இப்போதாவது சர்வாதிகாரியாக மாறுவீர்களா? உணர்வுள்ளவர்களையும் உண்மை உள்ளவர்களையும் இனியாவது நம்புவீர்களா?
மக்கள் தீர்ப்பை வரவேற்று புதிதாக ஆட்சி அமைத்தவர்க்கு வாழ்த்து கூறிய முன்னாள் முதல்வர் @mkstalin அவர்களை பாராட்டுகிறேன்.
அதே வேளையில் எல்லா தரப்பு மக்களுக்கும் எண்ணற்ற திட்டங்கள் வழங்கியும் நல்லாட்சி புரிந்தும் மக்களின் தீர்ப்பு ஏன் தனக்கு எதிரானது என்பதை சிந்திப்பீரா? இந்த தோல்விக்கு வித்திட்டவர்கள் திமுகவினர்களா?
இந்த தோல்விக்கு காரணமானவர்களை களை எடுப்பிரா?
மண்டல பொறுப்பாளராக திரு.எ.வ.வேலு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கீழ்க்கண்ட நான்கு மாவட்டங்களில் திமுக படுதோல்வி அடைந்துள்ளது.
* சேலம் - 11 தோல்வி - 11
* தர்மபுரி- 5 தோல்வி - 5
* வேலூர் - 5 தோல்வி - 5
* ராணிப்பேட்டை - 4 தோல்வி - 4
அவருக்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகுதிகள் :41
வென்ற தொகுதிகள்: 06
தோற்ற தொகுதிகள்: 35
@evvelu தேமுதிகவுக்கும் பிரேமலதாவுக்கும் காட்டிய விசுவாசத்தில் கால்வாசியாவது திமுகவுக்கும் உங்களுக்கும் காட்டினாரா?
* திருச்சி தொகுதிகள் - 9
கடந்த முறை வெற்றி - 9
இந்த முறை
தோல்வி - 7 வெற்றி - 2
காரணம் * சிட்டிங் எம்எல்ஏ மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் வாய்ப்பு மறுக்கப்பட்டது * தொடர்ச்சியாக 25 ஆண்டு காலமாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த சவுந்தரபாண்டியனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது * 25 ஆண்டுகள் கழித்து ஸ்ரீரங்கத்தில் திமுகவை ஜெயிக்க வைத்த பழனியாண்டிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது
* தொடர்ச்சியாக திமுக வசம் இருந்த துறையுறை (SC) தேவை இல்லாமல் காங்கிரசுக்கு ஒதுக்கியது. இதெல்லாம் மக்கள் செய்த தவறா அல்லது @KN_NEHRU செய்த சர்வாதிகாரமா?
டெல்டா மற்றும் தென்பகுதிகள் திமுகவுக்கு எப்போதும் போல் சாதகமாகவே இந்த தேர்தலிலும் இருந்திருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகள் இந்த முறை திமுகவுக்கு எதிராக மாறியதற்கு காரணம் என்ன? வரலாறு காணாத வெள்ளத்தின் போது கூட 2024ல் மூன்று பாராளுமன்ற தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது. @dmk_raja அவர்கள் மண்டல பொறுப்பாளராக இருக்கத் தேவையில்லை என் பகுதிகளுக்கு வரத் தேவையில்லை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று மாறு தட்டிக் கொண்ட @PKSekarbabu தோல்விகளுக்கு பொறுப்பேற்பாரா? ஜீபிள் ஏறி அழுது கொண்டு ஊர்வலம் வந்தால் போதுமா? முதலமைச்சரே தன் தொகுதியில் தோற்று விட்டார் என்ற பெருமையை தங்களுக்கு தேடித் தந்த சேகர் பாபுவுக்கு என்ன பரிசு தர போகிறீர்கள்.
