அறிவுவழி காணொலி இயக்கம் நடத்திய நவம்பர்-26 தியாக வரலாறு தொடர் சொற்பொழிவுகளில் எனது உரை.
தொடர் -1
-https://t.co/yz1ynWnnER
தொடர்- 2
https://t.co/ptPqwB9IJD
தொடர் -3
https://t.co/nj3JTl9qbe
இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டிய தியாக வரலாறு.
#BREAKING | ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!
கரூர் கொடுந்துயர வழக்கு விசாரணையை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு!
கரூர் கொடுந்துயர விவகாரத்தில் விசாரணை முடியும் வரை அமைச்சர்கள் பேச தடை விதிக்க வேண்டும் - திமுக மனு!
#AadhavArjuna | #Karur | #KalaignarSeithigal
கழக முதன்மைச் செயலாளர் திரு. கே.என்.நேரு அவர்கள் அறிக்கை
மேகதாதுவில் அணை கட்டும் புதிய விரிவான திட்டத்தை ஒன்றிய அரசிடம் வழங்கப் போவதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சொல்லி இருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் டி.கே.சிவக்குமார் அவர்கள் சொல்லி இருப்பது அவரது ஆணவப் போக்கைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்து விட்டது. பலவீனமான கூட்டணி அரசுதானே அமைந்துள்ளது என்ற எண்ணத்தில் சிவக்குமார் இப்படி பேசி இருப்பது போலத் தெரிகிறது. தங்களது காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் அங்கம் வகிப்பதால் எதிர்ப்பு இருக்காது என்று நினைத்து, துடுக்குடன் வார்த்தைகளை விட்டுள்ளார் அவர்.
மேகதாதுவில் அணை கட்டும் விஷயத்தில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாக சிவக்குமார் சொல்லி இருக்கிறார். காவிரி நதியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட எங்கள் கழகத் தலைவர் எந்தவிதத் தியாகம் செய்யவும் தயங்க மாட்டார்.
மேகதாது அணையைக் கர்நாடகம் கட்டுவது என்பது, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் துரோகம்!
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப்பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறித் தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தினை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
காவிரி உரிமைகளை நசுக்கும் விதமாக அமைந்துள்ள கர்நாடக மாநில துணை முதலமைச்சரின் பேச்சுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் இப்போதாவது வாய் திறந்து கண்டிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் போராட்டங்கள் விழலுக்கு இறைத்த நீராகி விடக்கூடாது. காவிரி விவகாரத்தில் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும், அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒரே குரலில் ஒலிக்கிறது - ஒரே உணர்வில் இயங்குகிறது என்பதை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தங்களுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக அரசுக்கு அழுத்தமாகத் தெரிவிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்டும் அவர்களது முயற்சியை துவக்கத்திலேயே முறியடிக்க வேண்டும்.
இப்போதாவது - இதற்காகவாவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே வாய் திறந்து பேசுவாரா என மக்கள் காத்திருக்கிறார்கள்.
💠கல்வித் துறையில் அரசியல் கண்ணோட்டமின்றி
மக்கள் நலனே முன்நிற்க வேண்டும்!
💠‘உலகமே பாராட்டி வியந்த காலை உணவுத் திட்டத்தைத் தொடர்வோம்’ என்ற அறிவிப்பு சரியான நிலைப்பாடு!
💠ஆட்சிகள் மாறினாலும் – சமூகநீதித் திட்டங்களும் தொடரவேண்டும்!
தேர்தல்கள் 5 ஆண்டுக்கு ஒருமுறை – நியாயமான ஜனநாயக முறையில் நடைபெறுவது வாடிக்கை. அதில் மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்பது எளிதில் முன்கூட்டியே கணிக்க முடியாத புதிராக அமைவதும் அதன் தனித்தன்மையாகும்.
💠ஆரோக்கிய அரசியலுக்கு அடையாளம் ஆகாது!
