டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழக அரசு (தவெக) தனது அறிவிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – @maiamofficial வலியுறுத்தல்!
தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் டெல்டா பகுதி விவசாயிகளின் தற்போதைய அவல நிலையைக் கண்டு மக்கள் நீதி மய்யம் ஆழ்ந்த கவலை கொள்கிறது. விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதில் தற்போதைய தமிழக அரசு (தவெக) காட்டும் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரியும் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.
1. மேட்டூர் அணை மூடல் & மின்வெட்டு துயரம்:
வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு (2026) அணையில் முழு கொள்ளளவு எட்டப்படாததால் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் டெல்டா பாசனம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக, நிலத்தடி நீரை (போர்வெல் மூலம்) இறைத்து பாசனம் செய்யலாம் என்று விவசாயிகள் முயன்றால், டெல்டா மாவட்டங்களில் நிலவும் கடுமையான மும்முனை மின்சார (Three-Phase Connection) மின்வெட்டு அவர்களின் கைகளைக் கட்டிப் போட்டு வைத்துள்ளது. போதிய மின்சாரம் இல்லாததால் போர்வெல் மூலமும் அவர்களால் விவசாயம் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
2. போதாத 'குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு':
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையை ஈடுகட்ட, கடந்த இரண்டு ஆண்டுகளில் முந்தைய திமுக அரசு விவசாயிகளுக்குக் கூடுதல் நிதியுடன் கூடிய குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பை வழங்கியிருந்தது.
ஆனால், தற்போதைய தவேக அரசு அறிவித்துள்ள குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு வெறும் ரூ. 134.83 கோடி மட்டுமே. இது முந்தைய அரசு வழங்கிய தொகையை விட மிகவும் குறைவானதாகும்.
முக்கியக் குறிப்பு: இந்த ஆண்டு 'எல் நினோ' (El Niño) விளைவினால் 90% மழைப்பொழிவு குறைந்துள்ளது. வறட்சி அதிகமாக இருக்கும் இந்த ஆண்டில்தான் தண்ணீருக்கான தேவையும், விவசாயிகளுக்கான நிதி உதவியின் தேவையும் மிக அதிகம். இத்தகைய சூழலில், அரசு மிகக் குறைந்த தொகையை அறிவித்திருப்பது டெல்டா விவசாயிகளின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
3. தேர்தல் வாக்குறுதியும், ஏமாற்றமும்:
தேர்தல் அறிக்கையில் "விவசாயக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்" என்று தற்போதைய ஆளுங்கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், நடைமுறையில் அது முழுமையாகச் செய்யப்படவில்லை.
பல்வேறு கடுமையான நிபந்தனைகளை (Terms and Conditions) விதித்து, ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமே கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இது ஒட்டுமொத்த விவசாயப் பெருங்குடி மக்களையும் ஏமாற்றும் செயலாகவே பார்க்கப்படுகிறது.
மக்கள் நீதி மய்யத்தின் கோரிக்கைகள்:
தமிழக விவசாயிகளின் நலனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் தற்போதைய அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்:
குறுவை சிறப்புத் தொகுப்பு நிதியை வறட்சிக் காலத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக உயர்த்த வேண்டும்.
டெல்டா பகுதிகளில் போர்வெல் பாசனத்திற்கு தடையற்ற மும்முனை மின்சாரத்தை (3-Phase Power) தடையின்றி வழங்க வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற விவசாயக் கடன்களை எந்தவித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடாமல், இந்த அறிவிப்புகள் அனைத்தையும் தவெக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
#MakkalNeedhiMaiam
#KamalHaasan_MP
#cheifministerofTamilnadu
#deltafarmers
ஆக்கிரமிப்பு_போக_மீதி
#புதுக்கோட்டை.
புதுக்கோட்டை நகரப்பகுதியில்
#கீழராஜவீதி, #கீழ2ம்வீதி, #மேலராஜவீதி,
#உழவர்சந்தைரோடு, தெற்குராஜவீதி பகுதிகளில் உள்ள கடைகள் நடைபாதையை நகராட்சி நிர்வாகத்திடமிருந்து விலைக்கு வாங்கி விட்டார்கள் போல!
