#ஜெய்பீம்💙🌸
அக்-09 #சமூகநீதிப்போராளி#போர்முரசு_தலைவர்#தியாகி_இமானுவேல்சேகரனார்
பிறந்த தினம் இன்று!
தலித் மக்களுக்கு எதிரான
சாதிய தீண்டாமை வெறியர்களின் ஆணவத்தை அடக்கிய துணிச்சல்காரர்,
சமூக அரசியல் உரிமைகளை வென்றெடுத்த பாதுகாப்பாளர்,
நம் தலைமுறைகள் அவரின் புகழைப் போற்றுவோம்!!
தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்த நாளில் அவரது தியாகத்தையும், இன விடுதலை உணர்வையும் போற்றுவோம்
தீண்டாமையை ஒழிக்க வேண்டும், சமூகங்களுக்குள் இணக்கம் வேண்டும் என்பதற்காக தமது வாழ்நாள் முழுவதும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் 102-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவரை வணங்குகிறேன். சமூக விடுதலைக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் அவர் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.
இந்த நாளில் அவரது விடுதலை உணர்வையும், தியாகத்தையும் நாம் அனைவரும் போற்ற வேண்டும். அதுமட்டுமின்றி, அவர் எந்த இலக்கை அடைய பாடுபட்டாரோ, அந்த இலக்கை அடைவதற்காக உழைக்க அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.
சமூகநீதி தியாகி #இம்மானுவேல்_சேகரனார் அவர்களின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியம், விஸ்வநாதபேரியில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் துவக்கி வைத்தோம்.
நிகழ்ச்சியில் பாஜக விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் திரு.விஜயசேகர் அவர்கள், பாஜக பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் திரு.பேச்சிமுத்து மற்றும் விஸ்வை இளைஞர் அணி நிர்வாகிகள், சமுதாய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
@BJP4_tenkasi@BJP4TamilNadu@NainarBJP@annamalai_k@KesavaVinayakan
விடுதலைப் போராட்ட வீரர் - ஒடுக்கப்பட்ட மக்களின் சமத்துவக் குரலாக விளங்கிய தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பிறந்தநாள் இன்று.
மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்கும் போராளியாக உறுதியோடு களப்பணியாற்றிய இம்மானுவேல் சேகரனாரைப் போற்றுவோம்.
அவர் புகழ் ஓங்கட்டும்!
ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காகவும் மாண்புக்காகவும் இறுதிவரை போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்.
இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என நமது #DravidianModel அரசின் சார்பில் அவரது நூற்றாண்டையொட்டி அறிவிக்கப்பட்டு, கடந்த ஆண்டுமுதல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இமானுவேல் சேகரனாருக்குப் பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற நமது அரசின் மற்றொரு அறிவிப்பும் செயல்வடிவம் பெற்று, இம்மாத இறுதிக்குள் முழுமையடையத் தயாராக உள்ளது.
எல்லாருக்கும் எல்லாம் எனும் நம் பயணத்தில் சமத்துவத்துக்கான அவரது போராட்டங்கள் தொடர்ந்து வழிகாட்டும்!
ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்காகத் தனது வாழ்நாள் முழுவதும் போராடி சமூகநீதியின் அடையாளமாகத் திகழ்ந்த தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்த நாள் இன்று.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் பல போராட்டங்களில் பங்குபெற்றவர். சமூகத்தில் பரவிக்கிடக்கும் தீண்டாமையை வேரறுக்கப் போராடி ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக்குக் காரணமாக இருந்த ஐயா தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் புகழைப் போற்றி வணங்குகிறோம்.
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க, விடுதலை போராட்ட வீரர் தியாகி திரு. இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி பரமக்குடியில் உள்ள அவர்களது சிலைக்கு கழக பொதுச்செயலாளர் அண்ணன் என். ஆனந்த் Ex MLA அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாலையிட்டு அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வில் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளர் திரு @AadhavArjuna, கொள்கை பரப்புப் பொதுச்செயலாளர் திரு. @arunrajkg மற்றும் கழக மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். நானும் நமது கழக தோழர்களுடன் இணைந்து அஞ்சலி செலுத்தினேன். சமூக நீதிக்காக போராடிய தியாகி திரு. இம்மானுவேல் சேகரன் அவர்களின் புகழ் எப்போதும் நிலைத்திருக்கும்.
டாக்டர். TK.பிரபு,
சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.
சமூகநீதி போராளி தியாகி ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 68 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோவை தெற்கு தொகுதி, புலியகுளம் பகுதியில் புகழ் வணக்கம் செலுத்தினேன்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சாதிய ரீதியிலான அடக்கு முறைக்கு எதிராக தீவிரமான குரல் எழுப்பியவருமான, ஐயா 'தியாகி' இம்மானுவேல் சேகரன் அவர்களது நினைவு தினம் இன்று.
