#Tamils launch protest in #Mullaitivu demanding international investigations over the recently discovered #Kokkuthoduvai mass grave and enforced disappearances as well as an in international justice mechanism for alleged #warcrimes committed in #SriLanka.
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நாள் 2026!
தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 05.07.2026 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பெற்றது. தொடர்ந்து அகவணக்கத்துடன் சுடர்வணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; வழங்கப்பட்டன.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1987ம் ஆண்டு யூலை மாதம் 05ம் நாள் கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பேர்ண் மாநிலம் வாழ்மக்களுடன், சுவிசின் பாகங்களிலிருந்தும் கலந்து கொண்ட மக்கள் கரும்புலிகளிற்கு வீரவணக்கம் செலுத்தியமையானது அவர்களின் தேசிய உணர்வையும், இலட்சியப்பற்றையும் மீளவும் வெளிப்படுத்தி நிற்கின்றது.
எமது மக்களின் விடுதலைக்காகத் தமது உயிர்களையே ஆகுதியாக்கிய உன்னத மறவர்களை நினைவுகூரும் இவ் வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப்பாடல்கள், இளையோர்களின் எழுச்சி நடனங்கள், எழுச்சிமிகு கிராமியப்பாடல்கள் போன்றவற்றுடன் காலத்தின் தேவை கருதிய சிறப்புரையும் இடம்பெற்றன.
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலை அனைவரும் சேர்ந்து பாடி, தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலினைத் தொடர்ந்து, தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நிறைவுபெற்றன.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
தமிழ்த்தேசிய வரலாற்றுடன், அவற்றின் அடையாளங்களை சுமந்து பிரித்தானியாவின் Yorkshire தமிழ்ச் சமூகத்தின் 5ஆவது வருடாந்த விளையாட்டுப் போட்டி நேற்று சிறப்பாக இடம்பெற்றது.
#Britain#Eelam#EelamTamils#LKA#WorldwideTamils
In recent time, when Arul was killed in #Eelam by #LKA police, many #SinBud expressed comments that were sickening.
Similar comments are also being made against these grieving #Sinhala mothers #NegomboPrison.
A morally messed up #Sinhala keyboard worriers!
கெஞ்சி கேட்கிறேன், கனவை நனவாக்குங்கள்!
வீரத்தின் விளைநிலமான யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை மண்ணில் நின்று பிரபலமான பாடகர் கோவை கமலாவின் உணர்வுபூர்வமான, உருக்கமான கோரிக்கை.
#TamilNadu#Eelam#EelamTamils#LKA#WorldwideTamils
Who is accountable for deaths in #NegomboPrison?
Well, you have to walk back in the history lane and hooray! - no one ever found accountable for deaths !
Just commissions, inquiries..- ces tous!
#RightToSelfDetermination#Eelam
Firing on unarmed civilians is a severe crime and a war crime; Sri Lanka's failure to hold perpetrators accountable directly rewards this unlawful behavior.
#RightToSelfDetermination#Eelam
Israeli occupation soldiers assaulted an elderly Palestinian man and several women today east of the town of Yatta, south of Hebron in the occupied West Bank.
நீர்கொழும்பு சிறைக் கலவரம் 2026
பிந்துனுவேவா சிறைப் படுகொலை 2000
வெலிக்கடை சிறைப் படுகொலை 1983
ஒப்பீடு
இலங்கை சிறைச்சாலைகள் மீண்டும் ஒரு முறை செய்தியாக சர்வதேச ஊடகங்களில் 2026 ஜூலை 5-6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை கிடைத்த செய்திகளின்படி 26 பேர் உயிரிழந்துள்னர் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் அதிகாரிகள் இதனை இரண்டு கைதிக் குழுக்களுக்கிடையிலான மோதல் போதைப்பொருள் வலையமைப்புக்களுடன் தொடர்புடைய மோதல் பின்னர் சிறை அதிகாரிகளுடனான மோதல் என்று விளக்குகின்றனர் இலங்கை முழுவதும் உள்ள சிறைகள் தங்களது கொள்ளளவை விட சுமார் நான்கு மடங்கு கைதிகளால் நிரம்பியுள்ளன என்ற தகவலும் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் முக்கியமானது
ஆனால் நீர்கொழும்பு சம்பவத்தை பார்க்கும் போது இலங்கையின் சிறை வரலாற்றில் ஏற்கனவே ஆழமாகப் பதிந்துள்ள வெலிக்கடை-1983 பிந்துனுவேவா-2000 போன்ற திட்டமிட்ட படுகொலைச் சம்பவங்களையும் நினைவு கூராமல் இருக்க முடியாது இவை அனைத்தும் ஒரே மாதிரியான சம்பவங்கள் அல்ல ஆனால் ஒரு பொதுவான கேள்வியை எழுப்புகின்றன
அரசின் காவலில் உள்ள மனிதர்கள் உயிரிழக்கும் போது பொறுப்பு யாருக்கு?
