தோழர் விமல் மணி அவர்களின் முகநூல் பதிவு.
நேற்று எங்க PTR @ptrmadurai அண்ணனுடன் பேசிய ஒரு மணி நேரம் என்னுடைய திராவிட அரசியல் பற்றிய அறியாமையை முழுமையாக களைந்து யதார்த்தத்தை முகத்தில் அறைந்தாற்போல் புரிய வைத்திருகின்றது.
நேற்று அவருக்கு ஏர்போர்ட்க்கு கிளம்ப நேரமானதால் மட்டுமே அவரை விட்டு கிளம்பி வந்தேன்.
இல்லாவிட்டால் அவர் பேச பேச கேட்டுக்கொண்டே இருந்து இருப்பேன். அப்படி ஒரு அறிவுபூர்வமான, நேர்மையான அரசியல் பார்வை
எங்க PTR அண்ணன் எந்த அரசியல் சமரசமும் செய்துகொள்ளாத நேர்மையான கொம்பன் என்பதில் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி,பெருமை.
எங்க PTR அண்ணன் போல இந்திய அளவில் அனைவரும் போற்றும் ஒரு அறிவுஜீவியை, நேர்மையான அரசியல் கொம்பனை முன்னிலைப்படுத்தாமல் திமுக அரசியல் செய்வது மிக பெரும் வரலாற்று பிழை என்றுதான் சொல்லுவேன்.
Vimal Mani FB post.
(I agree with every point he makes, and I believe many of my friends would feel the same.)
ஒரு மராத்தி படத்திற்கு தமிழ் இசை அமைப்பாளர் ஏன்? ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை ஆன கோந்தல் பட இயக்குனர் பதில்
2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல பிரம்மாண்ட படங்கள் வெளியாகி இருந்தாலும் சத்தமே இல்லாமல் வெளியாகி தற்போது ஆஸ்கார் விருதுக்கு இந்திய சினிமா சார்பில்அனுப்பும் அளவுக்கு ஒரு மராத்தி திரைப்படம் இந்திய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
இந்த படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்துள்ளார்.
2025-ம் ஆண்டு வெளியான மராத்தி திரைப்படமான 'கோந்தல்' (Gondhal), நவம்பர் 13, 2026 அன்று இந்தியாவில் பல மொழிகளில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் தற்போது 99-வது ஆஸ்கர் விருதுகளில் 'சிறந்த சர்வதேச திரைப்படம்' பிரிவிற்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பரிந்துரையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்படத்தை இந்தியா முழுவதும் (பான்-இந்தியா) வெளியிடத் திட்டமிட்டதாகப் படத்தின் இயக்குநர் சந்தோஷ் தவக்கர் 'ஸ்கிரீன்' (SCREEN) இதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ஆசை, வஞ்சகம் மற்றும் பேராசை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த டார்க் த்ரில்லர் திரைப்படம், 'கோந்தல்' (தெய்வங்களை அழைப்பதற்கான ஒரு பாரம்பரிய நாட்டுப்புறக் கலை மற்றும் மதச் சடங்கு) கொண்டாட்டத்தின் ஓரு இரவைச் சுற்றி நடக்கும் கதையாகும். ஒரு இசைப் படமாகவும் (Musical) விளம்பரப்படுத்தப்படும் 'கோந்தல்' படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
'கோந்தல்' படத்திற்குப் புகழ்பெற்ற இளையராஜாவை ஏன் விரும்பினார்கள் என்பதை பகிர்ந்து கொண்ட இயக்குனர் இயக்குநர் சந்தோஷ், "நாங்கள் ஒரு அசலான மராத்தி நாட்டுப்புறக் கதையை உருவாக்க விரும்பினோம். இந்தியாவின் எந்தவொரு குக்கிராமத்தில் இருந்தும் இசையைக் கொண்டு வந்தால், அது உலகளவில் ஈர்க்கும். அந்த இயல்புத்தன்மை (rawness) இருக்க வேண்டுமென்றால், அதற்குரிய அனுபவம் தேவை; அதற்கு இளையராஜா சாரை விடச் சிறந்தவர் யார் இருக்க முடியும்.
