இயக்கத்தின் இதயமாம் நம் @dmk_youthwing-ன் மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு, கோவையில் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அந்த மண்டலத்துக்கு உட்பட்ட 14 கழக மாவட்டங்கள், 39 சட்டமன்றத் தொகுதிகளை சேர்ந்த மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்- சட்டமன்ற- நாடாளுமன்ற உறுப்பினர்கள்- மாவட்ட-மாநகர கழகச் செயலாளர்கள் - இளைஞர் அணித் துணைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்- துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தை, இன்றைய தினம் காணொலிக் காட்சி வாயிலாக நடத்தினோம்.
நிர்வாகிகள் சந்திப்புக்காக மேற்கொள்ளவேண்டிய போக்குவரத்து-உணவு-குடிநீர் வசதிகள், அடையாள அட்டை- வெண் சீருடை தயாரிப்பு உள்ளிட்ட ஆயத்தப் பணிகள் குறித்து, மாவட்டக் கழகச் செயலாளர்களிடம் கலந்தாலோசித்து, வடக்கு மற்றும் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பை போல், இதுவும் வெற்றிச் சந்திப்பாக அமைந்திடும் வகையில், பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டோம்.
மேற்கு மண்டலத்தில் கழகத்தின் வலிமையை நிலைநாட்டும் ஒன்றாக இந்த இளம் நிர்வாகிகள் சந்திப்பு நிச்சயம் அமையும்!
#Youth4DMK2026 #கழக_இளைஞர்_அணி
5 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகள் - 50 லட்சம் உறுப்பினர்கள் என்பது வெறும் எண்கள் அல்ல, சமத்துவம் - சமூகநீதி - சகோதரத்துவம் எனும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளால் ஊக்கம் பெற்று, அதே கொள்கைப் பற்றோடு அடுத்தடுத்தத் தலைமுறைக்கும் கழகத்தின் கொள்கைகளை - சாதனைகளை பறைசாற்றும் கழக பாசறையின் படைவீரர்கள். 2026-ல் மீண்டும் #திராவிடமாடல் அரசை அமைத்து உதயசூரியனை உதிக்க வைக்கப்போகும் களப்பணியாளர்கள். 🌄
தங்களது உணர்வுகளை ஒலிக்கும் இவர்களின் குரல்தான் இன்றைய தமிழ்நாட்டின் குரல்! 🖤❤️
@Udhaystalin #Youth4DMK2026 @arivalayam
ஆதிக்கவாதிகள் கையில் இருந்த அதிகாரத்தை சாமானிய மக்களிடம் சேர்த்த பேரறிஞர் அண்ணா, நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் திருவுருவச்சிலைகளை தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளை பகுதியில் கழக நிர்வாகிகள் - உடன்பிறப்புகள் - பொதுமக்கள் உணர்ச்சி முழக்கங்களுக்கிடையே இன்று திறந்து வைத்தோம்.
தமிழ்நாட்டிற்குள் புறவாசல் வழியாக நுழைய முயற்சிக்கும் பாசிஸ்ட்டுகளையும் - அவர்களை தோள் மேல் சுமந்து வரும் அடிமைகளையும் வீழ்த்தி,
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில், திராவிட மாடல் 2.0 அமைக்க அண்ணா - கலைஞர் சிலைகள் முன்பாக உறுதியேற்போம் என உரையாற்றினோம்.
பேரறிஞர் அண்ணா - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் ஓங்கட்டும்! @KN_NEHRU@regupathymla@Anbil_Mahesh@TRBRajaa@Govichezhian@SSP_MANICKAM #Palanivel @Murasoli_tnj@annadurai_pkt@peraiashok
கழக மாநில வர்த்தக அணி துணை தலைவர் அண்ணன் பழஞ்சூர் செல்வம் அவர்களின் மகன் விக்ணேஷ் - சூர்யா இணையரின் திருமணத்தை பட்டுக்கோட்டையில் இன்று நடத்தி வைத்தோம்.
மணமக்கள், தந்தை பெரியாரும் - பகுத்தறிவும் போல, அண்ணாவும் - மாநில சுயாட்சியும் போல, கலைஞர் அவர்களும் - சமூக நீதியும் போல, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் - கழகமும் போல சிறப்புகளுடன் வாழ என் அன்பும் - வாழ்த்தும்.
@KN_NEHRU@Anbil_Mahesh@TRBRajaa@Govichezhian #Palanivel @Murasoli_tnj@annadurai_pkt
பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் வசதிக்காக ரூ.20 கோடி மதிப்பில் பட்டுக்கோட்டையில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை இன்று திறந்து வைத்து பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தோம்.
