"பிரசவத்துக்குனு சிகிச்சைக்கு வந்துட்டீங்கனா 5000 ரூபாய் இல்லாம இங்க வராதீங்க?.. எதுக்கெடுத்தாலும் இங்க லஞ்சம் தான்"... தொழிலாளி வெளிட்ட வீடியோ - திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் இரண்டு பேர் டிஸ்மிஸ்
#Trichy | #GovtHospital | #TNGovt#PolimerNews
பதவிக்கு வந்து நான்கு நாள் சீன் போட்ட அந்த அறநிலையத்துறை அமைச்சர் அரை வேக்காடு அமைச்சர் எங்க போனான் கூப்பிடுங்கடா அந்த நாய் கண்ணில் போடும் வரை பகிருங்கடா😡😡
https://t.co/cNKIWMpiB0
தமிழ்நாடு மாநில வங்கி - வேளாண் முதலீட்டு நிதி (TN State Bank - Agri Investment Fund)
கூட்டுப்பங்கு மாதிரி (PPP Model) மூலம் விவசாயத்தில் முதலீடு: அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் (Public-Private Partnership) விவசாயத் துறையை மேம்படுத்த முதலீடு செய்தல்.
விவசாயிகளிடமிருந்து நிலக் குத்தகை: நிலம் வைத்துள்ள விவசாயிகளிடமிருந்து நிலத்தை முறையாகக் குத்தகைக்கு எடுத்து, அதை அரசு வேளாண் அதிகாரிகளின் (Agri Officers) நேரடிப் பொறுப்பில் ஒப்படைத்தல்.
மாதச் சம்பளக்காரர்களாக மாறும் தினக்கூலி தொழிலாளர்கள்: தினக்கூலிக்கு வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்களை, நிலையான மாதச் சம்பளம் பெறும் தொழிலாளர்களாக மாற்றுதல்.
வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் மறுமுதலீடு: இத்தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (PF) போன்ற சமூகப் பாதுகாப்பு வசதிகளை வழங்குவதோடு, அவர்களின் சேமிப்பில் ஒரு பகுதியை மீண்டும் 'வேளான் முதலீட்டு நிதியிலேயே' (Agri Investment Fund) மறுமுதலீடு செய்ய ஊக்குவித்தல்.
அரசு பள்ளியில் தமிழ் வழியில் படிக்கும் என் மகன் 👇👇
தெரிந்தாலும் வீட்டில் ஆங்கிலம் பேசுவதில்லை, அவனுக்கு சொல்லிக் கொடுத்ததும் இல்லை 🙏
அவனாகவே தேடி படித்தான் ஆங்கிலப் புத்தகங்கள் வாசித்தான், ஆங்கிலத் திரைப்படங்கள் பார்த்தான். கற்றுக்கொண்டான் 💪
ஆங்கிலம் அறிவல்ல 🤧
1000 தனியார் பள்ளிகளுக்கு எந்த கேள்விகளும் இல்லாமல் ஒப்புதல் அளித்த இதே TVK அரசுதான் ..
ஒரே நாளில் 207 அரசு பள்ளிகளையும் இழுத்து மூடி இருக்கிறது...
கொடுமை
#TVKFails@dir_keeraa
என்ன நண்பா @LoyolaMani ?
கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்லாம, என்ன என்னமோ எழுதி வச்சு இருக்க?
விமர்சனத்துக்கும், குற்றச்சாட்டுக்கும் விளக்கமோ, மறுப்போ, தர்க்கமோ வைக்கணும். தொலைக்காட்சி விவாதம் மாதிரியே இங்கயும், வாய்க்கு வந்தத உளறிக் கொட்டக்கூடாது நண்பா!
கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் இரண்டு அரசுத் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக இன்றுகூட செய்தி வந்திருக்கிறது. அதற்கு தவெக அரசைப் பொறுப்பேற்கச் சொல்லவில்லை.
முந்தைய திராவிட அரசுகள் போல அல்லாது, பள்ளிக்கல்வித்துறையைச் சீரமைக்கச் சொல்கிறோம்; அரசுப்பள்ளிகள் மீது கவனமெடுக்கச் சொல்கிறோம்; தரம் உயர்த்தச் செயல்பாடுகளை முன்னெடுக்கச் சொல்கிறோம். அமைச்சர் ராஜ்மோகனோ தனியார் பள்ளிகள் மீதுதான் கரிசனம் காட்டுகிறார். அதனைத்தான் அண்ணன் சீமான் அவர்கள் சுட்டிக்காட்டிக் கண்டித்திருக்கிறார்.
