நாட்டின் விடுதலைப் போராட்டத்திலும், சமூக விடுதலைப் போராட்டத்திலும் தீரத்துடன் பங்கேற்ற தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாள் இன்று.
“தனக்குக் கீழானவன் எவரும் இல்லை; தனக்கு மேலானவனும் எவரும் இல்லை” என்ற தந்தை பெரியாரின் வழியில் சமத்துவத்தை வலியுறுத்திய இமானுவேல் சேகரனார் அவர்களின் போராட்ட வாழ்வைப் போற்றுவோம்!
#ImmanuelSekaran
சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாளில், அவரது தியாகத்தைப் போற்றுவோம்.
அவர் கனவு கண்ட சாதியற்ற, சமத்துவமான சமூகத்தைப் படைத்திட உறுதியேற்று தொடர்ந்து பயணிப்போம்.
சாதி ஒழிப்பிற்காகவும் அனைவரும் சமமாக நடத்தப்படுவதற்கும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்���நாள்.
இந்நாளை அரசு விழாவாகக் கொண்டாடிட ஆணை பிறப்பித்து, இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபமும் அமைத்து அவரது நினைவைப் போற்றியது நமது #DravidianModel அரசு.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கம், சாதிய ஒடுக்குமுறை ஆகிய இரண்டையும் எதிர்த்துப் பாடுபட்ட இமானுவேல் சேகரனாரின் வழியில் அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவத்தை நிலைநாட்ட உழைப்போம்!
#ImmanuelSekaran
கடந்த ஆண்டு இதே நாளில், கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழக்க காரணமாக இருந்தும் எந்தவிதக் குற்ற உணர்ச்சியும், மனசாட்சியும் இல்லாமல் ஓடிப்போனவர்தான் இன்றைய ஒடுகாலி முதலமைச்சர்!
@Udhaystalin#KarurTragedy#KarurStampede#ஓடுகாலி_விஜய்
When it comes to CM @actorvijay:
Johny, Johny, Yes, Papa? Eating sugar?No, Papa. Telling lies? No, Papa. Open your mouth, திமுக, திமுக, திமுக! 🫢
#TVK#TVKFails@Udhaystalin
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த கோரச் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு கடந்துவிட்டது.
இத்துயரச் சம்பவம் ஏற்படுத்திய ரணம், தமிழ் மக்களின் மனங்களில் ஆறாவடுவாக இருக்கிறது. இனி இதுபோன்ற ஒரு துயர நிகழ்வு எங்கும் நடைபெறாத வகையில், அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலி.
எந்தச் சோதனைகள் வந்தாலும் கழகத்தின் மானத்தைக் காக்க தன் நெஞ்சை நிமிர்த்தி ந��ன்று, கழகத்தின் கொள்கைகளுக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்து, சேலத்தில் திமுகவின் வேர்களை ஆழமாகப் பதித்த இரும்பு மனிதர் திரு. வீரபாண்டி எஸ். ஆறுமுகம்!
#திராவிட_மா��ம்
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த ��ை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்ட���ர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளா��ல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய ��ண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
இன்று (17-09-2026), தந்தை பெரியாரின் பிறந்தநாள் மற்றும் சமூகநீதி நாளை முன்னிட்டு, கழகத் தலைவர் அவர்கள், சென்னை - அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். பின்னர், அண்ணா அறிவாலயத்தில், கழக உடன்பிறப்புகளுடன் சமூகநீதி நாள் உறுதி ஏற்றார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று திரும்பியவுடன், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை அழைத்து, அந்த நாடுகளில் தான் கற்றறிந்த பாடங்களையும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தார்.
அண்ணாவின் வழியில், அன்றைய முதலமைச்சர் மு.க. ��்டாலின் அவர்களும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன்பாகத் தனது விரிவான பயணத் திட்டம் மற்றும் பயணத்தின் நோக்கம் போன்றவற்றைப் பத்திரிகையாளர் சந்திப்பின் வாயிலாக எடுத்துரைப்பார். மக்களின் சார்பாக அமைச்சர் பெருமக்கள், கட்சியினர், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து அவரை விமான நிலையத்தில் வழியனுப்பி வைப்பார்கள்.
