மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்களின் ஆணைப்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோவில்பத்து நெல் சேமிப்பு கிடங்கில் கடந்த 12.06.2026 அன்று துறை ரீதியாக ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அங்குள்ள பணியாளர்களுக்கு குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை
எடுக்கும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.இதையடுத்து கோவில்பத்து நெல் சேமிப்பு கிடங்கில் பணியாளர்களுக்காக ஐந்து இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ@TVKHQITWingOffl #TamilagaVettriKazhagam
#SelfConfidence
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் தொலைநோக்குப் பார்வையில், "போதை இல்லாத தமிழகத்தை" உருவாக்கும் இலக்கை நோக்கி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் "ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs" விழிப்புணர்வு ஓட்டத்தை நடத்துகிறது. சர்வதேச போதை ஒழிப்பு நாளான ஜூன் 26 அன்று காலை 6:00 மணிக்கு, சென்னை அண்ணா நினைவிடத்தில் தொடங்கும் இந்த 6 கிலோமீட்டர் தூர ஓட்டத்தில், 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். ஆரோக்கியமான சமூக மாற்றத்திற்காக நம்மோடு இணைந்து ஓடத் தயாராகுங்கள்!
பதிவு செய்ய கடைசி நாள்: 22.06.2026
இணையதள பதிவிற்கு: https://t.co/uQJItIIZcK
ஏழை எளிய மாணவர்களுக்குப் பயனளிக்கும் ‘தளபதி விஜய் இலவச பயிலகம்’ - 836-வது நாள்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், கழகப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், விருதுநகர் தென்மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கு. ஜெகதீஸ்வரி அவர்களின் உத்தரவின் பேரிலும், தளபதி விஜய் இலவச பயிலகம் இன்று 834-வது நாளை எட்டியுள்ளது.
இப்பயிலகம், கல்வி கற்க வசதியற்ற 101 ஏழை எளிய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் விளங்கி வருகிறது. @CMOTamilnadu
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் திரு. சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவர்கள் இன்று (17.06.2026) தனது இல்லத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.06.2026) மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் திரு. சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவர்களை அவரது இல்லத்தில் மலர்க்கொத்து வழங்கி, மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
When I landed in Chennai today, I felt this immense sense of happiness. I was going to meet our CM.
I’ve always felt that Vijay sir was never meant to be just a hero on screen. His energy, his presence, and the way people respond to him always felt like he was meant for something bigger.
What inspires me most is the courage it takes to step into a completely new arena. To leave behind what you have already mastered and take on a challenge where the stakes are so much higher. Not because it is easy, but because you believe you can make a difference.
I think all of us, at some point in our lives, are called to do more. To look beyond ourselves and ask how we can contribute. Very few people actually answer that call.
I have a feeling Vijay sir will surprise even the people who already believe in him. Not because of the position he holds, but because of the intent with which he approaches it.
Wishing him strength, wisdom and the courage to stay the course.
And for every young person watching, may this be a reminder that life can be so much bigger than the dream you started with.
@CMOTamilnadu
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று விரிவாக்கம் செய்யப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் அறிவிப்பு
#CMOTamilNadu #SocialWelfareDepartment #CMJosephVijay #TVKVijay
Hyundai Shipbuilding delegation calls on Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay, regarding the establishment of shipbuilding project in Thoothukudi, involving an investment of approximately Rs.38,000 Crore and generating around 15,000 direct employment opportunities.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (17.6.2026) தலைமைச் செயலகத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (17.6.2026) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
We thank Hon'ble Chief Minister of Tamil Nadu Shri C. Joseph Vijay for the meeting with Nasscom President Rajesh Nambiar, along with Shri Pradeep Yadav, IAS, Additional Chief Secretary to the Government of Tamil Nadu for the Information Technology and Digital Services Department and Shri R. Kumar, Hon'ble Minister for Artificial Intelligence, Information Technology and Digital Services
The conversation focused on:
• Strengthening industry-government collaboration to accelerate Tamil Nadu's technology ecosystem
• Building a deeper pipeline of industry-ready digital talent to support the state's growth ambitions • Advancing AI readiness across sectors and enabling wider adoption of emerging technologies
• Advancing Tamil Nadu's position as a destination for technology investment, innovation, and digital infrastructure Nasscom looks forward to continuing its collaboration with the Government of Tamil Nadu to support the state's technology and innovation ambitions.
@RNamb@CMOTamilnadu@TNITDepartment
தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் “sonஆதன” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் திரு @Udhaystalin அவர்களே...
அதிகாரத்தை பரவலாக்கும் , அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்?
நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல... மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது.
சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது!
தமிழ்நாட்டில் 04.05.2026 அன்று வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலே அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோஃபா மட்டும் தான்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @BussyAnand | @TVKHQITWingOffl |
#தமிழகவெற்றிக்கழகம் | #TVK |
தூத்துக்குடியில் சுமார் ரூ.38,000 கோடி முதலீட்டில் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் HD ஹுண்டாய் நிறுவனத்தின் (HD Korea Shipbuilding & Offshore Engineering – HD KSOE) உலகளாவிய வணிகப் பிரிவு இயக்குநர் திரு. யங் ஹூன் குவான் (Thiru. Young Hoon Kwon) தலைமையிலான உயர்மட்ட அலுவலர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (17.06.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா அவர்கள், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (TIDCO) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முனைவர் தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., ஆகியோர் சந்தித்து, கடந்த 11.6.2026 அன்று தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) இணைந்து தூத்துக்குடி மாவட்டம், அல்லிக்குளத்தில் உருவாக்கப்படவுள்ள விண்வெளி உற்பத்தி தொழிற்பூங்காவில் "விண்வெளி வாகனங்கள் பொதுத் தொழில்நுட்ப வசதி மையம் (CTF)" அமைப்பதற்காக கையெழுத்திடப்பட்ட சிறப்புமிக்க ஒப்பந்தத்தைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
#CMJosephVijay
தூத்துக்குடியில் சுமார் ரூ.38,000 கோடி முதலீட்டில் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் HD ஹுண்டாய் நிறுவனத்தின் (HD Korea Shipbuilding & Offshore Engineering – HD KSOE) உலகளாவிய வணிகப் பிரிவு இயக்குநர் திரு. யங் ஹூன் குவான் (Thiru. Young Hoon Kwon) தலைமையிலான உயர்மட்ட அலுவலர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.
#CMJosephVijay
தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தம்பி @AadhavArjuna ஆதவ் அர்ஜூனா , அவர்கள் இன்று எனது அண்ணாநகர் இல்லத்தில் என்னை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
#vaiko#TVK#aadhavarjuna#mdmk
மாற்றுத்திறனாளிகளின் சுயசார்பு வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள், 5 பயனாளிகளுக்கு ரூ.5.92 இலட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்.
மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் முனைவர் நெ. மரிய வில்சன் அவர்கள், தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையை தலைமைச் செயலகம், சென்னை வளாகத்தில் வெளியிட்டார்.
இந்த வெள்ளை அறிக்கை மூலம் மாநிலத்தின் தற்போதைய நிதி நிலை, வருவாய் மற்றும் செலவின மேலாண்மை, கடன் நிலவரம், எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிதி சீர்திருத்தங்கள் குறித்து மக்களுக்கு வெளிப்படையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
நிதி ஒழுங்குமுறை, பொறுப்புணர்வான நிர்வாகம் மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் முக்கிய ஆவணமாக இந்த வெள்ளை அறிக்கை அமைகிறது.
வெளிப்படைத்தன்மை பொறுப்புணர்வு வளர்ச்சியை நோக்கிய தமிழ்நாடு