இந்துக்களின் கைகளில் உள்ள கயிறு மட்டும் ஏன் எல்லோரது கண்களையும் உறுத்துகிறது?
கல்விக்கூடங்களில் மதம் சார்ந்த அடையாளங்களை அனுமதிக்க மாட்டோம் என்று வீர வசனம் பேசிய கல்வி அமைச்சர் திரு. @imrajmohan அவர்கள், “கையில் எந்தக் கயிறும் கட்டக் கூடாது” என்று இறுதியில் தனது இந்து மத வெறுப்பைக் கக்கியதன் மூலம் தாங்கள் திமுகவின் "B team" என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார். பல நூறு ஆண்டுகளாக இந்துக்கள் பின்பற்றி வரும் மத நம்பிக்கைகளில் மூக்கை நுழைக்க எந்த அரசுக்கும், கட்சிக்கும், அமைப்பிற்கும் உரிமையில்லை என்ற அடிப்படை நாகரிகத்தை கல்வி அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும்.
சுத்தமான குடிநீர், போதிய கழிவறைகள், தரமான கட்டிடங்கள் இன்றி முடங்கிக் கிடக்கும் அரசுப் பள்ளிகளை தெப்புத் தேற்றுவது எப்படி என்று ஆராயாமல், இந்து மாணவர்களின் அடையாளங்களை அழிப்பதில் ஆர்வத்துடன் செயல்படுவது தான், தவெகவின் அனைவருக்குமான அரசியலா? “மதச்சார்பின்மை” என்ற போர்வையில் இந்து மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மட்டும் தவெக அரசு பறிக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் தைரியத்தில் இந்துக்களின் மத அடையாளங்களை அழிப்பதில் மட்டுமே முழுக் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் ஆட்சிக்கு வந்த வேகத்தை விட அதிவேகத்தில், திரு. @TVKVijayHQ அவர்கள் தனது அதிகாரத்தை இழக்க நேரிடும்!
@CMOTamilnadu
Apathy at its peak! The Erode Government Hospital stands as a glaring example of the government's administrative mismanagement. While poor patients struggle for basic infrastructure, many brand-new hospital beds and wheelchairs are left to rust in the parking lot.
This is a criminal waste of public tax money. I strongly condemn this negligence.
I firmly urge Health Minister Thiru.@arunraajkg to immediately intervene and ensure these critical resources are utilized for the needy!
த.வெ.க அரசின் வெற்று வாய்ஜாலத்திற்கு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையே சாட்சி!
நோயாளிகள் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் நிலையில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய நவீன படுக்கைகளும், சக்கர நாற்காலிகளும் கார் பார்க்கிங்கில் துருப்பிடித்து வீணாகிக் கிடக்கின்றன.மக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடிப்பது மிக மோசமான நிர்வாக சீர்கேடு. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
சுகாதாரத்துறை அமைச்சர் திரு.அருண் ராஜ் உடனடியாக தலையிட்டு, முடங்கிக் கிடக்கும் இந்த மருத்துவ உபகரணங்களை நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகிறேன்!
#TVKFails
हमारी नियत बिल्कुल साफ है। हमारी कथनी और करनी में कोई अंतर नहीं है। जिन-जिन राज्यों में भाजपा की सरकार है, वहाँ सभी अवैध घुसपैठियों को खदेड़ा जा रहा है। पश्चिम बंगाल में भी यह काम शुरू हो चुका है। हम अगले Election की नहीं, बल्कि अगली Generation की चिंता करते हैं।
Comilla Durga Puja Violence: Fresh claims surround alleged mastermind Baharuddin’s arrest in Kolkata after five years
via @eOrganiser
https://t.co/T0IKZbN9gw
@AnuNaganathan You say @AmitShah ji and @narendramodi ji and BJP parliamentary board which decided the alliance have stake in the loss?is it not nonsensical?
பள்ளிகளில் ஜாதி, மத அடையாளங்களுக்கு இனி அனுமதி இல்லை.
#பள்ளிக்கல்வித்துறை_அமைச்சர்_ராஜமோகன்#பர்தா ,#குல்லா,#ஹிஜாப்புக்கும் அனுமதி இல்லை என்று அமைச்சர் சொல்வாரா??
ஏன்? ஜாதி, மத அடிப்படையில் எந்த இட ஒதுக்கீடும் கிடையாது! இனி படிப்பின் தகுதியின் அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு செய்யப்படும் என்று சொல்ல முடியுமா அமைச்சரால்...
