பத்திரிகைச் செய்தி
மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அவர்களுக்கு கடிதம்
இன்று (20-06-2026), மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற நேரலை குறித்து, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கு, வணக்கம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, தற்போது நடைபெற்று வரும் மாண்புமிகு ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படுவதில்லை என்பதைத் தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.
"கொடுத்த வாக்கைக் காப்பாற்றியுள்ளார் முதலமைச்சர். இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட சட்டப்பேரவை நேரலை, மீண்டும் தொடங்கியிருக்கிறது. இனி சட்டப்பேரவை நேரலை தொடரும். இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான நிர்வாகத்திற்கு இன்றைய நிகழ்வு மிகப்பெரிய எடுத்துக்காட்டு" என மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டுச் சொன்ன அன்றே நேரலை துண்டிக்கப்பட்டிருக்கிறது.
நேற்றைய தினம் (19.06.2026) மேகதாது அணை கட்டுவதைக் கண்டித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்த அரசினர் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேரலை செய்யப்பட்டன.
அடுத்து, உடனடியாக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு ஆளுநர் உரை மீதான விவாதங்கள் தொடங்கிய நிலையில் அவை இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படவில்லை.
இது இன்றைய ஆளுங்கட்சி கொடுத்த வாக்குறுதிக்கு மாறானது ஆகும்; மக்கள் பிரதிநிதிகளின் குரலை மறைப்பது ஆகும்; சட்டமன்ற மாண்பைக் குலைப்பதாகும்.
நேரலை நிறுத்தப்பட்டது மிகப்பெரிய தவறு என்றால், அதைவிடப் பெரிய தவறு பின்னர் இழைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரின் விவாதங்கள் முற்றிலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு, ஆளுங்கட்சியினருக்கு வேண்டிய விவாத வீடியோக்கள் மட்டும் Edit செய்யப்பட்டு மாலையில் வெளியிடப்பட்டுள்ளன. பேச்சுரிமையை, அதிலும் குறிப்பாகச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவைக்குள் இருக்கும் பேச்சுரிமையை நகக்கும் செயலாகும். இது நல்லதொரு ஆக்கப்பூர்வமான சட்டமன்ற ஜனநாயகத்திற்கு உகந்தது இல்லை.
'மாற்றம்' என்ற சொல்லை மையமாக வைத்துத் தேர்தலைச் சந்தித்தவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் குரலை நசுக்குவதுதான் அவர்கள் செய்ய நினைக்கும் மாற்றமா? மக்கள் பிரதிநிதிகளின் பேச்சை மறைப்பது மக்களையே அவமானப்படுத்துவது ஆகும்.
இந்த அரசு வெளிப்படைத்தன்மை உடைய அரசு என்ற பொருள்பட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பலமுறை பேசிய நிலையில், இப்போது அதற்கு முரணாக அவை விவாதங்களை, குறிப்பாக எதிர்க்கட்சியினரின் விவாதங்களை, வாக்களித்த மக்கள் தெரிந்துகொள்ள விடாமல் செய்வது ஜனநாயகத்தையே இருட்டில் தள்ளுவதற்குச் சமம்.
மேலும், ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப் போற்றப்படும் ஊடகங்களுக்குச் செய்திகளை வழங்க மறுப்பதும், அரைகுறைச் செய்திகளை அளிப்பதும், "நாங்கள் தருவதை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும்" என்று சொல்வதும் பாசிச நடவடிக்கைகள் ஆகும்.
ஒரே நேரத்தில் சட்டசபை, மக்கள் பிரதிநிதிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தையும் அவமானப்படுத்தும் செயல் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறேன். வரும் திங்கட்கிழமையன்று (22.06.2026) எதிர்க்கட்சித் தலைவரான நானும், பிற தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் உரையாற்ற உள்ளதால், தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை நேரலை செய்வதற்குத் தங்களுக்கு உள்ள பேரவைத் தலைவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இல்லாவிட்டால் சட்டமன்றம் கூடுவதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும்; மக்கள் அளித்த வாக்குக்கே மரியாதை இல்லாமல் போய்விடும். சட்டமன்றத்தையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் அவமானப்படுத்தும்இதுபோன்ற செயல்களை இனியும் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை -காஞ்சிபுரம்- செங்கல்பட்டு- திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த கழக இளம் பேச்சாளர்களுக்கான சமூக வலைதளப் பயிற்சியை, அன்பகத்தில், இன்று நடத்தினோம்.