நடைபாதை வரை கடைகள் வந்துவிட்டது.
சாலையில் தான் வாகன நிறுத்த வேண்டியுள்ளது.
காலையில் கனரா பேங்கை தாண்டுவது
கஷ்ட காலம்..
மாலையில் மேல ராஜ வீதிக்குள் நுழைவது
பெரிய போராட்டம்..
எந்த நேரத்திலும் தெற்கு ராஜ வீதிக்குள்
போகவே முடியாது..
வெற்றிலைகடைக்கும்,பூக்கடைகளுக்கும் மட்டுமே பட்டா..
நகைகடைகள் வாசலில் வாகனங்கள் நிறுத்த இன்னும் டோக்கன் போடாத குறை..
கீழ 2 சரவணபவன் ஹோட்டலை மதியத்தை தாண்டிட்டா வாழ்க்கையில சாதிச்ச ஃபீலிங்குதான்.
பழையபடி பார்க்கிங் ஒவ்வொரு வாரமும் எதிரெதிர் வரிசைகளில் நிறுத்தி ஆக்கிரமிப்புகளை அடக்கி மாவட்ட ஆட்சியர்
நடவடிக்கை எடுக்க மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது
@TVKVijayHQ@ikamalhaasan@pdkt_collector@pudukkottai_pag@pudugaiabdulla@Pudukkottaidev1@ILovePudukottai@varalaruu1
சேலத்தில் ஓர் பொள்ளச்சி சம்பவம்?
@TVKPartyHQ அரசு-ஆள் தமிழ் நாடு மக்களுக்கு தினமும் ஒரு பிரச்சனை தான்…பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசு பதவி விலக வேண்டும்…இதை பற்றி காவல் துறை என்ன நடவடிக்கை இதுவரை எடுத்தது இருக்கிறது????
@ikamalhaasan@MaiamOfficialIT@lakshman1425
@MaiamOfficialIT மாசம் ஒன்னாச்சு திரு@AadhavArjuna .
வளர்ச்சி குறித்த அறிக்கை எங்கே?
நிதி பற்றாக்குறை குறித்த குறிப்பு எங்கே?
மக்கள் பார்வைக்கு கொடுக்க
எவ்வளவு நாளாகும்???
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புணர்வும் நிலைநிறுத்தப்பட வேண்டுமெனில், நிதி தொடர்பான உண்மை நிலவரங்கள் மறைக்கப்படாமல் வெளியிடப்பட வேண்டும். அரசின் தற்போதைய நிதிநிலை என்ன? மாநிலத்தின் மொத்தக் கடன் எவ்வளவு? எதிர்கால நிதி மேலாண்மைத் திட்டம் என்ன? போன்ற கேள்விகளுக்கு வெள்ளை அறிக்கை தெளிவான பதிலை வழங்க வேண்டும்.
நிதி வெளிப்படைத்தன்மை என்பது நல்லாட்சியின் அடையாளமாகும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கும், மக்களின் நம்பிக்கைக்கும் வெள்ளை அறிக்கை முக்கிய பங்காற்றும். எனவே, அரசு விரைவாக வெள்ளை அறிக்கையை வெளியிடுவது காலத்தின் தேவையாகும்.
#Makkalneedhimaiam
#Kamalhaasan_MP
#cheifministerofTamilnadu
🏆 Sports build discipline, unity, and leadership.
On this International Day of Sport, let's inspire more youth to embrace sports and build a healthier, stronger society. 💪⚽🏸
"Sports can change lives and shape the future."
#InternationalDayOfSport#SportsForDevelopment #YouthEmpowerment #FitnessFirst #MakkalNeedhiMaiam #KamalHaasan #TamilNaduSports #SportsLeadership #HealthyYouth #PlayForChange 🚩🏆
@ikamalhaasan@maiamofficial@MaiamOfficialIT
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனிற்காக பிரத்யேகமாக ஒரு அறிக்கை வழங்கிய @maiamofficial .