உங்கள் ஆட்சி காலத்தில் கட்சிக்காரர்களை கண்டுகொள்ளாதது மட்டும் காரணம் அல்ல இது போன்ற உங்கள் தனிப்பட்ட பிரியத்தை வைத்திருப்பவர்கள் ஆடிய ஆட்டமும் தான்.
என்னடா உங்கள் சாதிக்காரர்களாக பார்த்து குறை சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள் உங்களுக்கு குழி பறித்தவர்கள் அவர்களாகத்தான் இருக்கிறார்கள். உங்களை நடுத்தெருவில் விட்டாலும் அவர்கள் அவர்களை காப்பாற்றிக் கொண்டார்கள் கழகம் தோற்றாலும் ஏ.வ.வேலு ஜெயித்தது போல சம்மந்தி பிரேமலதாவை ஜெயிக்க வைத்து விட்டார் கழகம் தோற்றாலும் நேரு ஜெயித்தது போல சம்மந்தி தனலட்சுமி கதிரவனை ஜெயிக்க வைத்து விட்டார் முதலமைச்சரே தோற்றாலும் சேகர்பாபு ஜெயித்து விட்டார் இவர்களால் விஜய ஜெயித்து இன்று திராவிடம் தோற்றுவிட்டது.
தலைவரே அப்ப கூட அவங்க உங்களை சாதிக்காரங்களா பார்க்கல 🫢
@arivalayam
@gopinathvijay91@gjaselvadoss16 அரசு அலுவலகங்களில்,சமூக நலத் திட்டங்களுக்காக அவர்களே அழைத்து, அரசு அறிவித்த பயனாளிகளின் தகுதிகள் அணைத்தும் இருந்தும், மற்ற கட்சிக்காரணைவிட திமுககாரன் என்றால் அழைக்கழிக்கப்படுவான். அனுபவத்தில் பகிர்வது.அப்புறம் தெரிந்தது அமைச்சர்களே செயலர்களை சந்திக்க மாதக்கணக்கில் Wait என்று.
@TRBRajaa@SaraVellore@mkstalin@Udhaystalin ***மிக முக்கியமாக எவ்வித எதிர்பார்ப்புமின்றி, "அகர முதலத் தொட்டு தி.மு.க.தான் எங்க ப்ளட்டு என செயல்படும் கழக சமூக வலைத்தளத் தன்னார்வலர்கள் (Unofficial Wing)***,
Your Honour, இப்டீகா எங்களை தியாகியாக்கிடாதீங்க! எங்களுக்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கு, வயிறு பசிக்கும்ல.
தொகுதி மறு வரையறை விவகாரத்தில் 50 சதவிகித விகிதாச்சார உயர்வு அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக வழங்கப்படும் இதனால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படாது என பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவரும் நாடாளுமன்றத்திலேயே சொல்கிறார்கள்!
ஆனால் அரசு தயாரித்து கொண்டு வந்துள்ள மசோதாவில் பிரிவு நான்கில் மறு வரையறை கமிஷன் தொகுதிகளின் எண்ணிக்கையில் சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என சொல்லப்பட்டிருக்கின்றது.( அதாவது பிரதமர் உள்ளிட்ட சொல்வது போன்று ஒரே மாதிரியான மாற்றம் கிடையாது மக்கள் தொகை அடிப்படையில் தான் மாற்றம் என்பது பொருள்)
பிரிவு 8-லும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட வேண்டிய இடங்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்க, மிக சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படை ஆதாரமாக ஆணையம் கொள்ள வேண்டும் என மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது.
So சொல்வது ஒன்று சட்டமாக வரப்போவது ஒன்று!
வாய்மொழி வாக்குறுதி நிலைக்குமா எழுத்துப்பூர்வமாக உள்ளது நிலைக்குமா?
👌👌
விஜய்க்கு ஓட்டு போட்டு பார்ப்போம் என கொஞ்சமும் அதன் பின் விளைவுகளை அறியாமல் விபரீத முயற்சி செய்பவர்கள் சிந்தனைக்கு..
