சமூக வலைதளம், மேடையில் வீர வசனம் பேசுவானுங்க,
ஆனால் வழக்குன்னு வந்துட்டா, மன்னிப்பு கடிதம் கொடுத்து அழுவானுங்க 😂😂
சாட்டை துரைமுருகன் மன்னிப்பு கடிதம் 👇
முதலமைச்சர் விஜய்க்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடும் திமுக விளாத்திகுளம் எம்.எல்.ஏ - ஜி.வி. மார்க்கண்டேயனை தமிழ்நாடு காவல்துறை விரைவில் கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் முதலமைச்சர் விஜயின் மீது பேரன்பு கொண்ட மக்கள் விளாத்திகுளம் திமுக ரவுடிக்கு தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள்.
லயோலா மணிக்கு என்ன தெரியும் என்று கேட்டவர்களுக்கு என் பதில். இதுபோன்ற அவலங்களை மக்களிடம் சொல்ல தெரியும்.
கடந்த ஆட்சியாளர்கள் பாடநூல் கிடங்கை ஏன் இப்படி வைத்திருந்தார்கள்?
புத்தக கிடங்கு இப்படி இருக்க யார் காரணம்?
இது யாருக்கு அவமானம்?
மிக மிக விரைவில் அனைத்தும் மாண்புமிகு முதல்வர் தளபதி அண்ணன் உயர்திரு.விஜய் அவர்களின் ஆலோசனைப் படி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ராஜ் மோகன் அவர்களின் முன்னிலையில் சீரமைப்பு செய்து சரி செய்யப்படும். அதற்கான பணிகளை அனைவரும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பான மாற்றம் கொண்டு வருவதுதான் மாண்புமிகு முதல்வர் அவர்களின் முதல் இலக்காக உள்ளது.
10.1.2025ல HR&CE கோவில் நில ஆக்கரமிப்பு அகற்ற Joint commissioner போட்ட உத்தரவு எதிர்த்து உயர்
நீதிமன்றம் போனங்க அந்த 40 குடும்பமும். பிறகு 06. 10.2025 HR&CE எல்லா ஆவணங்களையும் கோர்ட்ல சமர்ப்பித்து 25.02.2026 joint commissioner போட்ட உத்தரவு சரியே, அதை 4 மாத காலத்திற்குள்ள நிறைவேற்றுமாறு கோர்ட் உத்தரவு போட்டது. மேலும் கோவில் நிலத்தில் பட்டா போட்டு கொடுத்த தாசில்தார் மேலயும் நடவடிக்கை எடுக்க உத்தரவு போட்டாங்க.
மொத்த நிகழ்வும் திமுக ஆட்சியில் நடந்துள்ளது. அப்பெல்லாம் சும்மா வேடிக்கை பார்த்துட்டு இப்ப வந்து தவெக மேல கதை எழுதிட்டு இருக்கானுங்க கொத்தடிமைகள்…
Proof 👇👇👇
https://t.co/5cX7aclJbE
கடந்த திமுக —— ஆட்சியில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அடையாறு கிடங்கின் அவலநிலையை இன்று பார்வையிட்டு நொந்து போன தமிழக பாடநூல் கழகத் தலைவர் @LoyolaMani அவர்கள் இதை விரைவில் சரி செய்ய உறுதியளித்துள்ளார்👌🏻
திமுகவின் ஆபாச ஸ்டார் பேச்சாளர் லியோனி வச்சிருந்த லட்சணம்🤦🏻♀️
ஊடக சுதந்திரம் குறித்து இன்று வாய் கிழிய பேசும் சென்னை பத்திரிக்கையாளர் மன்றமே கடந்த ஆட்சியில் உங்கள் வாயில் எதை வைத்துக் கொண்டிருந்தீர்கள்
புதிய தலைமுறை விஜயனுக்காக இன்று புடைக்கும் உங்கள் நரம்புகள் கடந்த ஆட்சியில் தளர்ச்சி அடைந்த காரணம் என்ன
