This post reminded me of a colleague from my early days at work. He was from Orissa and came from a very poor family. Around 2010–11 Gachibowli had few PGs, so he found a small place in Mehdipatnam and commuted by bus to save money for his younger siblings’ education and to support his parents. After a year’s hard work he was named best employee and given a ₹2,500 bonus. The first thing he did was go to Bawarchi for biryani; I never forgot his face after the first bite. That day I realised privilege doesn’t teach you to enjoy small things enough, because everything comes easily. Life is never content without such moments.
தான் புரோட்டா சாப்பிட்ட காட்சி புகழடைந்து, தனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது பற்றி சூரி இப்படித்தான் சொல்லிக்கொண்டிருந்தார்.
”அது நான் நடிக்கவேண்டிய சீன் இல்ல. எங்க குழுவுல குண்டா இருந்த பையனைத்தான் அதுல நடிக்கச் சொல்லியிருந்தாங்க. ரிஹர்சல் பார்க்குற அன்னிக்கு அவன் லேட்டா வந்தான். அந்த சமயத்துல நாங்க நிறையபேர் இருந்ததால, ஒருத்தர் இல்லேனா இன்னொருத்தரை சட்டுனு நடிக்கச் சொல்லிடுவாங்க. அதுனால அந்தக் காட்சில என்னைய நடிக்கச் சொல்லிட்டாங்க. நான் நடிச்சதை டைரக்டர் பாத்துட்டு இது பெட்டரா இருக்கு, இவனையே நடிக்கச்சொல்லுனு சொல்லிட்டார்”
காமெடியனாக இருந்தபோது சிவகார்த்திகேயனுடனான ஒரு பேட்டியில் தனக்கு எழுதப்படிக்க அவ்வளவாகத் தெரியாது என்று சிரித்துக்கொண்டே கூறிய சூரி, தற்போது Pearle Maaney நடத்திய பேட்டியில் இடையிடையே ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தியதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
மற்றவர் பேசும்போதெல்லாம் நடுநடுவே ஆர்வமாய் குறுக்கிட்டுவிட்டு பிறகு சுதாரித்தவராய் ‘Sorry’ என்கிறார். கடந்து வந்த பாதைகளில் ஆரம்பித்து, உட்கார்ந்திருக்கும் நாற்காலி வரை சூரியிடம் சொல்வதற்கு ஏராளமான விசயங்கள் இருக்கிறது. மிகுந்த உற்சாகமாய் பேட்டியளித்திருக்கிறார்.
வாழ்வு தன்னுடைய கதவுகளை இப்படித்தான் திறக்கிறது.
முயற்சித்து சோர்ந்து போனவனுக்கு ஒரு ஆசீர்வாதம் போல.
தொடரட்டும்.
மாற்றம் அப்டின்றது டகால்னு நடக்கக்கூடாது அப்டினு நம்புறேன் நானு.. அப்டி வர்ற மாற்றம், அவ்ளோ சீக்கிரமே போயிரும்.. ஒரு End Goal வெச்சிட்டு, Trial and Error basis ல work பண்ணி வர்ற மாற்றம் தான் நிலைக்கும்..👌
~ Director H.Vinoth
@TVKVijayHQ 👇
#Trichy#DravidianOriginalResearch
It has been propagated deeply that in Trichy 1918 Tamil Brahmins did not allow Dravidian (in their view NB) to use a ghat for bathing. The famous Tillainayakan Pillai Ghat accusation. Side - trichy Tillainagar is named after him.
ex:
get a haircut every 2 weeks to stay sharp, wait 5 secs before answering the phone to control the rhythm, always arrive 15 mins early, stay away from free lunches, never talk about people who aren't in the room and when anger rises, wait 10 mins before reacting. these habits may look rigid but they're the hidden discipline of the elite.
Britannia Industries:
இந்த நிறுவனத்தோட பிஸ்கட் நம்ம பட்டிதொட்டி எல்லாம் பிரபலம், பார்லேஜி மாதிரி இதுவும் விலை குறைவு.