இறைவனுடைய வழிபாட்டின் மூலம் குழந்தைகளின் பள்ளி பருவம்தொடக்கம்
குழந்தைகளின் ஆன்மீகக் கல்வி என்பது மதம் சார்ந்த சடங்குகள் மட்டுமல்ல; இது அவர்களின் உணர்வுப்பூர்வமான வளர்ச்சிக்கும், சுயமரியாதைக்கும், நேர்மறையான சிந்தனைக்கும் நற்பண்புகள், அன்பு, மற்றும் ஒழுக்கம் உணர்வுப்பூர்வமான வளர்ச்சிக்கும் அடிப்படையாகும். சிறுவயதிலிருந்தே நற்பண்புகளையும், மனிதநேயத்தையும் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பது அவர்களின் வாழ்நாள் முழுமைக்கும் உதவும்.
ஆகியவற்றைச் சிறு வயதிலேயே கற்றுக்கொடுப்பதாகும்
#சனாதனம் வாழ்க்கையின் நெறிமுறை இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு அவசியம்
ஸ்ரீ சீதாராம் வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி (Sri Sitaram Vidyalaya)
#சனாதானம்
@hindumunnani_tn@RSSorg@BJP4TamilNadu@NainarBJP@KanchiMatham
சமூக நீதி என்பது, இந்த மண்ணில் வாழும் அனைவரின் நம்பிக்கைகளையும், உணர்வுகளையும் சரிசமமாக மதிப்பது தான். மாறாக, இந்துக்களின் அடையாளங்களை அழிப்பதோ, உணர்வுகளைப் புறக்கணிப்பதோ அல்ல. இந்துக்களின் நம்பிக்கையை அழிக்க நினைத்தால் தவெக அரசு காணாமல் போகும்.
@JKalyanaraman திமுக உபிக்களே கூச்சப்படும் அளவுக்கு அல்லவா இவர்களின் பதிவுகள் தனிமனித தாக்குதல்கள் உள்ளன.மரியாதைக்குரிய மத்திய நிதியமைச்சர் ஐ கூட விட்டு வைக்கவில்லை.இவர்கள் NDA வுக்கு ஓட்டு போட்டார்களா என்பது கேள்விக்குறி.
This is how propaganda movies are made in Malayalam industry.
#Patriot movie
Mammutty - Daniel
Mohanlal - Rehman
Fahad Fasil - Shakthi
Indian Army ‘neglects’ Rahman who is an Army officer. Despite hardships he faced by Indian Army, he still teams up with Daniel to take on villain and evil force called Shakthi.
At the end Daniel recommends Indian govt and Indian Army to recognise Rehman’a services to the nation.
Anti Hindu Propaganda
Anti Govt Propaganda
Anti Indian Army Propaganda
If we highlight this, Hindus will say ‘watch movie as movie’. Don’t bring religion and politics into movies.
Makers can make movies with anti-Hindu and anti India propaganda, but we must watch movie as movie.🤷🏻♂️🤦🏻♂️
@GemsOfBollywood
மன்னார்குடி அருகே மதுபோதையில் அதிவேகமாக வந்த கார் மோதி, பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அரசுப் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த செய்தி கேட்டு பெரும்
துயரமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
எதிர்காலத் தூண்களாக, பெற்றோரின் நம்பிக்கையாக வளர்ந்து வந்த அந்தப் பிஞ்சுகளின் உயிர், ஒரு தனிநபரின் பொறுப்பற்ற மதுபோதை அரக்கனால் பறிபோயிருப்பது எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத பெருஞ்சோகமாகும். தங்களது அன்புக் குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று கடந்து போய்விட முடியாது. மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் அப்பாவிப் பொதுமக்களும், மாணவர்களும் தொடர்ந்து பலியாவது தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது.
எனவே, இந்தத் தருணத்தில் அரசிடம் நான் வலியுறுத்துவது,
விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மீது வெறும் விபத்து வழக்கு என்று சாதாரண பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யாமல், கொலை வழக்காகப் பதிவு செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு அரசு உடனடியாக உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில், பள்ளி வளாகங்களின் அருகேயும், முக்கியச் சாலைகளிலும் காவல்துறை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும். மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய ஆய்வுகளை பலமடங்கு தீவிரப்படுத்த வேண்டும்.
இனி ஒரு உயிர் கூட இதுபோன்ற போதை அரக்கர்களின் அலட்சியத்தால் சாலையில் பறிபோகக் கூடாது என்பதை அரசுக்கு உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tamil Nadu: Hindu Munnani (@hindumunnani_tn), BJP (@BJP4TamilNadu) condemn Speaker’s Christian outreach, Minister Vanni Arasu’s Muslim prisoner campaign
Reports: TS Venkatesan
https://t.co/Vs4izZygL4
மதம் சம்பந்தப்பட்ட அடையாளங்களோடு கல்வி வளாகத்துக்குள்ள வரக்கூடாது என்று சொல்லும் அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே இது அனைத்து மதங்களுக்கும் பொருந்துமா? அல்லது இந்து அடையாளங்களை மட்டும் அழிக்கும் நோக்கமா?