ஒரு தேர்தல் முடிவுக்குப் பின், மக்கள் வாக்களித்து வேறு ஒரு கட்சியை ஆட்சியில் அமர வைக்கும்போது, (அது முழு அறுதிப் பெரும்பான்மையாக இருந்தாலும் அல்லது கூட்டணி ஆட்சியாக அமைந்தாலும்) முந்தைய அரசின் திட்டங்களையெல்லாம்பற்றி ஆக்கப்பூர்வமற்றோ அல்லது வன்மை உணர்வோடோ அத்திட்டங்களைக் கைவிடுதலோ அல்லது தலைகீழாக மாற்றுவதோ – வீம்பு செய்வதோ ஆரோக்கிய அரசியலுக்கு அடையாளம் ஆகாது!
தமிழ்நாட்டில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களது தலைமையிலான த.வெ.க. மற்றும் கூட்டணி ஆட்சிகளின் ஆதரவுடன் அமைந்த ஆட்சியில், மிகவும் முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டிய கல்வித் துறையில் (உயர்கல்வி, பள்ளிக்கல்வித் துறை போன்ற முக்கிய துறைகளில்) அரசியல் கண்ணோட்டமின்றி, மக்கள் நலக் கண்ணோட்டமே மேலோங்கி இருக்கவேண்டும்.
💠சரியான நிலைப்பாடாகும்!
அதில், ஒன்றிய பா.ஜ.க. அரசின் மும்மொழித் திட்டத் திணிப்புக்கு, தலையாட்டாது, ஒப்புதல் தராது – ‘‘இருமொழிக் கொள்கையே தொடரும்’’ என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். ‘‘முந்தைய மு.க.ஸ்டாலின் தலைமையிலிருந்த ஆட்சி பின்பற்றிய முக்கிய திட்டமான உலகமே பாராட்டி வியந்த பள்ளி மாணவர்களுக்கான ‘காலை உணவுத் திட்டம்’ இந்த ஆட்சியிலும் தொடரும்’’ என்று, இன்று (25.5.2026) அவர் அறிவித்திருப்பது சரியான நிலைப்பாடாகும்!
இது செயற்பாட்டுக்கு வரவேண்டும்.
நீதிக்கட்சி ஆட்சியில் சர்.பிட்டி தியாகராயர் முதன்முதலில் 1920–1923 காலகட்டங்களில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து செயல்படுத்தினார். அன்றைய அதிகாரம் குறைவாக இருந்த இரட்டை ஆட்சியின் நிதி மறுத்தல் காரணமாகப் பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது.
பிறகு, 1954 இல் பதவிக்கு வந்த கல்வி வள்ளல் காமராசர் ஆட்சியில், பகல் உணவுத் திட்டம், மக்கள் திட்டமாக அனைவரின் நிதி உதவி பெற்றுத் தொடங்கியது. பிறகு அரசு கல்வி நிதியளிக்கும் திட்டமாகத் தொடர்ந்தது.
ஆட்சிகள் மாறிய நிலையில், தி.மு.க. – அ.தி.மு.க. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். மற்றும் அடுத்து வந்த ஆட்சி மாற்றங்களிலும், இத்திட்டம் நிறுத்தப்படாமல், ‘‘சத்துணவுத் திட்டம், இரண்டு முட்டை (அ) இரண்டு வாழைப்பழம்’’ என்று தொடர்ந்தது.
💠பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்!
அதைத் தாண்டி, மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில், ‘திராவிட மாடல்’ ஆட்சியில், பகல் உணவுத் திட்டத்துடன், ‘‘காலை உணவுத் திட்டத்தையும்’’ கொண்டு வந்ததனால், சிறு குழந்தைகளின் பசி போக்கி, வகுப்புக்குச் சென்று கவனம் செலுத்திப் படிக்க வாய்ப்பை ஏற்படுத்தியது.
இதன் விளைவு, குழந்தைகளின் கல்வி மீதான ஈர்ப்பு, வளர்ச்சி, ஏராளமான பிள்ளைகள் தவறாது வகுப்புக்குச் சென்றனர். பிஞ்சு உள்ளங்களுக்கு, பள்ளியும், வகுப்புப் பாடங்களும் விருப்பமிக்கவையாக ஆயின.
💠ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களாக!
இதுபோன்ற திட்டங்கள் அனைத்தையும், புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளவர்கள் தொடர்வது மிகவும் தேவையானது.