இந்த பிஸ்கட்ல ஒவ்வொரு துண்டுலயும் ஒரு திருக்குறளின் ஒரு வார்த்தையை அச்சடிச்சு விற்க முடிவு செய்து அதை வெற்றிகரமா முடித்தும்விட்டனர்.
இந்த பிரிட்டானியா என்ற பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனம் கல்கத்தாவில் 1982 ஆம் ஆண்டு 295 ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்டிருக்கு.
அதுக்கப்புறம் இந்நிறுவனம் நளின் சந்திர குப்தா தலைமையில் செயல்பட்டு வந்தது.
1918 ஆம் ஆண்டு C.H. Holmes என்பவர் இத கையகப்படுத்தி The Britannia Biscuit Company Limited (BBCo) பெயரும் வைத்து தொழில் செய்து வந்துள்ளார்.
அதுக்கப்பறம் பல்வேறு நிறுவனங்கள் பங்குகள் வாங்கின பலவேறு பிரச்சனைகளை சந்தித்து வந்த இந்நிறுவனம் 1993 ஆம் ஆண்டு,
பம்பாய் டையிங் நிறுவனத்தின் ஜவுளித் தொழிலதிபரான நுஸ்லி வாடியா, பிரிட்டானியாவின் அப்போதைய தலைவரான ராஜன் பிள்ளையிடமிருந்து அந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டைப் பெற்றார்.
அதிலிருந்து இன்றுவரை பலவேறு புதிய நிறுவனங்கள் பல பங்குகளை வாங்கினாலும் இன்றுவரை சேர்மனாக நுஸ்லி வாடியா மட்டுமே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
இந்த நுஸ்லி வாடியா என்பவர் 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி பம்பாயில், தொழிலதிபர் நெவில் வாடியா மற்றும் தீனா வாடியா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
நுஸ்லி வாடியாவின் தாயார் தீனா வாடியா
பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னாவின் ஒரே மகள்.
A boy dropped his sister and another girl at school in an auto-rickshaw. He was paying the driver.
AUTO DRIVER: Are they both your sisters?
BOY: No, only one is my sister. The other girl couldn’t find an auto, so I asked her to come with us.
DRIVER: Then it’s okay. You don’t need to pay. Buy yourself something to eat with this money 😊
BOY: Thank you, Uncle ❤️
பாரதிராஜா இறுதி சடங்கில் முட்டிக் கொண்ட உறவுகள்.
நமக்கு அதில் நிறைய பாடங்கள் இருக்கிறது..!!
மனோஜ் நடிகை நந்தனாவை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரு மகள்கள். பாரதிராஜவின் மகள் ஜனனி திருமணத்திற்கு பின் மலேசியாவில் குடியேறி உள்ளார்.
மனோஜ் மறைவிற்கு பிறகு உடைந்திருந்த பாரதிராஜா மிகவும் தளர்ந்து போனார். மனைவி தேனி போய்விட்ட நிலையில் மகளும் மலேசியாவில் மருமகளும் உடனில்லாது பாரதிராஜாவை கவனித்து கொண்டவர்கள் நியமிக்கப்பட்ட நர்சுகள்.
பாரதிராஜா மரணத்திற்கு பிறகு அவரை நல் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் தான் மேற்படி முட்டல் மோதல்கள் நடந்தேறி உள்ளது.
மருமகள் நந்தனாவையும் பேத்திகளையும் பாரதிராஜாவின் மகள் ஜனனி அந்த நிகழ்வில் பங்கேற்கவிடாது தகராறு செய்திருக்கிறார். சேரில் அமர்ந்திருந்த நந்தனாவின் கைகளை முறுக்கி எழுப்பி விட.. நந்தனாவின் மகள்கள் அழுதபடி நின்றிருக்கிறார்கள். ராதிகா ஓடி வந்து இரு தரப்பிடமும் கைகளை கூப்பி மன்றாடி பிரச்னை பெரிதாகாமல் தடுத்திருக்கிறார்.
ஏற்கனவே தனது பெயரில் பாரதிராஜா வாங்கியிருந்த அபார்ட்மெண்ட்டில் வசித்து வரும் நந்தனாவை காலி செய்யுமாறு ஜனனி போலீசில் புகார் கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.