இப்படி விஜய்க்கு போகும் குறைந்தபட்ச ஓட்டுக்களால் விஜய் நிச்சயமாக வெற்றி பெற போவதில்லை...
ஆனால் இப்படி பிரிந்து போகும் மதசார்பற்ற வாக்குகளால் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை இழந்து..
பிஜேபி அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்...
முதலில் இஸ்லாமியர்களின் 3.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்...
தமிழ்நாட்டில்
பொதுசிவில் சட்டம் அமலுக்கு வரும்..
பள்ளி கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்படும்..
ஆங்காங்கே மதக்கலவரம் வெடிக்கும்..
சிறுபான்மையினர் தனிமைப் படுத்த படுவார்கள்..
கிறிஸ்தவ மிஷினரிகள் குறிவைக்கப்படும்..
முஸ்லிம் கிறித்தவ வழிபாட்டு தளங்கள் சூரையாடப்படும்..
பட்டியலின மற்றும் முஸ்லிம் கிறிஸ்தவ மக்களின் உணவான மாட்டிறைச்சிக்கு தடை வரும்..
தலித் மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள் அன்றாடச் செய்திகளாகி விடும்.
இதெல்லாம் கற்பனையில் சொல்லவில்லை,
பிஜேபி ஆளுகின்ற மாநிலங்களில் நடந்தேறியவை தற்போது நடந்து கொண்டிருப்பவைகளும் தான் இவைகளெல்லாம்..
உதாரணமாக மணிப்பூர்
சும்மா "பிஜேபி வந்துவிடும்" என்கிற பூச்சாண்டி இல்லை இதெல்லாம்..
வந்தால்தான் உங்களுக்கு தெரியும் அவனுங்களோட காட்டுமிராண்டி ஆட்சி ...
இந்த பிஜேபி "வந்து விடும்" என்கிற வார்த்தையே உங்களுக்கு கேலியும் கிண்டலுமாக தெரிகிறது...
பிஜேபியின் ஆட்சியில் கணவனின் முன்பு மனைவியும் தகப்பனின் முன்பு மகளும் மகனின் கண் முன்னாடியே தாயும் கற்பழிக்கப்பட்ட வரலாறுகள் தெரியாதா?
கிறிஸ்துவ மத போதகர்கள் தீக்கிரையாவது தெரியாதா?
தலீத் மக்கள் சொல்லொன்னா கொடுமைகளுக்கு ஆளாவது தெரியாதா?
பாசிசமா? பாயாசமா? என விஜய் அடுத்த படம் நடிக்க போய் விடுவார்...
பிராமண கடப்பாரையை கொண்டு திராவிடத்தை வீழ்த்தி விட்டேன் என்கிற வெற்றி களிப்பில் சீமான் போய் விடுவார்..
இங்கே நம் அடுத்த தலைமுறையை பாதுகாப்பற்ற சூழலில் தவிக்க விட்டு நாம் போயாக வேண்டுமா?
நாங்கள் ஃபிரவ்னை பார்த்த பரம்பரை, அபுஜஹிலை பார்த்த பரம்பரை என வீராவசனம் பேசுவதும், ஏன் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இல்லையா என மார்க்க லாஜிக் பேசுவதும் வர விட்டு வேடிக்கை பார்ப்பதற்கு பொருந்தாது..
வரும் முன் சிந்தித்து நடப்பது தான் பகுத்தறிவு மார்க்கம் சொல்லி கொடுத்த பாடம்..
இதுவரை நீங்கள் விஜயின் ஆதரவாளராகவோ சீமானின் ஆதரவாளராகவோ இருங்கள்
இனிமேலும் இருந்து விட்டு போங்க
ஆனால்
உங்களுடைய ஓட்டையும் உங்கள் குடும்பத்தாரின் ஓட்டையும் பாசிச பிஜேபி அதிமுக கூட்டணிக்கு எதிராக களமாடி கொண்டு வெற்றிக்கு நெருக்கத்தில் இருக்கும் திமுகவின் கூட்டணிக்கே போட சொல்லுங்கள்..
