எமது
குரல்
எப்போதுமே
எந்த
தலைவருக்குமானாதாக
ஒரு போதும்
இருக்காது....!!
ஏனென்றால்
தலைவனை
நேசிப்பவனல்ல....!!
தலைமுறைகளின்
வாழ்வியலை
யோசிப்பவன்........!!!!!!
♥️💚..
பைசன் (எ) காளமாடன்! – பொழுதுபோக்கு படமல்ல; போற்றிக் கொண்டாட வேண்டிய சீர்திருத்தப் பாடம்!
என்னுடைய அன்புத்தம்பி மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில், அன்புத்தம்பி பா.இரஞ்சித் அவர்களின் தயாரிப்பில், அன்புமகன் துருவ் விக்ரம் அவர்களின் அசாத்திய நடிப்பில் வெளிவந்துள்ள 'பைசன்' (BISON) திரைப்படத்தைச் சிறப்புக்காட்சியில் கண்டு களித்தேன். கோயில் திருவிழாவிற்குச் சென்று வந்த குழந்தையின் உற்சாகம் படத்தைப் பார்த்து முடிக்கும்போதும் மனதில் தொற்றிக்கொண்டது. ஒரு திரைப்படம் நம் கண் முன் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற உணர்வே எனக்கு வரவில்லை. நம்முடன் வாழும் சக மனிதர்களின் வாழ்வியலாகவே கதைக்களம் முழுவதும் மனம் ஒன்றிப்போனது. அந்த அளவிற்கு ஆகச் சிறந்த திரைப்படைப்பை தம்பி மாரி செல்வராஜ் படைத்து அளித்துள்ளார்.
நடிகர்களை வைத்து, கபடி விளையாட்டை மையப்படுத்தி ஒரு இயக்குநர் ஒரு திரைப்படத்தை எடுத்துள்ளார் என்று எவருமே நம்ப முடியாது. திரையில் உண்மையிலேயே கபடி விளையாட்டு நடைபெறும் அனுபவத்தைப் பார்க்கும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் கடத்தும் மாயத்தைத் தம் கலைத்திறனால் படைத்தளித்துள்ளார் தம்பி மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை எனத் தன்னுடைய ஒவ்வொரு திரைக்காவியங்களிலும் அடுத்தடுத்த எல்லையைத் தொடும் தம்பியின் கலைத்திறன் இப்படத்தில் மேலும் மெருகேறியுள்ளது. படத்தில் தேவையற்ற காட்சி என்றோ, கதாபாத்திரம் என்றோ, ,உரையாடல் என்றோ எதுவுமில்லை. அந்த அளவிற்கு வழக்கம் போலத் தம்முடைய திரைக்கதையை நகர்த்தும் திறனால் மிக நேர்த்தியாகப் படத்தைப் படைத்தளித்துள்ளார்.
தம்பி மாரி செல்வராஜின் வலி தோய்ந்த வார்த்தைகள்தான் படத்தின் உரையாடல்களாக வெளிப்பட்டுள்ளது. “நான் பிறக்கிறதுக்கு முன்னாடியே என் மீது பழியும், பகையும் சுமத்தப்பட்டிருக்கிற இந்தச் சூழல எப்படி சார் புரிஞ்சிக்கறது?" என்பதாகட்டும், "வேலிய உடைக்கிறது மட்டுமல்ல, வேலியே போட முடியாத உயரத்திற்கு உயர்வதும் புரட்சிதான்!" என்பதாகட்டும், “உங்களுக்கும் எனக்கும் பாகிஸ்தான ஜெயிக்கனும்கிறதுதான் சார் இலக்கு; அவனுக்கு மட்டும்தான் உங்களையும், என்னையும் நம்ம எல்லோரையும் சேர்த்து ஜெயிக்கனுங்கிற வெறி இருக்கு; அவன்தான் சார் விளையாடனும்” என்பதாகட்டும், சிந்திக்க வைக்கும் அழுத்தமான உரையாடல்கள் ஒவ்வொன்றுமே காலம் கடந்தும் நிற்கும் தத்துவங்களாக உள்ளத்தில் ஊடுருவி சிந்தனைப் புரட்சிக்கு வித்திடுகிறது.