வெலிக்கடை-1983 "கலவரம்" அல்ல தமிழ் கைதிகளின் படுகொலை 1983 கறுப்பு ஜூலை நாட்களில் வெலிக்கடைச் சிறையில் நடந்தது சாதாரண சிறைக் கலவரம் அல்ல அது அரசின் காவலில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீது நடத்தப்பட்ட இனவழிப்பு தாக்குதல் தமிழ் பதிவுகளின்படி மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் சக சிங்கள கைதிகளால் வெட்டியும் குத்தியும் கொல்லப்பட்டனர் இதில் குட்டிமணி தங்கத்துரை ஜெகன் போன்ற முக்கிய தமிழ் அரசியல் கைதிகளும் அடங்கினர் இந்தப் படுகொலை இரண்டு கட்டங்களாக நடைபெற்றது ஜூலை 25 அன்று 35 பேர் பின்னர் ஜூலை 28 அன்று மேலும் 18 பேர் கொல்லப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்த சம்பவத்தை பற்றிய மிகக் கடுமையான குற்றச்சாட்டு என்னவென்றால் இது வெறும் கைதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிய சம்பவம் அல்ல சிறை நிர்வாகத்தின் செயலிழப்பு கதவுச் சாவிகள் எப்படி தாக்குதலாளர்களிடம் சென்றன என்ற கேள்வி பாதுகாப்பு துறையின் உடந்தை அல்லது குறைந்தபட்சம் கடுமையான அலட்சியம் ஆகியவை இன்றளவும் பதிலின்றி உள்ளன தப்பி பிழைத்தவர்களின் வாக்குமூலங்களில் சிறை அதிகாரிகளின் பங்கு குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது ஆனால் அதிகாரப்பூர்வ விளக்கங்கள் இதனை "சக கைதிகளால் நடந்த கலவரம்" எனச் சுருக்கமாக சொல்ல முயன்றன
வெலிக்கடை-1983 இன் மிகப்பெரிய வரலாற்று பொருள் இதுதான் அரசின் பாதுகாப்பில் இருந்த கைதிகள் அவர்களது இன அடையாளத்தின் காரணமாக இலக்காக்கப்பட்டனர் அதனால் இதை "Prison Riot" என்று மட்டும் அழைப்பது உண்மையை சுருக்கி விடும் இது தமிழ் அரசியல் நினைவில் அரசு காவலில் நடந்த இனப்படுகொலையாகவே நிற்கிறது
பிந்துனுவேவா-2000 தடுப்பு முகாமிலேயே தமிழர்கள் கொல்லப்பட்ட நாள் 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 25 அன்று பிந்துனுவேவா தடுப்பு/புனர்வாழ்வு மையத்தில் 27 தமிழ் கைதிகள் கொல்லப்பட்டனர் மேலும் 14 பேர் காயமடைந்தனர் இவர்கள் பலரும் இளம் தமிழர்கள் சிலர் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டவர்கள் ஆனால் அனைவரும் அரசின் காவலிலேயே இருந்தார்கள்
Human Rights Watch வெளியிட்ட அறிக்கை அப்போது ஆயுதம் ஏந்திய சுமார் 60 காவல்துறையினர் அங்கு இருந்த போதும் சிங்கள குண்டர்களின் தாக்குதலை தடுக்கவில்லை சில காவல்துறையினரே தாக்குதலில் பங்கேற்றதாகவும் சுயாதீன விசாரணைகள் கூறின 2005 இல் உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்ததையும் HRW "நீதி தோல்வி" எனக் கடுமையாக விமர்சித்தது
பிந்துனுவேவாவைப் பற்றிய தமிழ் சமூகத்தின் நினைவில் இது தன்னிச்சையான சிங்கள குண்டர்களின் வன்முறை அல்ல முன்கூட்டியே தூண்டப்பட்ட சிங்கள அரசியல் சூழலில் பாதுகாப்பு அமைப்புகள் தடுக்காத அல்லது தடுக்க விரும்பாத தாக்குதல் என்ற ஆழமான குற்றச்சாட்டு நிலைத்திருக்கிறது நீதிமன்றத்தில் அது முழுமையாக நிரூபிக்கப்படதா என்பது வேறு கேள்வி ஆனால் மனித உரிமை அமைப்புகள் எழுப்பிய கேள்வி மிக எளியது காவலில் இருந்த தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்ட போது அவர்களை பாதுகாக்க வேண்டிய அரசு எங்கே இருந்தது?
நீர்கொழும்பு 2026
வேறுபாடும் தொடர்ச்சியும்
நீர்கொழும்பு சம்பவம் இதுவரை கிடைக்கும் தகவலின்படி தமிழரை இலக்காக்கிய இனப்படுகொலை என நிரூபிக்கப்படவில்லை அதனால் அதை வெலிக்கடை 1983 அல்லது பிந்துனுவேவா 2000 உடன் நேரடியாக ஒரே வகையில் சேர்ப்பது சரியாகது ஆனால் இது இலங்கை சிறை அமைப்பின் பழைய நோய்களையே மீண்டும் வெளிப்படுத்துகிறது அளவுக்கு மீறிய நெரிசல் சிறைக்குள் போதைப்பொருள் மற்றும் கும்பல் ஆதிக்கம் ஆயுதங்கள் கைதிகளிடம் செல்வது கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறும் நிர்வாகம்
இது ஒரு உணர்வுபூர்வமான தருணம்❤️
தமிழினத்தின் காவல் தெய்வம்
மேதகு தேசியத்தலைவர் அவர்களின் வீடு இருந்த மண்ணை தரிசித்த
கோவை கமலா அம்மா 05.06.2026
#jaffna#tamileelam#tamilnadu#eelam