அவர் ஒரு கிராமப்புறப் பின்னணியில் இருந்து வந்தவர்; தன் சகோதரருடன் சேர்ந்து நிறைய மேடை நிகழ்ச்சிகளை நடத்தியவர். ஒருநாள் அவர் என்னிடம், தான் ஹார்மோனியம் வாசிக்கும்போது பார்வையாளர்களிடம் இருந்து கைதட்டல்கள் கிடைப்பதைப் பற்றிக் கூறினார். ஆனால், அந்தக் கைதட்டலும் பாராட்டும் அந்த மெட்டிற்கும், அதை உருவாக்கியவருக்குமே தவிர தனக்கு அல்ல என்பதை அவர் உணர்ந்தார். இதுவே அவருக்கு உத்வேகமாக அமைந்தது, அதனால் மெட்டுகளை உருவாக்க முடிவு செய்தார்.
இதுவே அவருக்கு ஒரு ஞானோதயமாக அமைந்து, கிராமத்தை விட்டு வெளியேறினார். சென்னைக்கு வந்த அவர், பல இயக்குநர்களைச் சந்தித்தார். ஒன்பது-பத்து மாதங்களுக்குப் பிறகு, இறுதியாக அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, அதன்பின் அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை. அவர் ஒரு இசை மேதை. அதனால்தான் மக்கள் அவரை உண்மையிலேயே நேசிக்கிறார்கள், அவரைக் கடவுள் என்று அழைக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
இசைப் பிரிவில் 'கோந்தல்' படத்தைப் பரிசீலிக்க ஆஸ்கர் குழுவினர் 'கியூ ஷீட்' (Cue sheet) கேட்டது குறித்தும், ஆனால் இளையராஜா கியூ ஷீட் வைத்துப் பணியாற்றுவதில்லை என்பது குறித்தும் ஒரு சுவாரசியமான நிகழ்வையும் பகிர்ந்துகொண்ட சந்தோஷ் தவக்கர், 'கியூ ஷீட்' என்பது ஒரு திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் பின்னணி இசை, பாடல்கள் மற்றும் பிற இசைக் கோர்வைகள் உள்ளிட்ட ஒவ்வொரு இசைத் துணுக்கையும் பதிவு செய்யும் ஒரு விரிவான ஆவணமாகும்.
ஒவ்வொரு இசைத் துணுக்கின் தலைப்பு, இசையமைப்பாளரின் பெயர், அது ஒலிக்கும் கால அளவு, படத்தில் அது இடம்பெறும் இடம் மற்றும் இசையின் உரிமம் குறித்த விவரங்கள் இதில் அடங்கியிருக்கும். அடிப்படையில், ஒரு திரைப்படத்திற்குச் செய்யப்பட்ட அனைத்து இசைப் பங்களிப்புகளின் அதிகாரப்பூர்வப் பதிவாக இது செயல்படுகிறது.
இசை ஜாம்பவானுடன் இது தொடர்பாக நடந்த முழு உரையாடலையும் குறித்து பேசிய அவர், "ஆஸ்கர் குழுவினர் கியூ ஷீட் கேட்கிறார்கள்; ஆனால் ராஜா சாரோ, 'நான் கியூ ஷீட் வைத்துப் பாடலை உருவாக்கவில்லை. நான் எப்படி கியூ ஷீட் கொடுக்க முடியும்?' என்கிறார். இது தொடர்பாக நாங்கள் ஆஸ்கர் குழுவுடன் மாறி மாறி மின்னஞ்சல் (email-email) அனுப்பிக் கொண்டிருக்கிறோம் (சிரிக்கிறார்). நாங்கள் இசைப் பிரிவில் படத்தைப் பரிந்துரைக்கிறோம்.
இன்று (நவம்பர் 12) காலை, கியூ ஷீட் கேட்டு அவர்களிடமிருந்து எனக்கு மீண்டும் ஒரு மின்னஞ்சல் வந்தது. அந்தக் குழுவினர், 'சரி, எங்களுக்கு லிங்க் அனுப்புங்கள், இளையராஜா சார் மிகப்பெரிய அனுபவம் கொண்டவர் என்பதையும், கியூ ஷீட் வைத்துப் பணியாற்றுவதில்லை என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம்...' என்று கூறினர்.