3.பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க, காவல்துறையில் பெண்காவலர்களைக் கொண்ட ஒரு தனிப்பிரிவு அமைக்கப்படும்.
@ikamalhaasan
என்றுமே முன்னோடியான தலைவர்.
#KamalHaasan#MakkalNeedhiMaiam
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
தவெக அமைச்சர்கள் வெளிப்படையாக லஞ்சம் தவிர்க்கும் செய்தி வந்தால் நம்பிக்கை பெருகும்.. ஆனால் இன்னும் அதிகாரிகள் கட்டிங் வாங்கி கொண்டே இருக்கிறார்களே...
1.வட்டார போக்குவரத்து அலுவலகம்
2.நில அளவைதுறை
3.பத்திரபதிவு துறை
4.DTCP
5.சுற்றுசூழல் துறை
6.மின்வாரிய துறை
7.வணிகவரிதுறை
இந்ததந்த துறைகளில் இன்றும்
பணம் கொடுத்தால்தான் வேலை நடை பெறுகிறது...
@MMuthunathan@ThajTK அரசியலில் அந்தந்த நேரத்து முடிவுகள் ஏற்றத்தையும் தரும்.மாற்றத்தையும் தரும்.
மக்களை ஈர்க்கும் சக்தி வெற்றி பெறும்.அதற்கு செயல்பாடு மட்டுமே முக்கியம்.
சித்தாந்த பலம் பொருந்திய நல்தலைமை
கமல்ஹாசன்... மேலும் ஜனங்களை ஈர்க்கும் திறன் அவருக்கு தெரியும்.
தவெக ஆட்சியில் தொடரும் கொலைகள் – கடும் கண்டனம்
ஒரு நாகரிக சமூகத்தின் அடிப்படை அடையாளம் சட்டம், ஒழுங்கு மற்றும் மக்களின் பாதுகாப்பாகும். ஆனால் தவெக ஆட்சியில் மாநிலம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும்
ஏற்படுத்தியுள்ளன.
சமீப காலங்களில் அரசியல், சாதி, குடும்பத் தகராறு மற்றும் சமூக விரோதச் செயல்கள் காரணமாக பல கொலைகள் அரங்கேறி வருகின்றன. குற்றவாளிகள் சட்டத்தின் மீதான பயமின்றி செயல்படுவது, சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்தில் பலவீனம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது.
மக்கள் தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ஒரு அரசின் முதன்மை கடமை மக்களின் உயிரையும் உரிமைகளையும் பாதுகாப்பதாகும். ஆனால் தொடர்ந்து நடைபெறும் கொலைகள், குற்றங்களைத் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று மக்கள் அச்சம் கொள்ள ஆரம்பித்து விட்டனர்.
குற்றவாளிகள் மீது விரைவான விசாரணை நடத்தி, சரியாக வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேபோல் காவல்துறைக்கு தேவையான அதிகாரங்களும் வளங்களும் வழங்கப்பட வேண்டும்.
கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதியும் வழங்கப்பட வேண்டும். சமூக நல்லிணக்கத்தைப் பேணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தரப்பினரும் வன்முறைக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.
எனவே, தவெக ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்களை வன்மையாகக் கண்டிப்பதுடன், சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதல்வர் விஜய் உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்குவதே நல்லாட்சியின் அடையாளமாகும்.
மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் அடிப்படை பொறுப்பு. ஆனால், முதல்வரின் சொந்த தொகுதியான பெரம்பூரிலேயே மக்கள் பாதுகாப்பு குறித்து அச்சப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது.
ஆட்சியின் மீதான விமர்சனங்களுக்கு ஆறு மாத காலம் இருக்கட்டும்.ஆனால் மக்கள் உயிரை காக்க நடவடிக்கை எடுக்க கால அவகாசம் பார்க்கும் தமிழக வெற்றி கழகத்தின் அரசுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#LawandOrder
#TVK