சமூகநீதித் திட்டங்களும் இதுபோல தொடர வேண்டியது முக்கியம். ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களாக!
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு, பொதுவானவர்களின் சுட்டிக்காட்டலுக்கு ஆளுங்கட்சி ‘அரசியல்’ பதில்கள் தராமல், ஆக்கப்பூர்வ ஆளுமை பதில்களையும், செயல்களையும் செய்வது அதன் முக்கிய பணியாக இருக்கவேண்டும்.
- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
25.05.2026
திமுக+அதிமுக கூட்டணி அமைக்கனும்னுதான் ஆளுநர் தாவெகவை 🤡 இரண்டு நாளா ஆட்சி அமைக்க அழைக்கவில்லை!!
அந்த புலி படம் 1.5 கோடி வரி ஏய்ப்பு வழக்கு ஏதோ விசாரணைக்கு வருதாமே? அதுக்கு இல்ல?
2017 ஆம் வருஷம் சசிகலாவுக்கு இதே மருந்து தான் கொடுத்தாங்க தெரியுமா?
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
TN ELECTION 2026: DMK SET TO RETAIN POWER WITH STRONG WOMEN VOTER BACKING
By R. Suresh Kumar
Agni News Services
Chennai, April 2026 — Early trends and voting patterns in the Tamil Nadu Assembly Elections 2026 indicate a decisive advantage for the DMK-led alliance, with Chief Minister M.K. Stalin appearing poised to secure another term in office. The data suggests a consolidation of support that reflects both governance approval and strategic voter alignment across key demographics.
One of the most striking features of this election is the significant support from women voters, particularly those aged 31 and above have voted in favour of the DMK alliance, underscoring the impact of welfare schemes, social security measures, and targeted policies that have resonated strongly with women across urban and rural regions.
TN CM M.K.STALIN’s leadership image is currently at its strongest point, shaped by administrative continuity, welfare-driven governance, and a relatively stable political environment. This has translated into voter confidence, particularly among middle-income households and beneficiaries of state-led initiatives.
In contrast, the AIADMK alliance appears to be facing a notable erosion in vote share, organisational challenges, fragmented leadership perception, and an inability to effectively counter the DMK’s narrative as key factors contributing to its declining support base.
While final results are awaited, the emerging trends strongly suggest that the DMK alliance is on track to form the government independently, without the need for significant post-poll negotiations.
உங்கள் @SunTV-யில் உங்களில் ஒருவனான நான் மனம் திறந்து பேசியிருக்கிறேன்.
தனித்துவமான தமிழ்நாட்டை வளர்த்தெடுக்க #வெல்வோம்_ஒன்றாக!
https://t.co/AalFOyYRRp
*இராஜபாளையம் தொகுதியில்* இன்று (18.04.2026) காலை
*விருதுநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் மாண்புமிகு KKSSR.இராமச்சந்திரன்* அவர்கள், இராஜபாளையம் தொகுதியின் *மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன்* அவர்களை ஆதரித்து,