அவரோட Birthday வில் அவருக்காக, singers, musicians அவருடைய பாடல்களையே பாடும்போது கூட, தப்பான ஸ்ருதில பாடினால் அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம், தன்னோட composition ஐ, அவர் எப்படி compose செய்தாரோ, அதை அப்படியே perform செய்வதுதான் musically சரியான approach.
வள்ளி படத்தின் என்னுள்ளே படத்தின் பாடலை பாடகர்கள், low pitchல் எடுக்க… அதை நிறுத்த சொல்லிவிட்டு, சரியான pitch ல் மறுபடியும் பாட வைக்கிறார்.
That’s our COMPOSER ILAIYARAAJA.
ஒரு நாளைக்கு 17 மணி நேரம் என ஆகஸ்ட் 31 முதல் அக்டோபர் 11 வரை சரியாக 42 நாட்கள் ஒரு போட்டி தேர்வுக்காக படித்தேன்.
இன்று ரிசல்ட் வந்தது. மெரிட் நம்பர் 5 ...😎
இதுல இருந்து நான் சொல்றது என்னனா..!
"தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்."
கம்யூனிஸ்டுகள் என்றால் எளிமையாக இருக்க வேண்டும் என்கிறார் ஒரு நீதிபதி. ஆனால் அவர் போற்றும் சனாதனிகளுக்கு இப்படி கூறவில்லை. சனாதனம் என்றாலே சமூக ஆடம்பரம் என்பதை அவர் அறிவார்!
https://t.co/56lkqqaQAD
Sir John Scott was astonished to see #ilaiyaraaja write music at a crazy speed without using a stopwatch/timer(his mind as the instrument-orchestra) in Chennai in 1993
#AcademyAwards are dealing with a composer unlike anyone
#atmanirbharbharat#music
Breaking News!
சுதந்திர இந்தியாவின் உச்ச நீதிமன்ற வரலாற்றில், இந்தியாவின் தலைமை நீதிபதியை நோக்கி ஒரு வழக்கறிஞர்!
“இந்த இருக்கையில் அமர உங்களுக்குத் தகுதியில்லை, உங்களிடம் நேர்மை இல்லை"
என்று சொல்லியதை அடுத்து, உச்ச நீதிமன்றம் விசாரணையின் ஒலிபரப்பை முடக்கியது. நீதிபதி சூர்யா காந்த், வழக்கறிஞரைப் பொறுத்திருக்குமாறும், "நாங்கள் இதைப் பரிசீலிக்கிறோம்" என்றும் கூறினார். ஆனால், வழக்கறிஞர் காத்திருக்க மறுத்துவிட்டார். தன்னுடைய வழக்கு மிகவும் அவசரமானது என்று குறிப்பிட்ட அவர், இதைப் பற்றிப் பேசுவதற்கு முன்பாகவே மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
வழக்கறிஞர்: இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த நவம்பர் 2-ஆம் தேதியன்று நீதிபதி [சூர்யா காந்த்] அவர்களின் அலுவலகத்தில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. 15 நாட்கள் ஆகியும், அவர் எனக்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை. எனவேதான், நான் இந்த நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நீதிபதி மோகனா: இது போன்ற விஷயங்களை நீங்கள் இங்கே குறிப்பிடக் கூடாது.
வழக்கறிஞர்: இல்லை, இது அவசரமான விஷயம் என்பதால் வந்தேன். முதலில் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து இந்த ஆவணங்களைப் பாருங்கள்.
நீதிபதி சூர்யா காந்த்: நாங்கள் இதைப் பார்க்கிறோம், நீங்கள் பொறுத்திருங்கள்.
வழக்கறிஞர்: இல்லை, நான் காத்திருக்க மாட்டேன். நீங்கள் இந்த இருக்கையில் அமரக் கூடாது, உங்களுக்கு அதற்குத் தகுதியில்லை. அந்த இருக்கையில் அமர்வதற்குத் தேவையான நேர்மை உங்களிடம் இல்லை.
இதை விட இந்த நாட்டிற்கு வேறு அவமானம் தேவையில்லை! நாட்டின் அனைத்து மட்டங்களிலும், ஊழலும் லஞ்சமுன் தலை விரித்து ஆடுகிறது! இங்கு யாரும் உத்தமன் இல்லை!
