நேற்று, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான திரு.வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு "அரோகரா" என முழக்கமிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முருகப்பெருமானின் திருவிழாவையும், பக்தி முழக்கங்களையும் அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
“அரோகரா” என்பது முருகப்பெருமானை போற்றிப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான முழக்கம். அந்த இறை முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காகப் பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளைக் கொச்சைப்படுத்துவதுடன், முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும்.
இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினராக இருப்பவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பக்தர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் அறிவுறுத்த வேண்டும்.
கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சாதாரண பெண்கள் குழந்தைகளுக்கு தவெக அரசு எப்படி பாதுகாப்பு வழங்கும். இந்த விவகாரம் குறித்து முதல்வர் பேசவேண்டும் - தலைவர் @annamalai_k கேள்வி.
கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு எதையோ மறைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலரிடம் புகார் அளித்தாரா, முதல்வர் அலுவலகத்திற்குப் புகார் சென்றதா, முதல்வர் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை அழைத்து எச்சரித்தாரா என்பவை பற்றி ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மையா, இல்லையா என்ற குழப்பம் நீடிக்கிறது.
இந்தச் சூழலில், மறைந்த கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணின் புகழ்பெற்ற கார்ட்டூன் ஒன்று நினைவுக்கு வருகிறது.
இதே குற்றச்சாட்டு, ஒரு சாமானியக் குடிமகன் மீது எழுந்திருந்தால், இந்த அரசாங்கம் இதே அளவு பொறுமையுடன், புகார் வந்ததா, வரவில்லையா என்று விவாதித்துக் கொண்டிருக்குமா? ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா?
தமிழகத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், அதைச் செயலிலும் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருக்கிறது. இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பதைத் தமிழக அரசு வெளிப்படையாகத் தெளிவுபடுத்த வேண்டும்.
@NewsTamilTV24x7 Is it a cream or plain cake. Need to check the quality before distributing to kids. Lorry temperature might spoil the cake , it may create mold. Instead could have ordered within TN and delivered in 1 or 2 days . Why from kolkata?
கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம் நூலகத்தில், புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.
நூலகம் என்பது வெறும் கட்டிடம் அல்ல. வீட்டில் புத்தகங்கள் வாங்கிப் படிக்கப் பொருளாதார வசதியில்லாத மாணவர்களுக்கும், TNPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும் அறிவையும், வாய்ப்புகளையும் சமமாகப் பகிர்ந்தளிக்கும் ஓர் உன்னதமான பொதுச் சொத்து. அத்தகைய ஒரு நூலகத்திற்காக ஒதுக்கப்படும் மக்கள் வரிப்பணத்தில் முறைகேடு நடந்திருக்குமானால், அது ஒரு நிதி முறைகேடு மட்டுமல்ல அடுத்த தலைமுறையின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்குச் செய்யப்படும் துரோகம்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இந்த நூலகத்திற்குப் புத்தகங்களைப் பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்த புத்தகங்களின் முழுமையான பட்டியல் என்ன? அந்தப் பட்டியலில் இடம்பெற்ற அனைத்து புத்தகங்களும் உண்மையில் கொள்முதல் செய்யப்பட்டனவா? கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை, ISBN எண்கள், கொள்முதல் செய்யப்பட்ட தேதி, நூலகத்தை வந்தடைந்த தேதி ஆகியவற்றைச் சரிபார்த்தவர்கள் யார்? புத்தகங்களின் தரம், உள்ளடக்கம் மற்றும் விலை ஆகியவற்றை ஆய்வு செய்த நடைமுறை என்ன? இந்தக் கேள்விகளுக்கு ஆவணப்பூர்வமான பதில்கள் அளிக்கப்பட வேண்டும்.
புத்தகக் கொள்முதல் தொடர்பான பரிந்துரைக் குழுவின் அறிக்கை, பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல், கொள்முதல் ஆணைகள், விலைப்பட்டியல், விநியோக ஆவணங்கள், சரிபார்ப்புக் குழுவின் அறிக்கை என அனைத்தும் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும். ஒவ்வொரு புத்தகமும் உரிய விலைக்கு வாங்கப்பட்டதா, வாங்கப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் நூலகத்தைச் சென்றடைந்தனவா என்பது குறித்து சுதந்திரமான, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அறிவைப் பகிர வேண்டிய நூலகத்தையே, ஊழலுக்கான கூடாரமாக மாற்றியிருந்தால், அது வெறும் மக்கள் வரிப்பணக் கொள்ளை அல்ல அறிவுக் கொள்ளை. இதற்குப் பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும்.
நான் சும்மா தலைவரை Elevate பண்ணனும்-னு சொல்லல.. தளபதி படம் ஏற்படுத்துன தாக்கம் பெருசு..🔥
இன்னைக்கு யார் வேணாலும் பேருக்கு தளபதி-னு சொல்லிட்டு சுத்தலாம்..
