உண்மையில் நம் தேசத்திற்கு தேவை இதுதான்.
இட ஒதுக்கீடு என்பது ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும். இன்று அனைத்து ஜாதியிலும் ஏழையும் இருக்கிறார்கள், பணக்காரர்களும் இருக்கிறார்கள்.
நாம் உயர்த்தி விட வேண்டியது ஏழைகளை என்பதை மறந்து விடாதீர்கள்.
இதை தேசம் முழுவதும் கடைபிடிக்க வேண்டும்
Indian Government Sources:
“That Khawaja Asif is mentally unstable is a known fact. That he could be entrusted with his current responsibility says much about today’s Pakistan. Clearly, he has no day job and passes time by making silly comments on matters of which he has little knowledge. Envy is always a bad motivation, particularly so from someone steeped in hate speech.”
தென்காசி: கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வில், சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால சதுர வடிவ செங்கல் படிக்கிணறு, ஈமத்தாழி மற்றும் பல்வேறு தொல்வாழ்வியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
#Tenkasi | #Archaeology | #Excavation | #TNGovt
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கருகே அமைந்துள்ள திருநீலக்குடி அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோவில், எண்ணற்ற வரலாற்றுச் சிறப்புகளையும் அதிசயங்களையும் கொண்ட ஒரு தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.
இந்தக் கோவிலின் வரலாறு மற்றும் சிறப்புகளைக் கீழே காணலாம்..
1. கோவிலின் வரலாறு மற்றும் தலப் பெருமை
பெயர்க் காரணம்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை, உலகைக் காக்க சிவபெருமான் அருந்தினார். அந்த விஷம் அவரது வயிற்றுக்குள் செல்லாமல் தடுக்க, அன்னை பார்வதி தேவி அவரது கழுத்தைப் பற்றிக் கொள்ள, விஷம் கழுத்திலேயே தங்கி நீல நிறமாக மாறியது. இதனால் அவர் "நீலகண்டர்" என்று அழைக்கப்பட, இத்தலம் "திருநீலக்குடி" என்று பெயர் பெற்றது.
தொன்மை: இது கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழமையான கோவில். திருநாவுக்கரசர் (அப்பர்) உள்ளிட்ட நாயன்மார்களால் பாடல் பெற்ற தலம். சோழர் காலக் கட்டடக்கலைக்குப் புகழ்பெற்றது.
பரிஹாரத் தலம்: மார்க்கண்டேய முனிவர் சிவபெருமானை வேண்டி இத்தலத்தில் தான் சிரஞ்சீவி (மரணமில்லா வாழ்வு) வரம் பெற்றார். எனவே, இது மரண பயத்தைப் போக்கும் தலமாகப் போற்றப்படுகிறது.
2. அதிசய நிகழ்வு: தைலாபிஷேகம்
இக்கோவிலின் ஆகப்பெரிய அதிசயம் மூலவர் நீலகண்டேஸ்வரருக்குச் செய்யப்படும் தைலாபிஷேகம் (நல்லெண்ணெய் அபிஷேகம்) ஆகும்.
சிவன் உண்ட விஷத்தின் உஷ்ணத்தைத் தணிப்பதற்காக அன்னை பார்வதி தேவி, ஈசனின் திருமேனியில் எண்ணெயைத் தடவி ஆற்றுப்படுத்தியதாக ஐதீகம்.
இன்றும் மூலவர் லிங்கத்தின் மீது எத்தனை பாத்திரம் நல்லெண்ணெய் ஊற்றினாலும், அது அத்தனையும் சிவலிங்கத்திற்குள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுகிறது. வெளியே வழிந்து வருவதில்லை.
அபிஷேகம் செய்த மறுநாள் சென்று பார்த்தால், லிங்கத்தில் எண்ணெய் தடவிய அடையாளமே தெரியாமல் உலர்ந்து காணப்படும். இது பல நூற்றாண்டுகளாகத் தொடரும் ஒரு மர்மமான அதிசயமாக உள்ளது.
3. பிற சிறப்புகள்
தல மரம்: இக்கோவிலில் உள்ள பலா மரம் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இங்கு விளையும் பலாப்பழங்களை முதலில் இறைவனுக்கு நிவேதனம் செய்யாமல், வெளியில் எடுத்துச் சென்றால் அப்பழம் கெட்டுப் போய்விடும் என்பது இன்றும் மக்களால் கண்கூடாக நம்பப்படும் உண்மை.
ஏழூர் விழா: சித்திரை மாதத்தில் நடக்கும் சப்தஸ்தான விழாவில், திருநீலக்குடி ஈசன் மற்றும் இறைவி உற்சவர்கள் ஏழு ஊர்களுக்குச் சென்று வருவது சிறப்பான நிகழ்வாகும்.
முக்கிய சந்நிதிகள்: பிரம்மா வழிபட்ட பிரம்மலிங்கம், சூரியன் சந்நிதி, நவக்கிரகங்கள் மற்றும் பைரவர் சந்நிதிகள் இங்கு அமைந்துள்ளன.