சமகால அரசியல் சூழலில் சமூக வலைதளத்தின் வாயிலாக, கழகப் பணி-மக்கள் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வது குறித்து,
கலந்துரையாடினோம்.
மேடைப்பேச்சு தொடங்கி, சமூகவலைதளம் வரை திறன் வாய்ந்த செயற்பாட்டாளர்களாக இளம் பேச்சாளர்கள் விளங்குவார்கள் என்ற நம்பிக்கையை, இந்தச் சந்திப்பு மீண்டும் உறுதி செய்தது.
@dmk_youthwing@uyirinummelana
எதிராளியின் குறையை
ஒற்றை விரலால் சுட்டும் போது
மூன்று விரல்கள் நம்மை நோக்கி
நீள்வதைப் போல்,
ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசிய அந்த வசவாளரின் வாய்;
தரமற்ற தன் ஆட்சியில் நடக்கும்
கொடூர காட்சிகளைக் கண்டும்,
கண்ணீரின் கதறலைக் கண்டும்
திருவாய் மலராமல்;
திருடனுக்கு தேள் கொட்டியது போல், கண்ணாடி முன் நின்று காரி உமிழ்ந்து கொண்டது போல்
கப்சிப் என்றானது எதனால்?
சொல்லுங்க CM SIR!🔥😡
@mkstalin@Udhaystalin
#LeaderOfOpposition
#DMK
#TNAssembly
#TVKFails
மேகதாது அணை தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தின் மீது மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களின் உரை வருமாறு:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, அமைச்சர் பெருமக்களே, சட்டமன்ற உறுப்பினர்களே!
நம் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க, முயற்சிக்கின்ற மேகதாது அணை கட்டப்படக் கூடாது என்பதுதான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு ஆகும்.
அனுமதிக்கக் கூடாது
காவிரி நதிநீரில் தமிழ்நாட்டின் உரிமை பறிபோக நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. காவிரி நடுவர் மன்றம், காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட அனைத்திற்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, கழக அரசு எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள்தான் முழுகாரணம். அதை, இந்த அவையில் இருக்கின்ற மூத்த உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள். நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களையும், அரசியல் போராட்டங்களையும் நடத்தித்தான், நாம் காவிரியின் மீதான நம் உரிமையைப் போராடிப் பெற்றிருக்கிறோம். ஆனால், அதனைப் பறிக்கும் வகையில், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அந்த முயற்சியை அவர்கள் எடுத்தபோது, அந்தச் சமயத்தில், எங்கள் கூட்டணியில் இருந்த கட்சி கர்நாடகாவில் ஆட்சி செய்தபோதிலும், அதனைப் பற்றிக் கவலைப்படாமல், மேகதாது அணைத் திட்டத்தை எங்களுடைய தலைவர், அப்போதைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இன்றைக்கும் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு எதிராக இந்த தீர்மானத்தை, இன்றைக்குக் கொண்டு வந்துள்ளார்கள். இதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, நாங்கள் மனதார வரவேற்கிறோம். மேகதாது அணை கட்ட நினைக்கும் கர்நாடக அரசிற்கு எதிராக, எங்கள் தலைவர், எங்கள் அரசு எடுத்த நடவடிக்கைகள் சிலவற்றை ஆளுங்கட்சிக்கும், முதலமைச்சருக்கும், அவைக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
தீர்மானம் நிறைவேற்றினோம்!
2021-ஆம் ஆண்டு மே மாதம் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே, அதாவது ஜூன் 17, 2021 அன்று `மேகதாது அணை கட்ட அனுமதியளிக்கக் கூடாது’ என்று எங்கள் தலைவர் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினார். பிறகு, அதே கருத்தை வலியுறுத்தி, ஜூலை மாதத்தில், ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சருக்கும் எங்கள் தலைவர் அவர்கள் ஒரு கடிதம் எழுதினார்கள். இதனையடுத்து, அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, `மேகதாது அணையை எந்தக் காலத்திலும் கட்ட அனுமதிக்கக் கூடாது’ என்ற தீர்மானத்தையும் நாங்கள் நிறைவேற்றினோம். ஜூலை மாதத்தில் அதையே ஒன்றிய அமைச்சரிடமும் நேரில் வலியுறுத்தினோம்.