ஆனா OG தளபதி எங்க தலைவர் தான் @rajinikanth 🛐👑
@grok உண்மை தானே?
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பயணம் செய்ய வேண்டிய பெண்களுக்கு 10 நாட்கள் இலவச ஆட்டோ பயண வசதியுடன், 112 அவசர உதவி எண் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது👏
#Annamalai#Wetheleaders
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
𝗔 𝗡𝗘𝗪 𝗘𝗥𝗔 𝗢𝗙 𝗟𝗘𝗔𝗗𝗘𝗥𝗦𝗛𝗜𝗣 𝗙𝗢𝗥 𝗧𝗔𝗠𝗜𝗟 𝗡𝗔𝗗𝗨‼️
2️⃣0️⃣3️⃣1️⃣
2031-ஐ இலக்காகக் கொண்டு, அறிவார்ந்த தலைமைத்துவ மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் We The Leaders பயணிக்கிறது!
இது வெறும் இயக்கத்தின் வளர்ச்சி அல்ல… தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தை அடிமட்டத்திலிருந்து மாற்றியமைக்க உருவாகும் புதிய தலைமைத்துவக் கட்டமைப்பு!
அண்ணாமலை ஜி அவர்களின் தொலைநோக்குப் பார்வையில், இளைஞர்கள், பெண்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் எனப் புதிய தலைமுறை தலைவர்கள் உருவாக வேண்டும். அரசியலில் பதவியைத் தேடுபவர்கள் அல்ல, மக்களுக்காகப் பொறுப்பேற்கும் தலைவர்கள் உருவாக வேண்டும்!
கன்னியாகுமரியில் தொடங்கும் இந்தச் சிந்தனை, தமிழகம் முழுவதும் பரவட்டும். 2031 என்பது வெறும் ஆண்டு அல்ல; புதிய அரசியல் தலைமுறையை உருவாக்கும் இலக்கு!
தமிழகத்தின் எதிர்காலத்தை மாற்றுவது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல… தலைமைத்துவ மாற்றமும் தான்!
மாறுவோம்‼️ மாற்றுவோம்‼️ 💪🏻🤝🏻
#WeTheLeaders #AnnamalaiJi #TamilNadu
"NAFED மூலம் நான்காம் கட்டமாக கொள்முதல் செய்து வரவழைக்கப்பட்ட 450 டன் வெங்காயம் தரமில்லாமல் இருந்ததால் பெற்றுக்கொள்ளவில்லை என்று தமிழக அரசும், தங்களுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என்று NAFED தரப்பிலும் கூறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. அதாவது, தமிழகத்திற்கு வந்த 450 டன் வெங்காயத்தை காணவில்லை. இது என்ன சினிமாவா, Take சரியில்லை என்றால் Cut சொல்லிவிட்டு அடுத்த Takeல் பார்த்துக்கொள்ளலாம் என்று கடந்து போவதற்கு? ஆட்சி, மக்கள் நலன், மக்கள் வரிப்பணம் சம்மந்தப்பட்டது! அத்தியாவசியப் பொருளை எப்படி கையாள்வது என்பது கூட தெரியாமல், விலைவாசி உயர்வின் Seriousness புரியாமல், Lethargic-ஆக செயல்படும் ஆச்சரியக்குறி அரசுக்கு எனது கடும் கண்டனம்." - எடப்பாடி பழனிசாமி
#EdappadiKPalaniswami | #ADMK | #TVK | #VIjay
@PttvNewsX To divert rajmohan speech, started their usual narrative. MLA from admk have gone to Tvk , not the reverse, ellam pannitu Evalo confident ah paesaranga......
அரசுப் பணி என்பது தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு. அந்தக் கனவை நனவாக்கும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்க வேண்டிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மீதே இன்று இளைஞர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. குரூப்-4 தேர்வுக்கு 2022 ஆம் ஆண்டு, 22.06 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 2024-ல் 20.37 லட்சமாகவும், 2025-ல் 13.89 லட்சமாகவும், இந்த ஆண்டு, இன்று வரையிலும், வெறும் 9.80 லட்சமாகவும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. நான்கு ஆண்டுகளில் சுமார் 56% சரிவு என்பது சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடிய விஷயமல்ல.
பல ஆண்டுகள் தங்கள் இளமைக் காலத்தையும், உழைப்பையும், பணத்தையும் செலவிட்டு அரசுப் பணிக்காகத் தயாராகும் இளைஞர்களுக்கு உரிய காலத்தில் முடிவுகளும், நியாயமான வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம், தேர்வுக்குப் பிறகு பணிநியமனம் வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள், தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகங்கள், முறைகேடுகள் தொடர்பான புகார்கள் எனத் தேர்வு எழுதும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். கடந்த காலங்களில், அமைச்சர்கள் வரையில் பணம் வாங்கிக் கொண்டு அரசுப் பணி வழங்கியதான குற்றச்சாட்டுக்களே இதற்கு நேரடி சாட்சி.