தனது இளம் வயதிலேயே தேச விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர், சமூகத்தில் நிலவி வந்த சாதிய ஒடுக்குமுறைகளை மிகத் தீவிரமாக எதிர்த்தார். இரட்டைக் குவளை முறைக்கு எதிராகவும், தீண்டாமை ஒழிப்பிற்காகவும் மாநாடு நடத்தியதன் மூலம் சமூகப் புரட்சியையும் மேற்கொண்டுள்ளார்.
தேச விடுதலைக்காகவும் சமூக ஒற்றுமைக்காகவும் போராடி வாழ்ந்து மறைந்த ஐயா 'தியாகி' இம்மானுவேல் சேகரன் அவர்களது நினைவு தினத்தில் அவரது தியாகங்களை போற்றி வணங்குவோம்.
சமூகச் சழக்குகளுக்கு எதிராக வீரியமிகுந்த போராட்டங்களை முன்னெடுத்த சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள்!
அவர் வாழ்ந்தது 32 ஆண்டுகளே.. ஆனால்அவர் மறைந்தாலும் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது. அத்தீரமிகு தியாகியின் நினைவைப் போற்றி வணங்குகிறோம்!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#ImmanuelSekaran
*இந்திய விடுதலைப் போராட்டம், ஒடுக்கப்பட்டோர் உரிமைப் போராட்டம் என இருமுனைப் போர் நடத்திய சமத்துவப் போராளி
*18வது வயதில் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கெடுத்து மூன்று மாத சிறைத் தண்டனை பெற்றவர்
*பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் மூன்று ஆண்டுகளும், சுதந்திர இந்திய இராணுவத்தில் ஐந்து ஆண்டுகளும் பணியாற்றியவர்
*குலக்கல்வி திட்டதிற்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் நடத்தியவர்
*ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குழந்தைகளே பள்ளிகளை நோக்கிப் புறப்படுங்கள் என பிரச்சாரம் செய்தவர்
*இரட்டைக் குவளை ஒழிப்பு மாநாட்டை அருப்புக் கோட்டையில் நடத்தியவர்.
இவர் எழுப்பிய உரிமைக்கான குரல் இன்றும் ஒலிக்கிறது. தியாகி இம்மானுவேல் சேகரன் ஐயா அவர்களுக்கு வீர வணக்கம் 🤍
ஓடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழக அரசியல் தலைவர்
தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் ஓடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஒரு அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர் தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 68ஆம் ஆண்டு நினைவு நாளில் அன்னாரின் தியாகத்தை போற்றி வணங்குவோம்.
தளபதி S.P.செல்வம்
மாவட்ட கழகச் செயலாளர்
விருதுநகர் கிழக்கு மாவட்டம்
தமிழக வெற்றிக் கழகம்.
எல்லோரும் சமம் என்ற சமூகத்தை உருவாக்க மக்கள் களத்தில் சமரசமின்றி போராடியவரும், சமூகநீதி அரசியலின் உரிமைக் குரலாகவும் இருந்த தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாளான இன்று, பரமக்குடியில் உள்ள அவரின் நினைவிடத்தில் கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் திரு. என். ஆனந்த் அவர்கள், கழக கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் சகோதரர் திரு. அருண்ராஜ் அவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் சேர்ந்து தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வீரவணக்கம் செலுத்தினோம்.
இளம் வயதிலேயே ஆங்கிலேயர்களின் அநீதியான ஆட்சிக்கு எதிராகத் தீவிரமாகப் போராடிய இமானுவேல் சேகரனார், சுதந்திர இந்தியாவில் தனது ராணுவப் பதவியைத் துறந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.
தியாகி இமானுவேல் சேகரனார், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், குறிப்பாக ஒடுக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி உரிமைக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்டார். அவரது தியாகமும், சமூக நீதிக்கான அவரது அசைக்க முடியாத பற்றும், இன்றும் நமக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது.
இன்றைய தினத்தில், தியாகி இமானுவேல் சேகரனாரின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவரது சமூக நீதிக்கான பயணத்தைத் தொடர உறுதியேற்போம்.
#தியாகிஇமானுவேல்சேகரனார்
சாதிவெறியர்களுக்கு எதிராக வீரத்துடன் களமாடிய, சமூகநீதிக்காக போர்குரலிட்ட
தியாகி இம்மானுவேல் சேகரனார் ஐயா அவர்களின் 68வது குருபூஜை விழாவை முன்னிட்டு
தென்காசி மேற்கு மாவட்ட த.வெ.க சார்பாக இன்று மேல செங்கோட்டையில் வைத்தும்,
@TVKVijayHQ@BussyAnand@TVKPartyHQ