி மனிதர். வாள் தூக்க மாட்டார். காரணம், அது ஒரு சமண நூல்!)
ஆனால் பொதுவாக ராமாயணம் என்றதும் மாற்றமே இல்லாத, ஒரே வர்ஷன்தான் எங்கும் நிறைந்திருக்கிறது எனும் மாயை மக்களிடையே நிலவுகிறது. அந்த வீடியோவில் வரும் சாமியாரே கூட அப்படிப்பட்ட ஒரு அறியாமையில் உழன்று கொண்டிருப்பவராகத்தான் தோன்றுகிறார். அந்த அறிவீனத்திலும் அவருக்குக் கோபம் வேறு பொத்துக் கொண்டு வருகிறது.
வால்மீகி ராமாயணம் ரொம்பவும் rawவான ஒன்று. பிற்காலத்தில் ராமர், சீதை போன்ற பாத்திரங்கள் இந்த அளவுக்கு தெற்காசியா முழுக்க பிரபலமாவார்கள் என்று வால்மீகி எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே சாதாரண கதாபாத்திரங்களுக்கு உரித்தான பலம், பலவீனங்களுடனும், எழுதப்பட்ட காலகட்டத்தின் அத்தனை கலாச்சார பிற்போக்குத்தனங்களுடனும்தான் வருகிறார்கள்.
ஆனால் பிற்காலத்தில் எழுதியவை ஏற்கனவே பரவி விட்ட ராமரின் பிம்பத்தைக் குலைக்கக் கூடாது என்ற கவனத்துடன் எழுதப்பட்டவை. பிந்தைய காலகட்டம் என்பதால் ஒரிஜினலில் இருக்கும் பல பிற்போக்குத்தனங்களை துடைத்து வைத்தவை. உதாரணத்துக்கு ஒன்று: ராமர் சீதையை சந்தேகப்பட்டு நெருப்பில் ஏறச்சொன்ன காட்சி கண்டிப்பாக துளசிதாசரை தொந்தரவு செய்திருக்கிறது. உதாரண புருஷர் என்று போற்றப்படும் ராமர் அப்படி செய்தது அவருக்குப் பிடிக்கவில்லை. அதற்கு அவர் தரும் தீர்வு: ராவணன் கடத்தியது சீதையையே அல்ல. ஒரு மாய சீதையைத்தான். ராமர் ஒரு இறை அவதாரம் என்பதால் கடத்தல் கண்டிப்பாக நடக்கும் என்று தெரிந்திருந்தது. அதற்கு முன்னெச்சரிக்கையாக சீதையை அக்னி பகவானிடம் ஒளித்து விட்டு அவளுக்கு பதில் ஒரு டூப்ளிகேட் உருவாக்கி விட்டார். அதைத்தான் ராவணன் கடத்தினான். போர் முடிந்து சீதை மீட்கப்பட்டதும் அவள் நெருப்பில் ஏற மாய சீதை ஒழிந்து அக்னி பகவான் ஒரிஜினல் சீதையை ரிடர்ன் பண்ணுகிறார். இது எப்படி இருக்கு?!
இந்தப் பிரச்சினைகளினால்தான் எனது எழுத்துக்களிலெல்லாம் நான் எப்போதுமே வால்மீகியிடம் இருந்து மட்டுமே ரெஃபரன்ஸ்கள் கொடுக்கிறேன். காரணம், அதுதான் ஒரிஜினல். மீதி எல்லாம் மாய-ராமாயணங்கள்; மாய சீதை மாதிரி!
சாமியார்களுக்கு இப்படிப்பட்ட scholarly rigour தேவையில்லை என்பதால் எது எந்த வர்ஷன் என்றக் கவலை இன்றி இஷ்டத்துக்கு உருட்ட முடிகிறது. மக்களிடம் நிலவும் ராமர் சீதையரின் அந்தப் புனித பிம்பம் காரணமாக ரொம்பக் கேள்வியும் கேட்க மாட்டார்கள்.
கடைசியில் சொல்ல வருவது இதுதான்: ராமாயணத்தில் அது சொல்லப்படுகிறது, இது சொல்லப்படுகிறது என்று யாராவது தூக்கிக் கொண்டு வந்தால், 'எந்த ராமாயணத்தில்?' என்று கேளுங்கள். 12ம் நூற்றாண்டு, 16ம் நூற்றாண்டு மாய-ராமாயண வர்ஷன்களாக இருந்தால் 'ரயிட்டு, விடு' என்று போய்க் கொண்டே இருக்கலாம்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
Visualization shows cross sectional view of South #Chennai's topography. Let's understand the geography of the city to develop a better understanding of the floods. Read full tweet :)
1. Chennai is an extremely flat land (50m rise over 15,000m run) in this section for example
2. Some of the areas can be below sea level during times of rain when the sea surges due to weather systems in the Bay of Bengal
3. It is not just that the land is at lower level and flat, but the sea over the time has created geomorphological features which favour stagnation in some places. The beach in Chennai extended over thousands of the years and these created mounds. Because of this, some of the interior land became marshy wetlands whereas the coast acted as barriers. OMR and ECR are those high lands created by the sea locking Pallikaranai and other interior areas. The British used these geomorphological features to construct the Buckingham canal which was sheltered from the open sea and thus able to run in parallel to the sea.
Unfortunately, we had a poor understanding of the geography and the geomorphology of the region - a problem that we have across India. Rapid urbanization in these critical areas have resulted in "floods". Undoing this is not going to be an easy task.