இளைஞர்களின் அரசுப் பணி கனவுகளை நனவாக்க வேண்டிய தேர்வாணையத்தின் மீதே நம்பிக்கை குறையத் தொடங்கினால், அது மிகவும் கவலைக்குரிய அறிகுறி. விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை ஏன் ஆண்டுதோறும் இவ்வளவு வேகமாகக் குறைந்து வருகிறது என்பதை தமிழக அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேர்வு முறையின் மீதும், அரசுப் பணி நியமனத்தின் மீதும் இளைஞர்கள் மீண்டும் நம்பிக்கை கொள்ள, உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
காலிப்பணியிடங்களை உரிய காலத்தில் நிரப்புவதும், வெளிப்படையான தேர்வு முறையை உறுதிப்படுத்துவதுமே, தமிழக இளைஞர்களுக்கு, மீண்டும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கையை உருவாக்கும்.
இன்று திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்றத் தொகுதியில்
@WTLFoundation அமைப்பின் சார்பாக 5,000 பனை விதைகள் நடும் விழா சிறப்பாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் என்னுடன்
திரு.உடுப்பி கங்காதரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
We The Leaders
மக்களுக்காக… மண்ணுக்காக…
மகத்தான மாற்றத்திற்காக!
#WeTheLeaders
India's youth aren’t short on capability; they need a bridge between education and economic opportunity. By aligning state policies, granting institutions autonomy, and deepening industry collaboration, we can turn our demographic dividend into a powerful engine of global economic leadership.
We the Leaders Foundation has Youth Skilling and Empowerment as our priority agenda, and Here’s our policy paper for Youth Skilling and Empowerment.
https://t.co/oAqwHo83eE
மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும்,
இளைஞர்களின் எதிர்காலம் சிறக்கட்டும்.
Tamil Nadu’s GST collection performance over the last 6 months raises serious questions about our state's economy, the government’s fiscal priorities, and the incumbent TVK Govt’s ability to generate sustainable revenue. The only relief is that GST revenues finally showed signs of growth in October, though it was still in single digits.
What makes the single-digit growth, following several months of degrowth, even more concerning is that the recovery appears far from adequate. This comes despite the festive season in Tamil Nadu, extended school holidays, and a significant increase in tourist inflows and associated economic activity.
Please do not cite post-settlement revenue growth as an argument, because we are comparing GST revenues from last year and the current year, and IGST settlement was not introduced recently. States like Karnataka, Maharashtra, Gujarat and Haryana, with economic activity equal to Tamil Nadu, continue to show strong GST growth.
The TVK Government needs to be aware of this and take measures to augment the State’s GST revenues, starting with monitoring the Government’s capital expenditure across all departments. There is a general feeling that capital expenditure across many State departments has slowed over the past 6 months. This breaks the circular economy that the government’s capital expenditure generally creates.
Tamil Nadu ranks first in the country, accounting for 15.43% of India's total factories. However, when assessed in terms of Gross Value Added (GVA), its contribution stands at 10.26%, placing it third nationally. A decade and a half ago, Tamil Nadu’s share of the national manufacturing GVA stood at 10.3%. Remarkably, it appears to have remained largely stagnant since then, while states that once trailed Tamil Nadu are steadily narrowing the gap.
We’ve spoken about this earlier, and we are saying this again. Tamil Nadu’s Regional imbalance reports generated by the State Planning Commission will not automatically solve the State's problems. They only indicate where our State stands. Many districts in Tamil Nadu need the government’s attention, intervention, and special programmes to boost economic activity.
The top-ranking student needs attention, but the students at the bottom of the list need it most. The sooner the Tamil Nadu Government realises this, the better.
நமது We The Leaders அமைப்பின் தலைவர்கள் முன்னெடுத்து வரும் நீர்நிலைகள் பாதுகாப்புப் பணிகளின் தொடர்ச்சியாக, கோயம்புத்தூர் மாவட்டம், செட்டிபாளையம் பகுதியில் உள்ள மயிலாடும்பாறை குட்டையைச் சீரமைத்துள்ளனர்.
நமது தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்களின் முயற்சியால், இன்று இந்தக் குட்டை மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது. நீர்நிலைகளைப் பாதுகாப்பது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதோடு இயற்கைச் சூழலின் சமநிலைக்கும் வழிவகுக்கிறது.
இயற்கையோடு இணைந்த இந்தச் சிறப்பான சமூகப் பணியில் ஈடுபட்ட நமது அமைப்பின் தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.