கடந்த 2022-2023 நிதியாண்டில், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த விஷயம் தெரிந்ததும், இதே அவையில் அதைக் கண்டித்து, அரசின் தனித் தீர்மானத்தையும் எங்கள் அரசு அன்று நிறைவேற்றியது. அன்று “தமிழ்நாட்டின் உரிமையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்” என்று எங்கள் தலைவர் பேசினார்கள்.
திருப்பி அனுப்பப்பட்டது
மேகதாது அணை கட்டுவது குறித்தான விரிவான திட்ட அறிக்கையை விவாதிக்க வேண்டும் என்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடக அரசும், ஒன்றிய அரசும் வைத்த அஜெண்டாவை நீக்க, எங்கள் தலைவர் தலைமையிலான அரசு அன்றைக்குக் கடுமையாக வலியுறுத்தியது. இதற்காக, அன்றைய முதலமைச்சரான எங்கள் தலைவர் அவர்கள் ஜூலை மாதம், 2022-ஆம் ஆண்டு பிரதமருக்கு மீண்டும் கடிதம் எழுதினார். அப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக் கட்சிக் குழுவினர், ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார்கள். இப்படி, நமது தொடர் எதிர்ப்பின் காரணமாக, மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report), பிப்ரவரி மாதம் மத்திய நீர்வள ஆணையத்திற்கே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது.
மேலும், கழக அரசின் எதிர்ப்பால், மேகதாது அணையின் நிபந்தனை விவரங்களை (Terms of Reference-ஐ) தன்னுடைய `திட்டப் பட்டியலில்’ இருந்து, ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகமும் நீக்கியது. அதுமட்டுமில்லாமல், 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் எங்கள் அரசின் நீர்வளத்துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவர் எழுதிய கடிதத்தில், `இரு மாநிலங்களுக்கு இடையே சுமுகத் தீர்வு எட்டப்பட்ட பிறகுதான், Terms of Reference அனுமதி பற்றி ஆலோசிக்கப்படும்’ என்று சொல்லியிருந்தார்.
கழக அரசும், எங்கள் தலைவரும்
மேகதாது அணை தொடர்பாக, கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை’ (Detailed Project Report) சமர்ப்பிக்கவில்லை என்பதுதான் எங்கள் கழக அரசு இருந்த வரையிலான நிலை ஆகும். திராவிட முன்னேற்றக் கழக அரசும், எங்கள் தலைவரும் தைரியமாகத் தமிழ்நாட்டின் எதிர்ப்பைப் பதிவு செய்ததால்தான் இது சாத்தியமானது என்பதை இந்த மாமன்றத்தில் மீண்டும் பதியவைக்க விரும்புகிறேன்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், மத்திய நீர்வள ஆணையம் (Central Water Commission), 22-11-2018 தேதியிட்ட கடிதத்தின் மூலமாகக் கர்நாடக அரசுக்குச் சில முக்கியமான நிபந்தனைகளைத் தெரிவித்திருந்தது. அதில் முதலாவதாக, மேகதாது அணை கட்ட மத்திய நீர்வள ஆணையம் நிபந்தனையற்ற அனுமதி எதுவும் கொடுக்கவில்லை. இரண்டாவதாக, அணை கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரிப்பதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசு தெரிவிக்கும் பல்வேறு ஆட்சேபணைகளை அவர்கள் பரிசீலனை செய்ய வேண்டும். மூன்றாவதாக, மத்திய மின்வாரிய ஆணையத்திடமும், சம்பந்தப்பட்ட மாநிலத்தில் இருக்கின்ற மத்திய நீர்வள ஆணையப் பிரிவிடமும் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும்.