பத்திரிக்கையாளர் விஜயன் குதிரை பேர விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசுடன் விஜயன் பலமுறை தொலைபேசியில் பேசி இருப்பதாக ஆதாரத்தின் அடிப்படையில் காவல்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜயன் வீட்டிற்கு சென்று போலீசார் சம்மன் வழங்க சென்ற போது வீட்டுக்கு உள்ளே இருந்து கொண்டு சம்மனை பெற மறுத்திருக்கிறார், மேலும் காவல்துறை பலமுறை அழைத்தும் . இரவு 10 மணிக்கு மேல் நான் விசாரணைக்கு வருகிறேன் என்று விஜயன் கூறியதின் அடிப்படையிலேயே இரவு விசாரணைக்கு விஜயின் அழைக்கப்பட்டிருக்கிறார். இரவு விசாரணைக்கு சென்ற விஜயன் தனது போனில் திருநாவுக்கரசுடன் பேசிய அனைத்து ஆதாரங்களையும் அழித்துவிட்டு சென்றிருக்கிறார் ஆனால் திருநாவுக்கரசு போனில் அவர் பேசிய ஆதாரங்களை காவல்துறை காட்டியவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து இருக்கிறார்.
ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில் திருநாவுக்கரசுடன் விஜயன் பேசியிருந்தாலும் குதிரை பேர விவகாரத்தை மேகாலயா ப்ராஜெக்ட் என்று தலைப்பிட்டு வாட்ஸ் அப்பில் குரூப்பில் உரையாடி இருக்கிறார்கள் இந்த செய்தியை முன்பே அறிந்திருந்த விஜயன் உண்மையான பத்திரிக்கையாளராக இருந்தால் இதை செய்தியாக பதிவு செய்திருக்கிறாரா? அல்லது இந்த கருத்தை தனது விவாதங்களில் எங்காவது கூறி இருக்கிறாரா?எதுவுமே இல்லாமல் ஒரு சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்தால் விசாரணைக்கு அழைக்கத்தான் செய்வார்கள். ஒரு பத்திரிக்கை நிறுவனத்தின் ஆசிரியரை விசாரணைக் உரிய ஆதாரங்கள் இல்லாமல் அழைக்க முடியுமா? மேலும் விஜயனுக்கு சமன் வந்தது தெரிந்தும் காலையிலிருந்து புதிய தலைமுறை நிறுவனம் எந்த செய்தியும் வெளியிடவில்லை.எங்கே ஆதாரங்கள் வெளிவந்தால் சிக்கி விடுவோம் என பயந்த திமுக மாபியா பத்திரிகை கும்பல் உடனடியாக இது ஏதோ கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல் போல சித்தரிக்க பார்க்கிறார்கள்.
அண்ணா பல்கலை மாணவி வழக்கில் - 6 ஊடகர்களின் செல்போன்கள் அப்போதய சென்னை மாநகர ஆணையர் அருண் புடிங்கிக் கொண்டபோது, திமுக அரசில் சொத்துக்களை வாங்கி குவித்தவர்களை ஆதாரங்களுடன் பேசிய பத்திரிக்கையாளர் வாராகியை குண்டாஸில் கைது செய்த போதும், கமிஷனர் அருணின் கால்களை வருடிக் கொண்டிருந்தவர்கள் தான் இன்று ஊடக சுதந்திரம் குறித்து பேசுகிறார்கள் இவர்கள் தொடர்ந்து கூவும் வேகத்தை பார்த்தால் இது விஜயனோடு மட்டுமில்லாமல் மிகப்பெரிய சதித் திட்டம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடந்திருப்பதாக தெரிகிறது விஜயனுடன் தொடர்பில் இருக்கிற மற்ற பத்திரிக்கையாளர் போர்வையின் உலாவும் திமுக உளவாளிகளையும் காவல்துறை விசாரிக்க வேண்டும்.
