முசிறி நிர்வாக மாவட்டம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த்தேசிய தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழாவில் முதல் நிகழ்வாக புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது.
@Seeman4TN@idumbaikarthi@Sunandha_TS
நான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டங்களில் எங்கள் வீட்டின் தொலைக்காட்சி பெட்டியில் கலைஞர் கருணாநிதியின் பேச்சும் அவர் தொடர்பான செய்திகளும் தான் தந்தையின் வாயிலாக அடிக்கடி கண்களில் படும் ; செவிகளில் விழும். அதற்குப் பிறகான பள்ளிக்கூட காலகட்டத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து பேச்சு போட்டிகளுக்கும் தயாராகும் முன்பாக ஒருவரின் பேச்சை கேட்டு விட்டு தான் போவேன் என்றால் அது மதிமுகவின் பொதுச் செயலாளர் ஐயா.வைகோ அவர்களின் பேச்சைத்தான். தந்தை பெரியார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நான் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது "வந்துட்டாரு நம்ம ஸ்கூல் வைகோ" என்று என் இயற்பியல் வாத்தியார் தோளில் தட்டி அழைத்தது இன்றும் நினைவில் இருக்கிறது.
அதற்கு பிறகான கல்லூரி காலகட்டங்களில் மாவட்ட அளவிலான மேடைகளாக இருந்தாலும் சரி கல்லூரிகளுக்கு இடையிலான மேடைகளாக இருந்தாலும் சரி சீமான் அவர்களின் பேச்சுக்களை பார்த்துவிட்டு போவதுண்டு. என்னைப்போல பலரும் அவரைப் பற்றி பேச்சுப்போட்டி அரங்குகளில் கலந்து பேசுவதுண்டு.
அப்போதில் இருந்து இப்போது வரை தன் பேச்சால் மட்டுமே தன் கட்சியின் தொண்டர்களை உருவாக்கி தனதாக்கி வைத்திருப்பது என்பது ஓர் அசாத்திய ஆற்றல் தான். தலைவர்களாக உருவாகிய பலர் சிறந்த பேச்சாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இந்த தலைமுறையில் பேச்சுத் திறமை வாய்ந்த தலைவர்களுள் தற்போதைக்கு டாக்டர். திருமாவளவன் அவர்களும்,
திரு. சீமான் அவர்களும் கடைசிகட்ட தலைவர்களாக நான் பார்க்கிறேன். அப்படி நான் பார்த்து ரசித்த, தமிழ்நாட்டின் பல தலைவர்கள் பேசத் தயங்கிய அந்த இடத்தை தொட்டுப்பேசி வெடித்த சீமான் அவர்களின் இந்தப் பேச்சு மறக்க முடியாதது. வலதுசாரி இந்துத்துவ சக்திகள் முன்னெடுத்த பெண்களுக்கு எதிரான பரப்புரை செய்த நேரத்தில் தமிழ்நாட்டின் திராவிட இயக்க பேச்சாளர்கள் எதிர் வினையாற்ற தவறவிட்ட தருணமாக இதை நான் கண்டேன். சீமானின் இந்த அனல் கக்கும் பேச்சு தான் பாஜகவால் இன்றைக்கும் ஜீரணிக்க முடியாத ஒன்று.
"கோவிலுக்குள்ளே என் குல பெண்கள் நுழைந்தால் புனிதம் கெட்டுப் போய்விடும் என்றால் அது கோயிலே அல்ல குட்டிச்சுவர்" என்று பேசுவதற்கு எத்தனை தலைவர்கள் இன்று தயாராக இருப்பார்கள் என்பது கேள்விக்குறிதான் !
சாதி மத பேதமற்ற நற்றமிழ் நாட்டை உருவாக்க தங்களைப் போன்று ஒரு தமிழ்க்குரல் என்றென்றும் ஒலிக்கட்டும்.
மதிப்பிற்குரிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய தாலாட்டு நாள் வாழ்த்துக்கள் ❤💐
@Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg
அழுத்த அழுத்த எழுவோம்.. அடக்குமுறைக்கு அஞ்சோம்.. இதுவரை இல்லாத அடக்குமுறை.. அதையும் மீறி திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து இன்று மக்களின் குரலாய் முழங்குவோம்..
#போதும்திமுக#EnoughDMK