கண்கள் நிறையக் கனவுகளோடும், விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடும் ஒரு திறமை வாய்ந்த கபடி வீரன், சாதிய மோதல்கள் சூழ்ந்த கிராமச் சூழல், குடும்பம், காதல், ஊர்ப்பகை, அதிகாரம், அரசியல் செல்வாக்கு என அத்தனை தடைகளையும் தாண்டி எப்படி வெல்கிறான் என்ற கனமான கதாபாத்திரத்தை ஏற்று கதையின் நாயகனாக நடித்திருக்கும் அன்புமகன் துருவ் விக்ரம், நடித்துள்ளார் என்பதை விட வனத்தி கிட்டானாகவே வாழ்ந்துள்ளார் என்று கூற வேண்டும். அந்த அளவிற்கு தம் முந்தைய படங்களை விடவும் பன்மடங்கு கூடுதல் ஒப்படைப்புடன் ஏற்ற பாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார் துருவ் விக்ரம். ஒவ்வொரு படத்திற்கும் உடல் அளவிலும், உணர்வு அளவிலும் தந்தை விக்ரம் எந்த அளவிற்குக் கடினமான உழைப்பைச் செலுத்துவாரோ அதே அளவிற்குக் கடின உழைப்பை துருவின் நடிப்பில் காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பைசன் திரைப்படம் துருவின் ரசிகனாகவே என்னை மாற்றிவிட்டது. வரும் காலத்தில் திரைத்துறையில் மிகப்பெரிய சாதனைகள் புரிந்து பெரும் நடிப்பின் உச்சத்திற்கு துருவ் செல்வார் என்று முழுமையாக நம்புகிறேன்.
சாதிய மோதல்கள் நடக்கும் சமூகத்தில் தான் பெற்ற பிள்ளைகளைக் காக்க துடிக்கும் ஒரு தந்தையின் வலி மிகுந்த வாழ்வினை தம் அசாத்திய நடிப்பால் நம் கண் முன்னே கொண்டுவந்து கலங்கச் செய்துள்ளார் அன்புச்சகோதரர் பசுபதி. அவரைப்போலவே படத்தின் முதன்மை கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாகச் செய்து, உயிரோட்டமாக நடித்திருக்கும் அன்புத்தம்பி அமீர் மற்றும் லால், படம் முழுதும் விளையாட்டு வாத்தியாராக வலம் வரும் அருவி மதன் உள்ளிட்ட அனைவருமே தங்களுடைய நடிப்புத்திறனை முழுமையாக வெளிப்படுத்தி, படத்தின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர். படத்தின் நாயகியாக காதலை வெல்ல வைக்கப் போராடும் அனுபமா பரமேஸ்வரனும், நாயகனின் அக்காவாக தம்பியை வெல்ல வைக்க வாதாடும் ரஜிஷா விஜயனும் போட்டிப்போட்டு சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களைப்போலவே உண்மையான கபடி வீரரான பிரபஞ்சன், அழகம் பெருமாள், ரேகா நாயர் உள்ளிட்ட அனைவருமே நடிப்புத்திறனால் படத்தைத் தாங்கிப் பிடிக்கின்றனர்.
தீக்கொளுத்தி, இரெக்க இரெக்க, காளமாடன் கானம் உள்ளிட்ட தம்பி மாரி செல்வராஜின் வலி தோய்ந்த பாடல் வரிகளுக்கும் தம் இசையால் உயிர் கொடுத்து உருக வைத்துள்ளார் தம்பி நிவாஸ் பிரசன்னா. காட்சிக்குக் காட்சி பரபரப்பைக் கூட்டும் தம்பி எழில் அரசுவின் ஒளிப்பதிவும், தம்பி சக்தி திருவின் படத்தொகுப்பும், குமார் கங்கப்பனின் கலை இயக்கமும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் மூலம் நம்மை ஒன்றச்செய்து இருக்கையோடு கட்டிப்போடுகின்றது. அதிரடி சண்டைக் காட்சிகள் அழகாகப் படமாக்கப்பட்டு படத்திற்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது.