தனியார் பள்ளிகளின் ஒப்புதலுக்கு இலஞ்சம் வாங்கவில்லை என்கிறார் அமைச்சர் ராஜ்மோகன். அதேபோல, தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட தவெக அரசு விடவில்லை என உறுதியளிப்பாரா ராஜ்மோகன்? இன்றளவும் கட்டணக் கொள்ளை நடந்துகொண்டுதானே இருக்கிறது.
இதனைத்தானே அண்ணன் சீமான் அவர்கள் கேட்கிறார்.
//உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைத் தடுத்து தனியார் பள்ளி முதலாளிகளுக்கு உதவிய அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து ஏழை, நடுத்தர வர்க்க பெற்றோர்களுக்கு உதவ எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? //
// தனியார் பள்ளிகளின் உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைக் களைய பல்வேறு நடவடிக்கைகளை வேக வேகமாக எடுத்துவரும் அமைச்சர் ராஜ்மோகன், அதே வேகத்தோடு அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்? //
அதற்கு உரிய விளக்கத்தை அளிக்காது, முந்தைய திமுக அரசைக் கைகாட்டித் தப்பிக்க முயற்சிக்கிறீர்கள். நாங்கள் அதனை ஏதோ கண்டிக்காதது போல தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறீர்கள்.
இதோ,முந்தைய திமுக அரசினுடைய பள்ளிக்கல்வித்துறையின் நிர்வாகச்சீர்கேடுகளைக் கண்டித்து அண்ணன் சீமான் விடுத்த அறிக்கைகளிலிருந்து ஒரு சில...
(https://t.co/r9FCyk8a4s)
(https://t.co/tSb3xCLVZH)
(https://t.co/N0QeX5vjOu)
(https://t.co/eRDxOHbHxG)
(https://t.co/mbuES2wcl6)
(https://t.co/skzoTNfTCy)
போகட்டும்!
அப்புறம் என்ன..? நாங்க திராவிட ஆதரவாளரா? திராவிடத்தை எதிர்க்கணுமா? அடடா.. விஜய் திராவிடத்தை எதிர்க்கிறார் போல! இருக்க இடத்தை மறந்துட்டு same Side Goal போட்றீயே நண்பா?
திமுக ஆட்சியின் அத்தனை அவலங்களையும் எதிர்த்து நாங்கள் போராடியிருக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களோடு நாளும் களநாயகனாகப் போராட்டக்களத்தில் நின்று இருக்கிறார் அண்ணன் சீமான். கடலுக்கு நடுவே கருணாநிதியின் பேனா சிலை வைக்கும் முடிவு உட்பட பல மக்கள் விரோதத் திட்டங்களைத் தடுத்து நிறுத்தியது அண்ணன் சீமான்தான். திமுக அரசின் கொடுங்கோல் திட்டங்களையும், செயல்பாடுகளையும் எதிர்த்து சமரசமின்றிப் போராடியது நாம் தமிழர் கட்சி மட்டும்தான். அவ்வளவு ஏன்? திமுக முன்வைக்கும் 'திராவிடம்' எனும் கற்பிதத்தையும், 'பெரியார்' எனும் பிம்பத்தையும் உடைத்து எறிந்திருக்கிறோம். அதனால், திராவிடத்தையும், திமுகவையும் எதிர்க்க எங்களுக்குப் பாடமெடுக்கிற அதிகபிரசங்கித்தனம் வேண்டாம்.
வேற என்ன.. உதயநிதியை நேரில் சந்திச்சுட்டா நாங்க திமுகவோட உறவுல இருக்கோமா? என்ன அறிவு நண்பா உனக்கு?
அதுசரி! INDIA கூட்டணிக்குள் தொடர்ந்து நீடிக்கவும், செயல்படவும் வேண்டுமென திமுகவைக் கூப்பிடுறாரே உங்க கூட்டணிக் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர் திமுகவோட எந்த உறவுல இருக்காரு? அவரை தவெக அரசு கண்டித்ததா? திமுகவை தோழமைச் சக்தி எனச் சொல்கிற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வீரபாண்டியனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளும் என்ன உறவுல திமுகவோட இருக்காங்க? அவங்கள எல்லாம் கண்டிச்சுட்டீங்களா?
