எதிரி எந்த மூலைக்கு எல்லாம் போர் எடுத்துச் செல்கிறானோ அங்கெல்லாம் நாமும் எடுத்துச் செல்ல வேண்டும்.
அவனது வீடு அவனது சினிமா அரங்கிற்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.
முழுமையான யுத்தம் என்பது ஒரு நிமிடம் கூட எதிரியை நிம்மதியாக இருக்க விடக் கூடாது.
- தோழர் சே குவேரா
#CHE #CheGuevara
I'm very disappointed with @udemy. I purchased a personal plan subscription but accidentally used the wrong email address when creating my account. I've been trying to reach the support team all afternoon,am extremely frustrated with the Alex chatbot. Can I please get assistance.
இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ள தோழர் தெள.சம்சீர் அகமது Samseer Ahamed கும், மாநிலச்செயலாளர் தோழர் கோ.அரவிந்தசாமிக்கும் G. Aravintha Samy புரட்சிகரமான வாழ்த்துகள்...
#SFI#SFItamilnadu
மேற்கு வங்க சிபிஐ(எம்) தலைமையிலான இடது முன்னணி அரசைக் கவிழ்க்க நிகழ்த்தப்பட்ட சதிதான் மரிச்ஜாப்பி - தோழர் @gselva158 மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM#WestBengal#LeftFront#MarichjhapiMassacre More: https://t.co/4MovrCNgP1 Full Video Link: https://t.co/wUhLnhwJvr
அடிப்படையில் அமைந்துள்ள ஒரு சமுதாயத்தில் “ஒருசார்பற்ற" சமுதாய விஞ்ஞானம் எதுவும் இருக்க முடியாது. அதிகாரத் தரப்பைச் சேர்ந்த விஞ்ஞானம் அனைத்தும், மிதவாதிகளது விஞ்ஞானம் அனைத்தும் ஏதாவதொரு விதத்தில் கூலி அடிமை முறையை ஆதரிக்கிறது.
#Lenin#quotes#quotesoftheday
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் தோழர் பி.ஆர். நினைவு தின செஞ்சட்டை பேரணி - பொதுக்கூட்டம் கொட்டும் மழையிலும் நடைபெறுகிறது. #CPIM#PRamamurthi#CPIMLeader#Redrally
விடுதலை போராட்ட வீரர் தோழர் என். சங்கரையா அவர்களுக்கு டாக்டர் பட்ட சான்றிதழில் கையெழுத்திட மறுத்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி
விடுதலை போராட்ட நாயகனுக்கு டாக்டர் பட்டம் தருவது விடுதலை போராட்டதில் மண்ணிப்பு கடிதம் எழுதிய சவர்கர் வகைறாக்களுக்கு எரிச்சல் உண்டாவது ஆச்சரியம் இல்லை
நியூஸ்க்ளிக் பிரச்சினையில் பேசப்படும் வெளிகளை உற்றுக் கவனியுங்கள். இதுவரை நியூஸ்க்ளிக்குக்கு ஆதரவாக மிகச் சில குரல்கள்தாம் வந்திருக்கின்றன.
இந்தியா கூட்டணியிலிருந்து அறிக்கை வந்திருக்கிறது. கட்சிவாரி கண்டனங்கள் மிகக் குறைவு. தலைவர்களின் கண்டனங்களும் குறைவு.
வழக்கம் போல் பினராயி விஜயன் கண்டித்திருக்கிறார். வைகோ கண்டித்திருக்கிறார். கனிமொழி, சு.வெங்கடேசன் போன்றோர் கண்டித்திருக்கின்றனர். மாற்றத்துக்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கண்டித்திருக்கிறது.
ஒரு பக்கம் கள்ள மவுனம் என்றால் மறுபக்கத்தில் எள்ளல் பேச்சுகள் வெளிப்படையாகவே இருக்கின்றன. சசி தரூர் இட்டிருக்கும் ட்வீட்டில், ‘வலிமையான அரசாங்கமாக காட்டிக் கொள்ளும் பாஜகவை ஒரு செய்தித்தளம் ஏன் அச்சுறுத்துகிறது? அதுவும் அதிக வாசகப்பரப்பு இல்லாத செய்தித்தளம் ஏன் அச்சுறுத்துகிறது?’ என வஞ்சப் புகழ்ச்சி அல்ல, வஞ்ச இகழ்ச்சி செய்திருக்கிறார்.
நியூஸ்க்ளிக் பத்திரிகையாளர்கள் பலரும் இடதுசாரிகள் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
விசாரணைக்கு அழைத்து செல்லப்படும்போது கூட புன்னகையுடன் செல்கின்றனர். அதிலும் பரஞ்சோய் குஹாவிடம் ANI நிறுவனம் மைக்கை நீட்டியதும் அவர் அடித்த நக்கல் சிறப்பு.
மைக்கை இழுத்து அதில், ‘மோடிஜி ஒரு மகான்.. வாங்க கேளுங்க.. அதுதானே உங்களுக்கு வேணும்.. மோடிஜி கடவுளோட அவதாரம்.. போதுமா?’ என அவர் சொன்னது, நேர்மையான ஊடகவியலுக்கும் ஜால்ரா ஊடகவியலுக்கும் இடையிலான மோதல் உரையாடல்.
பத்திரிகையாளர்கள் நடந்து கொண்ட விதம் ஒரு நீண்ட வீரஞ்செறிந்த மரபின் தொடர்ச்சியே.
ஓர் அதிகாலையில் 30-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களின் வீடுகளில் புகுந்து ரெய்டு நடத்தி, எந்தக் காரணமும் விளக்கப்படாமல், செல்பேசிகளும் லேப்டாப்களும் பறிமுதல் செய்யப்பட்டு பிறகு UAPA வழக்கு பதிவு செய்யப்படுவது சமீப வருடங்களில் நடந்திராதது. அதிலும் ஒரு முக்கியமான எதிர்க்கட்சியின் தலைவரும் சிறந்த நாடாளுமன்றவாதி என பாராட்டப்பட்டவருமான யெச்சூரியின் வீட்டுக்குள் காவல்துறை புகுந்தும் இவ்வளவுதான் கண்டனங்கள், எதிர்க்குரல் எல்லாமும்.
சசி தரூர் போன்ற பல தலைவர்களுக்கு மட்டுமல்ல, பல ஊடகவியலாளர்களுக்கும் கூட, இடதுசாரிகள் என்றால் நக்கலும் கிண்டலும்தான்.
இடதுசாரிகள் குறைவாக இருப்பது கூட பிரச்சினை என்பது எதிரிக்கு மட்டும் தெளிவாக தெரிகிறது. அவன் கட்டவிழ்க்கும் ஒடுக்குமுறை, பிற இடங்களில் எல்லாம் மவுனமாக ரசிக்கப்படுகிறது.
ஆனால் வரலாறு சொல்லும் உண்மை ஒன்றுதான்.
First they came for Communists!
வாச்சாத்தி கொடுமைகள் நடந்து காலங்கள் கடந்தும், நீதி மறுக்கப்பட்டும் இருந்தது.
இந்த கொடூர நிகழ்வை வெளி கொண்டு வந்தது கம்யூனிஸ்ட்கள் தான், கடைசி வரை களத்தில் நின்று இந்த நீதியை பெற்று கொடுத்தது கம்யூனிஸ்ட்கள் தான்.
உங்களுக்கு தான் ஆசிரியரே இந்த காணொளி
@AsiriyarKV