பாரதிராஜா இறுதி சடங்கை ஒட்டி வெளியே வந்த குடும்பத் தகராறுகளை பார்த்த போது ஒரு விஷயம் மட்டும் மீண்டும் மீண்டும் தோன்றியது.
உலகத்துக்கே காதல், பெண் முன்னேற்றம், பெண் சொத்துரிமை, ஜாதி மறுப்பு என்று பாடம் எடுத்த பலரது குடும்பங்களிலும் கூட இறுதியில் வந்து நிற்பது மனித உறவுகளின் சிக்கல்கள்தான்.
இங்கே யார் சரி? யார் தவறு?
என்று நமக்கு தெரியாது,தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.
ஆனால் வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது.
மனிதர்கள் சண்டை போடுவது பெரும்பாலும் கொள்கைகளுக்காக அல்ல.
உரிமைகளுக்காக... பாதுகாப்புக்காக.. எதிர்காலத்திற்காக.. சில நேரங்களில் பணத்திற்காக.
சில நேரங்களில் பணம் என்ற பெயரில் கிடைக்கும் அங்கீகாரத்திற்காக.
ஒரு மனிதன் வாழ்நாள் முழுக்க ஒரு ராஜ்ஜியத்தை கட்டியிருக்கலாம்.ஒரு தலைமுறையையே பெரிய அளவில் பாதித்திருக்கலாம். "சூப்பர்ஸ்டார்" என்று கொண்டாடப்பட்டிருக்கலாம்.
ஆனால்... அவருக்கு பிறகு அவருடைய குடும்பம் அமைதியாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை அவையெல்லாம் கொடுக்காது.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால்... 'புகழ்' என்பது எப்போதும் தனிப்பட்ட சொத்து."நிம்மதி" என்பது குடும்ப சொத்து.
ஒன்று இருந்தால் மற்றொன்றும் இருக்கும் என்று எந்த விதியும் இல்லை.
நிறைய நேரங்களில் உலகம் அறிந்த வெற்றியாளர்கள்...வீட்டுக்குள் தோற்றவர்களாக இருக்கிறார்கள்.
அதேபோல்...
உலகம் அறியாத சாதாரண மனிதர்கள்...
தங்களுக்கு பின்னால் சண்டையில்லாத குடும்பத்தை விட்டுச் செல்கிறார்கள்.
ஒரு மனிதன் எவ்வளவு சம்பாதித்தான் என்பது முக்கியமான கேள்வி இல்லை.
அவன் போன பிறகு... அவன் சம்பாதித்ததை வைத்து அவனுடைய பிள்ளைகள் அடித்துக் கொண்டார்களா?அல்லது ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டார்களா? என்பதே முக்கியமான கேள்வி.
ஏனென்றால்...ஒரு மனிதனின் உண்மையான உயில் அவன் எழுதி வைத்த பத்திரம் மட்டும் அல்ல.அவன் உயிரோடு இருக்கும்போது உருவாக்கி வைத்த குடும்ப சமநிலையும் தான். அதை சட்டத்தால் எழுத முடியாது.பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாது.வாழும் காலத்திலேயே கட்டமைக்க வேண்டும்.