இயக்குனர் மனசுல அதும் அந்த பழங்குடி இனத்த ஆராய்ந்தவன் அந்த இசை எப்படி இருக்கனும்னு சொல்றாப்ல..அதை நம்மாளு ஏற்கனவே கொண்டு வந்துருக்காப்ல. அப்ப ராஜாசார் எவ்ளோ உள்வாங்கிருக்கார் அந்த இசைய.. #Gondhal
'கோந்தல்' (Gondhal) படைப்பை ஆஸ்கர் விருதுக்கான இசைப் பிரிவில் பரிசீலிப்பதற்கு, அதன் 'கியூ ஷீட்' (cue sheet - இசைக் குறிப்புத் தாள்) தேவை என்று ஆஸ்கர் குழுவினர் கேட்டதற்கு, இசைஞானி அது போல எதுவும் பயன்படுத்துவதில்லை என கூறியதாக “கோந்தல்” திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சந்தோஷ் தவக்கர் அளித்த பேட்டியை காண முடிந்தது. "ஆஸ்கர் குழுவினர் “கியூ ஷீட்” கேட்கிறார்கள். ஆனால் ராஜா சார், 'நான் எந்தக் கியூ ஷீட்டையும் வைத்துக் கொண்டு பாடலை உருவாக்கவில்லை. பிறகு எப்படி என்னால் கியூ ஷீட் கொடுக்க முடியும்?' என்று கேட்கிறார். இதற்காக ஆஸ்கர் குழுவினருடன் நாங்கள் மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம். அதற்கு அவர்கள், 'சரி, அந்தப் பாடலுக்கான இணைப்பை (link) மட்டும் அனுப்புங்கள். இளையராஜா சாருக்கு மிகப் பெரிய அனுபவம் இருக்கிறது, அவர் கியூ ஷீட் வைத்துக்கொண்டு வேலை செய்ய மாட்டார் என்பது எங்களுக்குப் புரிகிறது...' என்று கூறினார்கள்.
இளையராஜா சார், 'நான் எப்போதும் கியூ ஷீட் வைத்துக்கொண்டு பாடல் உருவாக்குவதில்லை. இசை தேவைப்படும் போது, எனது அனுபவத்தை கொண்டு, அந்தந்த தருணத்தில் எனக்கு தோன்றும் உணர்வின் அடிப்படையில் மெட்டை உருவாக்குகிறேன். உங்கள் முன்னால் தான் இந்த மெட்டை உருவாக்கினேன். இந்த இசையை எப்படி உருவாக்கினேன் என்பது உங்களுக்கு தெரியும். பிறகு எதற்கு நான் கியூ ஷீட் கொடுக்க வேண்டும்? இந்தப் படத்தை இசைப் பிரிவில் சேர்த்துக் கொள்ள வேண்டுமா வேண்டாமா என்பதை ஆஸ்கர் குழுவினரே முடிவு செய்துகொள்ளட்டும்' என்று சொல்லிவிட்டார். நான் அவரிடம், 'சார், இந்த இசைப் பிரிவு முக்கியமானது, நாம் படிவத்தை நிரப்பியாக வேண்டும்' என்று கூறினேன். அதற்கு அவர், 'நீங்களே பார்த்துச் செய்துகொள்ளுங்கள். இது எப்படி உருவாக்கப்பட்டது என்று அவர்களிடம் சொல்லிவிடுங்கள். அவர்களுக்கு விருப்பம் இருந்தால் ஆஸ்கர் இசைப்பிரிவில் சேர்த்துக் கொள்ளட்டும்' என்று கூறிவிட்டார்.
