மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்திருக்கும் தவெக அரசு.
கன்னியாகுமரிமாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க IREL விரிவாக்கப்பணிக்கான 1144.06 ஹெக்டேர் ஓதுக்கீட்டு ஆணை காலாவதி ஆகும் நிலையில்,அதை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கன்னியாகுமரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய செயற்குழு கூட்டத்தில்இதே தவெக, இத்திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி நாடகம் அரங்கேற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மண்ணுக்கும் மக்களுக்கும் எதிரான அழிவுத்திட்டங்களை திணிக்கும் பாஜக ஒன்றிய அரசின் கைப்பாவையாக மாறி நிற்கும் தமிழ்நாடு தவெக அரசின் இரட்டை வேடம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கிறது.
முழு காணொளி மனிதி வலையொளியில்.
https://t.co/PhXtnCrTvr
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே
11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ? என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது.
இன்றைய முதல்வரின் கூற்றுப்படியே கேட்கப்போனால்,
“தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?”
சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திடவும்,
தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@AIADMKOfficial
தவெகவின் ஆட்சியில் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு திமுகவைக் காரணமாகக் காட்டித் தப்பிக்க முடியாது.
தவெகவின் தேர்தல் அறிக்கையில், திமுகவின் ஆட்சியில் நிலவும் மின்வெட்டைக் குறிப்பிட்டு, 'நாங்கள் வந்தால் தங்குதடையற்ற மின்சாரம் வழங்கப்படும்' எனத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.
காலையிலிருந்து வராத அறிக்கை, சரியாக அண்ணன் சீமான் பேசும் நேரத்தில் மட்டும் X தளத்தில் எப்படி வெளியாகிறது? அதில் 'இனப்படுகொலை' என்றோ, 'தமிழீழம்' என்றோ, 'தமிழினத் தலைவர் பிரபாகரன்' என்றோ ஒரு வார்த்தை கூட இல்லாதது ஏன்? இதுதான் இவர்களின் ஒற்றை கண் தமிழ் தேசியமா?
சிறுவயதில் நான் நாள் முழுவதும் டெஸ்ட் கிரிக்கெட் பார்த்த ஞாபகம் வருகிறது.
இன்று அதே ஆர்வத்தோடு பல வீடுகளில் குழந்தைகள்கூட சட்டசபை நிகழ்வுகளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இது 'பிக் பாஸ்' நிகழ்ச்சியாக மாறுவதும், அல்லது வருங்காலத் தலைமுறைக்கு ஒரு நல்ல அரசியல் பாடமாக அமைவதும் அந்தச் சபையின் கையில்தான் இருக்கிறது.
வாழ்த்துகள்.
#TNAssembly #TamilNadu #TamilPolitics #TNGovt
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
@TVKVijayHQ
தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம்.
மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்.
தமிழ்நாடு அரசியலில் முதல் முறையாக வட இந்திய ஆங்கில ஊடகத்திடம் இந்தியில் பேட்டி அளிக்கும் தவெக MLA
இதுதான் தொடக்கம்.
மோடியே இங்கு வந்தால் கூட ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற நிலையை உருவாக்கினோம் ஆனால் இன்று..
நாம் தமிழர் கட்சிக்கு நடந்திருப்பது வீழ்ச்சி அல்ல ; பின்னடைவு தான். இந்த 19 லட்சத்து 72 ஆயிரம் வாக்குகளும் அவர்கள் முன் வைத்த கோட்பாடுகளுக்கும்,சூழலியல் சார்ந்த அரசியல் முன்னெடுப்புகளை வைத்த அரசியல் கட்சி என்றதற்கும் , தொடர் முயற்சிகளுக்கும், சமரசம் இல்லாத தன்மைகளுக்கும் விழுந்த வாக்குகள். இந்த பின்னடைவு அவர்களுக்கு புதிது அல்ல, என்றாலும் இந்த மக்களின் மனநிலை அவர்களுக்கு உள்ளபடியே ஓர் அயற்சியை உருவாக்கலாமே ஒழிய முடிவையோ வீழ்ச்சியையோ உருவாக்காது. வீரியமிக்க எதிர்க்கட்சியாக களத்தில் நாம் தமிழர் கட்சி கட்டாயம் இருக்கும். இப்போது உருவாகி இருக்கும் திராவிடக் கட்சிகளின் மீதான அவநம்பிக்கை கூடுகிற பட்சத்தில் எதிர்காலம் தவெக Vs நாதக என்றும் கூட மாற வாய்ப்புகள் உண்டு. வெளியில் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சீமான் அவர்கள் உழுது விதைத்த திமுக அல்லது திராவிட எதிர்ப்பையும் சேர்த்தே தான் விஜய் அறுவடை செய்துள்ளார். இலக்கை அடைந்துவிட்ட தவெக இன்னும் வேகமாக ஓட வேண்டும். இலக்கை அடைய வேண்டிய நாம் தமிழர் கட்சி அவர்களை விட வேகமாக இயங்க வேண்டும். சீமான் இயங்குவார்.. நாம் தமிழர் கட்சி இயங்கும்.. ஏனென்றால் அதன் உருவாக்கத்தில் கோட்பாடு இருக்கிறது!