அனைவரும் ரசிக்கத்தக்க வகையில் தம்முடைய வலி மிகுந்த வாழ்வியலைக் கலைப்படைப்பாகத் தரும் தம்பி மாரிசெல்வராஜின் அளப்பரிய திரைக்கதை சொல்லும் திறன் வியக்க வைக்கிறது. "ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மனம் இருக்கிறது. அதில் சில நல்ல குணங்களும் இருக்கத்தான் செய்கின்றன" என்பதை பைசன் படத்தின் வழியே வெளிக்காட்டியதன் மூலம் தம் படைப்புக்கு மிகப்பெரிய நேர்மையைச் செய்துள்ளார் தம்பி மாரிசெல்வராஜ். இளம் வயதில் இத்தனை முதிர்ச்சியான கலைப்படைப்பைத் தொடர்ச்சியாகத் தரும் அன்புத்தம்பி மாரி செல்வராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவருக்கு என்னுடைய அன்பு நிறைந்த வாழ்த்துகள்!
உலகில் உள்ள பல விளையாட்டுகள் ஒருவர் கை மற்றவர் மீது பட்டுவிட்டால் ஆட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளது. ஆனால், எங்கள் தமிழின முன்னோர்கள் கண்டுபிடித்த கபடி விளையாட்டுதான் ஆகச்சிறந்த மூச்சுப் பயிற்சியாக உடலுக்குப் பெருநன்மை செய்வதோடு மட்டுமின்றி, எதிரணி வீரரைத் தொடுவதன் மூலமும், காலைப்பிடித்து, கட்டியணைத்து தடுப்பதன் மூலமும் வெற்றிக்கான புள்ளிகளைப் பெறமுடியும் என்ற விதிகளை வகுத்ததது, தொடக்கூடாது, பார்க்கக்கூடாது என்ற சமூகச் சாதியக் கொடுமைகளுக்கு எதிரான புரட்சிகர சிந்தனைதான் என்பது தமிழர்கள் நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய பண்பாட்டு விழுமியமாகும்
அன்புமகன் துருவ் விக்ரம் உள்ளிட்ட பைசன் திரைப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
பைசன் (எ) காளமாடன் திரைப்படம் வெறும் பொழுதுபோக்கிற்கான படமல்ல; உலகம் முழுவதும் தமிழர்கள் போற்றிக் கொண்டாட வேண்டிய சமூகச் சீர்திருத்தப் பாடம்! அனைவரும் திரையரங்கிற்குச் சென்று பாருங்கள்! படியுங்கள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#Bison 🦬 #BisonKaalamaadan @NeelamStudios_@beemji@mari_selvaraj #DhruvVikram @PasupathyMasi
#AmeerSultan @anupamahere@LalDirector@Ezhil_DOP@editorsakthi@nivaskprasanna@iamSandy_Off@dhilipaction@Kumar_Gangappan@valentino_suren@rajisha_vijayan@aegan_ekambaram@aruvimadhan@alaganperumal@hariharalorven@kabilanchelliah
இந்த
மண்ணை
ஆள ,,
உன்
அதிகாரத்தை
நிலைநிறுத்து....
அதற்காக
உன் தகுதியை
வளர்க்கனுமே
தவிர,,,
அதைவிடுத்து
ஒப்பாரியும்,,,
ஓலங்களும்,,,
தீர்வாகாது.....!!!!
மருதநிலத்து
மண்ணின்
பாண்டியராஜாக்கள்
வரிசையில்
எம் ,,
#செல்வாபாண்டியர்
♥️💚..
கலை, வீரம், நிர்வாகம், ஆன்மீகம் என அனைத்திலும் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்து, பல்லாயிராண்டுகள் கடந்தும் உலகை வியக்க வைத்த தமிழரின் கட்டிடக்கலைக்குப் பெருமை சேர்த்த மாமன்னர் இராசராச சோழனின் 1040- வது சதய விழாவில் தஞ்சையில் இன்று கழக நிர்வாகிகளுடன் இராசராச சோழனின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
திராவிடர் கழகமும் தந்தை பெரியாரும் தான் அன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்றார்கள்.
திமுக போன்ற கட்சிகள் கூட ஒதுங்கி கொண்டனர், பெரியார் தான் அன்று அந்த சமூக விரோதிகளை கண்டித்தார், அன்றைய முதல்வர் காமராஜரிடம் சொல்லி அவர்களை கைது செய்ய வைத்தார்.
03-11-1957 அன்று திராவிடர் கழக மாநாட்டில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றினார் நீங்கள் ஜாதி வெறியர்களை ஒடுக்காவிட்டால் நான் அந்த மக்கள் சார்பில் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று அரசை எச்சரித்தார்.