ஒரு புதிய விவாதம்
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, `காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய’த்தின் (Cauvery Water Management Authority) முன் அனுமதியையும் பெற வேண்டும்’ என்று அந்தக் கடிதத்தில் தெளிவாக எழுதியிருக்கிறார்கள். எனவே, மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அரசு இவற்றைல்லாம் ஒன்றிய அரசிடம் உறுதியாக எடுத்துப் பேசி, காவிரியில் நம் தமிழ்நாட்டின் உரிமையை நாம் அனைவரும் சேர்ந்து நிலைநாட்ட வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயத்தை, இங்கு நான் பதியவைக்க விரும்புகிறேன். மேகதாது பிரச்சினை தொடர்பாக, கடந்த 13.11.2025 அன்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த பிறகு, 04.03.2026 அன்று அன்றைய முதலமைச்சரான எங்கள் தலைவர் அவர்களின் உத்தரவுப்படி, தமிழ்நாடு நீர்வளத்துறை அரசுச் செயலாளர் ஒன்றிய ஜல் சக்தி துறைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில், `கர்நாடக மாநிலத்தின் மேகதாது அணை கட்டும் பிரச்சினை ஒரு புதிய விவாதம் (New Dispute) என்பதால், நதிநீர் தாவா சட்டம்-1956-ன் படி (The Inter-State River Water Disputes Act, 1956) அடிப்படையில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்’ என்று ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தோம். ஆகவே, இந்த அரசு இப்போது கொண்டு வந்திருக்கின்ற தீர்மானத்தில், `மேகதாது அணை கட்டுவது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு, மார்ச் 4, 2026 அன்று எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டபடி, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டம்-1956, பிரிவு 4-ன் கீழ், அந்த அடிப்படையில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது’ என்கிற திருத்தத்தைச் சேர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தடுத்து நிறுத்துவோம்
கர்நாடகா மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க, சட்டரீதியாகவும், பிரதமர் மூலமாகவும் இந்த அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக துணைநிற்கும். மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தடுத்து நிறுத்துவோம் என்று கூறி, இந்தத் தீர்மானத்துக்கு எங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அதே மாதிரி இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்காததால் டெல்டா விவசாயிகள் கஷ்டத்தில் இருக்கிறார்கள். குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டிருக்கிறது. அடுத்து நடக்கவிருக்கின்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் (Cauvery Water Management Authority), இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நம் தரப்பு நியாயங்களையெல்லாம் எடுத்து வைத்து, நமக்குரிய நீரை விரைவாகப் பெற்றுத் தர வேண்டும் என்று விவசாயிகள் சார்பாக இந்த அவையில் கேட்டுக்கொள்கிறேன். இறுதியாக, எங்கள் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு முக்கியமான வேண்டுகோளையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வைக்க விரும்புகிறேன்.
மிக முக்கியமான தீர்மானம்
இன்று நாம் நிறைவேற்றுகின்ற இந்தத் தீர்மானம் மிக முக்கியமான தீர்மானம். இந்த தீர்மானத்தைக் கடிதம் மூலமாக ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதற்குப் பதிலாக, தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்றக் கட்சி உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து ஒரு குழுவாகச் சென்று, ஒன்றிய அரசிடம் கொடுத்து நம் ஒற்றுமையை வெளிப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருக்கிறது. அரசியல் வேறுபாடுகளைக் கடந்து செயல்பட இந்த அரசும் முன்வர வேண்டும் என்று எங்கள் தலைவரின் சார்பில் கேட்டுக்கொண்டு, தீர்மானத்தை முழுமனதாக ஆதரித்து அமைகிறேன்.
நன்றி, வணக்கம்.
#TNAssembly #MekedatuDam #Cauvery
Congratulated our Indian cricketers from Tamil Nadu, @Sundarwashi5 and @Chakravarthy29, today along with our Honourable Chief Minister Thiru @mkstalin avargal.
Both our cricketers delivered outstanding performances in the T20 World Cup and played an important role in helping Team India lift the trophy.
Wished them continued success and the very best in their careers.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், மயிலாப்பூர் குயில்தோப்பு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ரூ.65.02 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 216 குடியிருப்புகளை இன்று திறந்து வைத்தார்கள்.
நம் முதலமைச்சர் அவர்கள் வீடுகளை ஒதுக்கீடு செய்வதற்கான ஆணைகளை வழங்கிய போது, நாம் உடனிருந்து வாழ்த்தினோம்.