ஆஸ்கர் குழுவுடன் நடைபெற்ற தொடர் உரையாடல்கள் குறித்து விளக்கிய சந்தோஷ், “ஆஸ்கர் குழுவிடம் இருந்து ஒரு செய்தி வந்தது. அதில், திரைப்படத்தை சமர்ப்பிக்குமாறும், அதைத் தங்கள் குழுவிடம் காட்டி, ‘க்யூ ஷீட்’ (cue sheet) இல்லாமலேயே எப்படி மாற்றங்களைச் செய்யலாம் என்று ஆலோசிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இது இளையராஜா சாரின் அனுபவத்திலிருந்து வருகிறது; அனுபவம் ஒருவருக்குத் தன்னம்பிக்கையைத் தருகிறது. அவரது அறிவுத்திறன் (IQ) மிகவும் அபாரமானது. ஒருமுறை அவரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி விட்டால் போதும், அடுத்த 7,8 நாட்களுக்கு மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய அவசியமே இருக்காது. ‘இதைத் தான் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டீர்கள் அல்லவா? மீண்டும் சொல்லாதீர்கள், அது உங்கள் நேரத்தை வீணடிக்கும்’ என்று இளையராஜா சார் கூறுவார்; அதாவது, ‘என் நேரத்தை வீணடிக்காதீர்கள்’ என்று அவர் அர்த்தப்படுத்துகிறார். அவர் நேரத்தை கடைப்பிடிப்பதில் மிகவும் கண்டிப்பானவர். குறிப்பிட்ட காலத்திற்குள் வேலையை முடித்து கொடுத்து விடுவார். பாரம்பரிய இசைக்கருவிகளை கையாள்வதில் அவருக்கு மிகுந்த அனுபவம் உண்டு. அவரது இசையமைக்கும் விதம் என்பது மிகவும் எளிமையானது” இவ்வாறு அந்த பேட்டியில் காண முடிந்தது.
அம்மா தான் சமைத்தை உணவை தன் மகனுக்கு ஊட்டி விடும் பொழுது ஒரு உணர்வு வெளிப்படுகிறது.. அந்த உணர்வின் அனுபவத்தை வார்த்தைகளால் படிப்படியாக விவரித்து ஒரு விளக்கமான அட்டவணையை கொடுன்னு கேட்பது போல தான் இருக்கிறது ஆஸ்கர் போன்ற விருதுகளின் நெறிமுறைகள். இசை என்பது ஒரு உணர்வு. அது ஊற்றாக வெளிப்படும் தருணம் அதற்கான சாஸ்திர சம்பிரதாய பழக்க வழக்க நடைமுறையை அட்டவணைப் படுத்துவது என்பது இசையை தொழில் ரீதியில் பயன்படுத்துபவர்களுக்கு வேண்டுமென்றால் சாத்தியப்படலாம். ஆனால் இசையே வாழ்வாக கொண்டவருக்கு இந்த நெறிமுறைகள் எல்லாம் சரிப்படாதது. மேலும் அவரை பொறுத்த மட்டில் அவரது இசை என்பது எந்த ஒரு விருதுக்காகவும் அடையாளப்படுத்தப்படுவது அல்ல என்பதே எண்ணம்.
5 மணி நேரம் தன் ரசிகர்களுக்காக நின்று கொண்டே கச்சேரி நடத்துபவருக்கு ஒரு அரை நாள் செலவிட்டு ஆஸ்கார் குழுவினர் கேட்ட படி கியூ ஷீட் தயாரித்து கொடுப்பது எல்லாம் பெரிய வேலையே இல்லை... ஆனால் அவருக்கு அது அவசியமில்லை என்பதாக தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம் ஆஸ்காருக்காக பட தயாரிப்பாளர் மெனெக்கடுவது என்பது அவரின் தனிப்பட்ட விருப்பமாகவும் அதற்காக இசைஞானி தன்னுடைய ஆதரவை அளிப்பதாகவும் தான் பார்க்க வேண்டும்...
என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஆஸ்கர் எல்லாம் வேணாம் தலைவா... மக்கள் அனைவரும் ஆஸ்கரை விட ஆயிரமாயிரம் மடங்கு விலை மதிப்பில்லாத அன்பை உங்கள் மேல் வெச்சிருக்கோம்....
வந்தா இஷ்டம். வரலீன்னா நஷ்டம்... ஆஸ்கருக்கு தான்....
#இசைஞானி ❤❤❤
கதையோட ஹீரோ தன்னோட முகத்த காட்டாம ஒருத்தன கொலை செய்ய வரான். அப்போ கொட்டும் மழை கார்ல துரத்தறது. பிறகு கொலை செய்யும் நபரை நெருங்க.. நெருங்க வரும் பாருங்க Backround music.. இசையால் பார்வையாளரை பயமுறுத்தும் thriller music அதும் 1:20 நிமிசத்துல இருந்து வேற ரகம்.. கேளுங்க #ilayaraja