#ஜெய்பீம் ✊
சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவை முன்னிறுத்தி வாழ்நாள் முழுவதும் போராடிய #பகுத்தறிவுப்பகலவன்_தந்தைபெரியார் அவர்களின் 148-வது பிறந்தநாள் இன்று!
சாதியற்ற சமத்துவ சமூகத்தை நோக்கிய நமது களப்பயணத்திற்கு பெரியாரின் சிந்தனைகள் என்றும் வழிகாட்டியாகட்டும்!
#HBD_Periyar148@beemji
யப்பா...
பயங்கரம் அண்ணா...♥️♥️
தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்ட பாய்ச்சலை உருவாக்கப் போகும் வேட்டுவத்தை பார்ப்பதற்கும், கொண்டாடுவதற்கும் காத்து இருக்கிறேன்..
மொத்த படக்குழுவிற்கு என் வாழ்த்துகளும் அன்பும்
@beemji#vettuvam
https://t.co/NvBeKO41jN
ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரல், இந்திய துணைக்கண்டத்தின் தனித்துவ அரசியல் ஆளுமை, எழுச்சித் தலைவர், முனைவர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்🌸💙 @thirumaofficial 🌸❤️
அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல்
எத்திசையில் இருந்து ஒலித்தாலும் அத்திசைக்கு பெரும் நம்பிக்கையையும் வலிமையையும் சேர்ப்பதே என் கலையின் நேர்மை என்பதை உறுதியாக நம்புகிறேன்.
நீட் எனும் ஆணவபோக்கிற்கு எதிராக ஆவேசமாக களமாடும் அத்தனை இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து நிற்கிறேன்…
#BanNEET #SaveStudents
சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும்
விடுதலைச் சிறுத்தைகள் @thirumaofficial கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் வன்னியரசு @VanniTamizhVCK அவர்களுக்கு நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நெடுங்காலமாக இருந்து வருகிற துறையாக இருந்தாலும், அது உருவாக்கப்பட்டதின் நோக்கத்தை உணர்ந்து, பட்டியலின மக்களின் அரசியலைப் பேசி வளர்ந்த ஒரு இயக்கத்தின் கைகளுக்கு இன்று அது வந்திருக்கிறது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியலையும் உரிமைகளையும் மையமாக வைத்து, இத்துறை உண்மையான மாற்றங்களுக்கான கருவியாக செயல்பட வேண்டும். அந்தப் பொறுப்பை தோழர் வன்னியரசு அவர்கள் சிறப்பாக முன்னெடுப்பார் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும்
(IUML) @IUMLTNOfficial கட்சியைச் சேர்ந்த தோழர் ஷாஜகான் அவர்களுக்கும்
மனமார்ந்த வாழ்த்துகள்.
இதை சாத்தியப்படுத்திய தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்
@TVKVijayHQ அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். @CMOTamilnadu
ஜெய் பீம்!
•திருமா திமுக கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும்.வெளியே வந்துவிட்டார் என கொள்வோம்.
•அவர் இந்த தேர்தல் அரசியலில் எங்கு செல்ல வேண்டும். என்ன செய்ய வேண்டும்?
இல்லை அவர் தேர்தல் அரசியலில் இருக்கவே கூடாதா?
இந்த இரண்டு கேள்விக்கும் விமர்சனம் செய்கிறவனெல்லாம் பதில் சொல்வானா?