இதை நீங்கள் சார்ந்துள்ள கட்சிக்கு தெரியாமல் மறைமுகமாக செய்தாலும் சரியே...
இன்னொன்றையும் சொல்லிக் கொள்கிறேன்
எடப்பாடியின் குடுமி குருமூர்த்தி வகையறாக்களின் கையில் இருக்கிறது..
அவர்கள் போடும் தாளத்திற்கு நடனமாடுவது தான் எடப்பாடியின் வேலையே தவிர தனித்து எந்த முடிவையும் எடுக்க முடியாது..
எனவே இந்த தேர்தலில் தவறான முடிவை எடுத்து வரலாற்று பிழையை செய்து விடாதீர்கள்..
அது நம்முடைய தமிழ் சமூகத்திற்கும் அடுத்த தலைமுறைக்கும் செய்யும் மிகப்பெரிய துரோகம்..
நம் பிள்ளைகளை நம் தம்பிகளை நம் தங்கைகளை பாதுகாப்பான சூழலில் விட்டு செல்ல வேண்டும்..
கற்பை சூரையாடும் ஒரு பாசிச ஆட்சியின் கீழ் விட்டு விட கூடாது..
சிந்திப்போம்...
சிதறாமல் வாக்களிப்போம்!
திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெறட்டும்..
பிஜேபியும் அதிமுக கூட்டணியும் மண்ணை கவ்வட்டும்....
இந்த அக்கா ஒரு விஷயம் நெத்தியல அடிச்ச மாதிரி சொல்றாங்க...
"அக்கா...நீங்க யாருக்கு ஓட்டு போடுவீங்க..."?
"திமுக கட்சிக்கு தான் போடுவேன்..."
"ஏன்...காரணம் சொல்ல முடியுமாக்கா.."?
"ரெண்டு காரணம் இருக்கு தம்பி..."
"சொல்லுங்கக்கா..."
"திமுக தான் முதன் முதலா 1,000 ரூபாய் போட்டாங்க....இப்ப 2,000 ரூபாய் போடுறோம்னு சொல்லிருக்காங்க..."
"அதிமுக கூட தான் 2,000 ரூபாய் தரேன்னு சொல்லிருக்காங்க..."
"ஆமா தம்பி....இதை எடப்பாடி கட்சிக்கு தலைவரா இருந்து சொல்லிருந்தா நம்பலாம். ஆனா, எடப்பாடி பின்னாடி மோடி தானே இருக்காரு....ரெண்டு மூனு மாநிலத்தில மோடி தந்த 1,000 ரூபாய்யை கூட நிறுத்திட்டாங்கன்னு நியூஸ்ல படிச்சேன்...இங்கேயும் அதே செஞ்சாலும் செய்வார் தானே..."?
"சரிக்கா இன்னொரு காரணம்..."?
"முதல்வர் மு.க.ஸ்டாலின் கிட்ட நான் ஏற்கனவே 1,000 ரூபாய் வாங்கிட்டு இருக்கேன். என்னை மாதிரி லட்சக்கணக்கான பெண்களின் தகவல்கள் எல்லாமே நம்ம முதல்வர்கிட்ட ஏற்கனவே இருக்கு. இவங்க இப்ப ஆட்சிக்கு வந்தா, ஏற்கனவே கொடுத்த 1,000 ரூபாய்ல இன்னொரு 1,000 ரூபாய் சேர்க்கிற வேலை மட்டும் தான்..."
"சரி...."