@thamoanbarasan@mylaivelu71@ThamizhachiTh
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பேரூராட்சி அலுவலகத்தின் புதிய கட்டடம் - அண்ணா மன்ற கட்டடம் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை - முன்னாள் அமைச்சர் செ.மாதவன் அவர்களின் திருவுருவச்சிலை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த போது சிங்கம்புணரியில் உற்சாக வரவேற்பு அளித்த கழக உடன்பிறப்புகளுக்கு என் அன்பும் - நன்றியும்! @OfficeOfKRP
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சியின் புதிய அலுவலக கட்டடம் ரூ.1 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இப்புதிய கட்டடத்தை இன்று திறந்து வைத்தோம். அங்குள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் - அலுவலர்களின் பணி சிறக்க வாழ்த்தினோம். @OfficeOfKRP
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த போது, திருப்பத்தூர் - குன்றக்குடி - பிள்ளையார்ப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் எழுச்சிமிகு வரவேற்பை வழங்கிய கழக உடன்பிறப்புகள் - இளைஞர் அணி தம்பிமார்கள் - பொதுமக்கள் உட்பட அனைவருக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@OfficeOfKRP
கடைக்கோடி கிராமங்களுக்கும்-வீதிகள் தோறும் கழகக் கொள்கைகளைக் கொண்டு சேர்த்து இளைஞர்களை நெறிப்படுத்தும் நோக்கில், நம் @dmk_youthwing-க்கு ஊராட்சிக் கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
அந்த வகையில், சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட துறைமுகம், எழும்பூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வார்டுகளிலும் பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
75-ஆண்டு கால வரலாறு கொண்ட பேரியக்கத்தின் பிரதிநிதிகளாக தங்களது கழகப் பணியை தொடங்கவிருக்கும் உங்கள் அனைவருக்கும், என் அன்பும் வாழ்த்தும்!
@arivalayam@PKSekarbabu@Joel_Dmk@VanavilVijay
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திருநெல்வேலி அரசு விழாவிற்கு செல்லும் வழியில் மாணவ, மாணவியர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Had the privilege of taking part in the prestigious 'Mathrubhumi International Festival of Letters 2025' of @mathrubhuminews in Thiruvananthapuram today.
With state governments' rights being encroached upon by the BJP-led Union Government in several ways, I addressed the audience on the topic, "State Rights - A Constitutional Promise Under Threat."
I pointed out the existing threats to the state autonomy, such as the new UGC guidelines, #NEP, the "One Nation, One Election" proposal, delimitation of constituencies, step-motherly treatment in the #UnionBudget, and increasing interference from Governors, among others.
I urged that not just Tamil Nadu, but every state in the country, must stand up and speak out to protect our rights.
The strength of the nation truly lies in the strength of the states.
#MBIFL2025 #StateRights #Constitution
சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி பாக இளைஞர்களுக்கான சமூக வலைத்தளப் பயிற்சி கழக இளைஞர் அணிச் செயலாளர்-மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் ஆலோசனையின் பேரில், மாநில துணைச் செயலாளர் @Joel_Dmk முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு அமைச்சர் @Subramanian_ma அவர்கள் பங்கேற்று இளைஞர்களிடையே உரையாற்றினார்.
மேலும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து @lenin_govi அவர்களும், சமூக வலைத்தளத்தை ஆக்கப்பூர்வமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விக்னேஷ் அனந்த் அவர்களும் பயிற்சி அளித்தனர்.
மாறி வரும் அரசியல் சூழலுக்கேற்ப சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் இந்நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டது.
#DMKYW_SMTraining @PrabhakarRaja88
திருவண்ணாமலையில் கனமழை காரணத்தால் மலை மேலிருந்து உருண்டு வந்து அடிவாரத்தில் இருந்த வீட்டின் மீது பாறை விழுந்ததில், ஒரு தம்பதி மற்றும் சிறுவர் - சிறுமியர் உட்பட 7 பேர் மண் மூடிய வீட்டினுள் சிக்கிக் கொண்டனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சற்று நேரம் முன்பு அங்கு சென்றோம். உயிரிழந்தோரின் உறவினர்களை நேரில் சந்தித்த போது, மீளாத்துயரில் சிக்கியுள்ள அவர்களை ஆற்றுப்படுத்தவும் - தேற்றிடவும் வார்த்தைகளின்றி தவித்தோம்.
தமிழ்நாடு அரசும் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் - நாமும் அவர்களுக்கு துணை நிற்போம் என்று ஆறுதல் தெரிவித்தோம்.
@evvelu
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.@udhaystalin அவர்கள், தருமபுரி மாவட்டம், மிட்டாநூலஅள்ளி ஊராட்சி, திருமலைக்கவுண்டன்கொட்டாயில் உள்ள வண்ணாந்தேரி ஏரி நிரம்பி வழிகின்ற இடத்தினை பார்வையிட்டு, கால்வாயை தூர்வாருகின்றப் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்கள்.
@SalemRRajendran@PPalaniappanDMK@PThadangam@Inbasekaranpnp #PradeepYadavIAS
@DD_IAS