யாழ்ப்பாணம் - கொட்டடி மீனாட்சி அம்மன் ஆலய வீதி பகுதியில் 2006ம் ஆண்டுக்கு முன்னர் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த தனியார் காணியில் மனித எச்சங்கள் வெளிப்பட்ட இடத்தில் 2வது நாளாக நடந்த அகழ்வின் போது கால் எலும்பும், பெண்களின் ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளது.
இந்தப் பூமி மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; இது உலக உயிர்களின் உயிர் உடைமை!
#TNRejectsEIA2020 நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் மின்னஞ்சல் பரப்புரையில் இணைந்து நமது எதிர்ப்பைப் பதிவதன் மூலமாக இந்த வரைவைத் திரும்பப்பெற செய்திடுவோம்!
Email Link: https://t.co/gthkqrYsfN
பாரி வள்ளல் வாழ்ந்த பறம்பு மலை என போற்றப்படும் பிரான் மலை, கல் குவாரிக்காக வெட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். - சீமான் @SeemanOfficial@NaamTamilarOrg
பாரி வள்ளல் வாழ்ந்த பறம்பு மலை எனப் போற்றப்படும் பிரான் மலை, கல் குவாரிக்காக வெட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது. தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! - சீமான் | நாம் தமிழர் கட்சி https://t.co/RsCGCgs51K
மருத்துவர் கண்ணன் தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.
கொரோனா பிரிவில் பணியாற்றியவர் அதீத மனஅழுத்தத்தினால் தற்கொலை செய்துகொண்டுள்ளதைக் கவனத்திலெடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு உரிய ஓய்வும், சுழற்சிமுறையில் பணியும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- சீமான்
நமது முன்னோர்கள் போராடிப்பெற்ற மக்களாட்சித் தத்துவம் எனும் மகத்தான கொள்கையையே மொத்தமாகக் குலைப்பதாக உள்ளது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைக்கான புதிய வரைவு. - சீமான் @SeemanOfficial@NaamTamilarOrg
வாடகை வாகன ஓட்டுநர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மறுவாழ்வளிக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி https://t.co/ST74evDU4K
துயர் துடைப்பு நிதி, ஆறு மாத வரி விலக்கு உள்ளிட்ட வாடகை வாகன ஓட்டுநர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மறுவாழ்வளிக்க வேண்டும்! - சீமான் | நாம் தமிழர் கட்சி https://t.co/8RpXmcX8q9
மனிதர் கழிவை மனிதரே அகற்றும் மானுட அறத்திற்கே புறம்பான முறைக்கு தமிழக அரசு முற்றாக தடைவிதிக்க வேண்டும்! - சீமான் | நாம் தமிழர் கட்சி https://t.co/5vsOXEX7Cy
மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் மட்டும் நுழைய முடிந்த தமிழ்த் திரையில் கிராமத்து வீதிகளை, மண் மணம் மாறா மனிதர்களை, பண்பாட்டு விழுமியங்களை பதிவுசெய்து ஆவணப்படுத்திய எம் மண்ணின் ஆகப்பெரும் கலை ஆளுமை
அப்பா 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா அவர்களுக்கு உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
கோவையில் ஐயா பெரியார் சிலை மீது காவிச்சாயத்தை வீசி அவரைக் கொச்சைப்படுத்த முயலும் சமூக விரோதிகளின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது. சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் நோக்கோடு அக்கொடுஞ்செயலைப் புரிந்தவர் எவராயினும் அவரை கடுஞ்சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.