திராவிட மாடல் அரசால் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் பட்டுக்கோட்டை நகர வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும்.
@KN_NEHRU@Anbil_Mahesh@TRBRajaa@Govichezhian@Murasoli_tnj@annadurai_pkt
கழகத்தின் முன்னாள் விவசாய தொழிலாளர் அணி செயலாளர், முன்னாள் அமைச்சர், மறைந்த அண்ணன் அழகு திருநாவுக்கரசு அவர்களின் திருவுருவச் சிலையை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள எடமேலையூரில் இன்று திறந்து வைத்தோம்.
அண்ணன் அழகு திருநாவுக்கரசு அவர்கள் ஆற்றிய மக்கள் பணி - கழகப்பணியையும் - அவரது திராவிட இயக்கப்பற்றையும் எடுத்துரைத்து உரையாற்றினோம்.
வாழ்க அண்ணன் அழகு திருநாவுக்கரசு அவர்களின் புகழ்!
@KN_NEHRU@Anbil_Mahesh@TRBRajaa@SMeyyanathan@Govichezhian@SSP_MANICKAM@kalaivanandmk@Murasoli_tnj@ilaiyadmk
கடைக்கோடி கிராமங்களிலும்- நகரங்களிலும் கருப்பு-சிவப்பு கொடி அளிக்கும் கொள்கை உணர்வுடன் கழகப் பணியாற்ற ஆர்வத்துடன் இருக்கும் New Dravidian Stock-களை கழக இளைஞர் அணி நிர்வாகிகளாக நியமிக்க உறுதுணையாக விளங்கிய துணைச் செயலாளர்கள், மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர் துணை அமைப்பாளர்களை இன்றைய தினம் மதுரையில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டோம்.
விருதுநகர் தென் மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற உழைத்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து, அவர்களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மேலும் விரைவில் நடைபெறவுள்ள மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பிற்கான பணிகளை சீரிய முறையில் மேற்கொள்ளும்படி ஆலோசனை வழங்கினோம்.
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு Vs #NDA என்ற உரிமைகளுக்கான ஜனநாயகப் போரில் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு, 5 லட்சம் நிர்வாகிகளுடனும் 50 லட்சம் உறுப்பினர்களுடனும் கழக இளைஞர் அணி அயராது உழைக்கும் என உறுதியேற்றோம்.
#கழக_இளைஞர்_அணி #Youth4DMK2026 @KKSSRR_DMK@TThenarasu@Joel_Dmk@Inba_AN_Ragu@ilaiyadmk@keprakashdmk@AbdulmalikDmk@Prabhugajendran@pssrinivasandmk@GprMadurai@C_ANAND_KUMAR
குறிஞ்சி இல்ல பணியாளர் அரவிந்த் அவர்களுடைய சகோதரர் மாணிக்கபாண்டி - வைஷ்ணவி ஆகியோர் இல்வாழ்வில் அடியெடுத்து வைக்கவுள்ள நிலையில், மணமகன் இல்லம் சென்று மணமக்களை மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள் வாழ்த்தினார்.
கனவு மெய்ப்பட்ட தருணம்! ✈️🌍
"நாங்க ஃப்ளைட்ல போவோம்னு நினைச்சே பார்க்கல" - மலேசியாவில் நம்ம அரசுப் பள்ளி மாணவர்கள்!
கல்வி மட்டுமே ஒருவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் என்பதற்கு இவர்களே சாட்சி! ❤️👏
#StudentSuccess#EducationTrip#AnbilMahesh#DravidianModel#DreamBig
நடக்க இருக்கும் தேர்தல் 2 கூட்டணிகளுக்கு இடையில் நடக்கும் தேர்தல் அல்ல. இது, தமிழ்நாடு Vs NDA! பாமர மக்களுக்கும் புரியும் மாதிரி இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் வெல்லப் போவது தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? இதை முடிவு செய்யப் போவதுதான் இந்தத் தேர்தல்.
அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, அனைவரும் திமுகவை ஆதரித்தாக வேண்டிய செயல் தேவையை விளக்க வேண்டும்.
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#ஸ்டாலின்_தொடரட்டும்
பள்ளி மாணவச் செல்வங்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவித்து, அதன் மூலம் பயனுள்ள கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கான முயற்சியாக VISTA Ideathon நிகழ்வினை Times of India, Vellore International School மற்றும் EDII-TN இணைந்து ஒருங்கிணைத்துள்ளனர். அதன் நிறைவு விழாவில் பங்கேற்று, மாணவச் செல்வங்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டோம். தேர்வு செய்யப்பட்ட படைப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, வாழ்த்தினோம்.