#Bharathiraja
LIFE IS TOTALLY UNPREDICTABLE
அடுத்த விநாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகில் ஏராளம்-ஏராளம் (அன்பே சிவம் படத்தின் கடைசியில் கமல் எழுதியிருக்கும் லெட்டரில் உள்ள வசனம்)
அதைப் போன்றே ஒரு நிகழ்வு – நண்பர் ஒருவர் ‘’எப்போ என்னோட பெருமாளைப் பார்க்க வரப் போறீங்க’’ என்றார்
He worked as an Executive (Top Post) – மனைவியும் வேலையில் – ஒரே பையன் – படு செல்லம்
அவரை நான் எப்போது பார்த்தபோதும், கோட், சூட், டை-யுடனே இருந்திருக்கிறார் – எப்போது பார்த்தாலும் சிரிப்புடன் அவர் – வாழ்க்கை நன்றாகவே போய் கொண்டிருந்தது
இந்த நிலையில் 55வது வயதில் அவருடைய மனைவிக்கு உடல்நிலை படு சீரியஸாகி, ரூ.30 லட்சம் வரை செலவழித்தும், அவர் இறந்து போனார்
பையனை ஆஸ்திரேலியா அனுப்பி படிக்க வைத்திருந்தனர் – அந்த வகையில் ரூ.20 லட்சம் வரை செலவு – அவன் பாஸ் பண்ணினானா என்பது தெரியவில்லை
அவன் ஏதோ ஒரு பெண்ணை பார்த்து, அவளையே கல்யாணம் செய்வேன் எனறு சொல்லி, அந்தப் பெண்ணுடன் இப்போது வெளிநாட்டில் இருக்கிறான் – அப்பாவுடன் பேச்சு வார்த்தை கிடையாது
இவர் மனைவி இறந்து ஒரு வருடம் வேலை பார்த்து, என்னடா வாழ்க்கை என்று, பின் வேலையை விட்டுவிட்டு, இப்போது சென்னையருகில் ஒரு இடத்தை வாங்கி, அங்கே ரூ.30 லட்சம் செலவில் ஒரு பெருமாள் கோவிலைக் கட்டி, அந்தக் கோவிலின் வெளியே ஒரு ரூம் போன்ற அமைப்பில் தங்கியிருக்கிறார்
கோவிலில் அவரே பூஜை பண்ணுகிறார் – யாராவது அர்ச்சனை என்று வந்தால் ஒரு Template உண்டு – நார்மலாக உள்ள அர்ச்சனை முடிந்தபின், கூடுதலாக:
Example: ‘’குமாரும், அவருடைய மனைவி மஞ்சுளாளும் தங்களுடைய பெண் குழந்தை ப்ரியாவின் பிறந்த நாளுக்கு அர்ச்சனைக்கு வந்திருக்கா – ப்ரியாவிற்கு நல்ல ஆரோக்யத்தையும், படிப்பையும், செல்வத்தையும், அப்பா-அம்மா சொல்படி கேட்டு நடக்க, நல்புத்தியையும் கொடு பெருமாளே!!!! – மேலும் குமாரும், மஞ்சுளாவும் நல்ல ஆரோக்யத்துடனும், செல்வச் செழிப்புடனும் இருக்க அருள் புரி பெருமாளே’’ என்று அடிஷனலாக தமிழில் அவர்களுக்குப் புரியும் படியாக சொல்ல, இதைக் கேட்ட அந்த குழந்தையின் அம்மா கண்ணில் கண்ணீர் – (I have seen) அவர் குரல் கணீரென்று இருக்கும்
கோவில் நடத்துவது ஈஸியில்லை – செலவுத் தொகையைச் சொன்னபோது, ஷாக், இவரே பிரசாதம் ரெடி பண்ணுகிறார்
பிரசாதம் அன்று தீர்ந்து போனால், நல்ல படியாக கோவில் பூஜை இன்று நடந்ததாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று சந்தோஷப்படுகிறார்
சிலர் கோவில் கட்டுவதற்குப் பதில், நாலு பேருக்குப் படிப்பிற்கு செலவு செய்திருக்கலாமே என்று பேசுகிறார்கள் - It is all individual’s decision.
நான் அவரிடம் ''திடீரென்று இதுவும் பிடிக்கவெல்லையென்றால் எப்படி கோவிலை விற்பது'' என்று கேட்டபோது, அவர் பதில் ''அது போல் ஒரு நிலை வராது, அதையும் மீறி வந்தால், எனக்குத் தெரிந்த ஒருவருக்குத் தானமாக இதைக் கொடுத்துட்டு போயிட்டேயிருப்பேன்'' என்றார்
5 வருடத்திற்கு முன், நீ இது போல் கோவில் கட்டி, அங்கே ஒரு ஒண்ணரை அணா ரூம்ல குடியிருப்ப என்று யாராவது அவரிடம் சொல்லியிருந்தால், அவர்களைப் பார்த்து சிரித்திருப்பார் – இப்போது அவர் ஒரு வேட்டி, மேல் துண்டுடன்
LIFE IS TOTALLY UNPREDICTABLE