4. தரிசன பலன்கள்
மரண பயம் நீங்க: ஜாதகத்தில் கண்டங்கள் அல்லது மரண பயம் உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து எருமை, நீல நிற வஸ்திரம் மற்றும் எள் தானம் செய்து வணங்கினால், எம பயம் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ராகு தோஷம் நீங்க: ராகுவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்க உளுந்து, நீல வஸ்திரம் மற்றும் வெள்ளி நாகர் சிலைகளைத் தானம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.
மங்கல வாழ்வு: அம்பாள் திருமணக் கோலத்தில் அருள்பாலிப்பதால், திருமணத் தடை நீங்கவும், தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை மேலோங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
அமைவிடம்: கும்பகோணம் - காரைக்கால் சாலையில், கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் திருநீலக்குடி அமைந்துள்ளது.
“Ara Vazhi Nadappom” weekly dharma prachara classes in villages of Tirunelveli and Tuticorin districts. 29 pracharaks serve in as many centres. If you are interested in explaining dharma to children through simple stories in tamizh, you are welcome.
If I had shown you this video 12 years ago, you would probably have asked, “Which country’s airport is this?”
Today, the answer is simple.
This is India’s proud new Navi Mumbai International Airport, a symbol of a nation building world-class infrastructure at an unprecedented pace.
Under the leadership of Hon’ble PM Shri Narendra Modi ji, New India is not just dreaming big, it is delivering big. 🇮🇳
@blsanthosh@NainarBJP
#NaviMumbaiAirport #NewIndia #ViksitBharat #Infrastructure #ModiGovt
The greatest help you can offer the world is your own disappearance ❤️
The burning desire to save the world is just a reflection of our ego … it’s like applying a bandaid over the shadow !
Ohm Sri maatre namaha
#kamakshi#kamakshisharanam
🙏 Jagadguru Darshanam from New Delhi 🙏
Adi Shankaracharya Guru Peetham
Moolamnaya Sarvajna Shri Kanchi Kamakoti Peetham
Reverential salutations at the holy feet of Jagadguru Sri Shankara Vijayendra Saraswati Shankaracharya Mahaswamigal, the 70th Jagadguru Shankaracharya in the unbroken Guru Parampara established by Sri Adi Shankara Bhagavatpada over 2507 years ago.
नमामः शङ्करान्वाख्य-विजयेन्द्र-सरस्वतीम्।
श्रीगुरुं शिष्ट-मार्गानुनेतारं सन्मति-प्रदम् ॥
May His divine blessings guide us on the path of Dharma, wisdom, humility, and devotion.
Jaya Jaya Shankara 🙏
Hara Hara Shankara 🙏
தாம்பரத்தில் கொடூரம்: 12 வயது சிறுமிக்கு 4 மாதங்களாக பாலியல் தொந்தரவு - பிரியாணி கடை உரிமையாளர் போக்சோவில் கைது
தாம்பரம் அருகே பிரியாணி செய்யுமிடம் மற்றும் கடையில் வைத்து, மாஸ்டரின் 12 வயது மகளுக்குக் கடந்த 4 மாதங்களாகப் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த பிரியாணி கடை உரிமையாளரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்
சென்னை தாம்பரம் அடுத்த ஆதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது யூசுப் (56). இவர் அதே பகுதியில் பிரியாணி தயாரிக்கும் சமையல் குடோன் (Kitchen) ஒன்றை நடத்தி வருவதோடு, அதன் அருகிலேயே பிரியாணி கடை ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார்.
இவரது பிரியாணி சமையல் குடோனில் மாஸ்டராக வேலை பார்க்கும் ஒருவர், பள்ளி விடுமுறை நாட்களில் தனது 12 வயது மகளைத் தன்னுடன் வேலை செய்யும் இடத்திற்கு அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட உரிமையாளர் முகமது யூசுப், கடந்த நான்கு மாதங்களாக அந்தச் சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும், இதுகுறித்துத் தனது தந்தையிடம் கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் சிறுமியை மிரட்டியுள்ளார்
இந்நிலையில் சம்பவத்தன்று, வழக்கம்போல் சிறுமி தனது தந்தையுடன் பிரியாணி சமையல் குடோனுக்கு வந்துள்ளார். அப்போது, சிறுமியின் தந்தை அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். தந்தை இல்லாத அந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு, முகமது யூசுப் சிறுமியிடம் மீண்டும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, எதிர்பாராதவிதமாகச் சிறுமியின் தந்தை திடீரென உள்ளே வந்துள்ளார். தந்தையைக் கண்டதும் ஓடிச் சென்ற சிறுமி, தனக்கு நேர்ந்த கொடூரங்கள் அனைத்தையும் கண்ணீர் மல்கக் கூறி கதறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை, இச்சம்பவம் குறித்துச் சிட்லபாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் அதிரடி நடவடிக்கை எடுத்த மகளிர் போலீசார், சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து வழக்குப் பதிவு செய்து, பிரியாணி கடை உரிமையாளர் முகமது யூசுப்பை போக்சோ (POCSO) சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.