தோழர் திருமாவளவன் சொல்வது சரிதான். தி.மு.க அரசு விஜய் மீது வழக்குப் போட்டிருக்க வேண்டும். தி.மு.க அரசு செய்த தவறை தோழர் திருமாவளவன் நேர் செய்ய வேண்டும்.
அடுத்து விஜய்யுடன் கலந்துகொள்ளும் பொதுக்கூட்ட மேடையில் ‘’முதலமைச்சர் ஆனபிறகு நீங்கள் கரூர் கூட்டத்தில் பேசியது எல்லாமே பொய். நீங்கள்தான் கரூர் சம்பவத்தில் குற்றவாளி’’ என்று பேசி அம்பலப்படுத்த வேண்டும். அல்லது இடைத்தேர்தல் பிரச்சாரத்திலாவது இப்படி பேசி அம்பலப்படுத்த வேண்டும்.
சிரித்த முகம் - சிந்தையைக் கவரும் தமிழ் – மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.
திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவர், கம்பனையும் ஆய்ந்தறிந்தவர் எனப் பண்டைத் தமிழிலக்கியத்தில் எந்த அளவுக்கு விற்பன்னராகத் திகழ்ந்தாரோ, அதே அளவுக்கு எளிய மொழியில் நகைச்சுவையாகப் பேசும் திறனும் கைவரப் பெற்றவராகப் பாப்பையா அவர்கள் திகழ்ந்தார்.
பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள். பட்டிமன்றம் என்றாலே பாப்பையாதான் எனக் கூறும் அளவுக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரம் பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்தவர். தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளமாகவே மாறிப் போனவர். பாப்பையா பரம்பரை எனச் சொல்லத்தக்க அளவுக்குத் தன்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்தவர்.
தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர் பேராசிரியர் பாப்பையா அவர்கள். கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் எங்கள் மீது காட்டும் அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை. எப்போது சந்தித்தாலும் புன்னகையோடும் வாஞ்சையோடும் கரங்களைப் பற்றிக்கொள்ளும் அன்பிலான உறவை நாங்கள் கொண்டிருந்தோம்.
கடந்த ஆண்டு மே மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நான் மதுரை சென்றிருந்தபோது நடந்த மக்கள் சந்திப்பில் அவரது வீட்டு வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார். சில மாதங்களுக்கு முன்புதான் துணைவியாரை இழந்திருந்த பேராசிரியரிடம், “உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது.
தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கும் மதுரை மக்களுக்கும் உலகெங்கும் வாழும் அவரது இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர், எழுத்தாளர், கல்லூரிப் பேராசிரியர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட மதுரையின் பெருமைமிகு ஆளுமைகளில் ஒருவரும், எனது தந்தையார் காலம் முதலே எங்கள் குடும்பத்துடன் நெருக்கமான நட்பு பாராட்டி வந்தவருமான ஐயா பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள், நான் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் என்னை வேட்பாளராக முன்மொழிந்து, படிவத்தில் கையெழுத்திட்டவர்.
அவரது மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
அவர்தம் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், தமிழார்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மதுரையின் மண்ணோடும், மக்களோடும், தமிழோடும் இவ்வாளுமையின் நினைவு என்றும் நிலைத்திருக்கும்.
நினைவு தெரிந்த நாளிலிருந்து இவரது பட்டிமன்றம் இல்லாத தீபாவளி, பொங்கல், சித்திரைநாள் இருந்ததில்லை. தமிழர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த மகத்தான அறிஞர். சென்று வாருங்கள் அய்யா!