இராஜபாளையம் நகர் பகுதிகளான, பொன்னகரம், மலையடிப்பட்டி, ஆவாரம்பட்டி, கனகராஜ் மருத்துவமனை அருகில், அம்பலப்புலி பஜார் மற்றும் மதுரை ராஜா கடைத்தெரு ஆகிய பகுதிகளில் *வாக்குப்பெட்டியில் 2 வது இடத்தில் உள்ள உதயசூரியன் சின்னத்தில்* வாக்குகள் கேட்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் வாரிய துணை தலைவர் ராசா அருண்மொழி அவர்கள், , நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, Ex.ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூர் சேர்மன்கள் பாலசுப்பிரமணியன், பேரூர் கழக செயலாளர்கள் இளங்கோவன், சுந்தர் நகர துணை சேர்மன் கல்பனா குழந்தைவேல், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், Ex.ஒன்றிய துணை சேர்மன் துரை கற்பகராஜ், மருத்துவரணி ராதா, கார்த்திகேயன், கூட்டுறவு சங்க Ex.தலைவர் பாஸ்கர் இ.தே.காங்கிரஸ் நகர தலைவர் சங்கர்கணேஷ், CPI மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ரவி, CPM நகர செயலாளர் சுப்பிரமணியன், விசிக மாவட்ட செயலாளர் சரவணன், மதிமுக நகர செயலாளர் மதியழகன், தி.க தலைமை கழக அமைப்பாளர் திருப்பதி, தேமுதிக நகர செயலாளர் குமார், இ.யூ.மு.லீக் மாவட்ட தலைவர் லிவாவுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கண்மணி காதர், நகர தலைவர் துவான்சா, SDPI தலைவர் சையதுஅபுதாஹிர், ஆதி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கருப்பசாமி, ம.நீ.மையம் நகர செயலாளர் ஜெய்சங்கர், தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் பாண்டியராஜ், திராவிட இயக்க பேரவை பாஸ்கரன் காங்கிரஸ் ஒன்றிய கழக செயலாளர் லட்சுமணன், CPM ஒன்றிய செயலாளர் சந்தனக்குமார், CPI ஒன்றிய செயலாளர் கணேசமூர்த்தி, ம.தி.மு.க ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், வி.சி.க ஒன்றிய செயலாளர் அன்பு, தே.மு.தி.க ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி அவர்கள், மக்கள் நீதி மையம் ஒன்றிய செயலாளர் கந்தசாமி, ஆதி தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் கந்தசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி ஒன்றிய செயலாளர் அல்லாபிச்சை, தமிழ்புலிகள் கட்சி அம்பேத்முருகன் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் திரலாக கலந்துகொண்டனர்.
Morning ride in Chennai Metro: சென்னைக்கே உரிய காலையின் சுறுசுறுப்புடன் பணிக்குச் செல்லும் மக்களிடம் உதயசூரியனுக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிச் சின்னங்களுக்கும் வாக்கு சேகரித்தேன்.
மெட்ரோ வாசத்தில் இருந்து, அடுத்து தஞ்சையின் மண்வாசனை நோக்கிப் புறப்படுகிறேன்...
#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
கழகத் தலைவரின் ஆசியோடும், திருச்சுழி மக்களின் பேரன்போடும் இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளேன். கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில் தொகுதியின் முன்னேற்றத்திற்காகவும், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் தொடர்ந்து உழைப்போம்!
ஆதரிப்பீர் உதயசூரியன்!!
கடைசிக் காலத்தில்
கலைஞர்
சிறைப்படுத்தப்பட்டிருந்தார்
என்ற அரசியல் கூற்று
உண்மைக்கு மாறானது
அதற்கு
நானும் ஒரு சாட்சி
கலைஞரின் உடல்நிலை
மருத்துவத்தின் கைகளுக்கு
மாறிவிட்டது
முதுமை - நோயுடைமை
தொண்டைத் துளை
பேச்சின்மை
மருந்துகளின் தாக்கம்
போன்ற காரணங்களுக்காக
மருத்துவர்களின் அறிவுரையைத்
தளபதி மு.க.ஸ்டாலின்
கவனமாகப் பின்பற்றினார்
நோய்த்தொற்றைத் தடுக்கவே
பார்வையாளர்கள்
ஒழுங்குபடுத்தப்பட்டனர்
அவர் ஆயுளை நீட்டிக்கவே
கட்டுப்பாடுகள் திட்டமிடப்பட்டன
வாரம் ஒருமுறை
அல்லது இருமுறை
நான் கலைஞரைச்
சந்திக்கும் வாய்ப்பை
யாரும் தடுக்கவில்லை
மென்மையாய்;
மிக மென்மையாய்
அவர் கையாளப்பட்டார்
கலைஞர் இரண்டாம்
குழந்தை நிலையில் இருந்தார்
தொட்டில் என்பது
ஒரு குழந்தைக்குச்
சிறையாகிவிடாது
தந்தையைப் பிள்ளைபோல்
பாதுகாத்தார் தளபதி
தந்தையை அவர்
சிறையில் வைக்கவில்லை;
சிறகில் வைத்திருந்தார்
தமிழர்கள் அறிவார்களாக
#கலைஞர் | @mkstalin