ஆளும் தாவெக அரசு, தமிழகத்தை கிறிஸ்தவ மாநிலம் ஆக்க முயற்சி செய்கிறதா ?? என்ற கேள்வி தமிழக மக்களின் மனதில் எழ தொடங்கி விட்டது.
இந்து முன்னணி நடத்தும் கூட்டங்களில் இவ்வாறாக அமைச்சரோ ? சபாநாயகரோ கலந்து கொள்வார்களா??
காங்கிரஸ் தயவில் நடக்கும் தவெக அரசு, கேள்விக்குறியாகும் டெல்டா விவசாயிகள் வாழ்வாதாரம்,,
ஜூன் 12-ம் தேதி வழக்கமாக குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும். ஆனால், இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு பாதியளவிற்கும் குறைவாக சுமார் 41 டி.எம்.சி மட்டுமே உள்ளது. தென்மேற்கு பருவமழை இன்னும் முழுமையாகக் கை கொடுக்காத சூழலில், மேட்டூர் அணை திறக்கப்படுவது தள்ளிப்போகும் என்றே தெரிகிறது. காலம் கடந்து திறக்கப்படும் தண்ணீர், குறுவை சாகுபடிக்கு எந்த வகையிலும் உதவாது என்பதுதான் கசப்பான எதார்த்தம்.
இங்கேதான், முதலவர் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழ்நாட்டின் புதிய அரசின் நிர்வாகத் திறனும், அரசியல் பொறுப்பும் கேள்விக்குறியாகிறது,
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, தற்போதைய குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறந்து விடுவதாகத் தெரியவில்லை. மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை என்பது ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும், இதற்கான உண்மையான பின்னணி என்ன? கர்நாடகத்திலிருந்து நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய தண்ணீர் வராததுதான்!
காவிரி மேலாண்மை வாரியம் ஜூன் மாத பங்கீடாக தமிழகத்திற்கு 9.91 டி.எம்.சி தண்ணீரைத் தடையின்றி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டும், கர்நாடக காங்கிரஸ் அரசு அதை மதிக்கவில்லை
தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தவெக அரசும், அதற்குத் தோள் கொடுக்கும் காங்கிரஸ் கட்சியும் நெருங்கிய கூட்டணியில் இருக்கிறார்கள். அண்டை மாநிலமான கர்நாடகத்திலோ காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. தங்களுக்குள் இருக்கும் இணக்கமான கூட்டணியைப் பயன்படுத்தி, கர்நாடக காங்கிரஸ் அரசிடம் பேசி, தமிழக விவசாயிகளுக்கான உரிய பங்கீட்டு தண்ணீரை ஏன் இந்த அரசு இன்னும் கேட்டுப் பெறவில்லை?
தேர்தல் நேரத்து அரசியல் கூட்டணிகள் தொகுதிப் பங்கீட்டிற்கு மட்டும்தானா? தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க அந்தக் கூட்டணி உதவாதா? சொந்தக் கூட்டணிக் கட்சியிடமே பேசித் தண்ணீரைப் பெறத் தயங்குவது ஏன்?
விவசாயிகள் சார்பாக தஞ்சை மண்ணிலிருந்து நாம் வைக்கும் 3 போர்க்காலக் கோரிக்கைகள்:
1. உடனடி பேச்சுவார்த்தை: தமிழக முதலமைச்சர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடனடியாக கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து, ஜூன் மாதத்திற்குரிய காவிரித் தண்ணீரை உடனடியாகப் பெற்றுத் தர வேண்டும்.
2. 24 மணி நேர மும்முனை மின்சாரம் & டீசல் மானியம்: மேட்டூர் அணை திறக்க தாமதமாகும் பட்சத்தில், நிலத்தடி நீர் மற்றும் பம்ப்செட் (Filter Point) மூலமாக குறுவை சாகுபடியைத் தொடங்கத் தயாராக இருக்கும் விவசாயிகளுக்குத் தடையற்ற 24 மணி நேர இலவச மின்சாரமும், டீசல் மானியமும் வழங்க வேண்டும்.
3. 100% மானியத்தில் குறுவை தொகுப்பு திட்டம்: விவசாயிகளுக்குத் தேவையான தரமான குறுவை நெல் விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை 100% மானியத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உடனடியாக விநியோகம் செய்ய வேண்டும்.
புதிய அரசுக்கு நிர்வாகத்தை ஆழம் பார்க்கக் கால அவகாசம் இருக்கலாம், ஆனால் விவசாயத்தின் காலண்டருக்குக் காத்திருக்க நேரமில்லை,காலம் தாழ்த்தி வழங்கப்படும் எந்த ஒரு திட்டமும் விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்காது. தமிழக அரசு உடனடியாகத் தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி காவிரித் தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டும்.