அன்று பத்திரிக்கையாளர்கள் நலனுக்காக இயங்கி கொண்டிருந்த சென்னை பத்திரிகையாளர் மன்றம் இன்று திமுக புரோக்கர்களின் கூடாரமாக மாறி இருக்கிறது ஆட்சியை கவிழ்க்கசதித்திட்டம் தீட்டும் இந்த கும்பல் ஊடக சுதந்திரம் குறித்து பேச எந்த அருகதையும் கிடையாது @MadrasJournos@chennaipressclu
இவர் தான் தளபதியோட நண்பன் படத்தில் வரும் ஒரிஜினல் Kosaksi Pasupagul,
மோடியின் ஆட்சியில் நீட் தேர்வில் நடைபெறும் குளறுபடிகளுக்கு எதிராக தொடர்ந்து பதினெட்டாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து கொண்டு இருக்கிறார்,
வழக்கம் போல #Godimedia இதை அமுக்க பார்க்கிறது, இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் 🙏
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான அண்ணன் K. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலை வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்றுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள நிலைப்பாட்டை, நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) முழு மனதுடன் வரவேற்கிறது.
அண்ணன் K. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலை தொடர்பாக உண்மை முழுமையாக வெளிக்கொணரப்பட்டு, இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள சதியில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளின் எதிர்பார்ப்பாகும். அந்த வகையில், விசாரணையின் மீது பொதுமக்களுக்கு முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், சிபிஐ விசாரணை நோக்கிய @TVKVijayHQ@CMOTamilnadu அரசின் இந்த முடிவு முக்கியமானது.
அதேவேளையில், இந்த விசாரணை எந்தவித அரசியல் அல்லது பிற தலையீடுகளும் இன்றி, முழுமையான சுதந்திரத்துடனும், வெளிப்படைத்தன்மையுடனும், விரைவாகவும் நடைபெற்று, அண்ணன் K. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும். நேரடியாகவும் மறைமுகமாகவும் இக்கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவர்களது தண்டனை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
இவ்வழக்கில் சிபிஐ விசாரணையைத் தொடர்ந்து வலியுறுத்திய அனைத்து ஜனநாயக இயக்கங்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வழக்கில் நீதி தாமதமின்றி நிலைநாட்டப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதே அண்ணன் K. ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலியாகவும், ஜனநாயகத்தின் மீதும் சட்டத்தின் மீதும் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதாகவும் அமையும்.
ஜெய் பீம்!
#JusticeForArmstrong #CBI #JaiBhim
திருநெல்வேலி, இருக்கன்துறை ஊராட்சியில் ரூ43 இலட்சம் மதிப்பிலான ஒப்பந்த அறிவிப்பில் (Tender ID:2026_RDTN_684085_1 & 2026_RDTN_684085_2) விதி மீறல் அறிவிப்பு உள்ளது. வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில், 06.07.2026 அன்று வெளியிடப்பட்டு இன்று (15.07.2026) நிறைவுற இருக்கும் அந்த அறிவிப்பில் இருக்கும் நிபந்தனைகள், அரசாணை எண் G.O.(Ms.) No.115, Rural Development and Panchayat Raj Department - Date 30.06.2026 இக்கு முரணான வகையில், குறிப்பிட்ட பகுதியை சார்ந்தவர்கள் மட்டுமே பங்கெடுக்கும் வகையில் நிபந்தனைகள் இடம் பெற்றுள்ளது.
எனவே, டெண்டர் செயல்முறையை இரத்து செய்து, நிபந்தனை விதிகளை மறுபரிசீலனை செய்து புதிய அறிவிப்பு வெளியிடவேண்டும். இது குறித்த கடிதம் இன்று முதலமைச்சர் திரு.C.விஜய், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அமைச்சர் திரு.N.ஆனந்த், செயலாளர், திரு. பிரசாந்த் மு. வடநெரே,IAS, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு. ஆனந்த் மோகன், IAS அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.