புராணத்தில்
வேண்டுமானால்
நிஜ உலகை
சுற்றிவந்த
முருகனுக்கு
கிடைக்காத
ஞானப்பழம்
அம்மையப்பனை
வலம் வந்த
விநாயகனுக்கு
கிடைக்கலாம்
நிஜ வாழ்க்கையில்
உலகை சுற்றும்
சிறகுகள்
மீதிருக்கும் ஈர்ப்பு
எப்போதும்
உடனிருக்கும்
நிழல்களுக்கு
கிடைப்பதில்லை.....
கோடி கோடியாக
கொட்டிச் சென்றுள்ளாய்
ஆமாம்
கோடி கோடியாக
கொட்டிச் சென்றுள்ளாய்
கொள்ளைப் போகாத
உன் நினைவுகளை
என் இதய வங்கியில்
நிலை வைப்பாக
ஆனால் இன்றோ...
தீர்ந்து போன
உன் அன்பினால்
தீரா கடனாளியாய்
தினமும் கட்டுகிறேன்
என்
"கண்ணீர்த் துளிகளை"
வட்டியாக...
அனாதைபையன்💔
காசுக்காக தப்பான வழியில போற பெண்களை Prostitute என்று அழைக்கும் சமூகம் காசை வாங்கிக் கொண்டு திருமணம் செய்து கொள்ளும் அந்த ஆணை காலம் முழுவதும் Male prostitute என்று அழைக்கப்பட வேண்டும்.
#வரதட்சனை
❤️இந்த வானம் முழக்க நிரம்பிக்கிடக்கின்றார்கள்
அத்தனை அத்தனை ஆண்கள்
இருந்தும்
அந்தக்கருமுகிலின் பின்னால்
ஒளிந்துகிடக்கும்
அவன்
அவன் மட்டும்
ஏன் என் நெஞ்சத்தை
இப்படிப்பந்தாடுகின்றான்♥️
இங்கே யாரும் ராமனோ சீதையோ கிடையாது.............
வாய்ப்பு கிடைத்தவர்கள் அனுபவிக்கிறார்கள்.............
வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஒழுக்கத்தைப் பற்றி பேசுகிறார்கள்..
இவ்வளவுதான் இங்கு உள்ள வித்தியாசம்........
உண்மை என்றால்❤️ பண்ணுங்க...
அன்பெனப்படுவது
நேசங்களை குழைத்து
அள்ளிப்பூசி
அணைத்துக் கொண்டே
எல்லா நேரங்களில்
அருகில் இருப்பதில்லை..
மறாக அது
எத்தனை தொலைவில்
இருந்தாலும் எந்த
சூழ்நிலையிலும் உனக்காக
நானிருக்கிறேன் என்று,
முரசறைந்து கொண்டிருக்கும்..!!
அழவே மாட்டிர்களா என்று எவரையும்
கேட்காதீர்கள்......!!!"!
தாகம் தனிந்த பின் தண்ணீ ரின் தேவை குறைவைது போல....!!!
சோகம் மரத்துப் போன பின் கண்ணீரின்
அளவும் வற்றிவிடும்....!!!அதே 💔