படித்ததில் பிடித்தது...
நாற்பது வயதை எட்டிய பிறகு, முதிர்ச்சியற்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்!
பிறரின் கவனத்தை ஈர்க்க முயல்வது, பதின்ம வயதினரைப் போல நடந்துகொள்வது, காலத்தின் போக்கிற்கு (trends) அடிபணிவது அல்லது மற்றவர்களின் பாராட்டைப் பெறுவதற்காகவே சில செயல்களைச் செய்வது போன்றவை இனி உங்களுக்குப் பொருந்தாது.
நாற்பது என்பது இளமையின் முடிவு அல்ல; மாறாக, உங்கள் சொந்த மதிப்பைப் புரிந்துகொள்ளும் ஒரு கட்டத்தின் தொடக்கம் அது. இக்கட்டத்தில் உங்கள் ஆளுமை, முதிர்ச்சி மற்றும் அனுபவம் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. 'நான் இன்னும் இளமையாகவே இருக்கிறேன்' என்று நிரூபிக்க முயல்வதற்குப் பதிலாக, 'நான் மரியாதைக்குரிய ஒரு மனிதனாக வளர்ந்துள்ளேன்' என்பதை வெளிப்படுத்துவதே சிறந்தது.
இருபது ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திற்குத் திரும்ப முயற்சிக்காதீர்கள்; ஏனெனில், அதைவிட மிக மதிப்புமிக்க விஷயங்கள் இப்போது உங்களிடம் உள்ளன: அவை அறிவு, அனுபவம் மற்றும் கண்ணியம்.
வாசிப்பு நிறைந்தது 34/52
அனாகத நாதம் (சிறுகதைகள்) - செந்தில் ஜெகன்நாதன்
ஒவ்வொரு கதைகளைப் படிக்கும் போது பிரமிப்பு எழுகிறது. அந்தந்தச் சூழலை விரித்து விபரிக்கும் எழுத்து நடை முதிர்ச்சி.
இந்த சிறுகதைகளில் கையாண்ட உவமை, ஒரு எழுத்துப் பிரதியை காட்சி வடிவம் ஆக்க முடியாமல் நமது கற்பனைக் கண்ணிலேயே தரிசிக்கச் செய்யும் அளவுக்கு வியப்பூட்டுகிறது.
ஒவ்வொரு சிறுகதைகளும் ஒவ்வொரு உலகம், அந்தந்தக் கதைப்புலம் பேசும் உவமையாடல்கள்.
இந்த நூற்றாண்டின் தலை சிறந்த சிறுகதையாளர்களில் இளவல் செந்தில் ஜெகன்நாதன் இருப்பார்.