"திமுக ஆட்சிக்கு வந்த அதே மாசத்திலேயே இந்த 2,000 ரூபாய் போட்டுடுவாங்க... ஆனா, அதிமுக ஆட்சிக்கு வந்தா, அவங்க ஒரு லிஸ்ட் ரெடி பண்ணுவாங்க....எல்லாருடைய அட்ரஸ் சரி பார்ப்பாங்க....தகுதியை திரும்பவும் செக் பண்ணுவாங்க...இப்படி எல்லாத்தையும் சரி பார்த்துட்டு பணம் போட, 6 மாசம்...1 வருஷம் கூட ஆகும்...."
"ஓகோ..."
"எங்க ஊர் VAO ஆபிசரும் அதான் சொன்னாரு....வேறு கட்சி வந்தா லிஸ்ட் திரும்பவும் ரெடி பண்ணுவாங்க....பேங்க் அக்கவுண்ட் கூட மாத்துவாங்க....அதனால் பணம் வரதுக்கு 1 வருஷம் கூட ஆகலாம். நானே இந்த மிஷின் வெச்சு துணி தைச்சு தான் குடும்பம் நடத்துறேன்...இந்த 2,000 பணமும் 1 வருஷம் கழிச்சு வந்தா, நான் எப்படி சமாளிக்கிறது...நமக்கு குறைந்தது 2 மாசத்துல 2,000 ரூபாய் அக்கவுண்ட்ல ஏறனும்னா, திமுகவுக்கு தான் ஓட்டு போடனும்...."
"ரொம்ப சரியா சொன்னீங்கக்கா..."
# இது உண்மைனு உங்களுக்கு தோனுதா...? இவங்க சொல்றது சரின்னு தான் எனக்கு தோனுது...இந்த ஓட்டு கேட்க போற திமுக வேட்பாளர்கள் இந்த விஷயத்தையும் தாழ்மையா சொல்லி (humble request) வாக்கு கேட்கலாம் தானே...?
யாரும் எதையும் செஞ்சோம் செஞ்சோம்னு திமிரா சொல்லி ஓட்டு கேட்காதீங்க, இவ்வளவு நாள் செஞ்சது போல் மறுபடியும் செய்வோம் என்று அமைதியான வார்த்தையில் அழகாக பேசுங்கள். கொடுத்தது மட்டும்தான் நீங்கள் கொடுத்த பணம் அவர்களுடையதுதான்.
கடைசிக் காலத்தில்
கலைஞர்
சிறைப்படுத்தப்பட்டிருந்தார்
என்ற அரசியல் கூற்று
உண்மைக்கு மாறானது
அதற்கு
நானும் ஒரு சாட்சி
கலைஞரின் உடல்நிலை
மருத்துவத்தின் கைகளுக்கு
மாறிவிட்டது
முதுமை - நோயுடைமை
தொண்டைத் துளை
பேச்சின்மை
மருந்துகளின் தாக்கம்
போன்ற காரணங்களுக்காக
மருத்துவர்களின் அறிவுரையைத்
தளபதி மு.க.ஸ்டாலின்
கவனமாகப் பின்பற்றினார்
நோய்த்தொற்றைத் தடுக்கவே
பார்வையாளர்கள்
ஒழுங்குபடுத்தப்பட்டனர்
அவர் ஆயுளை நீட்டிக்கவே
கட்டுப்பாடுகள் திட்டமிடப்பட்டன
வாரம் ஒருமுறை
அல்லது இருமுறை
நான் கலைஞரைச்
சந்திக்கும் வாய்ப்பை
யாரும் தடுக்கவில்லை
மென்மையாய்;
மிக மென்மையாய்
அவர் கையாளப்பட்டார்
கலைஞர் இரண்டாம்
குழந்தை நிலையில் இருந்தார்
தொட்டில் என்பது
ஒரு குழந்தைக்குச்
சிறையாகிவிடாது
தந்தையைப் பிள்ளைபோல்
பாதுகாத்தார் தளபதி
தந்தையை அவர்
சிறையில் வைக்கவில்லை;
சிறகில் வைத்திருந்தார்
தமிழர்கள் அறிவார்களாக
#கலைஞர் | @mkstalin