வெளிநாடு செல்வது ஏதோ மிகப்பெரிய சாதனை என்பதைப் பறைசாற்றுவதற்காக இத்தகைய நிகழ்வுகள் நடத்தப்படுவதில்லை. அது ஒரு குறியீடு ஓர் அடையாளம் ஒரு சம்பிரதாயம்.
“நமது நாட்டை முன்னேற்றுவதற்கான வழிமுறைகளை அறியவும், உலகெங்கும் உள்ள சிறந்தவற்றைக் கற்றறிந்து அவற்றின் நன்மைகளை நமது மக்களுக்குப் பெற்றுத்தரவும் நான் சென்று வருகிறேன்” என்ற நம்பிக்கையை மக்களிடம் தெரிவிக்கும் நிகழ்வு அது.
அதேபோல், வெளிநாட்டுப் பயணத்��ை முடித்துத் திரும்பிய பிறகும், அந்தப் பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள் என்ன, போடப்பட்ட ஒப்பந்த��்கள் என்ன, சந்தித்த நிறுவனங்கள் எவை, தமிழ்நாட்டிற்கு கிடைக்கவிருக்கும் பயன்கள் என்ன என்பன குறித்தெல்லாம் முதலமைச்சர் விரிவான விளக்கத்தை அளிப்பார்.
இந்தச் சூழலில், தற்போதைய தலைமைகளிடமும் அத்தகைய வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் எதிர்பார்க்கிறோம். அது இல்லாதபோது, நமது கடந்தகாலத்தின் உயர்வை எண்ணி ஆறுதல் அடைய வேண்டியிருக்கிறது.
இந்த நிலையில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை ஒட்டி, அவர் வெளிநாடு சென்று திரும்பியபோது ஆற்றிய உரையை மீண்டும் கேட்போம்.
நாடு என்பது வெறும் பூகோள வரைபடம் அல்ல, அங்கு வாழும் மக்களின் உணர்ச்சித் தொகுப்பு என்று நாடாளுமன்றத்தில் திராவிட இனத்தின் விடியலுக்காகவும், தமிழர்களின் உரிமைகளுக்காகவும் ஓங்கி முழங்கியவர் பேரறிஞர் அண்ணா.
தமிழர்கள் வாழவும், தமிழர்கள் உயரவும், தன் குரல் தேயப் பேசி, விரல் தேய எழுதி, நம்மையெல்லாம் வாழ்வித்த பேரறிஞர் அண்ணாவின் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையை மாற்றிட, தமிழ்நாட்டை மீட்டிட இந்த உரை உத்வேகம் அளிக்கும்.
உரையை கேட்க :-
https://t.co/XJwhfRIdTl
இலட்சியம் பெரிது; வெற்றியல்ல!
இந்தப் போரில் வெற்றி கிடைக்குமா, தோல்வி கிடைக்குமா என்று சிந்திக்கவேண்டியது அவசியமில்லை. நமது லட்சியத்தை இருதயத்தில் தீர்மானமாகக் கொண்ட பிறகு நமது கொள்கை நியாயத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் என்ற நிச்சயம் நமக்கு ஏற்பட்டுவிட்ட பிறகு, வெற்றி கிடைப்பது பற்றியோ, தோல்வி நேர்வது பற்றியோ நமக்குக் கவலையேன்?
நியாயத்தை அடிப்படையாக வைத்துச் செய்யப்படும் போரில் ஒரு முறை தோல்வியுற்றாலும் மறுமுறை நிச்சயம் வெற்றியே கிடைக்கும். - பேரறிஞர் அண்ணா.
#RememberingAnna #CNAisOurDNA #PerarignarAnna