வேற என்னது.. அமைச்சர் ராஜ்மோகன் மீது வன்மமா? எழுதணும்ங்குறதுக்காக எதையாவது எழுதாத நண்பா..
கடைசியா என்ன சொன்ன நண்பா.. பதிலடியா? தொலைக்காட்சி விவாதம் பக்கம் தலையவே காட்டுறது இல்லையே ஏன் நண்பா? அங்க வாங்க நண்பா.. யாருக்கு யார் பதிலடி கொடுக்குறான்னு பாப்போம்..
கடைசியா ஒரே கேள்வி நண்பா.. இதுக்கு மட்டுமாவது பதில் சொல்லு..
முந்தைய திமுக, அதிமுக ஆட்சிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள் தனியார் பள்ளிகளின் ஒப்புதலுக்கு இலஞ்சம் வாங்கினார்கள் எனும் நந்தகுமாரின் குற்றச்சாட்டை முழுமையாக நாங்கள் ஏற்கிறோம்.
2017ஆம் ஆண்டு முதல் 2021வரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன். அவர் தனியார் பள்ளிகளின் ஒப்புதலுக்கு இலஞ்சம் வாங்கினாரா? இல்லையா?
A4 Paperயில் எழுதிக் கொடுத்தால்தான் பரப்புரைக் கூட்டம் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர்வரை எல்லாவற்றிலும் வாய்திறக்க முடியும் எனும் கையாலாகா நிலையிலிருக்கும் ஒருவரைத் தலைவராக வைத்துக் கொண்டு, அரசுப்பள்ளிக் குழந்தையைக் கேள்வி கேட்டு, கூனிக் குறுக வைக்கும் அமைச்சர் கீர்த்தனாவின் செயல்பாடு பச்சை அயோக்கியத்தனம்!
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு தவெக அரசே காரணம்...
- தமிழ்நாடு பிரதிநிதி தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
- தனியார் துறையில் 80% வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு வேண்டும்
- உள்நுழைவு அனுமதிச் சீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்
போன்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இடும்பாவனம் கார்த்திக் அவர்களின் கண்டனவுரை
https://t.co/NKTAStD2Tq
#EngalDesamOfficial #InnerlinePermit
ஆதித்தமிழர் எழுச்சிநாள்
ஆனி 23 (07-07-2026)
தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் இழிவு நீங்கவும், சமவுரிமை பெற்றுக் கண்ணியமாக வாழவும் பாடுபட்டதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய சமூகநீதிப்போராளி..!
“எந்தச் சொல் உன்மீது இழிச்சொல்லாகச் சுமத்தப்படுகிறதோ, அந்தச் சொல்லை நீ எழுச்சிச் சொல்லாக மாற்றாத வரை உனக்கு விடுதலை இல்லை” என்று முழங்கிய புரட்சியாளர்!
வர்ணாசிரம கோட்பாட்டிற்கு எதிராக ஒரு மாற்றுக் கோட்பாட்டை நீ உருவாக்கிக்கொள்ளாத வரை உனக்கு விடுதலை இல்லை என்று கற்பித்த பெருந்தகை..!
இலண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்குக் குரல்கொடுத்த போராளி..!
சாதியக் கொடுமைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை முன்மொழிந்து அவை நிறைவேற காரணமான சமூகச் சீர்திருத்தவாதி..!
அண்ணல் காந்தியடிகளுக்கு தமிழ்ப் படிக்கவும், தமிழில் கையெழுத்திடவும் கற்றுக்கொடுத்த தமிழறிஞர்..!
தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பிறந்த நாளில் சமத்துவச் சமுதாயம் உருவாக்கிட வேண்டும் என்ற அவருடைய உயரிய கனவினை நிறைவேற்ற தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்ற உள உறுதியோடு, அவருடைய பேரப்பிள்ளைகளாகிய நாம் பெருமிதத்தோடும், திமிரோடும் நம்முடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
‘ஆதித்தமிழர் எழுச்சி நாளில்’ தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!