அன்று எதிர்கட்சிகள் முதலானோர் காமராஜர் ஆட்சியை கடுமையாக விமர்சித்தன ஆனால் பெரியார் ஒருவர் தான் இப்படி தலையங்கம் எழுதினார்
விடுதலை தலையங்கம் (11.11.1957)
“முதுகுளத்தூர் கலவரத்துக்குப் பிறகு தமிழ்நாட்டிலுள்ள ஆதி திராவிடர்கள் அனைவரும் காமராசர் ஆட்சிக்கு எதிராக உள்ள அரசியல் கட்சிகளை நஞ்சாக வெறுத்துவிட்டனர்”
என்றுமே தந்தை பெரியார் பாதிக்கப்பட்ட மக்களுடன் மட்டுமே நின்றிருக்கிறார்.
கண்ணகி நகர் கார்த்திகா. கடந்த சில நாட்களாக தமிழ்நாடு பெருமிதத்தோடு கொண்டாடிக் கொண்டிருக்கும் பெயர்.
பஹ்ரைனில் நடைபெற்ற 3-ஆவது Asian Youth Games மகளிர் கபடி போட்டியில் சாதித்துவிட்டு இன்று தாயகம் திரும்பி இருக்கிறார்.
கபடி போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வெல்ல முக்கியப் பங்காற்றிய தங்கையின் திறமையைப் பாராட்டி மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் ரூ.25 லட்சத்தை உயரிய ஊக்கத் தொகையாக இன்று வழங்கினார்கள்.
கபடி ஆட்டத்தில் புயல் போன்ற திறமையை வெளிப்படுத்தி, இன்னும் பல பெண்கள், விளையாட்டை நோக்கி வருவதற்கான Role Model-ஆக இருக்கும் தங்கை கார்த்திகாவை நாம் பாராட்டினோம்.
அவரது வெற்றிப்பயணம் தொடர என்றும் துணை நிற்போம்.
@SportsTN_@Atulyamisraias #JMeghanathaReddyIAS
#BisonKaalamaadan: மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்!
தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற கதையை மிகச் சிறப்பான திரை அனுபவமாக மாற்றியுள்ளார் இயக்குநர் @mari_selvaraj.
அவரது ஒவ்வொரு படத்தையும் நான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். ஒவ்வொன்றும் ஒரு 'sharp message'-ஐயும் தாக்கத்தையும் நம் மனங்களில் பதிக்கத் தவறியதே இல்லை. அவ்வகையில் விளையாட்டுத் துறையை மையமாக வைத்து, இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிய பாதையை, அரசியலை மிக முதிர்ச்சியுடன் காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ் அவர்கள்.
சகோதரர் மாரியின் திரைமொழியும், கலைநேர்த்தியும், மேலும் மேலும் மேம்பட்டு வருவதற்கு எடுத்துக்காட்டாக 'பைசன்' மிளிர்கிறது. இத்திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, மாரியின் திரைக்கதைக்கு உயிரூட்டியுள்ள துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா, ரஜிஷா உள்ளிட்ட நடிகர்கள், பின்னணியில் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்!
இதுபோல மேலும் பல படைப்புகளைத் தமிழ்த் திரையுலகுக்கு வழங்க மாரி செல்வராஜ் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்!
Have watched #Bison. Director @Mari_Selvaraj sir has once again delivered a powerful film.
Bison is a heartwarming sports drama about an Arjuna award winning Kabaddi player who rises above a violent and troubled society.
Mari sir captures the journey of a young man who places his faith in sport more than anything else, which ultimately leads him to greatness.
@DhruvVikram5 and the rest of the cast have delivered exceptional performances, deeply understanding what the story demanded from them.
A big congratulations to the entire team of Bison - Kaalamaadan.
@beemji
#Bison திரைப்படம் பார்த்தேன். மீண்டும் ஒரு முக்கியமான படைப்பைத் தந்திருக்கிறார் @mari_selvaraj சார்.
வன்முறை நிறைந்த வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில், கபடி விளையாட்டில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்வை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.
ஓர் இளைஞன், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய கபடி விளையாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும், அதுவே அவனை இலக்கை நோக்கி உயர்த்துவதையும் தனக்கே உரிய பாணியில் மாரி சார் craft செய்திருக்கிறார்.
படம் பேசுகிற அரசியலை உள்வாங்கி மிகச்சிறப்பாக நடித்திருக்கும் தம்பி @DhruvVikram5 உட்பட படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்.
பைசன் - காளமாடன் வெல்லட்டும்!
@beemji